சனி, 11 ஜனவரி, 2014

காமிக்ஸ் புத்தாண்டு.....

நண்பர்களே ...வணக்கம் .

நலம் ..,நலமா ..?

இந்த வருட ஆரம்பம் இரு முறையில் என்னை சந்தோஷ படுத்தியது .ஒன்று பிரபல இரட்டை எழுத்தாளர்களும் ..,திரை பட வசனகர்த்தர்களும் ..,தற்போது இயக்குனர் ஷங்கர் அவர்களின் " ஐ " திரைப்பட வசனகர்த்தர் ஆன "சுபா "அவர்களின் புத்தாண்டு வாழ்த்து அட்டை கிடைக்க பெற்றேன் .நான்கு ,ஐந்து வருடங்களுக்கு முன் தவறாமல் நான் வாழ்த்து அட்டை ..,கடிதம் அனுப்பும் பொழுது அவரது பதிலும் ..,வாழ்த்தும் தவறாமல் எனக்கு வந்தடையும் .ஆனால் மங்கி போன "நாவல் " விற்பனைகளால் கடிதம் எழுதுவதையும் ..,அலைபேசி வசதிகளால் "வாழ்த்து அட்டைகளும் " இப்பொழுது கிடைக்க பெறா சூழ்நிலையில் பல வருடங்களாக அவரிடம் தொடர்ப்பு இல்லா நிலையில் ..இப்பொழுது திரைப்பட துறையில் மிக பிஸியாக பணியாற்றும் நிலையில் அவரின் "புத்தாண்டு வாழ்த்து "அட்டை கிடைக்க பெற்றேன் .எப்பொழுதும் "காமிக்ஸ் " தவிர வேறு எதுவும் இங்கே எழுத எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் இங்கே நான் இதை கூற காரணம் அவரின் வாழ்த்து அட்டையில் காண பட்ட பொன் மொழி .ஒவ்வொரு முறை அவரின் வாழ்த்து அட்டையில் பொன்மொழி காணப்பட்டு அதன் படி நடக்க முயற்சிப்பேன் .இம்முறை அவரின் பொன்மொழியில் எனக்கு வேறு பாடு காணப்பட்டதால் இங்கே இறக்கி வைக்கிறேன் .

                   "   பொய்யாக இருந்து மகிழ்விப்பவராய் இருப்பதை விட
                       உண்மையாய் இருந்து வெறுக்க படுவது மேல் "


என்பதே அந்த பொன் மொழி .நடைமுறையில் இது சாத்தியமா என மனதுக்குள் ஒரு குழப்பம் .இப்பொழுது உள்ள வாழ் முறையில் பல சமயம் "பொய் " ஆக தான் நடிக்க வேண்டி உள்ளது .அப்படி இருந்தும் பலரால் நாம் வெறுக்க படுகிறோம் ...,வருத்தம் அடைய வைக்கிறோம் .அனைத்து காலமும் நாம் "உண்மையாக " இங்கே இருந்தால் அனைவருக்கும் "எதிரி "ஆக தான் நாம் பார்க்க படுவோம் என்று பயப்படாமல் இருக்க முடிய வில்லை .நாம் சரியாக இருந்தால் கூட பிறரை "வருத்த பட "வைப்பதை தவிர்க்க முடியாது .எடுத்து காட்டாக நமது "காமிக்ஸ் ஆசிரியர் " அவர்களை எடுத்து கொள்ளுங்கள் .பலவற்றையும் யோசித்து ..,அதன் சாதக .,பாதகம் அனைத்தும் அலசி தான் ஒவ்வொரு இதழ்களையும் வெளி இடுகிறார் .ஆனால் "ஒல்லி புத்தகமாக " வந்தால் சிலருக்கு அவர் மீது வருத்தம் . "குண்டு புத்தகம் "ஆக வந்தால் விலை அதிகம் என சிலருக்கு  வருத்தம் . "கிராபிக் நாவல் "என அழுகாச்சி கதைகளை வெளி இட்டால் சிலருக்கு கோபம் .."அதிரடி கதைகள் "தொடர்ந்து வந்தாலும் சிலருக்கு வருத்தம் இப்படி யாராவது ஒருத்தருக்கு ஒரு முறையாவது அவரின் மீது  சலிப்பு வருவது இயற்கை .அதற்கு அவரால் தான் என்ன செய்ய முடியும் .அதை கூட விடுங்கள் .நாட்டிற்கே சுதிந்திரம் வாங்கி கொடுத்து "மகாத்மா "என்று புகழ படும் "காந்தியை " கூட ஒருவர் அவர்  "கெட்டவர் " என்ற  நினைப்பில் தானே சுட்டு கொல்லபட்டார் .எனவே வாழ்வில் சில சமயம் நாம் "பொய்யாக " இருப்பதில் தவறில்லை என்பது என் கருத்து .

