சனி, 21 டிசம்பர், 2013

COMICS 2013.......& 2014..?

நண்பர்களே ...வணக்கம் ...

நலம் ...நலமா ....?

ஒரு வழியாக இந்த மாதத்துடன் இந்த வருட "காமிக்ஸ் கொண்டாட்டம் "முடிவடைகிறது .இரண்டு வருடங்களுக்கு முன்  காமிக்ஸ் பசி கொண்ட மிக ,மிக குறுகிய  நண்பர்களுக்கு இருந்த ஒரே உணவகம் சிவகாசி "பிரகாஷ் பப்ளிஷர்ஸ் ".அந்த உணவகமும் அடிக்கடி கடையை அடைத்து வந்ததுடன் ..,எப்பொழுது உணவு பரிமாறுவார்கள்  என்பதே கேள்வி குறியாக இருந்த பொழுது நண்பர்கள் பசியால் துடித்து கொண்டு இருந்தார்கள் .பொறுத்து ..,பொறுத்து பார்த்த உணவகத்தினர் "சப்ளையர் "வைத்து நண்பர்களுக்கு உணவு பரிமாறினால் அவர்கள் பசியை நம்மால் தீர்க்க முடியாது .இனி நாமே களத்தில் இறங்க வேண்டியது தான் என்ற முடிவுடன் 2012 முதல் புத்தம் புது பொலிவுடன் பழைய உணவகத்தை மாற்றி "மசாலா கபே "வாக அவர்களே நண்பர்களுக்கு வேண்டிய உணவை பரிமாற நண்பர்களுக்கு மாபெரும் கொண்டாட்டம் .எப்பொழுது உணவகம் திறந்து "காமிக்ஸ் பசியை "தீர்ப்பார்கள் என்ற காலம் போய் எப்பொழுதும் திறந்து வைத்ததுடன் ஒவ்வொருவருக்கும் என்ன ,என்ன சுவை பிடிக்குமோ அந்த சுவை கொண்ட உணவை தேடி பிடித்து நண்பர்களுக்கு பரிமாறினார்கள் .பழைய இட்லி ..,தோசையா ...புது பீட்ஸா வா உங்களுக்கு என்ன தேவை ..?அனைத்தும் பரிமாறினார்கள் .அனைத்துமே புது வகை சுவையுடன் .இப்படி 2012 உணவகத்தை திறம் பட நடத்தியவர்கள் 2013 இலும் நடத்த வேண்டுமே என்ற நண்பர்கள் கனவை  நனவாக்குவது  போல  2012 இல் எட்டு அடி தான் பாய்ந்து வந்தோம் .இப்பொழுது பாருங்கள் என்று 2013 இல் 16 அடி பாய்ந்து பல வகை உணவு வகைகளை வயறு நிரம்ப உண்ண வைத்தார்கள் .ஒரு சிலருக்கு ஒரு சில உணவு வகைகள் பிடிக்காமல் இருக்கலாம் .ஆனால் பரிமாறிய விதத்தில் ..,அதற்காக அவர்கள் பட்ட சிரமத்தை கணக்கில் கொண்டால் அந்த உணவும் ஒரு "சுவையாக " மனதில் கொண்டார்கள் நண்பர்கள் .அதே சமயம்  ஒரு சில உணவில் உப்பு ..,காரம் குறைந்தோ ..,அதிகரித்தோ காணப்படும் பொழுது அதை உணவகத்தினர் காதில் சொன்னதும் உண்டு .அதற்கு காரணம் "உணவகத்தை "குறை சொல்ல வேண்டும் என்பதற்கு அல்ல .புதிதாய் வருபவர்கள் உணவகத்தை "குறை "சொல்ல கூடாது என்பதற்காக .அதை உணவகத்தினர் உணர்ந்தே உள்ளனர் என்பதும் கண் கூடு .எனவே தான் சிற்சில சமயம் நண்பர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சிரமப்பட்டு செய்த சமையலை கூட நிறுத்தி நண்பர்களுக்கு ஏற்ற வகையில் ....மாற்றி கூட உணவை பரிமாறி "பசி " அடைத்தார்கள் . .மொத்தத்தில் இந்த 2013 இல் "மசாலா கபே "ஆக இருந்த  உணவகத்தை 2014 இல் பல படி பாய்ந்து "ஸ்டார் " ஹோட்டல் ஆக மாற்ற "காமிக்ஸ் நண்பர்களின் "வாழ்த்து எப்பொழுதும் அந்த உணவகத்திற்கு உண்டு என்பதோடு புது வாடிக்கையாளர்... நிறைய நண்பர்கள் என இந்த உணவகம் பல படி ஏற எங்கள் வாழ்த்துகள்.

     அதே  சமயம் 2013 இல் நமக்கு பிடித்த ..,பிடிக்காத உணவை சொன்னால் தானே 2014 இல் நமக்கு ஏற்ற படி அவர்கள் உணவை பரிமாறுவார்கள் .எனவே எனக்கு பிடித்த ..பிடிக்காத "சுவை " கீழே ....மறவாமல் உங்கள் "சுவையும் "சொல்லி விடுங்கள் நண்பர்களே ...எனக்காக அல்ல ..உங்களுக்காக ....

