ஞாயிறு, 21 டிசம்பர், 2014

LION 2014 - 0RU PAARVAI ....

நண்பர்களே .....வணக்கம்......

      நீண்ட நாட்களுக்கு  பிறகு இங்கே சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி ....பல வேலை பளுவில் இங்கே வருவது தாமத படுத்தி கொண்டே இருக்கிறது .மன்னிக்கவும் ...காமிக்ஸ் ரசிகர்களை பொறுத்த வரை இந்த 2014 ம் ஆண்டு ஒரு மறக்க முடியாத ஆண்டு தான் என்பதை மறுக்க  முடியாது .மாதம் தவறாது வரும் காமிக்ஸ் புத்தங்கள் .....அதுவும் மூன்று ..,நான்கு .....என வந்து வாசகர்களை மகிழ வைத்தது .....லயனின் 30 வது ஆண்டு மலர் கொண்டாட்டம் ..ஈரோடு புத்தக விழா ...சேலம் புத்தக விழா .....என கொண்டாட்டம் போட வைத்தது ......கூடவே டெக்ஸ் ரசிகர்களை சந்தோஷ படுத்திய "கிங் ஸ்பெஷல் " ....டைகர் ரசிகர்களை சந்தோஷ படுத்திய .."மின்னும் மரணம் " முழு தொகுப்பு அறிவிப்பு ....என்ற அதகள அறிவிப்புடன் மீண்டும் காமிக்ஸ் மும்மூர்த்திகள்   ஸ்பைடர் .....மாயாவி ...லாரன்ஸ் & டேவிட்  போன்றோரின் மறுபதிப்பு அறிவிப்புகள் ......என கலந்து கட்டி வந்த சந்தோஷ அறிவிப்புகள் என 2014 மறக்க முடியாத காமிக்ஸ் ஆண்டாக வாசகர்களுக்கு அமைந்துள்ளது ....இப்படி இந்த வருடத்தை மறக்க முடியாத ஆண்டாக மாற்றிய ஆசிரியர் அவர்களுக்கும் ....அவர் தம் பணியாளர்களுக்கும் மிக பெரிய நன்றியை வாசகர்களின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன் .இந்த 2014 ம் ஆண்டை மறக்க முடியாத ஆண்டாக மாற்றிய ஒவ்வொரு காமிக்ஸ் இதழும் எவை ....எவை ...என்று பார்க்கும் முன்னர் ......எத்துனை இதழ்கள் ....எத்துனை கதைகள் .....எந்த பிராண்டில் வந்தவை என பார்க்கலாம் நண்பர்களே .....

இந்த வருடம் வந்த மொத்த இதழ்கள்    ---  33

இந்த வருடம் வந்த மொத்த  கதைகள்    -----  41

இதில் மறுபதிப்பாக வந்த கதைகள்    ------ 5

அவை கீழ் கண்டவாறு ...

1) பயங்கர புயல் -பிரின்ஸ் 

2) முகமற்ற கண்கள் -ப்ருனோ 

3) பூம் பூம் படலம் -லக்கி 

4)கார்சனின் கடந்த காலம் -டெக்ஸ் 

5)சைத்தான் வீடு -ஜானி 



2014 இல் வந்த  லயன் காமிக்ஸ்    ---------13

2014 இல் வந்த முத்து  காமிக்ஸ்    --------  8

2014 இல் வந்த சன்ஷைன் லைப்ரரி   ----  5

2014 இல் வந்த சன்ஷைன் கிராபிக்   -----6

இந்த கணக்கில் 13 + 8+5+6  =32 இதழ்கள் தானே வருகிறது மொத்த இதழ்கள் 33 என்று உள்ளதே ....இன்னும் ஒரு இதழ் எங்கே என்று நீங்கள் வினவுவது புரிகிறது நண்பர்களே ...அந்த ஒரு இதழ் "தி லயன் மேக்னம் ஸ்பெஷல் " இதழில் இணைப்பாக வந்த "டைகர் "சாகச இதழ் .இனி இந்த வருடம் வந்த அனைத்து கதை வரிசைகளையும் கீழே காணலாம் ......




ஜனவரி .....1 @   யுத்தம் உண்டு  எதரி இல்லை - லயன் -கமான் சே 

                       2 @   சாக மறந்த சுறா -முத்து -ப்ருனோ 

                        3 @  பயங்கர புயல் -சன்ஷைன் லைப்ரரி -பிரின்ஸ் 

                        4 @ பிரபஞ்சத்தின் புதல்வன் -சன்ஷைன் கிராபிக் -தோர்கள் 

பிப்ரவரி ....1  @  காவியில் ஒரு ஆவி -லயன் -ஜில் ஜோர்டன் 

                       2  @  நினைவுகளை துரத்துவோம் -முத்து -ஜானி 

                        3 @  காலத்தின் கால் சுவடுகளில் -முத்து -ரோஜர் 

மார்ச் .........   1  @  அட்லாண்டாவில் ஆக்ரோஷம் -முத்து -டைகர் 

                         2 @  கப்பலுக்குள் களேபரம் -முத்து -ப்ளு கோட் பட்டாளம் 

ஏப்ரல் .......1 @   எஞ்சி நின்றவனின் கதை -லயன் -ஷெல்டன் 

                      2 @  எதிர் வீட்டில் எதிரிகள் -லயன் -லக்கி 

மே ...........1  @   நில் ....கவனி ....சுடு -லயன் -டெக்ஸ் 

                    2  @  முகமற்ற கண்கள் -சன்ஷைன் லைப்ரரி -ப்ருனோ 

                    3  @  பனி கடலில் ஒரு பாலும் தீவு -சன்ஷைன் கிராபிக் -தோர்கள் 

ஜூன் ..........1 @  ஒரு பைங்கிளி படலம் -லயன் -சிக் பில் 

                       2  @ வேட்டை நகரம் வெனிஸ் -முத்து -லார்கோ 

ஜூலை .....1 @  காவல் கழுகு -லயன் -டெக்ஸ் 

                       2  @  ஆத்மாக்கள் அடங்குவதில்லை -லயன் -மேஜிக் விண்ட் 

                       3  @ விரியனின் விரோதி -சன்ஷைன் கிராபிக் -மங்குஸ் 

                       4  @ பூம் பூம் படலம் -சன்ஷைன் லைப்ரரி 

ஆகஸ்ட் ....1 @  தி லயன் மேக்னம்  ஸ்பெஷல் -லயன் -கதம்பம் 

செப்டம்பர்   1 @  செங்குருதி சாலைகள் -லயன் -கமாஞ்சே 

                       2  @   காதலிக்க குதிரை இல்லை -முத்து -ப்ருனோ 
       
                        3 @  தேவ ரகசியம் தேடலுக்கு அல்ல - சன்ஷைன் கிராபிக் 

அக்டோபர்   1 @  காலனின் கை கூலி -சன்ஷைன் கிராபிக் 

                         2 @  கார்சனின் கடந்த காலம் -சன்ஷைன் லைப்ரரி -டெக்ஸ் 

                          3  @ வீதி எங்கும் உதிரம் -லயன் -டைலன் டாக் 

நவம்பர்        1 @ இரவே ....இருளே ..கொல்லாதே ...-லயன் 

                         2  @ ஒரு நிழல் நிஜமாகிறது -முத்து -லார்கோ 

                         3 @ சைத்தான் வீடு -சன்ஷைன் லைப்ரரி -ஜானி 

டிசம்பர் ....... 1 @  வல்லவர்கள் வீழ்வது இல்லை -லயன் -டெக்ஸ் 

                         2 @  உயரே  ஒரு ஒற்றை கழுகு -லயன் -மேஜிக் விண்ட் 

                          3 @  வானமே  எங்கள் வீதி -சன்ஷைன் கிராபிக் 

என 32 + 1 ஒரு இதழ்களும் ......41 கதைகளும் இந்த ஆண்டு வந்து நம்மை மகிழ்ச்சி அடைய செய்து  உள்ளது ....

இந்த வருடத்தின் அதிக விலை உள்ள இதழாக வந்தது

தி மேக்னம் ஸ்பெஷல் .........விலை ரூபாய் ....550

இந்த வருடத்தின் மிக குறைந்த விலை உள்ள இதழாக வந்தது

காவல் கழுகு ..............விலை  ரூபாய் ............35 மட்டுமே ....