       சாரி நண்பர்களே ...நிகழ்வுக்கு வருவோம் ..இந்த ஆண்டின் அடுத்த கொண்டாட்டம் மீண்டும் ஒரே சமயத்தில் "நான்கு புத்தங்கள் " அளித்து இந்த புத்தாண்டை "காமிக்ஸ் புத்தாண்டு "ஆக மாற்றிய ஆசிரியருக்கு நன்றி .இரண்டை நான்காக மாற்றி வந்திருந்தாலும் "இளைத்து " காணப்பட்ட வருத்தம் இருந்தாலும் ஒன்று பட கையில் நான்கு இதழ்கள் இருக்கும் பொழுது வந்த சந்தோஷம் தனி தான் .இம்முறை வந்த நான்கு இதழ்களின் அட்டைப்படமும் அசத்தல் ரகம் தான் .அச்சு தரத்திலும் இந்த முறை எந்த குறையும் இல்லை .இதே தரத்தில் இனி வந்தாலும் இனி மேலும் பக்கத்தை குறைக்காமல் இருந்தால் தான்  காமிக்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி குறையாமல் இருக்கும் .இதை சொல்ல காரணம் 48 பக்ககளில் வந்த இம்முறை இதழ்களில் அடுத்த வெளியீட்டு விளம்பரத்தில் 42 பக்கங்கள் என வருவது என்னை போன்ற "குண்டு "புத்தக விருப்பம் உடையவர்களின் ஆர்வத்தை இழக்க செய்யும் காரியம் மட்டுமல்ல ...ஒல்லி புத்தக ரசிகர்களின் விருப்பத்திற்கும் " குண்டு " வைக்கும் செயல் .
இந்த வருட முதல் மாதத்தில் லயன் ..,முத்து ..,சன்ஷைன் ..,கிராபிக் என நான்கு இதழ்கள் வந்தது போல "ஒல்லி "புத்தகம் வரும் காலம் எல்லாம் நான்கு இதழ்கள் வந்தால் அனைவரும் விரும்புவார்கள் .120 ரூபாய் புத்தகம் வரும் சமயத்தில் மட்டும் புத்தகத்தின் எண்ணிக்கை குறைத்தல் நன்று .அதே போல நான்கு இதழ்களுக்கு ஆசிரியரின் நான்கு "ஹாட் -லைன் " இல் வந்து உரையாடுவார் என நினைத்து சந்தோஷ பட்டால் இரண்டரை இதழ்களுக்கு மட்டும் வந்து உரையாடி விட்டு சென்று கடுப்படித்து விட்டார் ஆசிரியர் .அதிலும் புது புத்தகத்தில் ..,முதல் புத்தகத்தில் "ஆசிரியர் பக்கம் "எதுவும் இல்லை என்பது மிக வருத்தமான ஒன்று ..ஆசிரியர் தயவு செய்து இனி இதை தவிர்க்க வேண்டும் .அதே  போல பில்லர் பக்கத்தில் "லக்கியின் " குறுகிய கதையை படிக்கும் திருப்தியை விட "மதி இல்லா மந்திரி "போன்ற கதைகள் வருவது முழு நீள கதையை படித்த திருப்தி வருகிறது .முத்து காமிக்ஸ் ஹாட் லைனில் அடுத்த வெளியீடு பற்றி அறிவிப்பதை போல அணைத்து இதழ்களிலும் அதனை கடை பிடித்தல் நன்றாக இருக்கும் .

                                                                                                                                                                     

முத்து காமிக்ஸின் "சாக மறந்த சுறா " அட்டைபடம் உண்மையில் பழைய லயன் ..,முத்து அட்டை படத்தை பார்த்த திருப்தியை தந்தது .நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ருனோ வருவதில் பழைய ரசிகர்களுக்கு மட்டுமல்ல ..,புது ரசிகர்களுக்கும் ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருக்கும் என்பது உண்மை .அதன் அழகான சித்திர தரம் ...அதிலும் வண்ணத்தில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு அழகான பயணத்தை அளிக்கும் என்பது உறுதி .

