வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

காமிக்ஸ்களை துரத்துவோம் ....


நண்பர்களே ....வணக்கம் ....

நலம் ....நலமா .....

காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் காமிக்ஸ் புத்தங்களை துரத்தி ..,துரத்தி ...சென்ற காலம் போய் இப்பொழுது காமிக்ஸ் புத்தங்கள் நம்மை துரத்தி ...துரத்தி வருவது உண்மையில் கொண்டாட்டமான நிகழ்வுதான் இல்லையா தோழர்களே ....இந்த மாதம் இரண்டே ..,இரண்டே புத்தங்கள் தான் ....அதுவும் குறுகிய பக்கங்கள் என்ற பொழுது புத்தகம் வரும் நாள்களில் ஏற்படும் ஒருவித மகிழ்ச்சி ஒரு மாற்று குறைந்தே காணப்பட்டது .ஆனால் திடிரென ஆசிரியர் ஒரு நாள் தாமத்தை ஏற்று கொண்டால் மூன்று புத்தங்கள் என்று அறிவித்த பொழுது மகிழ்ச்சி பல மடங்கு ஏறியது நண்பர்கள் அனைவருமே உணருவார்கள் .அதிலும் இனி மாதம் தோறும் குறைந்த பக்கங்கள் என்றால் மூன்று இதழ்கள் கண்டிப்பாக அறிவித்து இருப்பது காமிக்ஸ் நண்பர்களுக்கு எவ்வளவு பெரிய கொண்டாட்டம் என்பது புரிந்து இருக்கும் .இப்படி திடீர் ..,திடீர் என ஆசிரயர் தனது கால்கட்டை விரலை முகத்திற்கு அருகே கொண்டு செல்வது நமக்கு நடை பாதையில் பனி சறுக்கு மட்டையை கொண்டு பனியில் சறுக்கி செல்வது போன்ற சந்தோசத்தை ஏற்படுத்துகிறது .இதே போல அடிக்கடி " தீபாவளி மலர் " போல குண்டு புத்தங்களும் இடை இடைய புகுத்தினால் அட்டகாசமாக தான் இருக்கும் .அதற்கு அவரின் மேஜை கீழே 1987 போல பல கதைகள் கொட்டி கிடந்தது போல இப்பொழுதும் கொட்டி ..,கொட்டி கிடக்க வேண்டுவோம் .

இந்த மாதம் அழகான மூன்று இதழ்கள் களம் கண்டு உள்ளன .திகில் ஹீரோவான ரோஜர் பல வருட இடைவெளிக்கு மீண்டு ( ம் )  " காலத்தின் கால் சுவடுகளில் " என்ற சாகசத்தின் மூலம் நம்மை காண வருகிறார் .அடுத்த நாயகரும் திகில் நாயகரின் சாகசம் தான் .அவர் நமது ரிப்போர்ட்டர் "ஜானி " . "நினைவுகளை துரத்துவோம் " என்ற சாகசத்தின் மூலம் நம்மை சந்திக்க காத்து கொண்டு இருக்கிறார் .அடுத்து வருபவர் " ஜில் ஜோர்டன் " காவியில் ஒரு ஆவி மூலமாக சந்திக்க வருகிறார் .இந்த மூன்று இதழ்களுமே தனக்குள் போட்டி கொண்டால் கதை தரத்திலும் ..,சித்திர தரத்திலும் எவை ..எவை முன்னுக்கு வருகின்றன என "கதையை " சொல்லாமல் இங்கே பார்க்கலாம் நண்பர்களே .

மூன்று இதழ்களில் கதைகளில் முதல் இடம் பிடிப்பது நமது  ஜானி அவர்களின் " நினைவுகளை துரத்துவோம் " தான் .ஆசிரியர் ஹாட் -லைனில் ஜானி கதைகளில் டாப் 5 இல் இது என்று அறிவித்து இருந்தார் .என்னை பொறுத்தவரை நான் படித்த ஜானி கதைகளில் இது " முதல் இடத்தை " பிடிக்கிறது .எப்பொழுதும் குற்றத்தை கண்டு பிடிக்க வருபவர்  இம்முறை தானே சிக்கலில் மாட்டிக்கொண்டு அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதையும் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே ..அச்சு தரப்பிலும்  முழு நீள திருப்தி .அழகான வண்ண ஓவியங்கள் ..,சிறந்த அச்சு தரம் ..விறுவிறுப்பான கதை ஓட்டம் என்று நம்மை அழகாக மயக்கி விட்டார் ஜானி .அட்டை படமும் அழகு தான் என்றாலும் மூன்றில் முதல் இடம் அதற்கு இல்லை என்பதே   உண்மை .மற்ற படி மூன்று ஹீரோகளில் இம்முறை முதல் இடம் பிடிப்பது ஜானி அவர்களே .அந்த இதழின் அட்டை படம் கீழே ...