2013 இன் டாப் 3   :  1) துரத்தும் தலைவிதி  ( படித்து முடித்து கை தட்டிய ஒரே புத்தகம் )
                                     2) குற்ற திருவிழா

                                     3)ஆகாயத்தில் அட்டகாசம்

2013 இன் டாப் சொதப்பல்  :  "கிராபிக் நாவல் " என்ற முத்திரையில் வந்த அழுகாச்சி காவியங்கள் ...( இது எனது கருத்து மட்டுமே )

2013 இன் பெஸ்ட் அட்டைபடம் :   ஒன்றல்ல ..மூன்று ...
                                                                    1) ஜானியின் "ஓநாய் மனிதன் "அட்டைபடம்
                                                                     2)தங்க கல்லறை
                                                                    3) ரத்த படலம்

2013 இன் சொதப்பல் அட்டைபடம் :  வேங்கையின் சீற்றம்

பெஸ்ட் நாயகர்   :    1) லார்கோ    2) ஷெல்டன்

வேண்டவே வேண்டாம் என்பது  :    ஹி ..ஹி ....

ப்ளாக் &வொய்ட் புத்தகம் :     கண்டிப்பாக தொடர வேண்டும் .

2014 இல் எதிர் பார்ப்பு  : 1) டெக்ஸ் அவர்களுக்கு கூடுதல் சான்ஸ் ..
                                                2)பக்கம் குறைவான அந்த 60 ரூபாய் புத்தகத்திற்கு ஒரு மாற்று வழி ...
                                                3)மறுபதிப்பில் ஆவது " வேதாளர் "  மற்றும் பேட் மேன் "
முயற்சிக்கலாம் .
                                                4) டயபாளிக் அவர்களுக்கு மீண்டும்  கூடுதல் சான்ஸ்
                                               
                                                5) இம்முறையும் ஒரு "தீபாவளி மலர் "

டெக்ஸ் வில்லர் ஓவர் டோசா  :  கண்டிப்பாக இல்லை

ரத்த  படலம்     ........ ?   :    ஓகே ..பட் பல வருட நீட்டிப்பு சொதப்பல் ...அனைத்து பாகமும் வந்தவுடன் மொத்தமாக வெளி இடலாம் .

காமெடி ..கவ்பாய் ..ஆக்சன்  அடுத்து :     அது  மட்டும்

2013 இல் நமது காமிக்ஸ் :   " என்னவென்று சொல்வதுமா
                                                         வஞ்சி அவள் பேர் அழகை ....
                                                        சொல்ல ஒன்றும் வார்த்தை இல்லை "
2013 எனது கண்ணோட்டம் அவ்வளவு தான் நண்பர்களே .....உங்களுக்கு இதில் மாறு பட்ட கருத்து கண்டிப்பாக இருக்கலாம் .2014 பல ஒன்று பட்ட நண்பர்களின் கருத்துகள் சுருக்கமாக ஆசிரியருக்கு .......

1)  இந்த வருடம் 2013 தாண்டி பல சிகரங்கள் 14 இல் படைக்கும் என்ற கருத்துக்கு ஏமாற்றம் அளிக்கும் படி பக்கம் குறைவான 60 ரூபாய் புத்தகமே அதிகம் ...அதுவும் "வேங்கையின் சீற்றம் "அளவை பார்த்தால் ..அதுவும் இந்த அளவு தான் என்றால் நண்பர்களுக்கு பசி அடங்காது .தயவு செய்து மாற்று வழி கண்டு பிடிங்கள் .

2) டெக்ஸ் மறுபதிப்பு நான் விரும்ப வில்லை .அதே சமயம் நண்பர்கள் கருப்பு வெள்ளையில் விரும்ப வில்லை .கலர் இல்லை எனில் "டெக்ஸ் ஸ்பெஷல் "ஆக பவள சிலை மர்மம் ..,சைத்தான் சாம்ராஜ்யம் (திகில் )...பழிக்கு பழி என என பல வருடம் முன்னர் வந்த கதைகளை வெளி இடலாம் .

3) தயவு செய்து இந்த மாதம் "சிங்கத்தின் சிறு வயதில் "தொடரை காணாமல் செய்வது போல இனி தடை போடாதீர்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .

4) இது என்னுடைய ஆசை மட்டுமல்ல ..அகில உலக தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் ஆசை .இந்த 30 வது ஆண்டு மலரில் "சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பை இது வரை வந்ததை மட்டும் தயவு செய்து வெளி இடுங்கள் .இது உங்கள் வரலாறாக நினைத்து நீங்கள் தயங்கலாம் .ஆனால் இது நமது "காமிக்ஸ் வரலாறு " .ப்ளீஸ் சார் ..ஏமாற்றி விடாதீர்கள் . (நீங்கள் ஓட்டடுப்பு கூட நடத்துங்கள் )

5)  கண்டிப்பாக இந்த முறையும் + 6 அல்லது +12 வரிசை எதிர் பார்க்கிறோம் .  

நன்றி நண்பர்களே ......... மீண்டும் சந்திப்போம் .ஆசிரியரை சிந்திக்க வைக்க ....