லயன் காமிக்ஸின் "கமாஞ்சே " சாகசமான "யுத்தம் உண்டு ..எதிரி இல்லை " அழகான கை ஓவிய அட்டைபடத்தில் ..,அட்டகாசமான சித்திர தரத்துடன் ..அருமையான கதை ஓட்டத்தில் "டைகர் " கதைகளுக்கு மாற்றாக உள்ளார் .இவரை தொடர்ந்து ஆசிரியர் கொண்டு வருவதுடன் லயன் 30 வது ஆண்டு மலரிலும் இவரை கொண்டு வருவது "கௌ -பாய் "ரசிகர்களுக்கு போனஸ் ஆக இருக்கும் என்பது மிக பெரும் உண்மை .அதே போல "சன் ஷைனில் "வந்த "பயங்கர புயல் "ஏற்கனவே கருப்பு வெள்ளையில் படித்தவர்களுக்கும் சரி ..கலரில் புதிதாக படிக்கும் பலருக்கும் சரி ....கடலில் மிதக்கும் அனுபவம் கண்டிப்பாக உண்டு .நான்காவது இதழை பற்றி "அட்டை படமே "சொல்லி விடும் வித்தியாசமான கதை ஓட்டத்தை ....புத்தகத்தை புரட்டினால் ஓவிய களமே சொல்லி விடும் மாறு பட்ட களத்தை .மொத்தத்தில் "கிராபிக் " நாவல் களத்தில் வந்த இதழ்களில் முதன் முறையாக என் மனதை கொள்ளை கொண்ட இதழ் இது என்பதால் இது எப்பொழுதும் மறக்க முடியாத இதழ் என்றும் கூறி கொள்கிறேன் .என்ன ஒன்று குறுகிய பக்கத்தில் குறுகிய இரண்டு கதைகளால் ஒரு முழு நீள கதையை படித்த அனுபவம் இல்லை எனினும் திருப்தி அளித்த புத்தகம் என்று தயங்காமல் சொல்லலாம் .

    மொத்தத்தில் இந்த புத்தாண்டில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு கொஞ்சம் ..,கொஞ்சமாக ...பரிமாறினாலும் திருப்தி உடன் பசி தீர்த்து ..,அதுவும் எந்த குறையும் இல்லாமல் பரிமாறிய இந்த மாதத்தை போல எந்த மாதமும் வந்தால் காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்த வருடம் போல எப்பொழுதும் "புத்தாண்டு "தான் என்பது மீண்டும் மறக்க முடியாத உண்மை .

               மீண்டும் "கதை விமர்சனத்தில் " விரிவாக சந்திக்கலாம் நண்பர்களே ..நன்றி ...



 

25 கருத்துகள்:

  1. இம்முறை தலைவரின் பதிவு நிதானமாகவும், தேர்ந்தெடுத்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதுமாக முழு திருப்தி தருகிறது. தலைவர் மேற்சொன்ன எல்லா கருத்துக்களையும் பலமாக ஆமோதிக்கிறேன். ஆனால் 30வது ஆண்டுமலரில் 'கமான்சே' புகுத்துவதில் எனக்கு உடன்பாடு சற்று குறைவே! காரணம், இத்தொடர் 16 பாகங்களைக் கொண்டிருப்பதுதான்! சிறப்பிதழ்களில் 'தொடர்கள்' வேண்டாம் என்ற வாசகர்களின் கோரிக்கைக்கு எடிட்டர் ஏற்கனவே செவிசாய்த்துவிட்டை நீங்கள் அறிவீர்கள்தானே தலைவரே?

    அடுத்த முறை 'சுபா'வுக்கு நீங்கள் பக்கம் பக்கமாக வாழ்த்துக் கடுதாசி வரைந்தால், (ஒரு காலத்தில்) அவர்களது எழுத்துக்களின் தீவிர ரசிகனான இந்த ஈரோடு விஜயின் விசாரிப்புகளையும் பத்திபத்தியாக் தெரிவித்துவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'செவிசாய்த்துவிட்டதை' என்று படிக்கவும்...

