திங்கள், 30 செப்டம்பர், 2013

எடிட்டர் சார் ..,ஒரு நிமிஷம் ....!ப்ளீஸ் ..

தமிழ் காமிக்ஸ் வாழ , வளர வைத்து கொண்டு இருக்கும் ஆசிரியர் திரு .விஜயன் அவர்களுக்கு முதலில் எனது நன்றியை கூறி கொண்டு ..,ஜூனியர் எடிட்டர் ஆக இப்பொழுது பொறுப்பு கொண்டுள்ள திரு .விக்ரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் கூறி கொண்டு "வாழையடி வாழையாக "தங்களால் "தமிழ் காமிக்ஸ் "வளரவும் அதனால் காமிக்ஸ் ரசிகர்கள் ஆகிய நாங்கள் எப்பொழுதும் இன்புறுவும் எங்கள் வாழ்த்துகளை முதலில் கூறி கொள்கிறோம் . 2012 முதல் புது பொலிவுடன் கலக்கி கொண்டு இருக்கும் நமது லயன் ,முத்து 2014 முதல் இன்னும் ,இன்னும் கலக்க போகும் இந்த சமயத்தில் காமிக்ஸ் ரசனை மிக்க சில ரசிகர்களின் எதிர் பார்ப்பை ..,எனது சில தனி பட்ட எதிர் பார்ப்பை ஒரு காமிக்ஸ் ரசிகனாக (மட்டும் )தங்களிடம் கூற நினைக்கிறன் .அதன் சாதக ,பாதக அம்சங்கள் தங்களுக்கு மட்டும் அறிய படும் என்றாலும் இதனை நினைவில் கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் . அடுத்த மாதத்தில் ..,அடுத்த வருட "சந்தா " அறிவிக்க போகும் நாள் என்பதால் முதலில் அதனை பற்றிய எனது கருத்தை சொல்ல நினைக்கிறேன் . முதலில் சந்தா தொகையை தயவு செய்து மொத்தமாக அறிவித்து விடுங்கள் .லயன் ,முத்து ,சன்ஷைன் காமிக்ஸ் தனியாக ,ஆண்டு மலர் .,தீபாவளி மலர் ,புத்தக கண்காட்சி ஸ்பெஷல் மலர் என்று தனியாக இப்பொழுதே திட்டமிட்டு மொத்தமாக அறிவித்து விடுங்கள் .அதே சமயம் சில நண்பர்களின் வசதிக்கு ஏற்ற படி தொகை அதிகமாக இருப்பின் இரு முறை தவணை யாக அதனை அனுப்பவும் வசதி செய்து தரவும் . அதே சமயம் 500 ரூபாய் ,1000 ரூபாய் என்ற ஸ்பெஷல் புத்தகத்திற்கு தனியாக சில மாதம் முன்னரே அறிவித்து விடுங்கள் . அடுத்து "மறு பதிப்பு "பற்றி எனது எண்ணங்களை கூற நினைக்கிறன் .(சிலருக்கு இது பற்றிய கருத்து வேறாக இருக்கலாம் .பட் எனது உறுதியான கருத்து இது ).மறு பதிப்பு புத்தகங்கள் என்பது ஆரம்பம் முதல் படித்து வரும் நண்பர்களுக்கும் ..,புதிதாய் இடையில் வந்த நண்பர்களுக்கும் என இருவருக்குமே பயன் அடையும் படி புத்தகம் வர வேண்டுமே ஒழிய... இந்த கதை சூப்பர் .,இந்த கதை ஓவியம் சூப்பர் என்பதால் சில வருடம் முன்னரே வந்த கதையை...90%அனைவரிடம் உள்ள கதையை ... "மறு பதிப்பு "செய்வதை விட புதிதாய் வந்த நண்பர்கள் பார்க்காத புத்தகமாக ..,பழைய நண்பர்களிடம் அதிகம் காண கிடைக்காத புத்தகமாக "மறு பதிப்பு "புத்தகம் வந்தால் அனைவரும் கொண்டாடுவார்கள் .உதாரணமாக லயன் 1 முதல் 100 வரை உள்ள வரிசையில் ..,முத்து 1முதல் 200 வரை உள்ள வரிசையில் ...மினி லயன் ,திகில் அனைத்தும் பல வருடம் முன்னரே நிறுத்த பட்டதால் அதில் உள்ள சிறந்த கதைகளை (அனைத்தும் அருமை என்ற நிலையில் தான் மினி லயன் ,திகில் உள்ளது ) என வெளி இடலாம் . கலரில் மட்டும் வரும் கதைகளை தான் நண்பர்கள் விரும்புவார்கள் என்ற எண்ணத்தை தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள் .ஸ்பைடர் ,மாயாவி கதை யை கூட 75% வந்ததால் விட்டு விடுங்கள் .ஆனால் தாங்கள் அறிவித்த "டிடக்டீவ் ஸ்பெஷல் "..".