         வணக்கம் .

                                                

செவ்வாய், 17 டிசம்பர், 2013

காமிக்ஸ் கச்சேரி ..

நண்பர்களே ..,வணக்கம் ....

நலம் ..,நலமா ....

இந்த டிசம்பர் மாதம் சங்கீத கச்சேரி போல காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்த மாதம்  "காமிக்ஸ் கச்சேரி ".முழுதாக நான்கு புத்தங்கள் ஒரே சமயத்தில் வெளி இட்டு மிக பெரிய சந்தோசத்தை காமிக்ஸ் ரசிகர்களுக்கு தந்த "பிரகாஷ் பப்ளிஷர்ஸ் "அவர்களுக்கு மிக பெரிய நன்றி .இந்த மாதம் வந்த நான்கு புத்தங்கள் டயபாளிக் சாகசமான " ஆப்ரஷன் சூறாவளி "டைகரின் "வேங்கையின் சீற்றம் " மற்றும் லக்கி மற்றும் சிக் பில் தோன்றும் இரு மறுபதிப்பு கதைகள் ஆன  "புரட்சி தீ "மற்றும் "விற்பனைக்கு ஒரு ஷெரிப் "ஜானியின் "ஓநாய் மனிதன் " மற்றும் ஊடு சூனியம் .இந்த புத்தங்களின் பார்வையை சுருக்கமாக மற்றும் ...நான்கில் முதல் இடம் பெற்றது ...நான்கில் சிறந்த அட்டைபடம் என இந்த மாத காமிக்ஸ் பார்வையை ஓட்டி பார்க்கலாமா நண்பர்களே .....

முதலில் "ஆப் ரேஷன் சுறாவளி " 

அட்டை படத்தை பொறுத்த வரை முன் அட்டை சுமார் ரகமே ...அதற்கு பதிலாக வாசக நண்பரின் பின் பக்க அட்டைப்படத்தை முன் பக்கமாக வந்திருந்தால் கலக்கலாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம் .அட்டை படம் அப்படி இருந்தாலும் கதை எப்படி என பார்த்தால் அதனை சூப்பர் ரகத்தில் இணைப்பதா அல்லது மொக்கை ரகத்தில் இணைப்பதா என பெரும் குழப்பம் .கதையின் பல பக்கங்கள் கழித்தே "டயபாளிக் "வருவது மட்டுமல்லாமல் பாதி பக்க கதையை பார்த்தால் இது டயபாளிக் கதையா அல்லது காதல் கதையா என குழப்பம் வருவதும் டயபாளிக் கதைக்கு வந்த சோதனை .மேலும் டயபாளிக் முந்தைய சாகசமான "குற்ற திருவிழா "ஒரு அதகள படுத்திய சாகசம் என்பதால் அதே அளவிற்கு அல்லது அதற்கு மேல் சாகசத்தை எதிர் பார்ப்பது நிஜமான ஒன்று .அந்த எதிர் பார்ப்பு குறைந்ததால் ஏற்பட்ட பாதிப்பு இதனை சுமார் ரகத்தில் இணைத்து விட்டது .கண்டிப்பாக மோசம் கிடையாது என்பதும் உண்மை .ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம் என்பது போல ஒரு
முறை படிக்கலாம் .அடுத்த முறை டயபாளிக் ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையில் அடுத்த டயபாளிக் கதைக்கு காத்திருப்போம் நண்பர்களே ...

அடுத்த புத்தகமான "வேங்கையின் சீற்றம் "எப்படி ?

முதலில் அட்டை படம் .சொல்ல தேவை இல்லை .இந்த வருட டாப் சொதப்பல் அட்டைபடம் இது தான் .அதிலும் இந்த அட்டைபடம் NBS இதழுக்கான தயாரான அட்டைபடம் இது என ஆசிரியர் அறிவித்து இருந்தார் .நல்ல வேலையாக இதனை வெளி இட வில்லை .இல்லை என்றால் மாபெரும் வெற்றி பெற்ற அந்த 400 ரூபாய் புத்தகம்... அட்டைபடம் காரணமாகவே ஆசிரியர் பல கனைகளை எதிர் கொண்டு இருப்பார் .

