ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

ஒரு காமிக்ஸ் பயணத்தில் ...

நண்பர்களே ..,
           வணக்கம் .இந்த பதிவில் நான் காமிக்ஸ் படிக்க  ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை என் வாழ்க்கை பயணத்தில்  "காமிக்ஸ் " எவ்வாரல்லாம் பங்கு பெற்றுள்ளது என்று நினைத்து பார்க்கையில் எழுந்தது தான் .எனவே இதில் ஒரு காமிக்ஸ் புத்தகத்தின் பார்வையோ ..,அல்லது விமர்சனமோ என எதிர் பார்த்து வந்தீர்கள் என்றால் ஏமாந்து விடுவீர்கள் .இது  முழுக்க முழுக்க ஒரு சுய புராண காமிக்ஸ் கட்டுரை .ஆர்வமில்லாதவர்கள் இப்பொழுதே விடுங்கள் ஒரு "ஜூட் ".
            இப்பொழுது எனது ஜாகை சேலத்தில் இருந்தாலும் நான் பிறந்தது ,வளந்தது ,காமிக்ஸ் படிக்க ஆர்வமானது அனைத்தும் கோவையில் தான் .கோவை ரேஸ்  கோர்ஸ் தான் நான் குடி இருந்த கோவில் .நான் முதன் முதலில் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தது நமது லயன் காமிக்ஸோ ,முத்து காமிக்ஸோ ,ராணி காமிக்ஸோ அல்ல .கோவை அண்ணாசாலை மேம்பாலம் அருகே உள்ள பள்ளியில் நான் படித்து கொண்டு இருக்கும் போது  (4வது ,5வது ) எதிரே உள்ள மிட்டாய் கடையில் 20 பைசா ,30 பைசா விற்கு 10 பக்கத்தில் உள்ளூர் ஓவியத்தில் காமிக்ஸ் புத்தகம் கிடைக்கும் .(அதிலும் மெயின் ஹீரோ மாயாவி தான் ). மாதம் ஒரு பத்து தலைப்பில் புத்தகம் வந்து கொண்டே இருக்கும் .அனைத்தும் வாங்கி படிக்க ,அதில் ஒரு இனம் புரியா சந்தோஷம் .பிறகு நான் குடி இருந்த ரேஸ்  கோர்ஸ் கோட்டர்ஸில் பல அடுக்கு மாடி குடி இருப்பிற்கு ஒரே ஒரு மளிகை கடை .அங்கே வருவது செய்தி தாள் மற்றும் ராணி ,தேவி ,ராணி முத்து மற்றும் ராணி காமிக்ஸ் .தவறாமல் ராணி காமிக்ஸ் 1 ம் தேதி ,15 ம் தேதி கடைக்கு வந்து விடும் .1.50 விலையில் அட்டைப்படம் கலக்கலாக கடையில் தொங்கி கொண்டு இருக்கும் .வாங்க மனது துடித்தாலும் கையில் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது .தினம் பாக்கெட் மணியாக கிடைப்பது 10 பைசா . பள்ளி விடுமுறை என்றால் அதுவும் கிடைக்காது .கடையில் தொங்கி கொண்டு இருக்கும் புத்தகத்தை ஒவ்வொரு முறையும் ஆர்வமுடன் பார்த்து கொண்டு இருக்கும் பொழுது தான் அந்த துணையும் கிடைத்தது .