மினி லயன் முதல் நான்கு கதை " ஸ்பெஷல் நிறுத்தியதில் எத்தனை நண்பர்களுக்கு வருத்தம் என்பதை தாங்கள் அறிவீர்களா ?இன்னும் தங்கள் சந்தேகம் தொடர்ந்தால் அப்படிப்பட்ட புத்தங்களை "புத்தக கண் காட்சி "சமயத்தில் ஒரு முறை விட்டு பாருங்கள் .அப்பொழுது தாங்கள் உண்மையை உணருவீர்கள் . அதை விட்டு 90% காமிக்ஸ் ரசிகரிடம் இருக்கும் "கார்சனின் கடந்த காலம் "..."ரத்த படலம் "...."மின்னும் மரணம் "போன்ற கதைகளை தயவு செய்து தவிர்க பாருங்கள் .நான் சொன்ன இந்த மூன்று கதை களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .நானும் மறுக்க வில்லை .ஆனால் பலரிடம் இருக்கும் "கார்சனின் கடந்த காலத்தை " விட சிலரிடம் மட்டும் இருக்கும் "பவள சிலை மர்மம் ",பலி வாங்கும் புயல் " சைத்தான் சாம் ராஜ்யம் "போன்ற கதை களை வெளி இடலாமே .(நான் சொன்ன இந்த கதை கள் என்னிடம் உள்ளது என்பதையும் இங்கு கூறி கொள்கிறேன் ).அதே போலே டைகர் ரசிகர்களின் அபிமான" மின்னும் மரணம்" "ரத்த படலம் " தாங்கள் வெளி இடும் போது அது சமயம் அதன் விலை கண்டிப்பாக 700 ,800 என இருக்கும் .அத்துனை விலையில் வந்த... புத்தகத்தை விட புதிதாய் அதே விலையில் ,அத்துனை பக்கத்திலே ஒரு முழு நீள டைகர் கதை அல்லது ஒரு மலர் வெளி இட்டால் நமக்கு தானே லாபம் காமிக்ஸ் ரசிகர்களே ..இதை தயவு செய்து உணருங்கள் நண்பர்களே .. எனது தனி பட்ட சில வேண்டுகோள்கள் ....ஆசிரியருக்கு ..... *** ஒரு பக்க மௌன சிரிப்பான "மியாவியை "விட வசனத்துடன் வரும் "சிரிப்பின் நிறம் சிவப்பு "..",ரத்த வெறியன் ஹேகர் "போன்றவை சிறப்பான சிரிப்பு . *** வரும் காலத்தில் தாளின் விலை ஏற்றம் ,டாலரின் விலை ஏற்றம் என எவ்வளவு மாறினாலும் தயவு செய்து இனியும் பக்கத்தை குறைக்காதிர்கள் .ஏற்கனவே 200 பக்கத்தில் இருந்து பாதி படி இறங்கி விட்டோம் .இனியும் எறங்க வேண்டாம் சார் ..ப்ளீஸ் . *** அப்படி தவிர்க்க முடியாத சூழ் நிலை ஏற்படின் "மெகா ட்ரீம் ஸ்பெஷல் "இல் வந்த தரமான தாளில் லக்கி கதை வந்ததை போலே கூட வெளி இடுங்கள் .இன்னும் இளைத்தால் அது "என்னை " போல ஆகி விடும் . ***தாங்கள் அறிவித்த மாதம் ஒரு "லயன் ""முத்து " தவறாமல் கடை பிடிக்கவும் .முடிந்தால் கூட மாதம் ஒரு "சன் ஷைன் "இணைக்க பார்க்கவும் . *** "கிராபிக் நாவல் " என்னுடையை பார்வையாக அல்லாமல் ...தொடர்ந்து மூன்று மாதம் எல்லாம் "கிராபிக் நாவல் "வேண்டாம் என்ற நல்ல உள்ளங்களை கண்டிப்பாக தாங்கள் மறக்க வேண்டாம் . ***மாடஸ்தி கதையை சிலர் விரும்பா விடினும் அடுத்து மாடஸ்தி கதை தாங்கள் வெளி இட்டால் "மர்ம எதிரி "என்ற புத்தகத்தில் வந்த "மாடஸ்தி " வரலாற்று கதையை அதன் உடன் இணைத்தால் விரும்பாதவர் கூட மாடஸ்தி கதையை விரும்புவர் . ஆசிரியருக்கு ...இந்த கருத்துகளை ஒரு காமிக்ஸ் ரசிகனாக தான் தங்களுக்கு நினைவு படுத்துகிறேன் தவிர எல்லாம் அறிந்த "ஏகாம்பரம் "ஆக என்னை காட்டி கொள்ள அல்ல . காமிக்ஸ் ரசிகர்களுக்கு எனது இந்த கருத்தில் சிலர் உடன் படலாம் .பலர் மறுக்கலாம் .தங்கள் மாறு பட்ட கருத்தையும் இங்கே பதியலாம் . நன்றி .....வணக்கம் .....!