நான் எப்பொழுதும் இரண்டு ,மூன்று பாகம் கதை வரும் பொழுது எல்லாம் மீண்டும் பழைய பாகத்தை படித்து பின் புது பாகத்தை தொடர்வது வழக்கம் .எனவே டைகரின் இந்த சாகசத்தை படிக்க மீண்டும் "இருளில் ஒரு இரும்பு குதிரை "படிக்க நேர்ந்தது .மொத்தமாக இரு பாகத்தையும் படித்த பொழுது இம்முறை "டைகர் "ஏமாற்ற வில்லை .அச்சு தரமும் குறை இல்லாமல் நன்றாக இருந்தது .அதே சமயம் இந்த 50 ரூபாய் குறைவான பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை பார்க்கும் போது ஒரு "நோயாளியை "பார்க்கும் எண்ணம் தான் வந்தது .அதுவும் இனி வரும் இதழ்கள் இப்படி தான் என நினைக்கும் போது .....................ஆசிரியர் தயவு செய்து வேறு யோசனை செய்தால் நன்று .
50 அல்லது 60 ருபாய் புத்தகம் அட்லீஸ்ட் முன்னர் வந்த லக்கி லூக் சாகசமான "வில்லனுக்கு ஒரு வேலி "போல அமைந்தால் ஆவது திருப்தி ஆக இருக்கும் .இப்படி வந்தால் ஆசிரியர்   சொன்ன படி புது இளைய வசதி குறைந்த நண்பர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்ற எண்ணம் உண்மையாக இருப்பினும் (அவர்கள் எத்துனை பேரோ ) ஆனால் இப்பொழுது வரை வாசகராக இருக்கும் காமிக்ஸ் ரசிகர்களுக்கு இது மிக பெரிய குறை யாக தான் தோன்றும் .60 ரூபாய் புத்தகத்தை பொறுத்த வரை அதனை கருப்பு ,வெள்ளை புத்தகமாக அதிக பக்கங்களில் இடலாம் .மொத்தத்தில் கதையை பொறுத்த வரை திருப்தி தான் என்றாலும் அதன் அடக்கம் ஒரு குறையே .மேலும் இந்த முறையும் டைகர் கடைசியில் அவன் மட்டும் அங்கே சிக்கட்டும் என சூளுரைத்த படி எதிரியை நோக்கி குதிரையை கிளப்பும் போதும் தான் மீண்டும் ...எத்துனை முறை "NBS " புத்தகத்தை தூக்க வேண்டுமா என்ற பயம் வருவது இயற்கை தான் .

அடுத்து வருவது இரண்டு மறுபதிப்பு புத்தங்கள் என்றாலும் நான்கு அட்டகாசமான கதைகள் .ஜானியின் இரண்டு கதைகள் ஆன "ஓநாய் மனிதன் "மற்றும் ஊடு சூனியம் .முதலில் மிக பெரிய பாராட்டு இதன் அட்டை படத்திற்கு தான் .அருமை .அதுவும் இது ஒரு வாசக நண்பரின் படைப்பு என்பதில் மாபெரும் மகிழ்ச்சி .இந்த வருட சிறந்த அட்டைப்படங்களில் இதுவும் ஒன்று என்பது மறக்க முடியாத உண்மை .வாழ்த்துகள் ரமேஷ் சார் .....கதைகளை பற்றி சொல்ல தேவை இல்லை .முதலில் படிக்கும் நண்பர்களுக்கும சரி மீண்டும் வண்ணத்தில் படிக்கும் நண்பர்களுக்கும் சரி அருமையான அனுபவம் காத்து கொண்டு உள்ளது .ஆனால் இந்த இதழில் மட்டும் குறை இல்லாமல் இருந்தால் எப்படி ?முதல் 10 பக்கங்கள் அச்சு தரம் ஏமாற்றி விட்டது .

அடுத்து வரும் மறு பதிப்பு இதழான "புரட்சி தீ "மற்றும் விற்பனைக்கு ஒரு ஷெரிப் பற்றி சொல்ல தேவை இல்லை .மிக பெரிய பாராட்டை பெற்ற இந்த இரு கதை களும் இது வரை படிக்காதவர்களுக்கு மட்டுமல்ல முன்னர் படித்த நண்பர்களுக்கும் சிறந்த ஒன்றை தரி சத்த (வாசிப்ப அனுபவம் )கிடைக்க போகிறது .மொத்தத்தில் புது இதழ்களை விட இம்முறை மறு பதிப்பு புத்தங்கள் பந்தயத்தில் முன் நோக்கி செல்கிறது என்பது மட்டும் உண்மை .

அடுத்து இவ்விரு இதழ்களிலும் இடம் பெற்ற லக்கி அவர்களின் சாகசமான இரு சிறு கதைகளுக்கு நமது வாசக நண்பர்கள் ஈரோடு விஜய் மற்றும் பெங்களூர் கார்த்கிக் அவர்களின் மொழி ஆக்கத்தில் வந்துள்ளது .இரண்டு மொழி ஆக்கமமும் அருமை .உண்மையில் மொழி ஆக்க விஷயத்தில் நண்பர்களுக்கு ஆசிரியர் போட்டி வைத்த போது "மொழி ஆக்க விஷயத்தில் தயவு செய்து விளையாடாதிர் "என்று கடிதம் எழுதியவன் நான் .ஆனால் இம்முறை நம் நண்பர்களின்  ஆக்கம் நான் அப்பொழுது அந்த "கடிதம் "எழுதியதிற்கு இப்பொழுது வருத்த பட வைத்து விட்டார்கள் .சூப்பர் .

       மொத்தத்தில் சிற்சில குறைகள் இருந்தாலும் இந்த டிசம்பர் மாதத்தை ..,சொன்ன படி நான்கு புத்தங்கள் கொண்டு வந்து சேர்த்து காமிக்ஸ் ரசிகர்களுக்கு விருந்து அளித்த ஆசிரியர் அவர்களுக்கும் ..,.அவர் பணியாளர்களுக்கும் மாபெரும் நன்றியை காமிக்ஸ் ரசிகர்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறேன் .விரைவில் அடுத்த பதிவில் 2013 காமிக்ஸ் பற்றிய பதிவையும் ,2014 காமிக்ஸ்...... ரசிகர்கள் எதிர் பார்ப்பையும் பார்க்கலாம் நண்பர்களே .....
                                      நன்றி ...வணக்கம் ...