இந்த இரண்டு இதழ்களின் நாயகரும் "டெக்ஸ் வில்லர் " என்பது ஆச்சிரியமான உண்மை ...

இந்த வருட இதழ்களில் எனக்கு மிகவும் பிடித்த 3  கதைகள்  :

1 ) நில் ...கவனி ...சுடு ....( டெக்ஸ் )

2 ) எஞ்சி நின்றவனின் கதை ( ஷெல்டன் )

3 ) கட்டத்திற்குள் வட்டம்  ( மார்ட்டின் )

டெக்ஸ் வில்லரின் "வல்லவர்கள் வீழ்வது இல்லை "பலரால் பாராட்ட பட்ட கதையாக இருப்பினும் எனக்கு என்னவோ அந்த கதையின் கடைசி அத்தியாயம் வரை முன்......... மெதுவாக செல்வது போலவும் ....,அதுவரை டெக்ஸ் கதை போலவே தோன்றாததால் என்னை கவர வில்லை .

இந்த வருட சுமாரான கதைகள்

1 ) காலத்தின் கால் சுவடுகளில்  (ரோஜர் )

2 )அட்லாண்டாவில் ஆக்ரோஷம்  ( டைகர் )

சிறந்த அட்டைபடம்  :

1) தி மேக்னம் ஸ்பெஷல் 

2) காவல் கழுகு 

மோசமான அட்டைபடம் :

1 ) ஆத்மாக்கள் அடங்குவதில்லை 

2 ) பனி கடலில் ஒரு பாலும் தீவு

3 ) வல்லவர்கள் வீழ்வது இல்லை 

இது எனது கருத்து மட்டுமே நண்பர்கள் ....நீங்கள் இதில் மாறுபட்டு இருப்பீர்கள் என்பது நான் அறிந்ததே ....ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை .....எப்படி இருப்பினும் நாம் அனைவரும் காமிக்ஸ் உலகின் கீழ் இங்கு நண்பரே .....இந்த வருடத்தை விட அடுத்த வருடம் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத ஆண்டாக இருக்க போவதை ஆசிரியர் முன் கூட்டியே ஒரு "ட்ரைலர் புத்தகமாக "கொடுத்து விட்டார் நண்பர்களே ....அதை விட முக்கியமாய் இனி சந்தா கட்டும் நண்பர்களுக்கு தபால் செலவை நீக்கி விட்டார் .எனவே இன்னமும் சந்தா கட்டாத நபர்கள் விரைவில் சந்தாவை கட்டி சந்தோசத்தை  நாம் தேடி செல்லாமல் .....சந்தோசம்  நம்மை தேடி வர வைப்போம் நண்பர்களே .....நன்றி ......

                               மீண்டும் விரைவில் சந்திப்போம்  ...( சத்தியமாய்  :-) )





செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

இங்கு " காமிக்ஸ் " கிடைக்கும் .....


நண்பர்களே .....வணக்கம் ......

     இந்த "பதிவில் " நாம் காண  போவது காமிக்ஸ் இதழ்களை பற்றிய  பார்வையோ ....விமர்சனமோ  கிடையாது . பதிலாக நமது "லயன் காமிக்ஸ் " ஆரம்பகால  வாசகர்கள் பழைய  இதழ்களில் வந்த ஒரு குறிப்பிட்ட பகுதியை இன்னமும் மறந்து இருக்க மாட்டார்கள் .அது தான் " புக் மார்க்கெட் " பகுதி .இதன் மூலம்  பல வாசகர்கள் தன்னிடம் இல்லாத காமிக்ஸ் புத்தங்களை பெற முடிந்தது .கூடுதல் பிரதி இதழ்கள் வைத்திருந்தவர்கள் அதனை மாற்றி கொள்ளவும் முடிந்தது .ஆனாலும் அந்த பகுதி விரைவிலேயே காணாமல்  போயிற்று .காரணம் அந்த கால கட்டங்களில் அதிகம் ....அதிகம் என்ன ...சுத்தமாக "அலைபேசி "என்னும் வசதிகளோ ....இ -மெயில்  போன்ற வசதிகளோ இல்லாத காரணத்தால் நண்பர்கள் இடையே "கடிதம் " என்னும் தொடர்பு மூலமே இணைய முடிந்தது .இதன் காரணமாக பலர் புத்தகம் கிடைக்காமல் கடிதம் மூலம் மீண்டும் தொடர்ப்பு கொண்டால் கிடைக்கும் பதில் "நான் அனுப்பி விட்டேன் சார் ..தபாலில் தவறி இருக்கலாம் .. ( இதில் எனது அனுபவமும் உண்டு ) பல அரிய இதழ்கள்  சில  இப்படி தவற  விட்டவை தான்  .அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால்  .....ட்ராகன் நகரம் ....ஸ்பைடர் தோன்றும் பாட்டில் பூதம் ......கொலை படை ....மினி லயனின் விண்வெளியில் ஒரு எலி .....இன்னும...) இப்படி பட்ட  புகார்கள் நமது ஆசிரியர் கவனத்திற்கு வந்த பொழுது " அந்த பகுதி " உடனடியாக தடை விதிக்க  பட்டது .

ஆனால்  இந்த கால  கட்டத்தில் தபால் ...கொரியர் ...ஈமெயில் என பல தொடர்பு எல்லைகளால் "இதழ் தொலைந்து போகும் " அனுபவங்கள் கிடையாது  என்பதோடு கூடுதல் பிரதி வைத்திருப்போர் மற்றவர்களுக்கு தன்னிடம் இல்லாத புத்தகத்தை வாங்கி கொண்டு அந்த கூடுதல் பிரதியை கொடுக்க நினைக்கலாம் .ஆனால்  நண்பர்களிடம் கூடுதல் இதழ்கள் இருப்பது எல்லாம் நாம் அறிய முடியாது .எனவே என்னிடம் உள்ள "டபுள் பிரதிகள் " கொண்ட  இதழ்களை இங்கே  கொடுத்துள்ளேன் நண்பர்களே(.ஆ னால் நிரம்ப பழைய இதழ்களை எதிர் பார்த்தால்  ஏமாந்து விடுவீர்கள் )எனவே இதில் கீழ்க்கண்ட இதழ்கள் தங்களுக்கு தேவை படுமாயின் தங்களிடம் உள்ள கூடுதல் பிரதிக்கு இதனை மாற்றி கொள்ளலாம் நண்பர்களே ...அதே  சமயம் புத்தங்களை ..விலைக்கு விற்கவும் ...வாங்கவும் .... நான் விரும்ப வில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் .தங்களுக்கு இதில் உள்ள பிரதிகள் தேவை படுமாயின் இங்கேயோ ...அல்லது

kparanitharan76@gmail.com 

என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் நண்பர்களே .....நன்றி ...

முத்து  காமிக்ஸ் :

1.துருக்கியில் ஜானி நீரோ

2.மலை கோட்டை மர்மம் (ஜானி நீரோ )

3.திகில் ஸ்பெஷல் (திகில் சிறுகதைகள் )

4.தவளை மனிதர்கள் ( மறுபதிப்பு )(மாயாவி )

5.அமான்ஷ்ய அலை வரிசை ( மார்ட்டின் )

6.சரித்தரத்தை சாகடிப்போம்  (மார்ட்டின் )

7.மாண்டவன் மீண்டான் (காரிகன் )

8.மரண மாளிகை (ரிப்போர்டர் ஜானி )

9.திசை திரும்பிய தோட்டா (டைகரின் "மின்னும் மரணம் "இடை பட்ட சாகசம் )

10 .நொறுங்கிய நாணல் மர்மம்


லயன் காமிக்ஸ் :

1. கம்ப்யூட்டர் கொலைகள்  (ரிப் கெர்பி  )

2.தேடி வந்த தங்க சுரங்கம் (சிக் பில் )

3.பரலோகத்திற்கு ஒரு பாலம்  (லக்கி )

4.புரட்சி தலைவன் பிரின்ஸ்

5.ஜேன் இருக்க பயமேன்  (லக்கி )

6.மரணத்தின் முன்னோடி  (டெக்ஸ் பாகம் 1 மட்டும் )

7.மாடஸ்தி  இன் இஸ்தான் புல்


காமிக்ஸ் கிளாசிக்  :

1.நடு  நசி கள்வன்  + கொலை படை


ராணி காமிக்ஸ்  :

1. பெட்ரோல் அதிபர்  (ஜேம்ஸ் பாண்ட் )

2.தலை மட்டும்  (ஜேம்ஸ் பாண்ட் )

3.ஷெரிப் ஆவி  (கௌ-பாய் )

4.அதிரடி அழகி  (ஜேம்ஸ் பாண்ட் )

5.எரிமலை மிருகங்கள்  (ப்ளாஷ் கார்டன்  )

அதிகம் இல்லை நண்பர்களே ..இவ்வளவு தான் .....மீண்டும் இரு பிரதி இருக்குமாறு எனக்கு புத்தகம் கிடைத்தால் இங்கே  இணைக்க படும் .