11 கருத்துகள்:

  1. பரணி சார்,

    நீங்கள் சொல்வது ஒவ்வொன்றும் முக்கியமான கருத்துக்கள் என்று தோன்றியது.

    உங்களது கருத்துக்களை கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்பி அனுமதி பெறாமலேயே எடிட்டரின் பதிவில் வலையேற்றி விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா ...தங்கள் வருகைக்கும் ,செயலுக்கும் மிக்க நன்றி சார் ...

      நீக்கு
  2. டியர் பரணி..
    தயவுசெய்து பத்தி பத்தி யாக பிரித்து போடவும்.
    படிப்பது சிரமமாக உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே ,,,,

      நீங்கள் சொல்வது முழு உண்மை ...பல மாதங்களாக இங்கு வராததால் வந்த வினை இது .நான் பல பாரா ..பாரா வாக எழுதியது தான் வெளி இடும் சமயம் இப்படி .இனி இப்படி ஆகாமல் பார்த்து கொள்கிறேன் நண்பரே .வெரி வெரி சாரி ...

      நீக்கு
  3. டியர் பரணி,
    உங்கள் INVOLVEMENT பாராட்டப்படவேண்டிய ஓன்று.உங்களை போன்ற வெளிப்படையான கருத்துக்களை தெரிவிக்கும் நண்பர்களை நம் குழு பெற்றிருப்பது நமது காமிக்ஸ் தர முன்னேற்றத்துக்கு மிகப்பெரிய உதவிக்கரமாக அமைகிறது. இது நிச்சயம் மிகைபடுத்தப்பட்ட உங்களை கவரவேண்டும் என்ற நோக்கில் பதியப்பட்ட கருத்து அல்ல. ITS A FACT !

    //அடுத்த மாதத்தில் அடுத்த வருட "சந்தா " அறிவிக்க போகும் நாள் என்பதால் முதலில் அதனை பற்றிய எனது கருத்தை சொல்ல நினைக்கிறேன் .

    1. முதலில் சந்தா தொகையை தயவு செய்து மொத்தமாக அறிவித்து விடுங்கள்.//


    இது ஒரு TRANSITION PERIOD. பல விதமான புதிய விஷ்யங்களை முயற்சித்துக்கொண்டிருக்கும் வேலை இது. நமது புத்தகங்களின் வடிவங்களும், அளவுகளும் , எண்ணிக்கைகளும் என பல மாறுதல்களை, பல புதிய முயற்சிகளை நமது ஆசிரியர் தற்போது செய்துகொண்டிருக்கிறார். அதனால் சந்தா தொகையை முழுமையாக ஒரே சமயத்தில் வெளியிட சொல்வதிலும் , அதில் மாறுதல்கள் செய்யக்கூடாது என்று வழியுருத்துவதிலும் நாம் ஒரு கடினமான நிலைபாட்டை எடுக்காமல் ஆசிரியருக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். தனது வசதிக்கேற்றபடி ஆசிரியர் முடிவு செய்யட்டும்.
    பெரிய செட்டில் ஆனா பதிப்பக நிறுவனங்களுக்கு இந்த முறை சாத்தியப்படலாம். நமக்கு நிறைய FLEXIBILITY தேவைபடுகிறது எனபது என் தனிப்பட்ட கருத்து.
    புத்தகங்களின் தரத்தை உயர்த்துவதற்கு இது உதவுவதோடல்லாமல் தற்போதைய நமது ரூபாயின் நிலையற்ற தன்மையால FLUCTUATE ஆகும் காகித விலையை சமாளிக்கவும் நமது பதிப்பகத்துக்கு உதவும்.

