வியாழன், 16 ஜனவரி, 2014

காமிக்ஸ் உண்டு ....எதிரி இல்லை ....


நண்பர்களே ...வணக்கம் ..

நலம் ..நலமா ..?

அனைத்து  காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ...இந்த புத்தாண்டில் வந்த இனிய நான்கு குட்டி புத்தங்களை அனைவரும் வாங்கி படித்து இருப்பிர்கள் .நானும் உங்களை போலவே படித்து முடித்து விட்டு அடுத்த மாதம் எப்பொழுது வரும் என்று காத்து கொண்டிருக்கிறேன் .மாத ஆரம்பத்தில் புத்தகம் வரும் பொழுது சந்தோசமும் ...அனைத்து புத்தகமும் படித்து முடிந்தவுடன் ஒரு வெறுமையும் சூழ்வது "காமிக்ஸ் " ரசிகர்களுக்கே மட்டுமே வரும் உணர்வுகள் .நாவல் ரசிகர்களோ ...சினிமா ரசிகர்களோ தாங்கள் விரும்பி பார்க்கும் படத்தை எதிர் பார்ப்பார்கள் .கதையுளும் மனமார ஒன்றி  இருப்பார்கள் .ஆனால் படித்து  / பார்த்த பின்னர் ஹய்யோ ....முடிந்து விட்டதே ...அடுத்து என்ன ..என்றல்லாம் எதிர் பார்க்க மாட்டார்கள் .ஆனால் "காமிக்ஸ் ரசிகர்களுக்கு " மட்டுமே படித்து முடிந்தவுடன் "அடுத்து " என்ற ஏக்கம் .சீக்கிரம்  முடிந்து விடுமே என்ற தயக்கம் . தயக்கத்தில் ஒரு நாள் ஆசிரியரின் பக்கங்கள் ..,அடுத்து வரும் விளம்பரங்கள் என பார்த்து விட்டு அடுத்த நாள் அனைத்து  கதைகளின் ஓவியங்களையும் பொறுமையாக ரசித்து விட்டு அடுத்த நாள் எப்பொழுது அமைதியான நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது படிப்பது...என்று  இப்பொழுது எல்லாம் பழகி விட்டது .நாம் காமிக்ஸ் உலகத்தில் இருக்கும் பொழுது எதிரிகள் அருகில் வந்தால் கூட கண்ணுக்கு புல படாத தன்மை இந்த மாய லோகத்தில் ஜணிதிருக்கும் பொழுது மட்டுமே என்றாலும் மிகை இல்லை .

         இந்த மாத வந்த நான்கு இதழ்களில் நான் முதலில் படித்தது "சன்ஷைன் கிராபிக் " நாவலில் வந்த தோர்களின் "பிரபஞ்சத்தின் புதல்வன் ".என்னடா கிராபிக் நாவல் மீது இப்பொழுது அவ்வளவு ஆர்வம் வந்து விட்டதா ?என்ற சந்தேகம் எல்லாம் வேண்டாம் .கையில் அதிகம் புத்தகம் இருக்கும் பொழுது எது எனக்கு அதிகம் "பிடிக்காத " கதையோ அதை தான் முதலில் படிக்கும் ரகத்தை சார்ந்தவன் என்பதால் முதல் கதையாக "தோர்களை "தேர்ந்து எடுத்தேன் .என்னதான் ஆசிரியர் முந்தைய கிராபிக் நாவல் போல இருக்காது என்று உறுதி தந்திருந்தாலும் ஏற்கனவே பட்ட "அனுபவம் "சந்தேகத்தை 100 % தீர்க்க வில்லை என்பதாலும் ...இணைத்து வந்து இருந்த மூன்று நாயகர்களும் எப்பொழுதும் ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையாலும் "கிராபிக் நாவலை                                                                                                                                                                  
எடுத்து வைத்தேன் .அட்டை படமே "முந்திய அழுகாச்சி நாவல் "  போல இருக்காது என்ற நம்பிக்கையை பார்த்தவுடன் ஏற்படுத்தியது .ஆனாலும் ஒரு பயம் எட்டி பார்த்தது என்னவென்றால் வித்தியாசமான அட்டைப்பட ஓவியமும் ...உள்ளே முந்தைய நாள் ரசித்த வித்தியாச ஓவியங்களும்  கதையை "நம்பும் " விதத்தில் இருக்குமா ?இல்லை சுத்தமான குழந்தைகளுக்கான "பூத கதையாக " இருக்குமா ?என்பதே அது .ஆனால் படிக்க ..படிக்க அப்படி ஒன்றும் "பூ சுற்றும் " கதையாக தெரிய வில்லை .இதற்கு முழு பாராட்டுகளும் தமிழ் மொழி ஆக்கத்தில் ஈடுபட்டவர்க்கு தான் .இப்படி பட்ட கதைகளை படிக்க தெரிந்த குழந்தைகளுக்கும் (என்னை போல ) ஏற்கும் படி இருக்க வேண்டும் ..முதிர்ந்த ரசிகர்களும் ஏற்கும்படி "குழந்தைத்தனமாக "இல்லாமல் இருக்க வேண்டும் .அதில் மொழி பெயர்பாளர் வெற்றி பெற்று விட்டார் என்பது உண்மை .இரண்டு கதைகளும் படிக்கும் பொழுது "காதில் பூ சுற்றும் " எண்ணம் எல்லாம் வரவில்லை .அதிலும் இரண்டாவது கதையின் முடிவு எதிர் பார்க்காதது .