நன்றி .........வணக்கம் ......














திங்கள், 4 ஆகஸ்ட், 2014

THE LION - 30

நண்பர்களே .....வணக்கம் .....

  நீண்ட இடைவெளிக்கு  பிறகு இங்கே  சந்திப்பதில்  மகிழ்ச்சி .அனைத்து  காமிக்ஸ் நண்பர்களும் ஆவலுடன் எதிர் பார்த்த "காமிக்ஸ் தீபாவளி "ஒரு வழியாக நேற்று  முன் தினம் நிறைவேறியதில்  அனைவரும்  மகிழ்ச்சியில் ஆழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும்  இல்லை என்பது உறுதி .வெளி நாடு வாழ்  வாசகர் மட்டும் கொஞ்சம் ஏக்கத்துடன்  காத்து கொண்டு இருப்பது வருத்தமே ...இந்த  லயன் 30 வது ஆண்டு மலரை " தி லயன் மேக்னம் ஸ்பெஷல் " என்ற அறிவிப்போடு 900 பக்கங்கள் ...9 கதைகள் ....200 +டெக்ஸ் வண்ண சாகசம்  என பல  அதகள   அறிவிப்பு ஆசிரியர் மூலம்  வெளி வந்தவுடனே காமிக்ஸ் ரசிகர்கள் பலரும் அந்த புத்தகத்தை காண கனவுலகில் மிதந்திருந்தனர் எனில் அது மிகை அல்ல .இப்படி ஆழ்ந்த எதிர் பார்ப்பே சில சமயங்களில் ஏமாற்றத்தை அளித்து விடும் .அது திரைப்படமாக இருக்கட்டும் .....அல்லது புத்தகமாக இருக்கட்டும் ......எதுவெனினும் "ஓவர் பில்-டப் உடம்புக்கு ஆகாது " என பல நிகழ்வுகள்  நிரூபித்துள்ளன .அப்படி பட்ட நமது இதயத்தை பன்மடங்கு துடிக்க வைத்த இந்த காமிக்ஸ் புதையல் நண்பர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பை  பூர்த்தி அடைய வைத்துள்ளதா ....அல்லது ஓகே ...ஏமாற்ற வில்லை என்ற திருப்தியை அடைய வைத்ததா .....அல்லது எதிர் பார்ப்புக்கு மேலே நண்பர்களை சந்தோஷ படுத்தி உள்ளதா ...எனில் புத்தகத்தை பார்த்த மறுகணமே முடிவு செய்யலாம் .



நண்பர்கள் பலர் அடைந்த ஒரு சந்தோசத்தை நான் இழந்து விட்டது உண்மை .தபால் மூலம் புத்தகத்தை வாங்கிய அந்த நண்பர்கள் அதன் கவரை பிரித்து முதன் முறையாக புத்தகத்தை வெளி   வாங்கும் அந்த சமயத்தில்   
ஏற்பட்ட அந்த  "இனிய அதிர்ச்சியை " சொல்ல வார்த்தை இருக்காது என்பது தாம் உண்மை .ஈரோட்டில் ஆசிரியரிடம் புத்தக கண்காட்சியில் வாங்கி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்து விட்டதால் அந்த சந்தோசத்தை என்னால் அனுபவிக்க முடியாமல் போய் விட்டது .ஆனால் அந்த சந்தோசத்தை அனுபவித்து இருந்தால் அழகான காமிக்ஸ் திரு நாளான "ஈரோடு புத்தக காட்சியில் " ஆசிரியருடனும் ....காமிக்ஸ் நண்பர்களுடனும் அனுபவித்த அந்த இனிய தருணத்தை இழந்து விட்டு இருப்பேன் .என்ன செய்வது ......"ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்பது எவ்வளவு உண்மை .ஈரோட்டில் புத்தகத்தை  கண் நோக்கிய அந்த கணமே மனம் மகிழ்ச்சியில் துள்ளி விளையாடுவதை முகத்தில் மறைக்க எடுத்த முயற்சியும் உண்டு தாம் .தடிமன் ஆன அந்த அட்டைப்படத்தில் "டெக்ஸ் " அவர்களின் கம்பீரமும் ....மின்னும் எழுத்துகளும் ......எழுத்துருக்களில் காணப்பட்ட அந்த கழுகின் வரை படமும் மயக்காதவரையும் ....மயக்கும்  என்பது உறுதி .அதே போல தான்  இரண்டாம் புத்தகத்தின் மயக்கும் "வில்லியம் வான்ஸ்  " அவர்களின் டைகரின் அட்டைப்படமும் .இந்த முறை அட்டைப்படத்தில் கூட  2+2 = 4 அட்டைப்படத்திலும்  குறை கூற முடியாத அசத்தல் தரம் .ஸ்பெஷல் இதழ்கள் எனில் இனி இது போல அட்டைப்படத்தை அமைக்க வேண்டும் என்பதும் இல்லை எனில் நண்பர்களிடம் ஆசிரியர் மிக பெரிய கண்டனத்தை சந்திப்பார் என்பது உண்மையிலும் உண்மை .



இங்கே மேல் காணப்படும் அட்டைபடம் நான் மிகவும் ரசித்தது .இதை விட சிறந்த அட்டைப்படத்தை தான் நண்பர்கள் புத்தகத்தில் காண போவது .புத்தகத்தை பிரித்தவுடன் ஆசிரியரின் நீண்ட ஹாட் -லைன் .....சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரை ....அழகான காமிக்ஸ் நண்பர்களின் லயனுடன் கூடிய அவர்களின் அனுபவம் ...லயன் முழு வெளியீட்டு விபரங்கள் என ரசிக்க ஏராளம் ..ஏராளம் ....கதைகளை எடுத்து கொண்டால் அதன் நாயகர்களே புத்தகத்தின் வெற்றியை முன்னோட்டமாக கொடுக்கிறார்கள் .

டெக்ஸ் .....டைகர் ....லக்கி ......ரின் டின் ....டைலன் ....மார்ட்டின் ....ராபின் ....ஜூலியா ...அதிரடி கிராபிக் ....என சகலரையும் திருப்தி படுத்தும் ஒரு கதம்பம் இந்த 30 வது ஆண்டு மலர் .இதில் சிலர் அறிமுகம் தான் எனினும் ஆசிரியரின் முன்னாள் முன்னோட்டம் அறிமுக நாயகர்களின் கதை களம்  அதீத  ஆர்வத்தை  நண்பர்கள் இடையே கிளப்பி  உள்ளது .புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி பார்க்கும் பொழுது .....டெக்ஸ் அவர்களின் வண்ண சாகசமும் .....டைலன் அவர்களின் வண்ண சாகசமும் கண்ணை பறிக்கிறது .அதே போல தான் டைகர் ....லக்கி ...ரின்டின் அவர்களின் வண்ண சாகசமும் .....இதன் காரணமாக தான் என்னவோ "ராபின் " அவர்களின் மங்கலான  வண்ண தரம் கண்ணை கவர வில்லை .ராபினை கருப்பு வெள்ளையில் வருவதும் தவறு இல்லை என்ற எண்ண  வைக்கும் வண்ண கலவை .அதே  போல பாராட்டும் படியான மற்ற ஒன்று கருப்பு வெள்ளை கதைகளின் காகித தரம் .நண்பர்கள் பலர் ..பல சமயம் வேண்டிய இந்த தரம் இந்த இதழுடன் துவங்கியதில் மகிழ்ச்சி அடைந்திருப்பர் .இனி கருப்பு வெள்ளை கதைகளின் காகித தரம் இதுபோல தான் இருக்க வேண்டும் என்பதே  அனைத்து நண்பர்களின் எதிர் பார்ப்பும் .