    6 மாதங்களுக்கு ஒரு சந்தா தொகை, என கொள்வது REASONABLE SOLUTION ஆகா தெரிகிறது.

    //2. லயன் ,முத்து ,சன்ஷைன் காமிக்ஸ் தனியாக ,ஆண்டு மலர் .,தீபாவளி மலர் ,புத்தக கண்காட்சி ஸ்பெஷல் மலர் என்று தனியாக இப்பொழுதே திட்டமிட்டு மொத்தமாக அறிவித்து விடுங்கள்.அதே சமயம் 500 ரூபாய் ,1000 ரூபாய் என்ற ஸ்பெஷல் புத்தகத்திற்கு தனியாக சில மாதம் முன்னரே அறிவித்து விடுங்கள் .//

    ஸ்பெஷல் வெளியீடுகளுக்கு INPUTS நிறைய தேவை படுகிறது. அன்றைய சூழ்நிலைகெற்றபடி பல மாறுதல்கள் இது போன்ற ஸ்பெஷல் களுக்கு தேவைப்படலாம். மூன்று மாதங்களுக்கு முன்னர் விலை,கதைகள், அளவுகளை FINALISE செய்து ஒரு அறிவிப்பு REASONABLE ஆகா தெரிகிறது. இந்த SUSPENSE கூட இல்லாவிட்டால் நம்முடைய எதிர்பார்ப்புகள் ரொம்பவே FLAT ஆகா இருக்கும். பட் ஒரு உத்தேச ஸ்பெஷல் புத்தகங்களின் லிஸ்ட், அதற்கான மாறுதல்களுக்குட்பட்ட உத்தேச சந்தா தொகை அறிவிப்பு நிச்சய தேவை.

    //500 ரூபாய் ,1000 ரூபாய் என்ற ஸ்பெஷல் புத்தகத்திற்கு தனியாக சில மாதம் முன்னரே அறிவித்து விடுங்கள் .//

    //தனியாக // +1 . அவ்வப்போது ஒரு SURPRISE ஸ்பெஷல் இருக்கட்டும் சார்!


    //3. சில நண்பர்களின் வசதிக்கு ஏற்ற படி தொகை அதிகமாக இருப்பின் இரு முறை தவணை யாக அதனை அனுப்பவும் வசதி செய்து தரவும்.//

    தற்போதும் இந்த வசதியுள்ளது. சந்தா பிரித்துகட்டும் விஷயத்தில் நாம் எப்போதுமே ரொம்ப FLEXIBLE!

    பதிலளிநீக்கு
  4. //அடுத்து "மறு பதிப்பு "பற்றி எனது எண்ணங்களை கூற நினைக்கிறன் .(சிலருக்கு இது பற்றிய கருத்து வேறாக இருக்கலாம்.But எனது உறுதியான கருத்து இது ).//

    மறுபதிப்புகள் பத்தி பெரிய RESERVATION ஒன்னும் எனக்கு கிடையாது என்பதால் இங்க ஒரு பெரிய ஜம்ப்
    செய்து உங்களோட கடைசி கட்டத்துக்கு தாவிடறேன்.

    //1. ஒரு பக்க மௌன சிரிப்பான "மியாவியை "விட வசனத்துடன் வரும் "சிரிப்பின் நிறம் சிவப்பு "..",ரத்த வெறியன் ஹேகர் "போன்றவை சிறப்பான சிரிப்பு//

    ரத்த வெறியன் ஹேகர் உங்களுக்கு ரொம்ப பிடிச்சத இருக்கலாம். என்னை பொறுத்தவரை மியாவி டாப். ""ரத்த வெறியன் ஹேகர் '' அவ்வப்போது வெளியிட கோரலாம். பட் அது மியாவியை தூக்கிவிட்டு என்பதை ஏற்க முடியாது.

    //2. வரும் காலத்தில் தாளின் விலை ஏற்றம் ,டாலரின் விலை ஏற்றம் என எவ்வளவு மாறினாலும் தயவு செய்து இனியும் பக்கத்தை குறைக்காதிர்கள்.

    3. ஏற்கனவே 200 பக்கத்தில் இருந்து பாதி படி இறங்கி விட்டோம் .இனியும் எறங்க வேண்டாம் சார் ..ப்ளீஸ்.//

    +1. இதுக்கு நம்ம சந்தா தொகை கொஞ்சம் FLEXIBLE ஆக்க இருந்தால் சாத்தியப்படலாம்.