பின் குறிப்பு :பதிவில்  இனி வரும் புத்தங்களின் விமர்சனம், இப்படி என் பார்வையில் எப்படி என்பதை மட்டும் தெரிவிக்கும் வாசகர் கடிதம் ஆக இருக்குமே தவிர முழு கதை ..,பாதி கதை என கூறும் "கதை சொல்லியாக "இருக்காது நண்பர்களே ...நன்றி ..                                                                                                                                                      

சனி, 23 நவம்பர், 2013

ஒரு சிப்பாயின் தடத்தில் ...

நண்பர்களே  ...வணக்கம் ...

நலம் ..,நலமா ..?

போன வாரமே வந்து இருக்க வேண்டிய இந்த பதிவு சில காரணங்களால் தள்ளி விட்டது .தீபாவளிக்கு வந்த நமது காமிக்ஸ் மலர்கள் இரண்டில் கிராபிக் நாவல் ஆன " ஒரு சிப்பாயின் சுவடுகளில்   " ஒன்று .அந்த இதழை பற்றிய எனது பக்க பார்வை (மட்டும் ) இங்கே காணலாம் . முதலில் இந்த புத்தகத்தை படிக்காமல் முழுவதுமாக புரட்டி பார்த்தவுடன் மிகுந்த சந்தோசம் தான் ஏற்பட்டது .காரணம் ஆசிரியரின் அந்த நீ......ண்ட ஹாட் -லைன் .இணையத்தில் வரும் பலருக்கு அதில் பாதி ஏற்கனவே அறிந்த செய்தி தான் என்றாலும் புத்தகத்தில் படிக்கும் போது ஒரு மகிழ்ச்சி தான் .நமக்கே இப்படி என்றால் இணையம் வராத பலருக்கு எப்படி இருக்கும் .?அதுவும் 2014 விளம்பரத்துடன் வந்த அந்த இதழை பாராட்டாமல் இருக்க முடி யுமா என்ன ?

     அதே சமயம் டெக்ஸ் வில்லர் புத்தகத்தில் வந்த அதே அட்டைப்பட மங்கள் இதிலும் வந்தது வருத்தமே .இணையத்தில் வந்த அட்டைபடம் பாராட்டை பெற்ற போதும் புத்தகத்தில்...... நின்று கொண்டு இருக்கும் சிப்பாயின் ஓவியம் மங்கலாக வந்ததில் புத்தகத்துக்கு ஒரு மாற்று குறைவே ..!இதன் அட்டைபடம் கீழே காணலாம் .
அட்டைப்படம்  
இணையத்தில் வந்த இந்த அட்டைப்படம் புத்தகத்திலும் இதே போல வந்திருந்தால் இன்னும் மெருகு கூடி இருக்கும் என்பது உண்மை .

       அடுத்து கதைக்கு செல்லலாம் .முழுவதுமாக சொல்லலாம் தாம் .ஆனால் படிக்காதவர்களும் படிக்கலாம் என்றாலும் படிக்காதவர்கள் பத்தி ,பத்தி யாக தாண்டி செல்லும் நிலை இருப்பதால் அதன் கரு மட்டும் .:-). முழுவதும் கதையை படிக்க விரும்பும் நண்பர்கள் உடனடியாக நண்பர் பெங்களூர் கார்த்திக் அவர்களின் "blade beedia .blogs pot .com ."என்ற இணைய தள முகவரிக்கு சென்றால் காணலாம் .

           வீட்டிலும் ,பணியிலும் ,பொருளாதாரத்திலும் பின் தங்கி விட்ட ஒரு தொலை காட்சி நிருபர் இழந்த புகழை மீட்டெடுக்க... என்ன ஆனார் என்றே தெரியாத ஒரு படை வீரனை தேடி செல்கிறார் .அதற்காக அவர் படும் இன்னல்கள் ,பொருளாதார இழப்பு மற்றும் அந்த படை வீரனின் கதி என்ன ஆயிற்று ,கடைசியில் அந்த நிருபரின் கதி என்ன ஆயிற்று என்பது புத்தகம் வாங்கி படித்தால் தாங்கள் அறிந்து கொள்ளலாம் .உண்மையில் இந்த கதையை நான் முதலில் ஆர்வமாக தான் படிக்க ஆரம்பித்தேன் .காரணம் ஆசிரியரின் "இது அழுகாச்சி காவியம் அல்ல " என்ற முன்னுரை தான் .ஆனால் அந்த படை வீரனுக்கு ஏற்பட்ட நிலை ,நிருபனுக்கு ஏற்படும் நிலை என கதை ஒரு மாத்ரி "சோகத்தை "நோக்கி படை எடுக்க நான் மூலையை நோக்கி படை எடுக்க தொடங்கினேன் .என்ன தான் "மாறுபட்ட படைப்பு "என்றாலும் கிராபிக் நாவல் என்றால் "அழுகாச்சி காவியம் "தான் என்ற என் மன நிலை 100 சதவீதம் உண்மை தான் என்பதை நிருபத்திதது .

