செவ்வாய், 17 டிசம்பர், 2013

காமிக்ஸ் கச்சேரி ..

நண்பர்களே ..,வணக்கம் ....

நலம் ..,நலமா ....

இந்த டிசம்பர் மாதம் சங்கீத கச்சேரி போல காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்த மாதம்  "காமிக்ஸ் கச்சேரி ".முழுதாக நான்கு புத்தங்கள் ஒரே சமயத்தில் வெளி இட்டு மிக பெரிய சந்தோசத்தை காமிக்ஸ் ரசிகர்களுக்கு தந்த "பிரகாஷ் பப்ளிஷர்ஸ் "அவர்களுக்கு மிக பெரிய நன்றி .இந்த மாதம் வந்த நான்கு புத்தங்கள் டயபாளிக் சாகசமான " ஆப்ரஷன் சூறாவளி "டைகரின் "வேங்கையின் சீற்றம் " மற்றும் லக்கி மற்றும் சிக் பில் தோன்றும் இரு மறுபதிப்பு கதைகள் ஆன  "புரட்சி தீ "மற்றும் "விற்பனைக்கு ஒரு ஷெரிப் "ஜானியின் "ஓநாய் மனிதன் " மற்றும் ஊடு சூனியம் .இந்த புத்தங்களின் பார்வையை சுருக்கமாக மற்றும் ...நான்கில் முதல் இடம் பெற்றது ...நான்கில் சிறந்த அட்டைபடம் என இந்த மாத காமிக்ஸ் பார்வையை ஓட்டி பார்க்கலாமா நண்பர்களே .....

முதலில் "ஆப் ரேஷன் சுறாவளி " 

அட்டை படத்தை பொறுத்த வரை முன் அட்டை சுமார் ரகமே ...அதற்கு பதிலாக வாசக நண்பரின் பின் பக்க அட்டைப்படத்தை முன் பக்கமாக வந்திருந்தால் கலக்கலாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம் .அட்டை படம் அப்படி இருந்தாலும் கதை எப்படி என பார்த்தால் அதனை சூப்பர் ரகத்தில் இணைப்பதா அல்லது மொக்கை ரகத்தில் இணைப்பதா என பெரும் குழப்பம் .கதையின் பல பக்கங்கள் கழித்தே "டயபாளிக் "வருவது மட்டுமல்லாமல் பாதி பக்க கதையை பார்த்தால் இது டயபாளிக் கதையா அல்லது காதல் கதையா என குழப்பம் வருவதும் டயபாளிக் கதைக்கு வந்த சோதனை .மேலும் டயபாளிக் முந்தைய சாகசமான "குற்ற திருவிழா "ஒரு அதகள படுத்திய சாகசம் என்பதால் அதே அளவிற்கு அல்லது அதற்கு மேல் சாகசத்தை எதிர் பார்ப்பது நிஜமான ஒன்று .அந்த எதிர் பார்ப்பு குறைந்ததால் ஏற்பட்ட பாதிப்பு இதனை சுமார் ரகத்தில் இணைத்து விட்டது .கண்டிப்பாக மோசம் கிடையாது என்பதும் உண்மை .ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம் என்பது போல ஒரு
முறை படிக்கலாம் .அடுத்த முறை டயபாளிக் ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையில் அடுத்த டயபாளிக் கதைக்கு காத்திருப்போம் நண்பர்களே ...

அடுத்த புத்தகமான "வேங்கையின் சீற்றம் "எப்படி ?

முதலில் அட்டை படம் .சொல்ல தேவை இல்லை .இந்த வருட டாப் சொதப்பல் அட்டைபடம் இது தான் .அதிலும் இந்த அட்டைபடம் NBS இதழுக்கான தயாரான அட்டைபடம் இது என ஆசிரியர் அறிவித்து இருந்தார் .நல்ல வேலையாக இதனை வெளி இட வில்லை .இல்லை என்றால் மாபெரும் வெற்றி பெற்ற அந்த 400 ரூபாய் புத்தகம்... அட்டைபடம் காரணமாகவே ஆசிரியர் பல கனைகளை எதிர் கொண்டு இருப்பார் .