ஒவ்வொரு கதைகளின்  சித்திர தரமும் நம்மை மயக்க வைக்கிறது .ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையாக படிக்கும் பொழுது ஏற்படும் அனுபவங்கள் ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகருக்கும் ஏற்படும் இந்த  இனிய அனுபவம் மறக்க முடியாத ஒன்று .நண்பர்களுக்கு கதையை சொல்லி எல்லாம் அவர்களின் ஆவலை குறைத்து விட கூடாது என்பதற்காகவும் ..இன்னும் அனைத்து கதைகளும் படித்து முடிக்க ஒரு வாரம் மேலாகும் என்பதாலும் கதையை பற்றி எல்லாம் நான் மூச்சு விட போவதில்லை .ஆனால் டெக்ஸ் அவர்களின்  " சட்டம் அறிந்திரா சமவெளி "கதையை படித்த இரண்டு ..,மூன்று பக்கங்களிலேயே  டெக்ஸ் அவர்கள் எதிரிகளின் கொட்டத்தை அடக்க  எனக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்று கூறும் பொழுதே ட்ராகன் நகரம் ..,பழி வாங்கும் புயல் ....கழுகு வேட்டை ...என பழைய அதிரடி டெக்ஸ் அவர்களை காண போகிறோம் என்பதை நண்பர்கள் உணர அதிகம் மெனக்கிட தேவை இல்லை .

மொத்தத்தில் இந்த மாதம் காமிக்ஸ் நண்பர்களுக்கு ஒரு மறக்க முடியாத விருந்தை ஆசிரியர் பரிமாறி உள்ளார் .காமிக்ஸ் நண்பர்களின் வேண்டுகோள் 
எல்லாம் இனி இந்த விருந்தை "வருடம் தவறாமல் தர வேண்டும் "என்பதே ...விருந்தை சுவையாக பரிமாறியதும் அல்லாமல்  நேரம் தவறாமல் பரிமாறிய ஆசிரியருக்கும் ..,அவர் தம் பணியாளர்களுக்கும் ....காமிக்ஸ் ரசிகர்களின் சார்பாக ஒரு மாபெரும்  " பூங்கொத்தை  "மனதார அளிக்கிறோம் சார் ..



        நன்றி நண்பர்களே ........மீண்டும் சந்திப்போம் ...

சனி, 5 ஏப்ரல், 2014

இது காமிக்ஸ் மனது ....

நண்பர்களே ....வணக்கம் ...

நலம் ..நலமா .....

நீங்கள் தொலைகாட்சியில்  ஒரு விறு ,விறுப்பான  திரைப்படத்தை  பார்த்து  கொண்டு இருக்கும் பொழுதோ ..,அல்லது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருக்கும் பொழுதோ திடீரென இடையில் விளம்பரம் வரும் பொழுது நமக்கு எவ்வளவு எரிச்சல் வருகிறது .அதை விடுங்கள் ஏதாவது பத்திரிக்கையை வாங்கி படித்து கொண்டு இருக்கும் பொழுது அதில் வரும் "விளம்பரகளை " கவனிக்காமல் வேகமாக புரட்டி செல்லுபவர்களே  அதிகம் .அதுவும் சில சமயம் "விளம்பரங்கள் " அதிகமாக இருப்பதாக பட்டால்  விளம்பரத்தை போட்டே  பக்கத்தை  நிரப்பிட்டாணுக ...என்று மனதிற்குள் திட்டவும் செய்கிறோம் .ஆனால் .........

காமிக்ஸ் ரசிகர்கள்  ஆன நமது " காமிக்ஸ் மனது " விளம்பரத்தை எதிர் பார்த்தே ஒரு புத்தகத்தை ஆவலுடன்  எதிர் பார்க்க வைக்கிறது என்றால் இந்த "காமிக்ஸ் புத்தகம் " செய்யும் மாயம் தான் என்ன ..?கதைகளை கூட பின்னுக்கு தள்ளி விட்டு விளம்பரத்தை பற்றியே  பேச வைக்கிறது என்றால் அதன் "மாயம் " தான் என்ன ..?இதோ  ஆசிரியர் அறிவித்து விட்டார் ..காமிக்ஸ் ரசிகர் அனைவரும் கொண்டாட வைக்கும் லயன் 30 வது ஆண்டு மலர் 900 பக்கத்தில் வெறும் 500 ரூபாயில் 9 கதைகளோடு அதுவும் 500 + பக்கம் வண்ணத்தில் என்பது வேறு மொழியில் சாத்தியமா என்றால் அது வெறும் கனவாக தான் இருக்கும் நண்பர்களே ..கொண்டாடுவோம் ...ஆசிரியரை மனதார பாராட்டுவோம் ..நமக்கு சிற்சில ஏமாற்றங்கள் அந்த அறிவிப்பில் காண பட்ட போதும் அதற்கான காரணத்தை அவர்  "லயனும் நாமும் " என்ற பதிவில் தெரிவித்து விட்டதால் நாம் வருத்த பட ஏதும் இல்லை .மொத்தத்தில் மனம் இப்போதே "ஆகஸ்ட் "மாதத்தை எதிர் பார்த்து கொண்டு கனவுலகில் பல நண்பர்கள் மிதப்பது உண்மை ...

இந்த மாதம் வெளி வந்த இரண்டு காமிக்ஸ் புத்தங்கள் அதிரடி ஹீரோ "ஷெல்டன் " அவர்களின் "எஞ்சி நின்றவனின் கதை " மற்றும் காமெடி சூப்பர்  ஸ்டார் "லக்கி " அவர்களின் "எதிர் வீட்டு எதிரிகள் ".போன மாதம் போலவே ஒரு சின்ன புக் ....மற்றும் ஒரு "சின்ன குண்டு புக் "என்பதில் நண்பர்களுக்கும் ..,எனக்கும் மகிழ்ச்சியே ....ஒவ்வொரு முறையும் இதே நிலையில் வரும் என இருந்தால் நண்பர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியே ...இப்பொழுது இந்த இரு இதழ்களின் கருத்தை பற்றி எனது குறுகிய பார்வை ...

" எஞ்சி நின்றவனின் கதை " :

அனைத்து ரசிகர்களுமே "ஷெல்டன் " அவர்களை எதிர் பார்த்து வழி மேல் விழி பார்த்து நின்றார்கள் என்றால் கண்டிப்பாக மிகை அல்ல .அந்த எதிர் பார்ப்பை அவர் நிவர்த்தி செய்தாரா  என்றால் கண்டிப்பாக என்னை பொறுத்த வரை 100% திருப்தி தந்தார் என்றே  சொல்லுவேன் .முதலில் அட்டை படத்தை பற்றி சொல்லலாம் என்றால் குறை ஏதும் இல்லை எனினும் முன் ..,பின் ..அட்டையை மாற்றி வெளி இட்டு இருந்தால் இன்னும் கலக்கலாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம் .ஹாட் -லைன் தவிர இந்த இதழில் கதை மட்டுமே என்பதால் ஏதும் சொல்வதற்கு இல்லை ..ஆனால் கதையில் வரும் சித்திரங்கள் அனைத்தும்  அட்டகாச ரகம் .ஒவ்வொன்றும் ஒரு புகை படமா என்று நினைக்கும் அளவில் ..அச்சு  தரமும் மிக தெளிவாக உள்ளதால் 




ஒரு "திரை படத்தை "பார்த்த அனுபவத்தை அனுபவத்தை கொடுக்கிறார் .அதே மொழி ஆக்கமும் பல இடங்களில் நம் மனதில் சில வசனங்கள் "நச் "என்று ஒட்டி கொண்டு வருகிறது .எதற்கும் கலங்காத ஷெல்டன் கூட கலங்குவது இந்த கதையில் ஒரு திருப்பமே ....மொத்தத்தில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு  ஒரு விறு .,விறுப்பான  மசாலா படம் பார்த்த திருப்தி இந்த இதழில் கிடைக்கும் என்பது எனது எண்ணம் .