அடுத்து இரண்டாம் இடத்தை பிடிப்பவர் ரோஜர் .ஆனால் அட்டை படத்திலும் சரி ...உள்ளே சித்திர தரத்திலும் சரி ஓவியர் வில்லியம் வான்ஸ் கதைகளுக்கே சவால் விடும் அளவு அட்டகாசமான ஓவியங்கள் .கதையை  படிக்கும் நண்பர்கள் தயவு செய்து ஆர அமர ஓவியத்தை ரசித்து பார்த்து படித்தால் நீங்களே அந்த கானகத்தில் பயணம் செய்யும் அனுபவம் கிடைக்கலாம் .பல இடங்கள் அது ஓவியமா ....புகைப்படமா என்ற சந்தேகத்தை  நமக்கு ஏற்படுத்துவது ஓவியருக்கு உள்ள திறமையை காட்டுகிறது .கதை களம் குறைவு என்றாலும் ஓவிய திறமையாலும் ...,அதை குறைக்காமல் அழகான அச்சு தரத்தாலும் " ரோஜர் " அவர்கள் நம்மை இதழில் கட்டி வைக்கிறார்கள் .அதே சமயம் ஆசிரியர் " முத்து காமிக்ஸ் " என்றாலே ஹாட் -லைன் பகுதியில் குறைவாக வருவதை தவிர்த்து வந்தால் நன்றாக இருக்கும் .அதன் அழகான அட்டை படம் கீழே ....




மூன்றாம் இடத்தை அதாவது கடைசி இடத்தை பிடிப்பது நானே எதிர் பார்க்காத ....ஆவலுடன் எதிர் பார்த்த " ஜில் ஜோர்டனின் " காவியில் ஒரு ஆவி .எப்படி மிகவும் முதல் சாகசத்தில் நம்மை " டயபாளிக் " அவர்கள் மயக்கி அடுத்த சாகசத்தில் தொங்கலில் விட்டாரோ அது  போல இவரும் தனது முதல் சாகசத்தில் நம்மை மனம் கவர்ந்தவர் இதில் அதை தவற விட்டார் என்பதே உண்மை .அதிலும் ஆசிரியர் நீங்கள் காண போவது " எழுத்து பிழை " அல்ல என்று அறிவித்து இருந்தாலும் அந்த தவறான வார்த்தை குழப்பங்கள் கதையில் நகை சுவையை அளிப்பதற்கு பதில் கதை ஓட்டத்தில் ஒரு செயற்கை தன்மையை தான் அளிக்கிறது .ஆனால்  புத்தகத்தை திறந்தவுடன் விரைவில் வருகிறது விளம்பரங்கள் நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது .அதுவும் 214 பக்க சாகசமான டெக்ஸ் அவர்களின் " நில் ...கவனி ....சுடு ..." தலைப்பு ......லக்கி சாகசத்தின் அறிவிப்பு என அந்த இதழ்கள் அடுத்த மாதமே வர கூடாதா என்ற ஏக்கத்தை வரவழைக்கிறது .

       அதே சமயம் சில பகுதிகளை புத்தகம் வருவதற்கு முன்னரே  இணையத்தில் வெளி இடுவதை தவிர்த்தால் புத்தகத்தில் காணும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் .உதாரணமாக 2013 கண்ணோட்டம் முதல் முறை புத்தகத்தில் கண்டு இருந்தால் படிபதற்க்கு இன்னும் சுவையாக காணப்பட்டு இருக்கும் . சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரை செல்ல ..செல்ல காமிக்ஸ் கதைகளை விட சுவராஸ்யமாக செல்வது எனக்கு மட்டும் தானா ? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் .மொத்தத்தில் "ஜில் ஜோர்டன் " கொஞ்சம் கீழே இறங்கி வந்தாலும் மற்ற இரண்டு இதழ்களால் இந்த மாதமும் அழகான "காமிக்ஸ் மாதம் " ஆக தான் அமைந்துள்ளது .மீண்டும் விரைவில் சந்திப்போம் தோழர்களே ......நன்றி .

12 கருத்துகள்:

  1. பிரம்மாதம் பரணி சார்

    தொடருங்கள் உங்கள் பதிவுகளை.