    //அப்படி தவிர்க்க முடியாத சூழ் நிலை ஏற்படின் "மெகா ட்ரீம் ஸ்பெஷல் "இல் வந்த தரமான தாளில் லக்கி கதை வந்ததை போலே கூட வெளி இடுங்கள் .இன்னும் இளைத்தால் அது "என்னை " போல ஆகி விடும்.
    //

    தாள்களின் தரத்தில் நாம் ஒரு நல்ல STANDARD டை எட்டிப்பிடித்துள்ளோம் பரணி. பழைய நிலைக்கு மீண்டும் செல்ல வேண்டாமே!

    //5. தாங்கள் அறிவித்த மாதம் ஒரு "லயன் ""முத்து " தவறாமல் கடை பிடிக்கவும்.
    முடிந்தால் கூட மாதம் ஒரு "சன் ஷைன் "இணைக்க பார்க்கவும்.//

    +10000000. ரொம்ப காலமாக ஆவலோட எதிர்பார்த்துகிட்டுருக்கற விசயம் இது.

    //"கிராபிக் நாவல் " என்னுடையை பார்வையாக அல்லாமல்: தொடர்ந்து மூன்று மாதம் எல்லாம் "கிராபிக் நாவல் "வேண்டாம் என்ற நல்ல உள்ளங்களை கண்டிப்பாக தாங்கள் மறக்க வேண்டாம்.//

    நல்ல உள்ளங்களை கண்டிப்பாக தாங்கள் மறக்க வேண்டாம்!! : )

    பதிலளிநீக்கு
  5. சார் ...உங்கள் பாராட்டுகளுக்கும் ..,பதில் கருத்துகளுக்கும் மிக்க நன்றி சார் ..நீங்கள் எல்லாம் ஆல மரம் சார் .நான் சாதாரண செடி .மிக்க மிக்க நன்றி சார் .

    சார் ..சந்தா பற்றி தாங்கள் கூறியதும் அனைத்தும் நான் அறிவேன் சார் .இருந்தும் மொத்தமாக அறிவிக்க சொல்ல காரணம் நானே எனது நண்பர்களுக்கு சந்தா கட்டி வருகிறேன் .(அவர்களுடைய பணத்திலே தான் ).அவர்களிடம் ஒரு முறை மொத்தமாக எவ்வளவு சொன்னாலும் கட்டி விடுகிறார்கள் .ஆனால் இடையில் மீண்டும் சொன்னால் சலித்து கொள்கிறார்கள் .மற்றும் அவர்களாக கட்டும் சிலர் பணி சுமையின் காரணமாக இடையில் கட்டும் சந்தாவை நிறுத்தி விடுகிறார்கள் .அந்த காரணத்தில் தான் என்னுடய அந்த யோசனை .

    "மியாவி "பொறுத்த வரை ...ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை .:-)

    மீண்டும் நன்றி சார் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //.நீங்கள் எல்லாம் ஆல மரம் சார் .நான் சாதாரண செடி .மிக்க மிக்க நன்றி சார் .//
      பாஸ்.... இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா ??? இந்த காமிக்ஸ் படகுல நாம எல்லோரும் ஒரே கிளாஸ் ல பயணம் செய்யறோம். நான் பெரியவன் நீ சிறியவன் மாத்ரி வேறுபாடுகள் தேவையா ??? ப்ளீஸ் இவற்றை avoid பண்ணுங்க பாஸ்!

      அப்புறம் நீங்க சொல்றதும் சரி தான்! இது ஒரு புது வகையான சிக்கல். ஆசிரியர் என்ன சொல்றாருன்னு பாக்கலாம் ! : )

      நீக்கு
  6. விஸ்வா சார் ..அமர் நாத் சார் ...தங்கள் பதில் கருத்துகளும் கூறி இருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைந்து இருப்பேன் .

    பதிலளிநீக்கு
  7. லயன் &முத்து காமிக்ஸ்RS-100 புக் பத்து + special புக் இரண்டு என்று ஒரே விலையாக(Fixed book price) இருத்தல் ஆண்டு சந்தா சரியாக இருக்கும் மற்ற விலையில் (Rs-25 /- Rs-50/- Rs-200)வரும் புக் எல்லம் (Special books ) Sunshine Library வெளியீடுங்கள் சந்தா தொகையை அனுப்ப ஏதுவாக இருக்கும். ****please fixed price rate for our book******

    பதிலளிநீக்கு