திங்கள், 4 நவம்பர், 2013

காமிக்ஸ் தீபாவளி - ஒரு விமர்சன பார்வை ...

நண்பர்களே ....வணக்கம் .
நலம் .நலமா ..?

காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி மறக்க முடியாத ஒன்று .வெகு நாட்களுக்கு பிறகு   பிரகாஷ் பப்ளிஷர்ஸ் ஒரு குண்டு புத்தகத்தை ,அதுவும் "காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் ...டெக்ஸ் வில்லர் "அவர்களின் இரண்டு சாகச கதைகளை ஒரே இதழில் வெளி இட்டு கூட ஒரு "கிராபிக் நாவலையும் "கொண்டு வந்து இந்த தீபாவளியை மறக்க முடியாமல் செய்து விட்டார்கள் .சொன்ன படி "ஜானி "அவர்களின் இரு மறு பதிப்பு கதைகளையும் கொண்டு வந்து இருந்தால் நண்பர்கள் இன்னும் ஒரு அணுகுண்டை வெடித்த சந்தோசத்தை அனுபவித்து இருப்பார்கள் .ஆனாலும் அந்த குறையை டெக்ஸ் இன் குண்டு புத்தகம் நண்பர்களை மறக்கடிக்க செய்ததா ? ஒன்றுக்கு இரண்டாக வந்த டெக்ஸ் சாகசங்கள் நண்பர்களை சந்தோஷ படுத்தியதா ?
அட்டைப்படமும் ,சித்திர தரமும் ,கதை களமும் காமிக்ஸ் ரசிகர்களை திருப்தி படுத்தியதா ?"டெக்ஸ் "ரசிகனாக இல்லாமல் காமிக்ஸ் ரசிகனாக ஒரு விமர்சன பார்வையாக டெக்ஸ் இன் "தீபாவளி மலர் "எப்படி ? பார்க்கலாமா நண்பர்களே ....

டெக்ஸ் தீபாவளி மலர் -அட்டைப்படம் :
  

இந்த தீபாவளி மலரின் அட்டைப்படத்தை ஆசிரியர் இணைய தளத்தில் வெளி இட்ட போதே மிக பெரும் வரவேற்ப்பை பெற்றது .எப்பொழுதும் இணையத்தில் வெளி இடும் அட்டைப்படத்தை விட புத்தகத்தில் இன்னும் கலர் "டார்க் "ஆக வந்து அதகள படுத்தும் .இந்த முறை இணையத்தில் வந்ததை விட கலர் சிறிது டல்லாக படுவது எனக்கு மட்டும் தானா ?ஆனாலும் டெக்ஸ் இன் அந்த அதிரடியான போஸ் ,இளமையான தோற்றம் என்று இந்த முறை ஓவியர் கொண்டு வந்து அசத்தி விட்டார் .இந்த முறை முன் ,பின் என இரண்டு பக்க அட்டைப்படமும் அசத்தல் .வாழ்த்துகள் ஓவியர் சார் ...

       இந்த தீபாவளி மலரில் இடம் பெற்ற இரண்டு கதைகள்  1) மரண தேசம் மெக்ஸிகோ   2)நீதியின் நிழலில் .....இரண்டு கதைகளின் ஓவியமும் பழைய டெக்ஸ் வில்லரை கொண்டு வந்து கண் முன் நிறுத்தியது .சித்திர தரம் அசத்தியது போல கதைகளும் நண்பர்களை அசத்துமா ? வாருங்கள் பார்க்கலாம் .

"மரண தேசம் மெக்ஸிகோ " கதை : ( படிக்காதவர்களும் படிக்கலாம் ) :