            எனது மகன் தானாக படிக்கும் பழக்கத்திற்கு வந்து விட்டால் அவன் "காமிக்ஸ் "ஆர்வத்தை வளர்க்க வைக்கும் புத்தகமாக இது முதலில் இருக்கும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை .குறைகளை சொல்லாவிட்டால் எப்படி ? மிக ..மிக பெரிய குறை ஆசிரியர் பக்கம் இல்லாதது .முதல் சன்ஷைன் கிராபிக் நாவலாக மலர்ந்த இதில் ஆசிரியர் கொஞ்சமாகவது எட்டி பார்த்து விட்டு வந்து இருக்கலாம் .அடுத்து குட்டியான புத்தகத்தில் இரண்டு கதைகளை வெளி இட்டதை விட ஒரு முழு நீள கதையாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .ஒரு வேலை தோர்கள் கதை எல்லாம் இப்படி "குட்டியான "கதையாக தான் இருக்குமா என்பது "பெங்களூர் கார்த்திக் " போன்றவர்கள் மட்டுமே அறிவார்கள் .நாங்கள் எல்லாம் தமிழ் காமிக்ஸை தவிர வேறு ஒன்றை நோக்காதவர்கள் .அதே சமயம் "கதை "பிடிக்காத நண்பர்கள் இருக்கலாம் .ஆனால் அவர்கள் இந்த கதைகளின் "ஓவியத்தை " ரசிக்காமல் இருக்க முடியாது .அதுவும் "ராஜ் குமார் "போன்ற ஓவிய ரசிகர்களுக்கு இது  மறக்க முடியாத விருந்து .மொத்தத்தில் தைரியமாக "தோர்களுக்கு " பாஸ் மார்க் அளிக்கலாம் .அளிக்க விரும்பாதவர்கள் அவர்கள் குழந்தைகளுக்காக "பாஸ் " மார்க் அளித்தே தீர வேண்டும் .

         அடுத்து எடுத்து படித்தது "யுத்தம் உண்டு ..எதிரி இல்லை ".ஏற்கனவே வந்த முதல் "கமாஞ்சே " கதை ( சரியாக சொன்னால் இரண்டாவது ) என்னை ஏமாற்ற வில்லை என்பதால் எந்த தயக்கமும் இல்லை .அழகான ஓவியங்களும் ...தெளிவான கதை ஓட்டமும் "கௌ -பாய் "உலகத்தில் நம்மை உலவ செய்கிறது .செவ்விந்தியர் ..,வெள்ளையர் என இருபக்க பார்வையிலும் உள்ள தர்மங்களை சரியாக வாசகர்க்கு கொண்டு  சென்று எவர் பக்கமும் "வெறுப்பை " சாய்க்காத வண்ணம் முடிவை கொண்டு வந்ததில் ஆசிரியரின் திறமையை காட்டுகிறது .கௌ பாய் ரசிர்களை  முழுமையாக திருப்தி படுத்தும் இதழ்  . அதே சமயம் ,.சில இடங்களில் வந்த எழுத்து பிழைகளை தவிர்த்து இருக்கலாம் .மற்ற படி இந்த இதழும் மன நிறைவை தந்த இதழ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

                அடுத்து வந்த இரு இதழ்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்த "ப்ருனோ ".சாகசமான "சாக மறந்த சுறா " மற்றும் பிரின்ஸ் அவர்களின் மறுபதிப்பு சாகசமான "பயங்கர புயல் "..இந்த இரண்டு அட்டை படங்களும் மற்ற அட்டை படங்களுக்கு குறை வைக்க வில்லை .அதிலும் "பயங்கர புயல் " அட்டைபடம் இலங்கை வாசகர் "பிரதிப் " அவர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பான முறையில் வந்துள்ளது .ப்ருனோ சாகசத்தை குழுவினரோடு எதிர் பார்தால் "தனி ஆவரணத்தில் " வந்து கலக்கியது மகிழ்ச்சியை தந்ததா இல்லை வருத்தத்தை தந்ததா என சொல்ல முடிய வில்லை .பிரின்ஸ் வழக்கம் போல கலக்கி விட்டார் .

           மொத்தத்தில் இந்த மாதம்  அதிகம் "குறை " ஏதும் இல்லாமல் சிறந்த முறையில் ஒன்றுக்கு நான்காக புத்தகத்தை அளித்து ..,அனைத்து இதழ்களின் சித்திர தரம் ..,அச்சு தரம் ..,அழகான மொழி ஆக்கம் .., அட்டகாசமான அட்டைப்படங்கள் என காமிக்ஸ் ரசிகர்களுக்கு அழகான புத்தாண்டையும் ..,அருமையான பொங்கலையும் அளித்த ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி .

        மீண்டும் சந்திப்போம் நண்பர்களே .....நன்றி ..

15 கருத்துகள்:

 1. பிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாதம் சார்.............

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்றி சார் ..:-)

   நீக்கு
 2. நாளுக்கு நாள் உங்கள் ரசிப்புத்தன்மையும், ரசிக்கத்தக்க எழுத்து பாணியும் கூடிக்கொண்டே போகிறது, போராட்டக்குழுத் தலைவர் அவர்களே!
  பொதுவான ஓரிரு விசயங்களை நுணுக்கமாக விவரித்துவிட்டு பிறகு சொல்லவரும் விசயத்துக்குள் புகுவது - தேர்ந்த எழுத்தாளர்களின் பாணி!

  கலக்குங்க தலைவரே! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி செயலாளர் அவர்களே .....

   என்னதான் தலைவர் ஆக இருந்தாலும் இப்பொழுது "செயலாளர் " அவர்களுக்கு தான் அதிகம் மதிப்பு.எனவே நமது போராட்ட குழுவின் முதல் நோக்கமான "சிங்கத்தின் சிறு வயதில் " போராட்டத்திற்கு ஆசிரியரிடம் தாங்கள் இன்னும் போராட்டத்தை தீவிர படுத்த "சங்கம் " தங்களை வேண்டி கொள்கிறது .

   நீக்கு
 3. பதில்கள்
  1. பொங்கலோ பொங்கல்...

   காமிக்ஸ் பொங்கல் ......

   நன்றி நண்பரே ....

   நீக்கு
 4. "ஒரு வேலை தோர்கள் கதை எல்லாம் இப்படி "குட்டியான "கதையாக தான் இருக்குமா " - yesu u r correct

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகா ...அப்படியா நண்பரே ....தகவலுக்கு மிக்க நன்றி .முழு நீள கதையாக இல்லாதது வருத்தமே ...

   நீக்கு
 5. Good review without revealing the plot - usually I don't read reviews because I get books much later than you guys.

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் ..,பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி நண்பரே ...

   நீக்கு
  2. //அழகான ஓவியங்களும் ...தெளிவான கதை ஓட்டமும் "கௌ -பாய் "உலகத்தில் நம்மை உலவ செய்கிறது .செவ்விந்தியர் ..,வெள்ளையர் என இருபக்க பார்வையிலும் உள்ள தர்மங்களை சரியாக வாசகர்க்கு கொண்டு சென்று எவர் பக்கமும் "வெறுப்பை " சாய்க்காத வண்ணம் முடிவை கொண்டு வந்ததில் ஆசிரியரின் திறமையை காட்டுகிறது .//
   அருமையான விமர்சனம்.

   நீக்கு
 7. தோர்கல் கதை தொடர் அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்கும்படியானது, முக்கியமாக Viking கால கதை தொடர்கள் ரசிகர்களுக்கு. உங்களுக்கும் அது பிடித்தமானதாக இருந்ததில் ஆச்சர்யம் இல்லை.

  முதல் பாகம் போல அனைத்து தோர்கல் கதைகளும் சிறியவை அல்ல.. தனி தனி ஆல்பமாக படித்து ரசிக்க கூடிய 50+ பக்க கதைகள். ஆனால் தொடர்ந்து படித்தால் அவைகள் கோர்வையான கதை சொல்லலை கொண்டவை... சில சமயங்களில் ஒரே கதை தொடர் 4, 5 புத்தகங்களுக்கும் தொடரும.


  தொடருங்கள் உங்கள் காமிக்ஸ் தேடலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் ..,தங்கள் விரிவான பதிலுக்கும் மிக்க நன்றி சார் ..

   நீக்கு