       பக்கத்து வீட்டில் குடி இருந்த எனது ஒத்த வயதுடைய வசந்தி என்ற பெண் தான் அந்த துணை .என்னை போலவே அவரும் காமிக்ஸ் வாங்க முடியாமல் தவிக்க ,இருவரும் அவர் ,அவரிடம் இருக்கும் புத்தகத்தை பரிமாறி கொள்ள நட்பு இறுகியது .எப்படியும் ராணி காமிக்ஸை இருவரும் சேர்ந்து வாங்க முடிவெடுத்தோம் .ஆளுக்கு பாதி காசு போட்டு புத்தகம் வாங்க வேண்டும் .ஒரு புத்தகம் எனக்கு ..,அடுத்த புத்தகம் அவர்க்கு என ஒப்பந்தம் செய்தோம் . ஆனால் ரூபாய்  1.50 சேர்க்க ஒரு மாதம் ஆக புத்தகம் வாங்க முடிய வில்லை .அப்பொழுது தான் இருவரும் சேர்ந்து மூளையை கசக்கி ஒரு ஐடியாவை கண்டு பிடித்தோம் .ஒவ்வொரு முறையும் புத்தகம் வரும் பொழுது பழைய புத்தகம் 4,5 மீதம் கடையில் இருக்கும் .இருவரும் கடைக்கு சென்று  "அண்ணாச்சி ..எங்களுக்கு புது புத்தகம் வேண்டாம் .பழைய புக்கை பாதி விலைக்கு கொடுக்க முடியிம்மா என கெஞ்ச ..,கடைக்கார அண்ணாச்சியும் ஒத்து கொண்டார் .எங்களுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி .இனி 0.75 பைசா சேர்த்தல் போதுமே .பிறகு 15 ம் தேதி  வந்தால் 1ம் தேதி புத்தகத்தையும் ..,1ம் தேதி வந்தால் போன மாத 15ம் தேதி புத்தகத்தையும் வாங்கி சேமிக்க ஆரம்பித்தோம் . (நண்பியே ...இப்பொழுது எங்கே உள்ளாயோ ..இன்னமும் காமிக்ஸ் படிகிறாயோ அறியேன் ..ஆனால் எங்கிருப்பினும் நலமுடனும் ,காமிக்ஸ் உடனும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் ).
          பிறகு எனது பள்ளியின் ஜாகை  மரக்கடைக்கு மாற ...,ரேஸ் கோர்ஸ்  பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்ல  KG திரை அரங்கு ,அண்ணாசாலை ,மேம் பாலம் என 5,6 கிலோ மீட்டர் நடந்தே செல்வோம் .வழியில் புத்தக கடை வந்தால் மட்டும் காமிக்ஸ் ஏதாவது கிடைக்குமா என அலசி ,அலசி பள்ளிக்கு செல்லும் போது  தான் அண்ணாசாலை மேம் பாலம்  அருகில் உள்ள ஒரு புத்தக நிலையத்தில் இன்றும் நினைத்தால் போதை வரும் நமது லயன் ,முத்து ,திகில் என காமிக்ஸ் கட்டு ,கட்டாக அங்கே இருக்க கண்டேன் ..கால்களோ பள்ளிக்கு இழுக்க ..,மனதோ கடையில் மட்டுமே .பாக்கெட் சைஸ்..,வித்தியாசமான காது  நீண்ட ஒரு மன்மதன் (spider )..,இரும்பு கை மனிதன் என அட்டைப்படமும் ,அதில் இருந்த சிங்க லோகோவும் மனதிலே ஆணி போல பதிய  மாலை வீடு சென்றதும் நான் சென்றது நண்பி வசந்தி இடம் தான் .பெற்றோர் இடம் போனால் ..,காமிக்ஸ் வாங்க காசு வேண்டும்  என்றால் .கிடைப்பது அப்பாவின் லத்தி அடி தான் என்பது எனக்கு தெரியாதா என்ன ..? KG காம்ப்ளக்ஸ் அருகே வீடு இருந்தும் ,தினம் அதன் வழியாக நடை பயின்றாலும் பிறந்ததில் இருந்து அங்கே இருந்தது  வரை ஒரு திரை அரங்கிற்கு கூட செல்லாத அளவு கட்டு பாடு என்றால் காமிக்ஸ் வாங்க காசு கிடைக்குமா என்ன ..?

