ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஒரு விளம்பரம் .......

நண்பர்களே .........

வணக்கம் .....நலம் ....நலமா ....?

காமிக்ஸ் நண்பர்கள் அனைவரும் இந்த மாத கடைசியை  மிகவும் எதிர் பார்த்து காத்து கொண்டு இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே ... ஆசிரியரும் உடல்  நிலையை கூட பொருட்படுத்தாமல் நமது தீபாவளிக்காக பணி செய்து வருவது அவரது பதிவின் மூலம் அறியலாம் .அவருக்கும் ..,அவர் நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் மிக பெரிய நன்றி .

நிற்க ...

இப்பொழுது இந்த பதிவின் நோக்கம் என்ன  ?...

எனக்கு இப்பொழுது நமது காமிக்ஸ் பதிவர்களின் மீது   சிறு வருத்தம் உண்டு .காரணம் சில மாதங்களுக்கு முன்னர் எல்லாம் நமது காமிக்ஸ் வந்தவுடன் அந்த புத்தகங்களின் நிறை ,குறை என அக்கு வேறாக ..,ஆணி வேறாக அழகாகவும்,ஆணித்தரமாகவும் எடுத்து சொன்ன பல பதிவர்கள் இப்பொழுது காண வில்லை .அவர்களை நாம் குறை சொல்ல வில்லை .அவர்களின் பணி சுமை ,நேரம் இல்லாமை என பல காரணங்கள் அவர்களை காமிக்ஸ் பதிவின் பக்கம் வர விடாமல் செய்கிறது .இருந்தாலும் சிறு வருத்தம் வருவது நம்மால் தவிர்க்க முடிய வில்லை .எப்படி பட்ட காமிக்ஸ் ஜாம்பாவான்கள் நம்ம பதிவர்கள் .அவர்கள் வராமல் இருப்பது நமது "காமிக்ஸ் "க்கு இழப்பே என்பது எனது கருத்து .எனவே "காமிக்ஸ் பதிவர்கள் "அனைவரும் மீண்டு (ம் )வர வேண்டும் என்பதே எனது அவா .

      அவர்கள் அனைவரும் மீண்டும் வரா விட்டால்...நானே  இனி மாதா ,மாதம் இந்த "ப்ளாக் "இல்.... இனி வரும் நமது காமிக்ஸ்களின் விமர்சனம் தொடர்ந்து இங்கு எழுதி இம்சை கொடுப்பேன் என்பதை அறிவிக்க கடமை பட்டு உள்ளேன் .சில ..,பல ..காரணத்தினால் நமது பதிவில் "புகைப்படம் "இணைக்க படாது . (அதுக்கு தான் நம்ம ஓவிய ரசனையாளர் "ராஜ் குமார் "உள்ளார் அல்லவா ).முதல் புத்தகத்தின் விமர்சனம் எது என்று அனைவரும் நன்கு அறிவீர்கள் .நமது காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் ,கௌ -பாய் உலகின் சக்கரவர்த்தி நமது "டெக்ஸ் வில்லர் "அவர்களின் "தீபாவளி மலரில் "வெளி வரும் அந்த இரு சாகச கதைகளின் விமர்சனம் தான் நமது பதிவு .காத்திருங்கள் .

   ஆமாம் .....இது பதிவா என வினவும் நண்பர்களுக்கு .....ஹி ..ஹி ...கண்டிப்பாக இல்லை ...இது .....

                              "விளம்பரம் "....

 

15 கருத்துகள்:

 1. உங்களின் விமர்சனங்களுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 2. மிகவும் பயங்கரமான ஒரு விஷயத்தை முன்னிறுத்தி நம்மை எல்லாம் ப்ளாக்மெய்ல் செய்கிறார் தீவிர காமிக்ஸ் அபிமானியும், காமிக்ஸ் களப்பணி போராளியுமான சேலம் பரணி அவர்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விஸ்வா சார் .....அப்படி ஆவது நீங்கள் பதிவை இட போகிறீர்களோ இல்லையோ சொன்ன படி சண்டே தோறும் "காமிக்ஸ் கட்ஸ் "ஆவது வருகிறதா என பார்ப்போம் . :-)

   நீக்கு
 3. உங்களின் விமர்சனங்களுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 4. மிக்க நன்றி ...நண்பர் கிரி அவர்களே ....

  பதிலளிநீக்கு
 5. பரணி அவர்களே, இன்று காலையில் பதிவிட்டு விட்டேன். தாமதத்துக்கு காரணத்தை பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். :D

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்து விட்டேன் நண்பரே .... :-)

   உங்கள் குடும்பத்தினர் அனைவரும் எப்பொழுதும் நலமுடன் இருக்க எனது வேண்டுதல்கள் .....என்றும் உண்டு ...

   நீக்கு
 6. //இனி மாதா ,மாதம் இந்த "ப்ளாக் "இல்.... இனி வரும் நமது காமிக்ஸ்களின் விமர்சனம் தொடர்ந்து இங்கு எழுதி இம்சை கொடுப்பேன் என்பதை அறிவிக்க கடமை பட்டு உள்ளேன்//

  நண்பரே உங்கள் இம்சையை வரவேற்க ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என்பதை அறிவிக்க கடமை பட்டு உள்ளேன்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :-)

   நீங்களும் இப்பொழுது தொடர்ந்து பதிவு இடுவது மிகுந்த மகிழ்ச்சி சார் ...

   தயவு செய்து விடாதிர்கள் .

   நீக்கு
 7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. பேனாவின் முனையை விட மிகச் சிறந்த ஆயுதம் எதுவுமில்லை என்று இவ்வுலகிற்கு எடுத்துரைத்திருக்கும் போராட்டக்குழுத் தலைவரின் விமர்ச்சனப் பதிவுகளுக்காக இத்தளம் மேல் விழிவைத்துக் காத்திருப்பேன்…………………

  பதிலளிநீக்கு
 9. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே ...

   தங்களுக்கும் .தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் "அதே "வாழ்த்துகள் . :-)

   நீக்கு