            நகரில் சில நாட்களாக சிறுவர்கள் திடீர் ,திடீர் என காணமல் போக பாதர் மாத்யூ அவர்களின் வேண்டுகோள் படி அவருக்கு வேண்டிய சிறுவர்களை கண்டு பிடிக்க டெக்ஸ் மற்றும் அவர் தோழர் கார்சன் இருவரும் நகருக்கு வருகிறார்கள் .அங்கு வண்டி ஓட்டி யின் மூலம் "நோகா லஸ் "என்ற இடத்தில உள்ள பார் உரிமையாளர் க்கு கடத்தியவனின் பெயர் தெரியும் எனவும் ,தனக்கு கடத்தியவன் "மாறு கண் "உடையவன் என்பது மட்டுமே அறிந்தவன் எனவும் அறிந்து கொள்கிறார்கள் .உடனடியாக நோகாலஸ் செல்லும் டெக்ஸ் &கார்சன் அந்த பார் உரிமையாளரை  கண்டு பிடித்து "தங்கள் " பாணியில் விசாரிக்க  அவரின் மகள்... தனது தந்தை எதையும் அறியாதவர் என்றும் அந்த மாறு கண்ணனின் பெயர் "பால் மென்டிஸ் "என்றும் அவன் தங்கி இருக்கும் இடத்தையும் கூற உடனடியாக அங்கு செல்ல முற்படுகிறார்கள் .அதை அறிந்த பால் மென்டிஸ் இன் கையாளும் ,நகரின் ஷெரிப் ம் ஆனவன் அவர்கள் வருகையை தந்தி மூலம்  அறிவித்து விடுகிறான் .

        அதன் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை சாமர்த்தியமாக சமாளித்து நகருக்கு சென்று அவன் இருக்கும் இடத்தை அடைகிறார்கள் .அவர்கள் வருவதை அறிந்த பால் மென்டிசின் கூட்டாளி அவனை எச்சரித்து ..,உடனடியாக அவர்களை சுட்டு கொள்ள முற்பட மீண்டும் தங்கள் திறமையால் இருவரையுமே சுட அவர்கள் இறந்து விடுகிறார்கள் .இறந்து விடும் முன் அவன் குழந்தைகளை "டான் மானுவல் " என்பவனிடம் விற்று விட்டதை கூறி விடுகிறான் .பால் மெண்டிசை கொண்ட குற்றத்திற்காக ஷெரிப் அவர்களை கைது  செய வரும் பொழுது உள்ளூர் பத்திரிக்கை ஆசிரியரால் விடிவிக்க படுகிறார் .மேலும் டான் மானுவல் என்பவனை பற்றியும் ,அவனின் அசாத்திய செல்வாக்கையும் கூறுவதுடன் அவனின் தங்க சுரங்கத்திற்கு வேலை செய்யவே சிறுவர்கள் கடத்த படுவதையும் ,அவனுக்கு என்று தனி படையும் கொண்ட கொண்ட அவனின் சுரங்கத்திற்கு செல்வது மிக கடினமான காரியம் என்றும் ,அப்படி சென்றாலும் மீண்டு வருவது நடக்காத விஷயம் என்றும் கூறுகிறார் .

     அப்படி பட்ட சுரங்கத்திற்கு டெக்ஸ் &கார்சன் செல்ல முடிந்ததா ? அங்கு கொடுமை படுத்த படும் சிறுவர்களையும் ,அடிமைகளையும் அவர்களால் காப்பாற்ற முடிந்ததா ? டான் மானுவல் கதி என்னவாயிற்று  ? இந்த விறு ,விறுப்பான கதை முடிவை இனி வெள்ளி திரையில் சாரி தங்க புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் .

"நீதியின் நிழலில் " கதை : (படிக்காதவரும் படிக்கலாம் ):

      ராணுவ கோட்டையில் நான்கு நாளில் தூக்கில் தொங்க விட இருக்கும் செவ்விந்தியனை உயிரோடு கொண்டு செல்ல டெக்ஸ் &கார்சன் கோட்டைக்கு வருகிறார்கள் .அவர்கள் வரும் சமயத்தில் செவ்விந்தியனின் தோழன் மூலம்  அவன் தப்பித்து விடுகிறான்   .உடனடியாக அந்த செவ்விந்தியனை உயிரோடு பிடிக்க டெக்ஸ் &கார்சன் செல்கிறார்கள் .வழியில் ஏற்படும் சிறு விபத்தால் கார்சன் மீண்டும் கோட்டைக்கு திரும்புகிறார் .தனியாக அவனை தேடி செல்லும் டெக்ஸ் க்கு போட்டி யாக தப்பி சென்ற அவனை தனி பட்ட விரோதத்தால் அவனை கொன்று பிடித்து வருவேன் என்று ராணுவத்தில் இருக்கும் "லிபார்ஜ் "என்பவனும் கிளம்புகிறான் .டெக்ஸ் தப்பி சென்ற அந்த கைதியை "லிபார்ஜ் "இடம் இருந்து உயிரோடு காப்பாற்ற முடிந்ததா ? தப்பி சென்ற கைதியின் தவறு என்ன  ?
டெக்ஸ் அவனை மீண்டும் சிறைக்கு கொண்டு சென்றாரா ? அடிபட்ட கார்சனின் கதி என்ன ?  
       