      நீக்கு
    2. செயலாளர் அவர்களே..,தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி .30 வது ஆண்டு மலரில் கமாஞ்சே வை நான் இணைக்க சொல்ல காரணம் அவர்களின் கதைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்ப்பு இல்லாதது .லார்கோவை பொறுத்த வரை தனி கதையாக இருந்தாலும் சில சமயம் முன் கதை நிகழ்வுகள் சொல்வது உண்டு .ஆனால் இதில் அப்படி இல்லை .உதாரணமாக பல வருடங்களுக்கு முன் கருப்பு வெள்ளையில் வந்த கமாஞ்சே கதையை கூட எடுத்து கொள்ளலாம் .தொடர் கதை போலவா தெரிகிறது ..?எனவே தான் 30வது ஆண்டு மலரில் அவர்களின் ஆதரவை தெரிவித்து இருந்தேன் .

      சுபா அவர்களுக்கு "நன்றி "தெரிவித்து கடிதம் முன்னரே எழுதி விட்டதால் ..அடுத்த கடிதத்தில் தங்களை பற்றி கண்டிப்பாக சொல்லி விடுகிறேன்.மன்னிக்கவும் .

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. //லயன் காமிக்ஸின் "கமாஞ்சே " சாகசமான "யுத்தம் உண்டு ..எதிரி இல்லை " அழகான கை ஓவிய அட்டைபடத்தில் ..,அட்டகாசமான சித்திர தரத்துடன் ..அருமையான கதை ஓட்டத்தில் "டைகர் " கதைகளுக்கு மாற்றாக உள்ளார் .இவரை தொடர்ந்து ஆசிரியர் கொண்டு வருவதுடன் லயன் 30 வது ஆண்டு மலரிலும் இவரை கொண்டு வருவது "கௌ -பாய் "ரசிகர்களுக்கு போனஸ் ஆக இருக்கும் என்பது மிக பெரும் உண்மை .//

      பரணி அவர்களே,புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.டைகருக்கு மாற்றே இல்லேங்கும்போது இந்த ரெட் டஸ்ட் டைகரின் கால் டஸ்ட்டுங்க. ஒரு டைகர் கதைக்கு மற்றொரு டைகர் கதையே மாற்று. இந்த கதையில் அவர் அப்படி என்ன பண்ணிட்டாருன்னு டைகருக்கு மாற்றுங்குரீங்கன்னு புரியல.

      தவிர 30 வது ஆண்டு மலர் டைகரின் குண்டு புக் என்பது உங்களுக்கு தெரியும் தானே. இவரை கொண்டு அங்கு எப்படி நுழைப்பது?

      நீக்கு
    5. என்னது ..30 வது ஆண்டு மலரில் "டைகரின் " குண்டு புக்கா ..? கனவில் இருக்கிறீர்களா ராஜ் குமார் .. :-)

      நீங்கள் சொன்ன டைகர் மாற்று கதைக்கு டைகர் கதை இருந்தது உண்மை தான் .தங்க கல்லறைக்கு மாற்று மின்னும் மரணம் ..மின்னும் மரணத்திற்கு மாற்று தங்க கல்லறை அவ்வளவே ....இனி வருவதும் .,இப்பொழுது வருவதும் டைகர் கதைக்கு மாற்று எதுவுமே இல்லை தான் . காரணம் அதற்க்கு "ஸ்டீல் பாடியார் " கூட ஒத்து வர மாட்டார் ..:-)

      நீக்கு
  2. விமர்சனம் அருமை. இந்த மாத 4 இதழ்களை இப்படி வரிசைப்படுத்தலாம்
    1) கமான்சே 2) தோர்கல் 3) பிரின்ஸ் 4) பிரேசில்

    30/வது ஆண்டு மலரில் கமான்சேவை தவிர்த்து வேறு ஏதாவது ஒரு கௌபாயை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வரிசை படி எனது எண்ணமும் இருக்கலாம் .இல்லாமலும் இருக்கலாம் நண்பரே ..ஆனால் இம்முறை எதுவுமே சோடை போக வில்லை என்பது மட்டும் உண்மை .
      தங்கள் எண்ணப்படி வேறு "கௌ -பாய் "சாகசம் வந்தாலும் தங்களை போலவே நானும் மகிழ்ச்சி அடைவேன் .

      நீக்கு
  3. சூப்பர்!