        அடுத்த நாள் வசந்தி இடமும் ,என்னிடமும் இருந்த சில்லறையை சேர்த்தி கடைக்கு சென்றால்... விலையை கேட்ட வுடன் மயக்கம் வராத குறை .விலை இரண்டு ரூபாய் ,மூன்று ரூபாய் .0.75 பைசா சம்பாதிக்க இருவரும் திண்டாட 2 ரூபாய்க்கு எங்கே போவது .அப்போது தான் பள்ளியிலும் நண்பர்கள் அறிமுகமானார்கள் .காமிக்ஸ் படிக்கும் நண்பர்கள் மட்டுமே அப்போது  ஒரு கூட்டாக சுற்றுவோம் .பள்ளிக்கு பாட புத்தகம் கொண்டு வருகிறமோ ..,இல்லையோ கண்டிப்பாக காமிக்ஸ் புத்தகம் கொண்டு செல்வோம் .அனைவரும் கதை புத்தகத்தை மாற்றி கொண்டு வகுப்பு அறையிலைய படித்து முடிக்க போட்டி போடுவோம் .அப்பொழுது நான் ராணி காமிக்ஸை கொண்டு செல்ல நண்பன் ஒருவன் தினம் லயன் ,முத்து காமிக்ஸ் கொண்டு வர அவன்  நெருங்கிய நண்பன் ஆகினான்  .லயன் ,முத்து காமிக்ஸை படிக்க ,படிக்க தான் அதுவரை 007 ,டைகர் &ஹென்றி ,இன்ஸ்பெக்டர் ஆசாத் ,மன்னர் பீமா இவர்களை விட உசத்தியான ஹீரோ கள் உள்ளனர் என்பதை அறிந்தேன் .இரும்பு கை மாயாவி கனவில் வர ஆரம்பித்தார் .ஸ்பைடர் மனிதில் குடி இருக்க ஆரம்பித்தார் .காமிக்ஸ் என்றால் ராணி .பொன்னி இதுதான் என்று நினைத்து இருக்க லயன் ,முத்தை படிக்க ஆரம்பித்த வுடன் இதை தவிர வேறு காமிக்ஸ் இல்லை என மனம் அலை பாய்ந்தது .அனைத்து  லயன் புத்தகத்தையும் வாங்கி சேர்க்க முடிவெடுத்து , செயல்  பட  முனைந்தேன் .
       அப்பொழுது தான் பள்ளி நண்பன் ஒருவன் அந்த இனிப்பான செய்தியை சொன்னான் .தள்ளு வண்டியில் விற்கும் பழைய புத்தக கடையில் காமிக்ஸ் அனைத்தும் பாதி விலையில் கிடைப்பதாக ,அதுவும் லயன் ,முத்து  அங்கே குவிந்து கிடைபதாக சொல்ல பிறகு தான் எனது பார்வை பழைய புத்தக கடைக்கு சென்றது .(இன்று வரை அது தொடர்வது தனி கதை ).அப்பொழுது KG  மருத்துவ மனை அருகே தள்ளு வண்டி புத்தக கடை அதிகம் காணப்படும் .வாரம் ஒரு முறை பாக்கெட் மணியை  சேர்த்து புத்தகத்தை வாங்க ஆரம்பித்தேன் .அப்படியும் போத வில்லை .ஆளில்லா கடையில் பணம் இருந்தால் கூட எடுக்க தயங்கும் மனது காமிக்ஸை தெரியாமல் எடுக்க தயங்க வில்லை .இரண்டு புத்தகம் வாங்கினால் மூன்று புத்தகம் பாக்கெட்டில் வந்துவிடும் .அதுவும் லயன் ,முத்து  காமிக்ஸ் மட்டுமே .காரணம் அதை  தான் பாக்கெட்டில் டக் கென்று போட்டு கொள்ள முடியும் ."முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் "என்பது அப்போது தெரிய வில்லை .ஒரு முறை கையும் களவுமாக பிடிபட  இனி கடை பக்கமே வர கூடாது என மிரட்டி அனுப்ப பட புத்தகம் சேருவது குறைய ஆரம்பித்தது .(அந்த கடையில் தான் அதிகம் காமிக்ஸ் கிடைக்கும் .சுலபமாக சுடவும் முடியும் ).