     விடை தெரிய உடனடியாக " லயன் தீபாவளி மலரை " வாங்கி படிக்கவும் .காமிக்ஸ் ரசிகர்களுக்கு அதுவும் கமர்சியல் ரசிகர்களுக்கு இது மாபெரும் விருந்து என்பது மறக்க முடியாத உண்மை .இது "டெக்ஸ் " ரசிகர்களுக்கு மட்டுமான கதை அல்ல .அனைவரும் விரும்பும் " ரஜினி "பட ஸ்டைல் கதை .எனவே காமிக்ஸ் படிக்கும் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒரு மலர் தான் இந்த தீபாவளி மலர் .ரஜினியை எதிர்ப்பவர்கள் கூட அவரின் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர் பார்ப்பார்கள் .அது இந்த இரண்டு டெக்ஸ் கதைகளுக்கும் பொருந்தும் .
இப்படி பட்ட அருமையான புத்தகத்தில் குறை என்று ஒன்று உண்டா ?
கண்டிப்பாக உண்டு .

    நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த இந்த தீபாவளி மலரை விலை சிறிது கூடி இருந்தாலும் தரமான தாளில் வெளி இட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .ஆனால் இனி பேசி என்ன பயன்  ? மீண்டும் விரைவில் 

        "ஒரு சிப்பாயின் சுவடுகளில் " தடம் பதிப்போம் நண்பர்களே .
       
                                வணக்கம் .....
  

10 கருத்துகள்:

 1. டெக்ஸ் கதையை நீங்கள் விளக்க ஆரம்பித்த பாராக்களை அப்படி ஒரு பல்டியடித்துத் தாண்டிவிட்டேன். புத்தகத்தை நானே படிக்கும்போது எந்தவகையிலும் சுவாரஸ்யம் குறைந்துவிடக் கூடாதில்லையா? :) (இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன்)

  ஒ.ச.சு - க்ராபிக் நாவல் விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். ஏன் இந்த 'ஆவல்' என்றுதான் ஊருக்கே தெரியுமே?

  இந்த முறையும் எடிட்டருக்கு ஒரு கடுதாசி வரைவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஈரோடு விஜய் கண்டிப்பாக இந்த கதையும் (சிப்பாயின் சுவடுகளில் ) ஆசிரியருக்கு கடிதம் எழுத வைக்கும் கதை தான் .ஆனால் எனது கடித்தால் 400 ரூபாய் "கிராபிக் "நாவல் சந்தா 800 ரூபாய் ஆக கூடுதல் ஆகும் சாத்திய கூறு அதிகம் இருப்பதால் நோ கமெண்ட்ஸ் .

   நீக்கு
 2. //இந்த முறையும் எடிட்டருக்கு ஒரு கடுதாசி வரைவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.//

  ஈ.விஜய். உங்கள் சென்ஸ் ஆப் ஹியூமர் சூப்பர். ;-0

  பதிலளிநீக்கு
 3. டியர் பரணி சார்.
  படங்களுடன் இந்த பதிவு களை கட்டியுள்ளது.

  பதிலளிநீக்கு
 4. //இந்த முறை இணையத்தில் வந்ததை விட கலர் சிறிது டல்லாக படுவது எனக்கு மட்டும் தானா ?//

  +462. (தேங்க்ஸ் விஸ்வா சார்.)

  பதிலளிநீக்கு
 5. அருமை! நல்ல விமர்சணப்பதிவு!

  //தரமான தாளில் வெளி இட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்//

  என்னுடைய கருத்தும் இதுதான் நண்பரே!

  பதிலளிநீக்கு