    இப்போதுதான் என் பிளாக் ல் ஒரு பதிவை பப்ளிஷ் பண்ணிவிட்டு வந்து பார்க்கிறேன், உங்களின் அழகான பதிவு தெறிகிறது! தொடர்ந்து கலக்குங்கள்!

    இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்! :)
    comicsgalaata.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும்..,தங்கள் பதிவில் எனது பதிவை இணைதுள்ளதற்கும் மிக்க நன்றி நண்பரே...

      தங்களுக்கும் ..இங்கு வருகை தந்த அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு ..,பொங்கல் நல்வாழ்த்துகள் .

      நீக்கு
  4. சிறப்பான விமர்சனம். இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சார் ..
      ஆனால் வாழ்த்தை சோகமாக சொன்னதன் காரணம் தான் புரிய வில்லை :-)

      நீக்கு
  5. டியர் பரணி,

    நீங்க எப்படி இருந்தாலும், எல்லோரையும் எல்லா சமயத்திலும் சந்தோஷப்படுத்த முடியாது பரணி! எனவே அதிகம் குழப்பிக்காம, நீங்க நீங்களா மட்டும் இருங்க - அது போதும்! :)

    //எனவே வாழ்வில் சில சமயம் நாம் "பொய்யாக " இருப்பதில் தவறில்லை என்பது என் கருத்து//

    தோர்கல் - //"கிராபிக் " நாவல் களத்தில் வந்த இதழ்களில் முதன் முறையாக என் மனதை கொள்ளை கொண்ட இதழ் //

    ஓகே ஓகே! ;) :D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கார்த்திக் அவர்களே ...

      நான் நானாகவே இருக்கிறேன் .அப்படியும் "எதிரிகளை" சம்பாதித்து விடுகிறேன் .:-)

      "கிராபிக் நாவல் களத்தில் வந்த இதழ்களில் முதன் முறையாக மனதை கொள்ளை கொண்ட இதழ்

      # ஓகே ..ஓகே ...#

      புரிகிறது ...:-)

      தங்கள் சபதத்தில் மீண்டும் " வெற்றி " பெற்றதற்கும் வாழ்த்துகள் ... புரிகிறதா ..:-)

      நீக்கு
    2. உங்களுக்கு என்ன புரிந்தது என்று எனக்குப் புரியவில்லை! :D

      இந்த வரிக்கும்: //எனவே வாழ்வில் சில சமயம் நாம் "பொய்யாக " இருப்பதில் தவறில்லை என்பது என் கருத்து//

      இதற்கும்: தோர்கல் - //"கிராபிக் " நாவல் களத்தில் வந்த இதழ்களில் முதன் முறையாக என் மனதை கொள்ளை கொண்ட இதழ் //

      ... தொடர்பு இருக்கிறதா என்பதே என் கேள்வி! :D

      //தங்கள் சபதத்தில் மீண்டும் " வெற்றி "//
      மங்கம்மா சபதம் மாதிரி "சோமலிங்கா சபதம்" எக்கசக்கமாக எடுத்திருக்கிறேன்... ;) நீங்கள் மீண்டும் என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?! :D

      நீக்கு
    3. // இந்த வரிக்கும், இதற்கும் ...தொடர்பு இருக்கிறதா என்பதே என் கேள்வி! :D //

      ஒ.சி.சு கதையின் தன்மைக்கும், தோர்கல் கதையின் தன்மைக்கும் சம்பந்தமா இருக்கிறது? தோர்கலை எந்தவொரு Regular காமிக்ஸ் வாசகரும் ரசிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம் - So no room here for கலாய்ப்பிங் பரணி, பாவம்பா!:D

      நீக்கு
    4. //So no room here for கலாய்ப்பிங் பரணி//
      ஹா ஹா, எல்லாம் கி.நா. என்ற முத்திரை செய்யும் மாயம் தான்! ;)

      நீக்கு
    5. போராட்டக் குழுத்தலைவரே, நண்டு Fry மற்றும் பலவகையான பலகார பார்சல்களையும் என் பக்கமாக நிறைய Forward செய்யப்பொவதாக நீங்கள் தீர்மானித்துவிட்டது - டெலிபதி முறையில் எனக்குப்புரிந்துவிட்டது! :P

      நீக்கு
    6. இனி "கிராபிக் நாவல் " என்றால் வரவேண்டியது இது போல மாறு பட்ட கதை களமே தவிர "அழுகாச்சி "காவியங்கள் அல்ல என்பதை ஆசிரியரும் ..,தாங்களும் உணர்ந்து கொண்டு "ஓகே ..ஓகே .."என்று தாங்கள் சொன்னதை நான் புரிந்து கொண்டே ன் .
      தாங்கள் பல நடை முறை சாத்தியம் அல்லாத புத்தாண்டு சபதங்கள் :-) எடுத்துள்ளதால் எந்த சபதம் முறையுலும் இதனை புரிந்து கொள்ளலாம் கார்த்திக் சார் .