    பதிலளிநீக்கு
  2. //இந்த மாதம் அழகான மூன்று இதழ்கள் களம் கண்டு உள்ளன .திகில் ஹீரோவான ரோஜர் பல வருட இடைவெளிக்கு மீண்டு ( ம் ) " ......... அடுத்த நாயகரும் திகில் நாயகரின் சாகசம் தான் .அவர் நமது ரிப்போர்ட்டர் "ஜானி " ....... அடுத்து வருபவர் " ஜில் ஜோர்டன் " //

    நான் படிக்க நினைத்துள்ள வரிசையும் இதுதான் .. எப்படி ஒரு ஒற்றுமை நண்பரே :)

    //அவரின் மேஜை கீழே 1987 போல பல கதைகள் கொட்டி கிடந்தது போல இப்பொழுதும் கொட்டி ..,கொட்டி //

    இப்பொழுதெல்லாம் எனக்கு தெரிந்து அவரது இ-மெயிலில்
    கதைகள் கொட்டி கிடக்கும் (டிஜிட்டல் பைலாக)

    // நீங்களே அந்த கானகத்தில் பயணம் செய்யும் அனுபவம் கிடைக்கலாம்//

    உண்மை ... உண்மை ....

    //சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரை செல்ல ..செல்ல காமிக்ஸ் கதைகளை விட சுவராஸ்யமாக செல்வது எனக்கு மட்டும் தானா ? //

    இல்லை, எல்லோருக்குமே ... சென்ற ஈரோடு புத்தக திருவிழாவில் எப்படி மின்னும் மரணம் பெற்றோமோ அதை போல இந்த வருடம் சி.சி.வ வாங்கியே ஆக வேண்டும்.

    பி.கு : ஆசிரியர் ஒவ்வொரு ஹோட்டல் ஆக சென்று எப்படி வாழைபூ வடை செய்கிறார்கள் என பார்த்து / உண்டு வருகிறார். சங்க உறுப்பினர்களை கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க சொல்லுங்கள் (சமீபத்தில் நம்ம எடிட்டர் ஒரு சென்னை ஹோட்டலில் சாப்பிட்ட வாழைபூ வடை ஒன்று 130 ரூபாவாம்)


    பதிலளிநீக்கு
  3. முதலிடம் ஜானி என்பதில் எனக்கு வேறுபாடில்லை. மற்ற இரு கதைகளில் gil முதலில் படித்தேன். அப்புறம் ரோஜர் படிக்க ஆரம்பித்து தூங்கி விட்டேன் :-) இனிமேல்தான் முடிக்க வேண்டும். ரோஜருக்கு gil பெட்டர் என்று தோன்றுகிறது !

    பதிலளிநீக்கு
  4. ரோஜரின் கதை மட்டுமே படித்திருக்கிறேன். 'கதை' என்ற ஒரு வஸ்துவுக்காக எந்த மெனக்கெடலும் இல்லாமல் வெறும் சித்திரங்களை வைத்தே பக்கங்களை நகர்த்தியிருக்கிறார்கள். இந்தக் கதை(?!) படித்து மனசு கனத்துப்போனதால், அடுத்தது ஜில்ஜோர்டான் படிக்கப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. // ஓவியர் வில்லியம் வான்ஸ் கதைக்கே சவால் விடும் அளவுக்கு //

    ம்ஹூம். எந்தவொரு கோணத்திலும் மனித முகங்களை துளியும் பிசகின்றி வரையும் வில்லியம் வான்ஸின் ஒப்பற்ற திறமைக்கு நிகராகஇந்த ஓவியரை ஒப்பிட்டுவிட முடியாது தலைவர் அவர்களே! சில ஆங்கிள்களில் (குறிப்பாக வ்யூ பாய்ண்ட் தாடையின் அடிப்பக்கத்தில் விழும்படியான ஓவியங்களில்) ரோஜரின் முக அமைப்பே சிதைந்திருப்பதைக் காணலாம். வில்லியம் வான்ஸின் ஓவியங்களில் இதைப்போன்ற குறைகளைக் காணவே முடியாது. ஓவியர்களில் அவர் ஒரு லிஜென்ட்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் நண்பரே ... ஆனால் .இயற்கை காட்சிகளில் ரோஜரின் கதைகளில் அவரின் அளவிற்கு ( வில்லியம் வான்ஸ் ) இருந்ததில் தான் அந்த எனது கருத்து .ஆனால் நீங்கள் சொன்ன படி மனித முக தெளிவுகளில் அவரை அடித்து கொள்ள ஆள் இல்லை .

      நீக்கு
  6. உங்கள் பதிவு மிகவும் அருமையாக இருந்தது. இந்த மாதம் வெளிவந்த இதழ்களை நீங்கள் வரிசைப்படுத்தி இருந்த முறைதான் என்னுடைய தேர்வும். ஜில் ஜோர்டான் மனதில் ஒட்டவே இல்லை. ரோஜர் சின்னஞ்சிறார்களை நிச்சயம் கவரும். ஜானி அற்புதம்.

    பதிலளிநீக்கு
  7. நண்பரே ..உங்கள் ரசனையும் ..,எனது ரசனையும் ஒத்து போனதில் மிகுந்த மகிழ்ச்சி .

    பதிலளிநீக்கு