         ஆனால் இப்பொழுது ஆசிரியர் அறிவித்த "கிராபிக் நாவல் "வரிசைக்கான கதைகளின் விளம்பர அறிவிப்பு எனது எண்ணத்தை மாற்றி விடும் நிலைமையில் இருப்பதால் அடுத்த கிராபிக் நாவலுக்கான கதைகளை ஆவலுடன் தான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் என்ற உண்மையையும் இங்கே சொல்லி விடுகிறேன் .எனது எதிர் பார்ப்பு உண்மையாகுமா  அல்லது கனவாகுமா என்பது அடுத்த கிராபிக் நாவலில் வரும் கதையை பொறுத்து தான் அமையும் .

        அதே சமயம் கிராபிக் நாவலின் ஆதரவாளர்கள் எனது நிலை பாட்டை ஆசிரியர் வசம் கூறும் பொழுது என் மேல் வருத்தம் கொள்வது அறிய முடிகிறது .சோக கதை என்றால் அது உனக்கு நடந்ததா என்ன ? படித்து விட்டு விட்டு விடுவது தானே எனவும் என்னலாம் .என்னை பொறுத்த வரை பகலில் எவ்வளவு கஷ்ட பட்டாலும் இரவில் அமைதி யான மன நிலையில் உறங்க நினைக்கிறன் .நான் பெரும்பாலும் உறங்குவதற்கு முன்னர் தான் படிக்க ஆரம்பிக்கிறேன் .அப்பொழுது நாம் ஒரு சிறந்த கமர்சியல் கதையோ ,அல்லது ஒரு காமெடி கதையோ படிக்கும் பொழுது உறங்கும் முன்னரோ ,உறங்கிய பின்னரோ ஒரு வித ஆனதத்தில் உறங்க முடிகிறது .அதே சமயம் "ஒரு அழுகாச்சி காவியத்தை " இரவில் நீங்கள் படிக்கும் பொழுது அந்த கதையின் அழுகாச்சி மட்டுமல்ல உங்கள் வாழ்க்கை பயணத்தில் முன்னர் ஏற்பட்ட சோகங்கள் ,தடங்கல்கள் அனைத்தும் மனதில் உழன்று உங்கள் உறக்கத்தை  தொலைத்து விடும் அபாயம் அதிகம் உண்டு .எனவே தான் எனது எதிர்ப்பை உடனடியாக கூறி விடுகிறேன் .நமது மனதில் பாரத்தை ஏற்ற எத்துனை வகை புத்தகங்கள் உள்ளன .அதை விட்டு சந்தோசத்தை மட்டும் விதைத்து விட்டு செல்லும் நமது காமிக்ஸ் "புத்தகங்களிலும் இந்த நிலை வேண்டுமா என்பதே எனது வினா ?

                     மீண்டும் சந்திப்போம் நண்பர்களே ......

திங்கள், 4 நவம்பர், 2013

காமிக்ஸ் தீபாவளி - ஒரு விமர்சன பார்வை ...

நண்பர்களே ....வணக்கம் .
நலம் .நலமா ..?

காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி மறக்க முடியாத ஒன்று .வெகு நாட்களுக்கு பிறகு   பிரகாஷ் பப்ளிஷர்ஸ் ஒரு குண்டு புத்தகத்தை ,அதுவும் "காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் ...டெக்ஸ் வில்லர் "அவர்களின் இரண்டு சாகச கதைகளை ஒரே இதழில் வெளி இட்டு கூட ஒரு "கிராபிக் நாவலையும் "கொண்டு வந்து இந்த தீபாவளியை மறக்க முடியாமல் செய்து விட்டார்கள் .சொன்ன படி "ஜானி "அவர்களின் இரு மறு பதிப்பு கதைகளையும் கொண்டு வந்து இருந்தால் நண்பர்கள் இன்னும் ஒரு அணுகுண்டை வெடித்த சந்தோசத்தை அனுபவித்து இருப்பார்கள் .ஆனாலும் அந்த குறையை டெக்ஸ் இன் குண்டு புத்தகம் நண்பர்களை மறக்கடிக்க செய்ததா ? ஒன்றுக்கு இரண்டாக வந்த டெக்ஸ் சாகசங்கள் நண்பர்களை சந்தோஷ படுத்தியதா ?
அட்டைப்படமும் ,சித்திர தரமும் ,கதை களமும் காமிக்ஸ் ரசிகர்களை திருப்தி படுத்தியதா ?"டெக்ஸ் "ரசிகனாக இல்லாமல் காமிக்ஸ் ரசிகனாக ஒரு விமர்சன பார்வையாக டெக்ஸ் இன் "தீபாவளி மலர் "எப்படி ? பார்க்கலாமா நண்பர்களே ....