      ரமேஷ் சார் ..டோன்ட் வொர்ரி ...இனி கார்த்திக் அவர்களுக்கு ( தங்களுக்கும் ) வேண்டிய சீரியஸ் அழுகாச்சி காவியங்கள் அனைத்தும் இனி வர வேண்டுமனால் அது " கிராபிக் சன்ஷைன் அழுகாச்சி நாவல் " என்ற புது பே னரில் தான் வருவது என ஆசிரியர் முடிவெடுக்கும் சூழ் நிலை வர போவதால் நான் கவலை பட போவதில்லை . :-)

      கண்டிப்பாக நான் அதற்க்கு "சந்தா " கட்ட மாட்ட ன் என்பதை எங்கள் "போராட்ட குழு " மீது ஆணை இடுகிறேன் .

      நீக்கு
  6. பதில்கள்
    1. நீண்ட இடைவெளிக்கு பின் வருகை தந்ததில் மிக்க நன்றி நண்பரே ...

      நீக்கு
  7. // 48 பக்ககளில் வந்த இம்முறை இதழ்களில் அடுத்த வெளியீட்டு விளம்பரத்தில் 42 பக்கங்கள் என வருவது... //

    42 பக்கம் என்று எந்தவிளம்பரத்திலும் இல்லையே? 52 அல்லது 56 மட்டும்தானே காணப்படுகிறது? (It means 48 and 52 pages + wrapper).


    "பொய்யாக இருந்து மகிழ்விப்பவராய் இருப்பதை விட உண்மையாய் இருந்து வெறுக்க படுவது மேல்"

    நீங்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில் வாழ்க்கையின் Minimum தேவைகளையும் அநாவசிய தேவைகளையும் பிரித்தறிவதில் ஆர்வமுள்ளவராக இருந்தால் மட்டுமே சாத்தியம்.

    ஒரு Busy-ஆன மருத்துவமனையிலோ, தோழிற்சாலையிலோ, நீதிப் பணிபுரியும் அலுவலகத்திலோ இருந்தீர்களென்றால் "மகிழ்விப்பவர்களை" விட உண்மையானவர்களையே நாடுவீர்கள். காரணம் உண்மையில்லாத மகிழ்ச்சி நீர்க்குமிழி போல - எப்படியும் உண்மையின் கசப்பை தானாகவே வாயில் ஊற்றிவிட்டுச்செல்லும். அதற்கு பதிலாக கசப்பாக இருந்தாலும் தானே தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்ளும் மருந்து பிரச்சனையில்லாதது.

    அதேநேரம் இந்த Rule-ஐ ஒரு சினிமாவைப் பார்த்து ரசிக்கும்போது (அல்லது ஒரு பொழுதுபோக்கை ரசிக்கும்போதோ அல்லது குழந்தைகளுடன் விளையாடும்போதோ) வறட்டுத்தனமாக Follow பண்ண முயற்சித்தோமானால் வாழ்க்கை வெறுத்துவிடும் :D

    பதிலளிநீக்கு
  8. நன்றி நண்பரே ...காமிக்ஸ் பதிவிற்கு முன் இதை எழுதலாமா ..,வேண்டாமா என பல முறை யோசித்தேன் .தங்கள் விளக்கவுரை கண்டு எழுதியது தவறு இல்லை என்று அறிந்து கொண்டேன் நண்பரே ..நன்றி .

    # 42 பக்கம் என்று விளம்பரத்தில் இல்லைய #

    ஆம் நண்பரே ..சாரி ..58 பக்கத்தில் இப்பொழுது வருவதில் இனி 52 பக்கங்கள் என்ற விளம்பரத்தை தான் 48 ..,42 என தவறாக தெரிவித்து விட்டேன் .
    ஆனால் 58 இனி 52 என வந்தாலும் வருத்தம் தானே..

    பதிலளிநீக்கு