          மீண்டும் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது .வீட்டை விட்டு புத்தக கடைக்கு செல்லும் போது  மூஞ்சிக்கு பவுடர் அதிகம் அப்பி கொண்டு அம்மாவின் மை டப்பியை பாக்கெட்டில் போட்டு கொண்டு கடைக்கு அருகே சென்றவுடன் ஒரு நெற்றி போட்டு வைத்து கொண்டு (வீட்டிலைய பொட்டு வைத்தால் யார் உதை வாங்குவது )மாறு வேடத்தில் சென்று புத்தகம் வாங்க முனைந்தேன் .(எத்துனை MGR படம் பார்த்திருப்போம் ).ஆமாம் ..திரை அரங்கே செல்லாத நீ எப்படி படம் பார்த்தாய் என சந்தேகம் சிலருக்கு வரலாம் .(நாங்கள் குடி இருந்த ரேஸ் கோர்ஸ் பகுதியில் வாரம் ஒரு முறை திரை கட்டி படம் போடுவார்கள் .)எனது மாறு வேட திறமையா ..,கடை காரர்  மறந்து போனாரோ தெரியாது .எனக்கு வெற்றி .அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு சேர்த்த புத்தகம் பேராசையால் தொலைந்தது .காமிக்ஸ் நண்பன் ஒருவன் தன்னிடம் உள்ள அனைத்து  காமிக்ஸையும் காட்ட ஒரு நாள் அவன் இல்லத்திற்கு கூட்டி சென்றான்  .
        அங்கே போனால் மயக்கம் வராத குறை .இரண்டு ட்ரன்க் பெட்டி நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் .அடுத்த நொடியே மீண்டும் பாழாய் போன மூளை வேலை செய்ய அவனிடம் .."நண்பா ..நாம் இருவரும் பார்ட்னர் ஆகலாம் .என்னிடம் உள்ள புத்தகத்தை எல்லாம் உன்னிடம் தருகிறேன் .நான் கேர்க்கும் போது  உன்னிடம் உள்ள புத்தகத்தை படிக்க தா "என்றேன் .அவனும் சந்தோசமாக ஓகே சொல்ல அடுத்த நாளே என்னிடம் உள்ள புத்தகத்தை எல்லாம் அட்டை பெட்டியில் போட்டு கொண்டு அவனிடம் கொண்டு போய்  சேர்த்தேன் .அந்த சமயம் முழு ஆண்டு தேர்வு .பத்தே நாளில் விடுமுறை விட (8ம் வகுப்பு )புத்தகம் அனைத்தும் போயே போச் .வீடும் மறந்து போக ,இரவில் யாருக்கும் தெரியாமல் அழுதது இன்றும் நினைவு .அதை மறந்து கொஞ்சம் ,கொஞ்சமாக6 மாதத்தில்  மீண்டும் சேர்த்த பொழுது எனது தாய் ,தந்தை இறக்க தந்தையின் சொந்த ஊரான சேலம் வரும் சூழ்நிலை .நெருங்கிய உறவினரோடு காமிக்ஸை எல்லாம் பத்திரமாக பெட்டியில் போட்டு கொண்டு ,தேவை இல்லாத அந்த பாட புத்தகங்களை ஒதுக்கி  வைத்து விட்டு இது வரை பிறந்து வளர்ந்த அந்த கோவை மண்ணை விட்டு சேலம் நோக்கி காமிக்ஸை கட்டி பிடித்து கொண்டு வருகிறேன் .
   