டெக்ஸ் தீபாவளி மலர் -அட்டைப்படம் :
  

இந்த தீபாவளி மலரின் அட்டைப்படத்தை ஆசிரியர் இணைய தளத்தில் வெளி இட்ட போதே மிக பெரும் வரவேற்ப்பை பெற்றது .எப்பொழுதும் இணையத்தில் வெளி இடும் அட்டைப்படத்தை விட புத்தகத்தில் இன்னும் கலர் "டார்க் "ஆக வந்து அதகள படுத்தும் .இந்த முறை இணையத்தில் வந்ததை விட கலர் சிறிது டல்லாக படுவது எனக்கு மட்டும் தானா ?ஆனாலும் டெக்ஸ் இன் அந்த அதிரடியான போஸ் ,இளமையான தோற்றம் என்று இந்த முறை ஓவியர் கொண்டு வந்து அசத்தி விட்டார் .இந்த முறை முன் ,பின் என இரண்டு பக்க அட்டைப்படமும் அசத்தல் .வாழ்த்துகள் ஓவியர் சார் ...

       இந்த தீபாவளி மலரில் இடம் பெற்ற இரண்டு கதைகள்  1) மரண தேசம் மெக்ஸிகோ   2)நீதியின் நிழலில் .....இரண்டு கதைகளின் ஓவியமும் பழைய டெக்ஸ் வில்லரை கொண்டு வந்து கண் முன் நிறுத்தியது .சித்திர தரம் அசத்தியது போல கதைகளும் நண்பர்களை அசத்துமா ? வாருங்கள் பார்க்கலாம் .

"மரண தேசம் மெக்ஸிகோ " கதை : ( படிக்காதவர்களும் படிக்கலாம் ) :

            நகரில் சில நாட்களாக சிறுவர்கள் திடீர் ,திடீர் என காணமல் போக பாதர் மாத்யூ அவர்களின் வேண்டுகோள் படி அவருக்கு வேண்டிய சிறுவர்களை கண்டு பிடிக்க டெக்ஸ் மற்றும் அவர் தோழர் கார்சன் இருவரும் நகருக்கு வருகிறார்கள் .அங்கு வண்டி ஓட்டி யின் மூலம் "நோகா லஸ் "என்ற இடத்தில உள்ள பார் உரிமையாளர் க்கு கடத்தியவனின் பெயர் தெரியும் எனவும் ,தனக்கு கடத்தியவன் "மாறு கண் "உடையவன் என்பது மட்டுமே அறிந்தவன் எனவும் அறிந்து கொள்கிறார்கள் .உடனடியாக நோகாலஸ் செல்லும் டெக்ஸ் &கார்சன் அந்த பார் உரிமையாளரை  கண்டு பிடித்து "தங்கள் " பாணியில் விசாரிக்க  அவரின் மகள்... தனது தந்தை எதையும் அறியாதவர் என்றும் அந்த மாறு கண்ணனின் பெயர் "பால் மென்டிஸ் "என்றும் அவன் தங்கி இருக்கும் இடத்தையும் கூற உடனடியாக அங்கு செல்ல முற்படுகிறார்கள் .அதை அறிந்த பால் மென்டிஸ் இன் கையாளும் ,நகரின் ஷெரிப் ம் ஆனவன் அவர்கள் வருகையை தந்தி மூலம்  அறிவித்து விடுகிறான் .

        அதன் காரணமாக அவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை சாமர்த்தியமாக சமாளித்து நகருக்கு சென்று அவன் இருக்கும் இடத்தை அடைகிறார்கள் .அவர்கள் வருவதை அறிந்த பால் மென்டிசின் கூட்டாளி அவனை எச்சரித்து ..,உடனடியாக அவர்களை சுட்டு கொள்ள முற்பட மீண்டும் தங்கள் திறமையால் இருவரையுமே சுட அவர்கள் இறந்து விடுகிறார்கள் .இறந்து விடும் முன் அவன் குழந்தைகளை "டான் மானுவல் " என்பவனிடம் விற்று விட்டதை கூறி விடுகிறான் .பால் மெண்டிசை கொண்ட குற்றத்திற்காக ஷெரிப் அவர்களை கைது  செய வரும் பொழுது உள்ளூர் பத்திரிக்கை ஆசிரியரால் விடிவிக்க படுகிறார் .மேலும் டான் மானுவல் என்பவனை பற்றியும் ,அவனின் அசாத்திய செல்வாக்கையும் கூறுவதுடன் அவனின் தங்க சுரங்கத்திற்கு வேலை செய்யவே சிறுவர்கள் கடத்த படுவதையும் ,அவனுக்கு என்று தனி படையும் கொண்ட கொண்ட அவனின் சுரங்கத்திற்கு செல்வது மிக கடினமான காரியம் என்றும் ,அப்படி சென்றாலும் மீண்டு வருவது நடக்காத விஷயம் என்றும் கூறுகிறார் .

     அப்படி பட்ட சுரங்கத்திற்கு டெக்ஸ் &கார்சன் செல்ல முடிந்ததா ? அங்கு கொடுமை படுத்த படும் சிறுவர்களையும் ,அடிமைகளையும் அவர்களால் காப்பாற்ற முடிந்ததா ? டான் மானுவல் கதி என்னவாயிற்று  ? இந்த விறு ,விறுப்பான கதை முடிவை இனி வெள்ளி திரையில் சாரி தங்க புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் .