"எதிர் வீட்டில் எதிரிகள் " :

இந்த காமெடி ஸ்டார் கதையை "விளம்பரத்திற்கு " என்றே  எதிர் பார்த்தவர்கள் அதிகம் .அதை பற்றி ஏற்கனவே சொல்லி விட்டதால் மேலே செல்லலாம் .அட்டைபடம் "சூப்பர் " என்று சொல்ல வைக்க வில்லை எனினும்  "மோசம் "என்றும் சொல்ல வைக்க வில்லை .கதை உண்மையில் பழைய லக்கி சாகசத்தை பார்த்த ..படித்த அனுபவத்தை கொடுக்கிறது .மொழி ஆக்கத்தை பற்றி கண்டிப்பாக சொல்லி தான் ஆக வேண்டும் .காரணம் இம்முறை மொழி ஆக்கம் நமது ஆசிரியரின் புதல்வர் "விக்ரம் " அவர்கள் .கண்டிப்பாக ஏதாவது வித்தியாசம் இருக்கும் ...நமது பழக்கமான மொழி நடைக்கு அவர் ஈடு கொடுப்பாரா என்ற எண்ணத்தில் தான் படிக்கவே ஆரம்பித்தேன் .காரணம்



என்னை  பொறுத்த வரை நமது லயன் ..,முத்து காமிக்ஸ் புத்தகத்திற்கு உயிர் கொடுப்பது "மொழி ஆக்கம் "தான் என்பது எனது எண்ணம் .அதனாலேயே "மொழி ஆக்கத்தில் " ஆசிரியர் போட்டி வைத்தால் நண்பர்கள் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்று எனது எதிர்ப்பை பதிவு செய்து விடுகிறேன் .ஆனால்  நமது ஆசிரயர் விஜயன் அவர்களின் புதல்வர் விக்ரம் ஏமாற்றவில்லை என்றே அடித்து சொல்லுவேன் .வித்தியாசம் ஏதும் கிடையாது என்பதோடு சிறந்த நடையிலும் "மொழி ஆக்கம் " இருக்கிறது .பாராட்டுகள் விக்ரம் சார் . மொத்தத்தில் நமது காமிக்ஸ் மனதை இந்த மாதம் "கட்டி போட்டு " வைக்கிறது .

மீண்டும்  "லயன் 30 வது ஆண்டு மலர் " க்கு பிறகு சந்திப்போம் நண்பர்களே ..நன்றி ..வணக்கம் .

ஞாயிறு, 9 மார்ச், 2014

காமெடி களபரம் ....


நண்பர்களே ....வணக்கம் ...

நலம் ...நலமா ....?

இந்த வருடத்தின் இந்த மூன்றாவது மாதத்தில் வெளி வந்த இரண்டு புத்தங்கள் பல விதத்தில் நண்பர்களை திருப்தி படுத்தியது என்றால் அது மிகை அல்ல .முதல் காரணம் இந்த வருடத்தில் வந்த முதல் 120 பக்க இதழ் " டைகர் " சாகசத்தின் மூலம் இந்த மாதம் வந்தது தான் .இந்த வருட ஆரம்பம் முதலே மூன்று இதழ்கள் ..,நான்கு இதழ்கள் என ஒரு சேர வந்தாலும் குட்டி ..,குட்டியாய் வந்து ஒரு முழுமையான " காமிக்ஸ் மன திருப்தியை " அளிக்க வில்லை என்பதே உண்மை .இந்த  மாதம்  இரண்டு இதழ்கள் தாம் எனினும் ஒரு இதழ் "போன வருட 120 பக்க இதழ் போல வந்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சந்தோசத்தை அளித்தது .இந்த அளவில் புத்தகம் வரும் பொழுது ஒரு புத்தகம் 60 ரூபாய் அளவில் இணைத்து வருவதும் நன்று .எனவே ஆசிரியர் மாதம் ஒரு 120 ரூபாய் புத்தகமும் 60 ரூபாய் புத்தகமும் இணைத்து வெளி இட்டால் அனைவருக்கும் " திருப்தி " ஆக இருக்கும் .இந்த மாதம் வெளி வந்த இரண்டு புத்தங்கள் டைகரின் " அட்லாண்டாவில் ஆக்ரோஷம் "மற்றும் ப்ளூ கோட் பட்டாளத்தின் " கப்பலுக்குள் களபரம் ".இந்த இரண்டு இதழ்களை  பற்றிய எனது எண்ணவோட்டம் தான் இந்த " காமெடி களபரம் ".

அட்லாண்டாவில் ஆக்ரோஷம் :

உண்மையில் மிக அழகான அட்டைப்படம் இந்த "அட்லாண்டாவில் ஆக்ரோஷம் "இதழ் .டைகரும் ..,அவர் தோழரும் வண்ண மயமாக ..,எடுப்பாக முன் நிற்க பின்னணி மங்கலான வண்ணத்தில் கண்ணை கவரும் விதத்தில் அட்டகாசமாக உள்ளது .கதையின் சித்திர தரமும் ..,வண்ணமும் இந்த முறையும் வருட ஆரம்பம் முதலே போல் இம்முறையும் நன்று .அதே  போல அடுத்து வரும் இதழ்களின் விளம்பரம் ....சூப்பர் 6 அறிவிப்பு என களை கட்டியது .முக்கியமாய் இரண்டு இதழ்களும் " முத்து காமிக்ஸ் " பிராண்டில் வருவதால் எங்கே "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பை நிறுத்தி வைப்பாரோ என்ற பயத்தில் இருந்த பொழுது நல்ல வேளையாக மறவாமல் கட்டுரையை வெளி வர செய்து இருந்தார் .கதையை பற்றி விமர்சனம் அளிக்கலாம் தான் .ஆனால் ஆசிரியர் வலை தளத்தில் கடந்த மூன்று ..,நான்கு பதிவாக டெக்ஸ் &டைகர் மோதல் கலவரமாக நடந்து " டெக்ஸ் " இதழை ஆசிரியர் தள்ளி வைக்கும் அளவிற்கு போக ( அந்த கலவர கும்பலில் நானும் ஒருவன் ).....ஒற்றுமையை வேண்டி அனைவரும் இப்பொழுது வெள்ளை கொடி பிடித்து கொண்டு இருக்கும் பொழுது என் மனதில் உள்ளதை சொன்னால் மீண்டும் " கலவரம் " என்ற மேகம் சூழலாம் .
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் " டைகரின் " கதை எப்படி இருக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம் என்றால் ஒரு " தங்க கல்லறை " போல    "தோட்டா தலை நகரம் ""ரத்த கோட்டை " போல அமைய வேண்டும் என்றே எதிர் பார்க்கிறோம் .ஒவ்வொரு கதையும் அவ்வாறு அமைய வேண்டும் என்பதில்லை .டெக்ஸ் கதைகளிலும் சோடை போன கதைகள் உண்டு .ஆனால் ஒரு " காமிக்ஸ் கதையை " பிடித்த திருப்தி தர வேண்டுமென்றால் இரண்டு ..,மூன்று பாகங்களில் முடிவுரை வர வேண்டும் .அதுவும் தொடர்ந்து வர வேண்டும் .அப்படி இல்லாமல் இப்பொழுது எல்லாம் எந்த டைகர் கதையை எடுத்தாலும் பல இடங்களில் பார்க்க : முன் பாகத்தில் ....இனி பார்க்க ...அடுத்த பாகத்தில் என வருவது தான் அயர்ச்சிக்கு காரணம் .கமர்சியல் கதை களம் என்றாலும்  கூட ஒத்து கொள்ளலாம் ஒரு ராணுவ கதை களத்தில் தொடர்ச்சியாய் ஒரே கதை நீண்டு கொண்டே செல்வது சலிப்பை தான் ஏற்படுத்துகிறது .பள்ளி சமயத்தில் " வரலாறு " புத்தகத்தை படித்த அனுபவம் தருகிறது இப்போதைய "டைகரின் " சாகசம் .இங்கே நண்பர்களில் சிலர்  பள்ளி சமயத்தில்  விருப்ப பாடம் " வரலாறு " என்றால் உங்கள் மனம் கவர்ந்த கதை " இந்த அட்லாண்டாவில் ஆக்ரோஷம் " ஆனால் பள்ளியில் அப்பொழுதே " வரலாறு " என்றால் " தகராறு " என்ற சூழ்நிலையில் என்னை போல தாங்கள் இருந்தால் மீண்டும் எடுத்து படியுங்கள் தங்க கல்லறை மற்றும் தோட்டா தலை நகரம் .