நான் எப்பொழுதும் இரண்டு ,மூன்று பாகம் கதை வரும் பொழுது எல்லாம் மீண்டும் பழைய பாகத்தை படித்து பின் புது பாகத்தை தொடர்வது வழக்கம் .எனவே டைகரின் இந்த சாகசத்தை படிக்க மீண்டும் "இருளில் ஒரு இரும்பு குதிரை "படிக்க நேர்ந்தது .மொத்தமாக இரு பாகத்தையும் படித்த பொழுது இம்முறை "டைகர் "ஏமாற்ற வில்லை .அச்சு தரமும் குறை இல்லாமல் நன்றாக இருந்தது .அதே சமயம் இந்த 50 ரூபாய் குறைவான பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை பார்க்கும் போது ஒரு "நோயாளியை "பார்க்கும் எண்ணம் தான் வந்தது .அதுவும் இனி வரும் இதழ்கள் இப்படி தான் என நினைக்கும் போது .....................ஆசிரியர் தயவு செய்து வேறு யோசனை செய்தால் நன்று .
50 அல்லது 60 ருபாய் புத்தகம் அட்லீஸ்ட் முன்னர் வந்த லக்கி லூக் சாகசமான "வில்லனுக்கு ஒரு வேலி "போல அமைந்தால் ஆவது திருப்தி ஆக இருக்கும் .இப்படி வந்தால் ஆசிரியர்   சொன்ன படி புது இளைய வசதி குறைந்த நண்பர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்ற எண்ணம் உண்மையாக இருப்பினும் (அவர்கள் எத்துனை பேரோ ) ஆனால் இப்பொழுது வரை வாசகராக இருக்கும் காமிக்ஸ் ரசிகர்களுக்கு இது மிக பெரிய குறை யாக தான் தோன்றும் .60 ரூபாய் புத்தகத்தை பொறுத்த வரை அதனை கருப்பு ,வெள்ளை புத்தகமாக அதிக பக்கங்களில் இடலாம் .மொத்தத்தில் கதையை பொறுத்த வரை திருப்தி தான் என்றாலும் அதன் அடக்கம் ஒரு குறையே .மேலும் இந்த முறையும் டைகர் கடைசியில் அவன் மட்டும் அங்கே சிக்கட்டும் என சூளுரைத்த படி எதிரியை நோக்கி குதிரையை கிளப்பும் போதும் தான் மீண்டும் ...எத்துனை முறை "NBS " புத்தகத்தை தூக்க வேண்டுமா என்ற பயம் வருவது இயற்கை தான் .

அடுத்து வருவது இரண்டு மறுபதிப்பு புத்தங்கள் என்றாலும் நான்கு அட்டகாசமான கதைகள் .ஜானியின் இரண்டு கதைகள் ஆன "ஓநாய் மனிதன் "மற்றும் ஊடு சூனியம் .முதலில் மிக பெரிய பாராட்டு இதன் அட்டை படத்திற்கு தான் .அருமை .அதுவும் இது ஒரு வாசக நண்பரின் படைப்பு என்பதில் மாபெரும் மகிழ்ச்சி .இந்த வருட சிறந்த அட்டைப்படங்களில் இதுவும் ஒன்று என்பது மறக்க முடியாத உண்மை .வாழ்த்துகள் ரமேஷ் சார் .....கதைகளை பற்றி சொல்ல தேவை இல்லை .முதலில் படிக்கும் நண்பர்களுக்கும சரி மீண்டும் வண்ணத்தில் படிக்கும் நண்பர்களுக்கும் சரி அருமையான அனுபவம் காத்து கொண்டு உள்ளது .ஆனால் இந்த இதழில் மட்டும் குறை இல்லாமல் இருந்தால் எப்படி ?முதல் 10 பக்கங்கள் அச்சு தரம் ஏமாற்றி விட்டது .

அடுத்து வரும் மறு பதிப்பு இதழான "புரட்சி தீ "மற்றும் விற்பனைக்கு ஒரு ஷெரிப் பற்றி சொல்ல தேவை இல்லை .மிக பெரிய பாராட்டை பெற்ற இந்த இரு கதை களும் இது வரை படிக்காதவர்களுக்கு மட்டுமல்ல முன்னர் படித்த நண்பர்களுக்கும் சிறந்த ஒன்றை தரி சத்த (வாசிப்ப அனுபவம் )கிடைக்க போகிறது .மொத்தத்தில் புது இதழ்களை விட இம்முறை மறு பதிப்பு புத்தங்கள் பந்தயத்தில் முன் நோக்கி செல்கிறது என்பது மட்டும் உண்மை .

அடுத்து இவ்விரு இதழ்களிலும் இடம் பெற்ற லக்கி அவர்களின் சாகசமான இரு சிறு கதைகளுக்கு நமது வாசக நண்பர்கள் ஈரோடு விஜய் மற்றும் பெங்களூர் கார்த்கிக் அவர்களின் மொழி ஆக்கத்தில் வந்துள்ளது .இரண்டு மொழி ஆக்கமமும் அருமை .உண்மையில் மொழி ஆக்க விஷயத்தில் நண்பர்களுக்கு ஆசிரியர் போட்டி வைத்த போது "மொழி ஆக்க விஷயத்தில் தயவு செய்து விளையாடாதிர் "என்று கடிதம் எழுதியவன் நான் .ஆனால் இம்முறை நம் நண்பர்களின்  ஆக்கம் நான் அப்பொழுது அந்த "கடிதம் "எழுதியதிற்கு இப்பொழுது வருத்த பட வைத்து விட்டார்கள் .சூப்பர் .