         (கோவை படலம் முற்றும் .)


16 கருத்துகள்:

  1. கோவை படலம் அருமையாக இருந்தது.

    காமிக்ஸ் சுவைக்காக களவும் கற்று மறந்த தங்களை எண்ணி வியக்கிறேன்

    கோவைக்கு பிறகு வேறு எந்த ஊர் பயணம்?

    பதிலளிநீக்கு
  2. உடனடி வருகைக்கு நன்றி சார் ..
    அடுத்து வருவது சேலம் படலம் :)

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா! மாறுவேடத்தில் காமிக்ஸ் வாங்கியது தமிழ்நாட்டில் நீங்களாகத்தானிருக்கும்!

    ஆர்வத்தைத் தூண்டும்படியான வாக்கிய அமைப்பு! இந்தக் கோவைப் படலத்தையே இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம் (பொசுக்கென்று முடிந்த உணர்வு).

    சேலம் படலத்தை சீக்கிரம் போடுங்க! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி விஜய் .
      கோவை படலம்" பொஸ்க் "என்று முடிந்தது உண்மை தான் நண்பரே . இன்னும் நிறைய விஷயங்கள் இருப்பினும் நேரம் என்னும் இந்த மாய பிசாசு வதைக்கிறது .
      (இப்பொழுது தான் தெரிகிறது ஆசிரியர் நிலைமையும் ,விஸ்வா சார் போன்ற பதிவர்களின் நிலைமையும் .சும்மா திரியும் எனக்கே இப்படி என்றால் .....)

      நீக்கு
  4. நண்பரே

    உங்களது இளம் வயது பருவம், என் கண் முன்னே, உங்கள் வார்த்தைகளால் ....

    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே .அடுத்த பதிவு கண்டிப்பாக சேலத்து படலம் தான் :)
      ஆனால் எப்பொழுது என்பது ...:(

      நீக்கு
  5. பல வரிகளில் சிரிக்கச் செய்து ஒரே வரியில் கலங்க வைத்தப் பதிவு ....! தொடருங்கள் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே ...
      தொடருகிறேன் ...தொடருங்கள் ..:)

      நீக்கு
  6. அசத்திட்டீங்க பரணி! அடிக்கடுக்கா பதிவா போட்டு தாக்குங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாக்கி விடலாம் நண்பரே ..ஆமாம் எங்கே உங்கள் முழு ராணி காமிக்ஸ் ஸ்கேன் பதிவு .காத்து கொண்டே இருக்கிறேன் .

      நீக்கு
  7. பதில்கள்
    1. நன்றி நண்பரே ..காமிக்ஸ் படிக்கும் அனைவருக்கும் ஒரே ரத்தம் தான் .

      நீக்கு
  8. காமிக்ஸ் வாசகர்களின் பால்ய கால காமிக்ஸ் அனுபவங்கள் கிட்டத்தட்ட ஒரே ரீதியில் இருப்பது விந்தைதான்! பழைய புத்தகக்கடையில் காமிக்ஸ் வாங்கும் கனவு இன்றளவும் வந்து கொண்டுதான் இருக்கிறது!

    //நீங்கள் ஒரு ரோபோ இல்லையென நிரூபிக்கவும்//
    நம்புங்க பாஸ்! நான் ஒரு சாதாரண மனிதன்தான்! :)

    //நீங்கள் உள்ளிட்ட எழுத்துக்கள் சொல் சரிபார்ப்புடன் பொருந்தவில்லை. மீண்டும் முயலவும்.//
    சத்தியமா சொல்றேன்! மனிதர்களால் இந்த Word Verification-ஐ படிக்கவே முடியாது! ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் நண்பரே ..
      உங்கள் இரண்டு கருத்துகளும் ...
      உங்கள் பதிவின் மூலம் ப்ளாக் ஆரம்பித்தேன் .அப்படியே இந்த "world verification "எப்படி நீக்குவது என்று இங்கே விவரமாக சொன்னால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

      நீக்கு
    2. http://www.karpom.com/2012/08/10-important-factors-for-bloggers.html
      மேற்கண்ட பதிவின் கீழ்க்கண்ட பகுதியைப் பாருங்கள்:
      7. Comment Box & Comments

      வேறு பல உபயோகமான தகவல்களும் அந்தப் பதிவில் உள்ளன!

      நீக்கு