கப்பலுக்குள் களபரம் :

குட்டியான இதழ் தான் .ஆனால் அழகான வண்ணமயமான அட்டைப்படம் ...எடுப்பான சித்திர தரங்கள் .....அதை விட விரிவான ....சூப்பர் ஆன சூப்பர் 6 விளம்பரங்கள் என அத கள படுத்தியது "ப்ளூ கோட் பட்டாளம் ".கதை களத்திற்கு செல்லும் பொழுது மிக பெரிய எதிர் பார்ப்பு என்னுள் இல்லை .காரணம் அப்பொழுது தாம் " வரலாறு " புத்தகத்தை  :-) படித்த அசதி .அதை விட மற்ற ஒன்று அறிமுக நாயகரில் முதல் சாகசத்தில் அசத்திய நாயர்கள் இரண்டாவது முறை களம் இறங்கும் பொழுது அந்த அளவிற்கு கவர வில்லை .அதற்காக "மோசம் " என்ற அர்த்தம் இல்லை .முதல் சாகசத்தில் அசத்திய அந்த எதிர் பார்ப்பு அடுத்து  வரும் சாகசத்தில்  இன்னும் கூடுதல்  எதிர் பார்ப்பு ஆக அமைந்து விடுவதால் கொஞ்சம் அசங்கினாலும் அந்த ஹீரோக்கள் நண்பர்களின் எதிர்பார்ப்பை குறைத்து விடுகிறார்கள் .அந்த காரணத்தோடு போர் கள  சூழ்நிலையில் இந்த "பட்டாளம் " என்ன காமெடி களபரம் பண்ணி விடுவார்கள் ...ஏதோ முதல் சாகசம் ஓகே பண்ணி விட்டார்கள் .இனி அவ்வளவு தான் என்ற நினைப்பில் தான் படிக்க  ஆரம்பித்தேன் .




ஆனால் படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் நம்மை அவர்களோடு கட்டி போட்டு விடுகிறாகள் .அதுவும் கயிற்றால்  அல்ல ....காமெடியால் கட்டி போட்டு விடுகிறார்கள் .நீண்ட நாட்களுக்கு பிறகு பக்கத்திற்கு பக்கம் வாய் விட்டு சிரிக்க வைக்கிறார்கள் இந்த " ப்ளூ கோட் பட்டாளம் .." தைரியமாய் சொல்கிறேன் .....ஏதாவது சமயத்தில் உங்கள் மனம் சோக மயமாய் இருகிறதா ? ஏதோ இழந்த மன குழப்பமா ? கவலை வேண்டாம் ...மருந்தாய் வந்துள்ளது "காமெடி களபரம் " என்ற " கப்பலுக்குள் களபரம் ".சிடு மூஞ்சிகளையும் சிரிக்க வைத்து அழகு பார்க்கிறது இந்த களபரம் .ஆசிரியர் லயன் 30 வது ஆண்டு மலரில் இவர்களை ஒதுக்கி வைப்பது நமது துரதிர்ஷ்டம் .இவர்களை லயனிலும் உழல செய்ய ஆசிரியர் முயற்சி எடுத்தால் நன்று .

இதை விட இன்னும் சந்தோசமான காமிக்ஸ் அனுபவங்கள் அடுத்த மாதம் காத்துள்ளது .ஆம் ....நமது புரட்சி தளபதி " ஷெல்டன் " அவர்கள் அடுத்த மாதம் 120 ரூபாய் விலையில் காத்து கொண்டு இருக்கிறார் .அவரோடு இணைந்து வருகிறார் "காமெடி சூப்பர் ஸ்டார் " லக்கி அவர்கள் .அது மட்டுமல்லாமல் 30 வது ஆண்டு மலரின் விளம்பரங்கள் ......சூப்பர் 6 பற்றிய அழகான விளம்பரங்கள் ...சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரை ....என ஏப்ரல் நமக்கு அள்ளி கொடுக்க போகும் சந்தோசங்கள் ஏராளம் ..இந்த விளம்பரங்களோடு "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பை பற்றி ஆசிரியர் அறிவித்தால் குஷ்பு விற்கு கோவில் கட்டிய அந்த சிற்பிகளை கொண்டு ஆசிரியர் அவர்களுக்கும் ஒரு கோவில் கட்ட வைக்கலாம் .காத்திருப்போம் நண்பர்களே ...

          மீண்டும் விரைவில் சந்திப்போம் ....

    

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

ஆசிரியருக்கு கண்டனம் ....



நண்பர்களே ....வணக்கம் ...

நலம் ....நலமா .....

இந்த மாதம் வெளி வந்த நமது " காமிக்ஸ் புத்தங்களை " அனைவரும் படித்து முடித்து அடுத்த " டைகர் " சாகஸ  கதையை  காண ஆவலுடன் காத்து கொண்டு இருப்பிர்கள் .நானும் ....அதற்காக காத்து கொண்டு இருக்கிறேன் .இப்பொழுது எல்லாம் அந்த மாதத்து புத்தகங்கள் வந்தவுடன் உடனே அந்த மாதம் முடிந்து அடுத்த மாதம் வராதா என்ற ஏக்கம் வந்து விடுகிறது .இரண்டு வருடத்திற்கு முன் அவ்வாறு  இல்லை ...காரணம் அப்பொழுது எல்லாம் மாதம் தவறாமல் புத்தகம் வருவது இல்லையே ....இப்பொழுது அதற்க்கு பாராட்டி சொல்வதற்கு இந்த பதிவு இல்லை .இரண்டு வருடமாக அதை பாராட்டி கொண்டு தானே இருக்கிறோம் .இந்த பதிவு ஆசிரியரை வன்மையாக ....கண்டித்து....எழுத .... முதன் முறையாக களம் இறங்குகிறது இந்த வலை பதிவில் .எனவே ஒத்த கருத்துடைய .....வேறு  பட்ட கருத்துடைய அனைத்து நண்பர்களும் அவர்களுடைய கருத்தை இங்கே கூட அல்ல ...ஆசிரியரின் வலை பக்கத்தில் கூட தெரிவிக்கலாம் .புதிர் மேல் புதிர் போடுகிறான் என நினைக்க வேண்டாம் .பழைய செய்தி தான் .காலம் குறைவால் இப்பொழுதே ஆசிரியருக்கு தெரிவிக்கவும் .....கண்டனத்தை அதிகரித்து அவர் மனதை மாற்ற செய்யவும் தான் இந்த கண்டன பதிவு .

       நான் மட்டுமல்ல பல வாசக நண்பர்கள் ....கேட்டும் .....பல விதத்தில் ...பல முறை போராடியும் இன்னமும் ஆசிரியர் அவர்கள் " சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பை  வெளி இட சம்மதிக்க வில்லை .அதற்கான அவர் கூறும் காரணம் இரண்டு மட்டும் .அவற்றிற்கான காரணத்தின் நிஜம் உண்மையாக இருப்பினும் நண்பர்களின் பதிலில் அவர் மாற்றம் கொண்டு "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பிற்கு எந்த அளவு நண்பர்கள் தீவிரமாக அதை விரும்புகிறார்கள்  என்பதை   ஆசிரியருக்கு உணர்த்தவும் ......நண்பர்கள் ஏன் " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்புக்காக போராடி கொண்டு இருக்கிறாகள் என்பதை தீவிரமாகவும் அவருக்கு உணர்த்தவும்  " 30 வது ஆண்டு மலர் சமயத்தில் தொகுப்பு வருகிறதோ இல்லையோ ....உறுதி மொழி ஆவது வாங்குவதை காண தான் இந்த கண்டன பதிவு வெளி இட படுகிறது .நண்பர்கள் இதை  பற்றி ஆசிரியரிடம் வினவும் பொழுது அவர் ( தப்பிக்க ) வெளி இடும் இரண்டு காரணங்கள் கீழே பார்க்கலாம் .