       மொத்தத்தில் சிற்சில குறைகள் இருந்தாலும் இந்த டிசம்பர் மாதத்தை ..,சொன்ன படி நான்கு புத்தங்கள் கொண்டு வந்து சேர்த்து காமிக்ஸ் ரசிகர்களுக்கு விருந்து அளித்த ஆசிரியர் அவர்களுக்கும் ..,.அவர் பணியாளர்களுக்கும் மாபெரும் நன்றியை காமிக்ஸ் ரசிகர்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறேன் .விரைவில் அடுத்த பதிவில் 2013 காமிக்ஸ் பற்றிய பதிவையும் ,2014 காமிக்ஸ்...... ரசிகர்கள் எதிர் பார்ப்பையும் பார்க்கலாம் நண்பர்களே .....
                                      நன்றி ...வணக்கம் ...

பின் குறிப்பு :பதிவில்  இனி வரும் புத்தங்களின் விமர்சனம், இப்படி என் பார்வையில் எப்படி என்பதை மட்டும் தெரிவிக்கும் வாசகர் கடிதம் ஆக இருக்குமே தவிர முழு கதை ..,பாதி கதை என கூறும் "கதை சொல்லியாக "இருக்காது நண்பர்களே ...நன்றி ..



                                                                                                                                                      

6 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. போராட்டக்குழு தலைவர் அவர்களே,

    டயபாலிக் அட்டைப்படத்தைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன். ஆனால் கதை இம்முறை ஏனோ எனக்கு (குற்றத் திருவிழாவைவிட) பிடித்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

    டைகர் கதை என்னைப் பொருத்தவரை அட்டகாசமும் இல்லை; ஏமாற்றவும் இல்லை.

    மற்ற இரு மறுபதிப்பு புத்தகங்களுமே நல்லதொரு பொழுதுபோக்குக்கு உத்தரவாதமானவை என்றுதான் சொல்லவேண்டும்.

    இதுவரை லயன் அல்லாத மற்றவர்களின் பொழிபெயர்ப்புகளை கடுமையாக எதிர்த்துவந்த நீங்கள், கார்த்திக் மற்றும் என்னுடைய மொழிபெயர்ப்புக்களை மனதார ஏற்றுக்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதுவும், என்னுடைய மொழிபெயர்ப்பில் நேர்ந்த பல அச்சுக் குளறுபடிகளையும் ஒருவாறாகப் பொருத்துக் கொண்டு! மீண்டும் நன்றிகள் (கார்த்திக் சார்பாகவும்)! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜய் # டயபாளிக் இன் குற்ற திரு விழா வை விட இது சூப்பர் # என்ற உங்கள் முடிவு எதிர் பார்த்தது தான் .ஆசிரியர் காமிக்ஸ் வகையில் அடுத்து என வினவும் போது "ரொமான்ஸ் கதை " என தங்கள் பதில் இப்பொழுது நினைவுக்கு வருவது ஏனோ ? :-)

      டைகர் கதையை இருளில் ஒரு இரும்பு குதிரை இல் ஆரம்பித்து இந்த கதையில் கடைசி பக்கத்தில் உயர் அதிகாரி டைகரை பாராட்டுவதில் கதையை நிறுத்தி விட்டால் உங்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும் . :-)

      உண்மையில் உங்கள் மொழி ஆக்கத்தை குறையை கண்டு பிடிக்க வேண்டும் என்று தான் கண்ணில் லென்ஸ் வைத்து படித்தேன் .கடைசியில் மிக பெரிய குறையை கண்டு பிடித்தேன் .அதை சொல்ல மறந்து விட்டேன் .

      தாங்கள் லக்கி கதைக்கு மொழி ஆக்கத்தில் ஈடு பட்டது அறிவேன் .ஆனால் தங்கள் கதையில் எங்கள் "லக்கி " அவர்களை தேடி தேடி கண்கள் களைத்து விட்டது ..:-)

      நீக்கு
  3. சார்,

    1. அருமை

    2. அற்புதம்

    3. அபாரம்

    4. அட்டகாசம்

    இந்த நாளில் உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதனை தேர்ந்தெடுங்கள்.

    என்ன வருகிறதோ, அதனையே இந்த பதிவிற்கான என்னுடைய கருத்தாக நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  4. உங்களது விமர்சனங்கள் அனைத்தும் அருமை. இந்த விமர்சனங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனி பதிவில் வெளியிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு