சனி, 23 நவம்பர், 2013

ஒரு சிப்பாயின் தடத்தில் ...

நண்பர்களே  ...வணக்கம் ...

நலம் ..,நலமா ..?

போன வாரமே வந்து இருக்க வேண்டிய இந்த பதிவு சில காரணங்களால் தள்ளி விட்டது .தீபாவளிக்கு வந்த நமது காமிக்ஸ் மலர்கள் இரண்டில் கிராபிக் நாவல் ஆன " ஒரு சிப்பாயின் சுவடுகளில்   " ஒன்று .அந்த இதழை பற்றிய எனது பக்க பார்வை (மட்டும் ) இங்கே காணலாம் . முதலில் இந்த புத்தகத்தை படிக்காமல் முழுவதுமாக புரட்டி பார்த்தவுடன் மிகுந்த சந்தோசம் தான் ஏற்பட்டது .காரணம் ஆசிரியரின் அந்த நீ......ண்ட ஹாட் -லைன் .இணையத்தில் வரும் பலருக்கு அதில் பாதி ஏற்கனவே அறிந்த செய்தி தான் என்றாலும் புத்தகத்தில் படிக்கும் போது ஒரு மகிழ்ச்சி தான் .நமக்கே இப்படி என்றால் இணையம் வராத பலருக்கு எப்படி இருக்கும் .?அதுவும் 2014 விளம்பரத்துடன் வந்த அந்த இதழை பாராட்டாமல் இருக்க முடி யுமா என்ன ?

     அதே சமயம் டெக்ஸ் வில்லர் புத்தகத்தில் வந்த அதே அட்டைப்பட மங்கள் இதிலும் வந்தது வருத்தமே .இணையத்தில் வந்த அட்டைபடம் பாராட்டை பெற்ற போதும் புத்தகத்தில்...... நின்று கொண்டு இருக்கும் சிப்பாயின் ஓவியம் மங்கலாக வந்ததில் புத்தகத்துக்கு ஒரு மாற்று குறைவே ..!இதன் அட்டைபடம் கீழே காணலாம் .
அட்டைப்படம்  
இணையத்தில் வந்த இந்த அட்டைப்படம் புத்தகத்திலும் இதே போல வந்திருந்தால் இன்னும் மெருகு கூடி இருக்கும் என்பது உண்மை .

       அடுத்து கதைக்கு செல்லலாம் .முழுவதுமாக சொல்லலாம் தாம் .ஆனால் படிக்காதவர்களும் படிக்கலாம் என்றாலும் படிக்காதவர்கள் பத்தி ,பத்தி யாக தாண்டி செல்லும் நிலை இருப்பதால் அதன் கரு மட்டும் .:-). முழுவதும் கதையை படிக்க விரும்பும் நண்பர்கள் உடனடியாக நண்பர் பெங்களூர் கார்த்திக் அவர்களின் "blade beedia .blogs pot .com ."என்ற இணைய தள முகவரிக்கு சென்றால் காணலாம் .

           வீட்டிலும் ,பணியிலும் ,பொருளாதாரத்திலும் பின் தங்கி விட்ட ஒரு தொலை காட்சி நிருபர் இழந்த புகழை மீட்டெடுக்க... என்ன ஆனார் என்றே தெரியாத ஒரு படை வீரனை தேடி செல்கிறார் .அதற்காக அவர் படும் இன்னல்கள் ,பொருளாதார இழப்பு மற்றும் அந்த படை வீரனின் கதி என்ன ஆயிற்று ,கடைசியில் அந்த நிருபரின் கதி என்ன ஆயிற்று என்பது புத்தகம் வாங்கி படித்தால் தாங்கள் அறிந்து கொள்ளலாம் .உண்மையில் இந்த கதையை நான் முதலில் ஆர்வமாக தான் படிக்க ஆரம்பித்தேன் .காரணம் ஆசிரியரின் "இது அழுகாச்சி காவியம் அல்ல " என்ற முன்னுரை தான் .ஆனால் அந்த படை வீரனுக்கு ஏற்பட்ட நிலை ,நிருபனுக்கு ஏற்படும் நிலை என கதை ஒரு மாத்ரி "சோகத்தை "நோக்கி படை எடுக்க நான் மூலையை நோக்கி படை எடுக்க தொடங்கினேன் .என்ன தான் "மாறுபட்ட படைப்பு "என்றாலும் கிராபிக் நாவல் என்றால் "அழுகாச்சி காவியம் "தான் என்ற என் மன நிலை 100 சதவீதம் உண்மை தான் என்பதை நிருபத்திதது .

         ஆனால் இப்பொழுது ஆசிரியர் அறிவித்த "கிராபிக் நாவல் "வரிசைக்கான கதைகளின் விளம்பர அறிவிப்பு எனது எண்ணத்தை மாற்றி விடும் நிலைமையில் இருப்பதால் அடுத்த கிராபிக் நாவலுக்கான கதைகளை ஆவலுடன் தான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் என்ற உண்மையையும் இங்கே சொல்லி விடுகிறேன் .எனது எதிர் பார்ப்பு உண்மையாகுமா  அல்லது கனவாகுமா என்பது அடுத்த கிராபிக் நாவலில் வரும் கதையை பொறுத்து தான் அமையும் .

        அதே சமயம் கிராபிக் நாவலின் ஆதரவாளர்கள் எனது நிலை பாட்டை ஆசிரியர் வசம் கூறும் பொழுது என் மேல் வருத்தம் கொள்வது அறிய முடிகிறது .சோக கதை என்றால் அது உனக்கு நடந்ததா என்ன ? படித்து விட்டு விட்டு விடுவது தானே எனவும் என்னலாம் .என்னை பொறுத்த வரை பகலில் எவ்வளவு கஷ்ட பட்டாலும் இரவில் அமைதி யான மன நிலையில் உறங்க நினைக்கிறன் .நான் பெரும்பாலும் உறங்குவதற்கு முன்னர் தான் படிக்க ஆரம்பிக்கிறேன் .அப்பொழுது நாம் ஒரு சிறந்த கமர்சியல் கதையோ ,அல்லது ஒரு காமெடி கதையோ படிக்கும் பொழுது உறங்கும் முன்னரோ ,உறங்கிய பின்னரோ ஒரு வித ஆனதத்தில் உறங்க முடிகிறது .அதே சமயம் "ஒரு அழுகாச்சி காவியத்தை " இரவில் நீங்கள் படிக்கும் பொழுது அந்த கதையின் அழுகாச்சி மட்டுமல்ல உங்கள் வாழ்க்கை பயணத்தில் முன்னர் ஏற்பட்ட சோகங்கள் ,தடங்கல்கள் அனைத்தும் மனதில் உழன்று உங்கள் உறக்கத்தை  தொலைத்து விடும் அபாயம் அதிகம் உண்டு .எனவே தான் எனது எதிர்ப்பை உடனடியாக கூறி விடுகிறேன் .நமது மனதில் பாரத்தை ஏற்ற எத்துனை வகை புத்தகங்கள் உள்ளன .அதை விட்டு சந்தோசத்தை மட்டும் விதைத்து விட்டு செல்லும் நமது காமிக்ஸ் "புத்தகங்களிலும் இந்த நிலை வேண்டுமா என்பதே எனது வினா ?

                     மீண்டும் சந்திப்போம் நண்பர்களே ......

19 கருத்துகள்:

  1. பிரம்மாதம்.


    தொடர்ந்து எழுதுங்கள் பரணி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார் ...

      தங்களும் தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே எனது அவா ... :-)

      நீக்கு
  2. டியர் பரணி,

    கிராபிக் நாவல்கள் வரும் மாதம் உங்களை காண்பதற்காகவே அடுத்த வருடம் ஒரு முறை சேலம் வர வேண்டும் :-)

    அப்டியே நம்ம ஈரோடு பூனைக்குட்டி (கவனம் - வார்த்தை பிரித்து படிக்கக் கூடாது !!) அவர்களையும் சந்திப்பதற்கு எதுவாய் ஒரு சமயம் ...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார் ...

      உங்கள் வருகைக்கு காத்திருக்கிறேன்... :-)

      நீக்கு
  3. //அதே சமயம் "ஒரு அழுகாச்சி காவியத்தை " இரவில் நீங்கள் படிக்கும் பொழுது அந்த கதையின் அழுகாச்சி மட்டுமல்ல உங்கள் வாழ்க்கை பயணத்தில் முன்னர் ஏற்பட்ட சோகங்கள் ,தடங்கல்கள் அனைத்தும் மனதில் உழன்று உங்கள் உறக்கத்தை தொலைத்து விடும் அபாயம் அதிகம் உண்டு//

    உங்க ஃபீலிங்க்ஸ் எனக்குப் புரியுது பரணி! அதாவது உங்களுக்கு கதை புடிக்குது; ஆனா, படிச்சா அழுகை அழுகையா வந்து தூக்கம் போயிருதுன்னு சொல்றீங்க?! :)

    எனக்குக் கூட பேய்ப்படம் பார்த்தா நைட்டு பயத்துல தூக்கமே வராது! அதுக்காகவே நான் காலை நேரத்துல மட்டும் தான் பேய்ப்படம் பார்ப்பேன்! :D இந்த ஐடியாவை நீங்களும் ட்ரை பண்ணிப் பார்க்கலாம்! ;) ஜஸ்ட் ஜோக்கிங்... :)

    நீங்கள் அழுவாச்சி காவியம்னு அடிக்கடி சொல்றப்போ எனக்கு ஏனோ வைரமுத்துவின் கருவாச்சி காவியம் தான் நினைவுக்கு வருது! சேம் ரைமிங்...

    லயன் ப்ளாகில்:
    // BARANI WITH COMICS.BLOGSPOT.COM //

    இங்கே:
    // blade beedia .blogs pot .com //

    வலைப்பூ பெயர்களை யாருக்கும் புரியாமல் எழுதுவதில், உங்களை அடித்துக் கொள்ள ஆளே இல்லை! :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹ.....ஹா ....

      உங்கள் இந்த கமெண்ட்ஸ் உங்கள் பதிவை போலவே நகைசுவையை அள்ளி வீசுகிறது .

      உங்கள் "ஐடியா " வை கடைபிடிக்க ஆசை தான் .ஆனால் பகலில் ஆபீஸ் வேலை விடுமுறை விட்டால் கடை வேலை அதையும் விட்டால் இரு வாரிசுகளின் சேட்டை என பகல் பொழுது எனக்கு இல்லாமல் போய் விடுகிறதே நண்பரே ..:-(

      நீக்கு
  4. அதை விட்டு சந்தோசத்தை மட்டும் விதைத்து விட்டு செல்லும் நமது காமிக்ஸ் "புத்தகங்களிலும் இந்த நிலை வேண்டுமா என்பதே எனது வினா ?//

    வினாவெல்லாம் கரெக்டுதான். ஆனா, விகடன்ல ஒரு பத்து இதழ்கள், குமுதத்துல ஒரு அஞ்சு, இன்னும் எக்கச்சக்க இதழ்கள் என பாப்புலரான வெளியே தெரியும் வார. மாத இதழ்கள் மட்டுமே 50க்கும் மேல இருக்கும் தமிழ் இதழ்கள் சாம்ராஜ்யத்தில் அவரவர்கள் அவரவர்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசிக்க இடமிருக்கிறது. சந்தோஷம், குதூகலம் மட்டும்தான் இதழ்களில் வேண்டும் என்று சொன்னால் எப்படி? அத்தனை உணர்வுகளையும், தகவல்களையும் கொண்ட இதழ்களும் வேண்டுமல்லவா? யாருமே வாசிக்கமுடியாத இலக்கிய இதழ்களும் கூட இங்கே நிறைய வருகின்றன. :-)) ஆனால் காமிக்ஸ்?

    இருப்பது ஒரு கம்பெனி, வருவது 3 இதழ்கள். இதில் அது வேண்டாம், இது வேண்டாம் என்று சொல்வது சரியாக இருக்காது என்பதுதான் எங்கள் வாதம்.

    சரிதானே நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே ...

      "இருப்பது ஒரு கம்பெனி ..,வருவது 3 புத்தகம் "

      அதே தான் நண்பரும் எனது கருத்தும் .இருக்கும் ஒரே கம்பெனியில் "சந்தோஷ படுத்தும் "கதை மட்டும் வரட்டுமே ...

      சரி தானே நண்பரே ... :-)

      நீக்கு
  5. // நமது மனதில் பாரத்தை ஏற்ற எத்துனை வகை புத்தகங்கள் உள்ளன. அதை விட்டு சந்தோசத்தை மட்டும் விதைத்து விட்டு செல்லும் நமது காமிக்ஸ் "புத்தகங்களிலும் இந்த நிலை வேண்டுமா என்பதே எனது வினா ? //

    ஏற்கெனவே அவ்வகைக் கதைகளுக்கு மூடுவிழா நடந்துவிட்டது பரணி! :D சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் நாமே எதற்கு சோக கேள்விகளை மனதில் தங்கவிடவேண்டும்?! :D

    சிறார்களுக்காக வெளிவரும் Tinkle-ல் கூட 10 கதைகளுக்கு நடுவில் guaranteed-ஆக ஒரு sentiment-tragedy கதை வந்துகொண்டுதான் இருக்கிறது. ஒரு அளவோடு வெளிவரும்பட்சத்தில் அவ்வகைக் கதைகளும் OK தான் - அவற்றுக்கும் ஒரு தேவை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் நண்பரே ....

      ஆனால் நமது எதிர்ப்பை உடனடியாக கூறாவிட்டால் நம்ம நண்பர் ஆதி தாமிரா ,கார்த்திக் போல பலர் பாராட்டி ,பாராட்டி ஆசிரியரை வேறு பக்கம் இழுத்து சென்றாலும் சென்று விடுவார்கள் .:-)

      "முன் ஜாக்கிரதை முத்தண்ணா "வாக இருக்க இதுவும் ஒரு காரணம் .

      நீக்கு
    2. அடுத்த ஆண்டு வெளிவரவுள்ள கதைகள் list-தான் வந்துவிட்டதே நண்பரே. கிராபிக் நாவல் வரிசை கதைகள்கூட Thriller வகையாகவே உள்ளது. இதை அழுகாச்சியாக்க வாய்ப்புக்கள் ரொம்பவே குறைவு.

      வேண்டுமானால் கிராபிக் நாவலில் கூடுதல் Variety-க்கு வாய்ப்புள்ளதே தவிர அழுகாச்சி சேர்த்து சொந்த செலவில் காஷ்மோரா வைத்துக்கொள்ள வாய்ப்பு ரொம்ப கம்மி! :D

      அழுகாச்சி என்ற வார்த்தையை யாராவது உபயோகித்தாலே அந்தக்கதை அடுத்தமாதம் வந்துவிடுவதுபோல பயப்படுகிறீர்களே?

      (ஐயய்யோ காஷ்மோரா என்ற வார்த்தை என் ஞாபகத்தில் வந்துவிட்டது. இன்றிரவு தூங்குன மாதிரிதான்!)

      நீக்கு
  6. அடுத்த வருட 'சன்ஷைன் நாவல்'க்கு ஆர்வமாக சந்தாச் செலுத்தி ஃப்ளாஷ் நியூஸில் இடம்பெற்றிருக்கும் போராட்டக்குழு தலைவர் அவர்களே...

    நண்டு வருவல் நன்றாக இருந்ததா? :D

    பதிலளிநீக்கு
  7. கிராபிக் நாவலுக்கு 2 கதைகள் என்பதெல்லாம் இப்போது மலையேறி 6 இதழ்கள் என்ற லெவெலுக்கு போயாச்சு! டெக்ஸ்க்கு வைத்த ஒட்டேடுப்புப் போல் வைத்து விட்டு நடைமுறைப் படுத்தியிருக்கலாம்.
    +6 வரிசையை மூட்டைகட்டி ஓரம் வைத்துவிட்டு அந்தஇடத்தில் அவசர அவசரமாக GN வரிசை இப்பொழுது ஏன் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி?
    கணக்கு தப்பாகவே வருகிறதே?

    பதிலளிநீக்கு
  8. //ஆனால் நமது எதிர்ப்பை உடனடியாக கூறாவிட்டால் நம்ம நண்பர் ஆதி தாமிரா ,கார்த்திக் போல பலர் பாராட்டி ,பாராட்டி ஆசிரியரை வேறு பக்கம் இழுத்து சென்றாலும் சென்று விடுவார்கள் .:-)// correct

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :-)

      என்ன ..இந்த முறை .எல்லா கமெண்ட்ஸ் ம் சந்தோசத்தை கொண்டு வருகிறது .

      இப்படி தான் "காமிக்ஸ் " படிக்கும் போதும் இருக்க வேண்டியது .

      என்ன நண்பர்களே ..நான் சொல்வது சரி தானே ..? முக்கியம்மாய் ஆதி தாமிரா அவர்களே .. :-)

      நீக்கு