      ஒன்று  : " தொடர் " இன்னும் முடிவடையாத பொழுது " தொகுப்பு " இப்பொழுது தேவை இல்லை என்பது ஒன்று .

    இரண்டு : நான் என்ன சாதித்து விட்டேன் ...தொகுப்பை வெளி இட என்ற தன்னடக்கத்தின் விடை இரண்டு.

இந்த இரண்டு செய்திகளை கொண்டு அவர் "தொகுப்பை " வெளி இட மறுத்து கொண்டு இருக்கிறார் .அவரின் இந்த கருத்துகளில் நண்பர்களின் பதில் மௌனமாக இருப்பதால் ஆசிரியர் அந்த கருத்துகளில் இருந்து மாறாமல் இருக்கிறார் .அவரிடம் " மௌனத்தை " பதிலாக அளித்திருந்தாலும் ....ஏக்கத்தை நண்பர்களால் மறைக்க முடிய வில்லை .இப்பொழுது அவரின் கருத்துகளுக்கு நண்பர்களின் பதிலை இங்கே காணலாம் .ஆசிரியரின் முதல் காரணத்தில் உண்மை இருப்பினும் அதை " முக்கியமான " ஒன்றாக கருதி தொகுப்பை நிறுத்தி வைப்பது சரி இல்லை .காரணம்  தொடர் முடிந்ததும் தொகுப்பாக வெளி இடும் சமயம் எப்பொழுதும் இல்லை .இனி லயன் ...முத்து என்ற சிங்கத்தின் பயணம் முடிவடையாத பயணம் .முடிவில்லா பயணத்திற்கு " முடிவுரை " ஏது ?எனவே முப்பது ..முப்பது பகுதிகளாக அத்தியாயம் நிறைவடையும் பொழுது தொகுப்பு ஒன்று ...தொகுப்பு இரண்டு என வெளி இடுவதில் தவறு இல்லை .ஆசிரியருக்கும் " செலவு " குறைவாக இருக்கும் .எனவே மீண்டும் இந்த காரணத்தை ஆசிரியர் தெரிவித்தால் நண்பர்கள் பலத்த கண்டனத்தை தெரிவிப்பார்கள் என்பதை கண்டனத்துடனும் ...,பணிவுடனும் கூறி கொள்கிறேன்.

     இரண்டாவது காரணம் " நான் என்ன சாதித்து விட்டேன்  " என்பது .இது முழுக்க ..,முழுக்க நிஜம் அல்ல தோழர்களே .இதற்கான எனது பதில்... ஆசிரியர் என்ன " சாதிக்க வில்லை " இந்த காமிக்ஸ் உலகில் ....? பிரபல பத்திரிக்கை குழுமங்கள் தான் " மாலை மதி காமிக்ஸ் ".., மேகலா காமிக்ஸ் "..., ராணி காமிக்ஸ் " ....போன்ற காமிக்ஸ் இதழ்களை வெளி இட்டன .அவை எல்லாம் இன்று காண கிடைக்காத பொழுது இன்றும் காமிக்ஸ் நண்பர்களுக்காக தொடர்ந்து வெளி இட்டு தமிழ் காமிக்ஸ் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டு இருக்கிறார் எனில் அது சாதனை அல்லவா .....தமிழின் பிரபல மூன்று பதிப்பகங்களும் அனைத்து  துறைகளுக்கும் ஒவ்வொன்றாக புத்தங்களை வெளி இடும் பொழுது அவைகள் " காமிக்ஸ் " என்ற உலகில் நுழையாதது ஏன் ? சிந்திக்க வேண்டும் நண்பர்களே ....அவர்களுக்கு பலமான விளம்பர துணை இருப்பினும் இன்னும் நுழையாமல் இருப்பதும் .....நுழைந்ததும் காணாமல் போன காரணம் தான் என்ன ? இதில் சாதகத்தை விட பாதகம் அதிகம் என்பதால் தானே ? அப்படி பட்ட துறையில் 40 வருடமாக போராடி வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கும் அவர் " சாதிக்க வில்லையா " இல்லையா என்பதை நண்பர்கள் தாம் முடிவெடுக்க வேண்டும் .எனவே ஆசிரியர் மீண்டும் இந்த பதிலை தெரிவித்தால் நண்பர்களின் கண்டனம் பலமாக இருக்கும் என்பதை ஆசிரியருக்கு கண்டனதுடனும் ...,பணிவுடனும் கூறி கொள்கிறேன் .

இனி " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வேண்டி நண்பர்களின் போராட்டம் ஏன் என்பதை பார்க்கலாம் .

1...... பழைய நமது காமிக்ஸ் இதழ்களை கண்டாலே மனம் மகிழ்ச்சியில் துள்ளும் பொழுது அந்த இதழின் வரலாறை படிக்கும் பொழுது அந்த காமிக்ஸ் இதழ்கள் கிடைக்காத சந்தோசத்தை இந்த தொடர் வாசகர்களுக்கு தருகிறது .தொடராக வரும் பொழுதே அப்படி என்றால் " தொகுப்பாக " வந்தால் .....

2.....பழைய நமது காமிக்ஸ் இதழ்கள் கைக்கு கிடைக்கும் பொழுது முன்னர் அதை படித்து இருந்தால் .அந்த இதழ்கள் ...அந்த கால கட்டத்திற்கு நம்மை அழைத்து செல்லும் பொழுது ....ஆசிரியர் அவர்களும் நம் கால பயணத்தில் அழைத்து செல்லும் மன நிலையை இந்த தொடர் வாசகர்களுக்கு தருகிறது .தொடராக வரும் பொழுதே அப்படி என்றால்  " தொகுப்பாக " வந்தால் ....

3.....நமது பால்ய கால தோழன் நம்மிடம் திடிரென தோன்றி அந்த சிறு வயது நினைவுகளை கிளறினால் அந்த நினைவுகளில் நாம் எப்படி மகிழ்ச்சி  உடன் திளைக்கிறோம் .அந்த கிளர்ச்சியை இந்த தொடர் நண்பர்களுக்கு தரும் பொழுது " தொகுப்பாக " வந்தால் ....

4....இந்த தொடரை படிக்கும் பொழுது நமது சிங்கத்தின் கரங்களை சந்தோஷமாக பிடித்து நடந்து செல்லும் அந்த பயணம் சில நிமிடங்களில் முடிவடையும் அந்த ஏக்கம் " தொகுப்பாக " வந்தால்  ..........

இப்படி இன்னும் பல முடிவடையாத சந்தோசங்களை நண்பர்களுக்கு தந்து கொண்டு இருக்கும் இந்த தொடர்  " தொகுப்பாக " வந்தால் .....ஆசிரியர் சிந்திக்க வேண்டும் .எனவே தயவு செய்து  ஆசிரியர் " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பை வெளி இட ஆவண செய்ய வேண்டும் .சந்தோஷ குளத்தில் குதிக்கும் நண்பர்களை சந்தோஷ கடலில் தள்ளி மகிழ்ச்சி அடைய வைப்பது ஆசிரியரின் கடமை .கடமை தவறினால் " கண்டனம்  " தெரிவிப்பது எங்கள் கடமை .விரைவில் நல்ல பதிலை ஆசிரியரிடம் எதிர் பார்த்து கொண்டு இருப்பது ..................

     " அனைத்துலக தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் நற்பணி மன்றத்தினர் " .


வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

காமிக்ஸ்களை துரத்துவோம் ....


நண்பர்களே ....வணக்கம் ....

நலம் ....நலமா .....

காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் காமிக்ஸ் புத்தங்களை துரத்தி ..,துரத்தி ...சென்ற காலம் போய் இப்பொழுது காமிக்ஸ் புத்தங்கள் நம்மை துரத்தி ...துரத்தி வருவது உண்மையில் கொண்டாட்டமான நிகழ்வுதான் இல்லையா தோழர்களே ....இந்த மாதம் இரண்டே ..,இரண்டே புத்தங்கள் தான் ....அதுவும் குறுகிய பக்கங்கள் என்ற பொழுது புத்தகம் வரும் நாள்களில் ஏற்படும் ஒருவித மகிழ்ச்சி ஒரு மாற்று குறைந்தே காணப்பட்டது .ஆனால் திடிரென ஆசிரியர் ஒரு நாள் தாமத்தை ஏற்று கொண்டால் மூன்று புத்தங்கள் என்று அறிவித்த பொழுது மகிழ்ச்சி பல மடங்கு ஏறியது நண்பர்கள் அனைவருமே உணருவார்கள் .அதிலும் இனி மாதம் தோறும் குறைந்த பக்கங்கள் என்றால் மூன்று இதழ்கள் கண்டிப்பாக அறிவித்து இருப்பது காமிக்ஸ் நண்பர்களுக்கு எவ்வளவு பெரிய கொண்டாட்டம் என்பது புரிந்து இருக்கும் .இப்படி திடீர் ..,திடீர் என ஆசிரயர் தனது கால்கட்டை விரலை முகத்திற்கு அருகே கொண்டு செல்வது நமக்கு நடை பாதையில் பனி சறுக்கு மட்டையை கொண்டு பனியில் சறுக்கி செல்வது போன்ற சந்தோசத்தை ஏற்படுத்துகிறது .இதே போல அடிக்கடி " தீபாவளி மலர் " போல குண்டு புத்தங்களும் இடை இடைய புகுத்தினால் அட்டகாசமாக தான் இருக்கும் .அதற்கு அவரின் மேஜை கீழே 1987 போல பல கதைகள் கொட்டி கிடந்தது போல இப்பொழுதும் கொட்டி ..,கொட்டி கிடக்க வேண்டுவோம் .

இந்த மாதம் அழகான மூன்று இதழ்கள் களம் கண்டு உள்ளன .திகில் ஹீரோவான ரோஜர் பல வருட இடைவெளிக்கு மீண்டு ( ம் )  " காலத்தின் கால் சுவடுகளில் " என்ற சாகசத்தின் மூலம் நம்மை காண வருகிறார் .அடுத்த நாயகரும் திகில் நாயகரின் சாகசம் தான் .அவர் நமது ரிப்போர்ட்டர் "ஜானி " . "நினைவுகளை துரத்துவோம் " என்ற சாகசத்தின் மூலம் நம்மை சந்திக்க காத்து கொண்டு இருக்கிறார் .அடுத்து வருபவர் " ஜில் ஜோர்டன் " காவியில் ஒரு ஆவி மூலமாக சந்திக்க வருகிறார் .இந்த மூன்று இதழ்களுமே தனக்குள் போட்டி கொண்டால் கதை தரத்திலும் ..,சித்திர தரத்திலும் எவை ..எவை முன்னுக்கு வருகின்றன என "கதையை " சொல்லாமல் இங்கே பார்க்கலாம் நண்பர்களே .

மூன்று இதழ்களில் கதைகளில் முதல் இடம் பிடிப்பது நமது  ஜானி அவர்களின் " நினைவுகளை துரத்துவோம் " தான் .ஆசிரியர் ஹாட் -லைனில் ஜானி கதைகளில் டாப் 5 இல் இது என்று அறிவித்து இருந்தார் .என்னை பொறுத்தவரை நான் படித்த ஜானி கதைகளில் இது " முதல் இடத்தை " பிடிக்கிறது .எப்பொழுதும் குற்றத்தை கண்டு பிடிக்க வருபவர்  இம்முறை தானே சிக்கலில் மாட்டிக்கொண்டு அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதையும் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே ..அச்சு தரப்பிலும்  முழு நீள திருப்தி .அழகான வண்ண ஓவியங்கள் ..,சிறந்த அச்சு தரம் ..விறுவிறுப்பான கதை ஓட்டம் என்று நம்மை அழகாக மயக்கி விட்டார் ஜானி .அட்டை படமும் அழகு தான் என்றாலும் மூன்றில் முதல் இடம் அதற்கு இல்லை என்பதே   உண்மை .மற்ற படி மூன்று ஹீரோகளில் இம்முறை முதல் இடம் பிடிப்பது ஜானி அவர்களே .அந்த இதழின் அட்டை படம் கீழே ...


அடுத்து இரண்டாம் இடத்தை பிடிப்பவர் ரோஜர் .ஆனால் அட்டை படத்திலும் சரி ...உள்ளே சித்திர தரத்திலும் சரி ஓவியர் வில்லியம் வான்ஸ் கதைகளுக்கே சவால் விடும் அளவு அட்டகாசமான ஓவியங்கள் .கதையை  படிக்கும் நண்பர்கள் தயவு செய்து ஆர அமர ஓவியத்தை ரசித்து பார்த்து படித்தால் நீங்களே அந்த கானகத்தில் பயணம் செய்யும் அனுபவம் கிடைக்கலாம் .பல இடங்கள் அது ஓவியமா ....புகைப்படமா என்ற சந்தேகத்தை  நமக்கு ஏற்படுத்துவது ஓவியருக்கு உள்ள திறமையை காட்டுகிறது .கதை களம் குறைவு என்றாலும் ஓவிய திறமையாலும் ...,அதை குறைக்காமல் அழகான அச்சு தரத்தாலும் " ரோஜர் " அவர்கள் நம்மை இதழில் கட்டி வைக்கிறார்கள் .அதே சமயம் ஆசிரியர் " முத்து காமிக்ஸ் " என்றாலே ஹாட் -லைன் பகுதியில் குறைவாக வருவதை தவிர்த்து வந்தால் நன்றாக இருக்கும் .அதன் அழகான அட்டை படம் கீழே ....




மூன்றாம் இடத்தை அதாவது கடைசி இடத்தை பிடிப்பது நானே எதிர் பார்க்காத ....ஆவலுடன் எதிர் பார்த்த " ஜில் ஜோர்டனின் " காவியில் ஒரு ஆவி .எப்படி மிகவும் முதல் சாகசத்தில் நம்மை " டயபாளிக் " அவர்கள் மயக்கி அடுத்த சாகசத்தில் தொங்கலில் விட்டாரோ அது  போல இவரும் தனது முதல் சாகசத்தில் நம்மை மனம் கவர்ந்தவர் இதில் அதை தவற விட்டார் என்பதே உண்மை .அதிலும் ஆசிரியர் நீங்கள் காண போவது " எழுத்து பிழை " அல்ல என்று அறிவித்து இருந்தாலும் அந்த தவறான வார்த்தை குழப்பங்கள் கதையில் நகை சுவையை அளிப்பதற்கு பதில் கதை ஓட்டத்தில் ஒரு செயற்கை தன்மையை தான் அளிக்கிறது .ஆனால்  புத்தகத்தை திறந்தவுடன் விரைவில் வருகிறது விளம்பரங்கள் நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது .அதுவும் 214 பக்க சாகசமான டெக்ஸ் அவர்களின் " நில் ...கவனி ....சுடு ..." தலைப்பு ......லக்கி சாகசத்தின் அறிவிப்பு என அந்த இதழ்கள் அடுத்த மாதமே வர கூடாதா என்ற ஏக்கத்தை வரவழைக்கிறது .

       அதே சமயம் சில பகுதிகளை புத்தகம் வருவதற்கு முன்னரே  இணையத்தில் வெளி இடுவதை தவிர்த்தால் புத்தகத்தில் காணும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் .உதாரணமாக 2013 கண்ணோட்டம் முதல் முறை புத்தகத்தில் கண்டு இருந்தால் படிபதற்க்கு இன்னும் சுவையாக காணப்பட்டு இருக்கும் . சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரை செல்ல ..செல்ல காமிக்ஸ் கதைகளை விட சுவராஸ்யமாக செல்வது எனக்கு மட்டும் தானா ? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் .மொத்தத்தில் "ஜில் ஜோர்டன் " கொஞ்சம் கீழே இறங்கி வந்தாலும் மற்ற இரண்டு இதழ்களால் இந்த மாதமும் அழகான "காமிக்ஸ் மாதம் " ஆக தான் அமைந்துள்ளது .மீண்டும் விரைவில் சந்திப்போம் தோழர்களே ......நன்றி .