"நீதியின் நிழலில் " கதை : (படிக்காதவரும் படிக்கலாம் ):

      ராணுவ கோட்டையில் நான்கு நாளில் தூக்கில் தொங்க விட இருக்கும் செவ்விந்தியனை உயிரோடு கொண்டு செல்ல டெக்ஸ் &கார்சன் கோட்டைக்கு வருகிறார்கள் .அவர்கள் வரும் சமயத்தில் செவ்விந்தியனின் தோழன் மூலம்  அவன் தப்பித்து விடுகிறான்   .உடனடியாக அந்த செவ்விந்தியனை உயிரோடு பிடிக்க டெக்ஸ் &கார்சன் செல்கிறார்கள் .வழியில் ஏற்படும் சிறு விபத்தால் கார்சன் மீண்டும் கோட்டைக்கு திரும்புகிறார் .தனியாக அவனை தேடி செல்லும் டெக்ஸ் க்கு போட்டி யாக தப்பி சென்ற அவனை தனி பட்ட விரோதத்தால் அவனை கொன்று பிடித்து வருவேன் என்று ராணுவத்தில் இருக்கும் "லிபார்ஜ் "என்பவனும் கிளம்புகிறான் .டெக்ஸ் தப்பி சென்ற அந்த கைதியை "லிபார்ஜ் "இடம் இருந்து உயிரோடு காப்பாற்ற முடிந்ததா ? தப்பி சென்ற கைதியின் தவறு என்ன  ?
டெக்ஸ் அவனை மீண்டும் சிறைக்கு கொண்டு சென்றாரா ? அடிபட்ட கார்சனின் கதி என்ன ?  
       
     விடை தெரிய உடனடியாக " லயன் தீபாவளி மலரை " வாங்கி படிக்கவும் .காமிக்ஸ் ரசிகர்களுக்கு அதுவும் கமர்சியல் ரசிகர்களுக்கு இது மாபெரும் விருந்து என்பது மறக்க முடியாத உண்மை .இது "டெக்ஸ் " ரசிகர்களுக்கு மட்டுமான கதை அல்ல .அனைவரும் விரும்பும் " ரஜினி "பட ஸ்டைல் கதை .எனவே காமிக்ஸ் படிக்கும் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஒரு மலர் தான் இந்த தீபாவளி மலர் .ரஜினியை எதிர்ப்பவர்கள் கூட அவரின் படத்தை பார்க்க ஆவலுடன் எதிர் பார்ப்பார்கள் .அது இந்த இரண்டு டெக்ஸ் கதைகளுக்கும் பொருந்தும் .
இப்படி பட்ட அருமையான புத்தகத்தில் குறை என்று ஒன்று உண்டா ?
கண்டிப்பாக உண்டு .

    நீண்ட நாட்களுக்கு பிறகு வந்த இந்த தீபாவளி மலரை விலை சிறிது கூடி இருந்தாலும் தரமான தாளில் வெளி இட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் .ஆனால் இனி பேசி என்ன பயன்  ? மீண்டும் விரைவில் 

        "ஒரு சிப்பாயின் சுவடுகளில் " தடம் பதிப்போம் நண்பர்களே .
       
                                வணக்கம் .....
  

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

ஒரு விளம்பரம் .......

நண்பர்களே .........

வணக்கம் .....நலம் ....நலமா ....?

காமிக்ஸ் நண்பர்கள் அனைவரும் இந்த மாத கடைசியை  மிகவும் எதிர் பார்த்து காத்து கொண்டு இருப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே ... ஆசிரியரும் உடல்  நிலையை கூட பொருட்படுத்தாமல் நமது தீபாவளிக்காக பணி செய்து வருவது அவரது பதிவின் மூலம் அறியலாம் .அவருக்கும் ..,அவர் நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் மிக பெரிய நன்றி .

நிற்க ...

இப்பொழுது இந்த பதிவின் நோக்கம் என்ன  ?...

எனக்கு இப்பொழுது நமது காமிக்ஸ் பதிவர்களின் மீது   சிறு வருத்தம் உண்டு .காரணம் சில மாதங்களுக்கு முன்னர் எல்லாம் நமது காமிக்ஸ் வந்தவுடன் அந்த புத்தகங்களின் நிறை ,குறை என அக்கு வேறாக ..,ஆணி வேறாக அழகாகவும்,ஆணித்தரமாகவும் எடுத்து சொன்ன பல பதிவர்கள் இப்பொழுது காண வில்லை .அவர்களை நாம் குறை சொல்ல வில்லை .அவர்களின் பணி சுமை ,நேரம் இல்லாமை என பல காரணங்கள் அவர்களை காமிக்ஸ் பதிவின் பக்கம் வர விடாமல் செய்கிறது .இருந்தாலும் சிறு வருத்தம் வருவது நம்மால் தவிர்க்க முடிய வில்லை .எப்படி பட்ட காமிக்ஸ் ஜாம்பாவான்கள் நம்ம பதிவர்கள் .அவர்கள் வராமல் இருப்பது நமது "காமிக்ஸ் "க்கு இழப்பே என்பது எனது கருத்து .எனவே "காமிக்ஸ் பதிவர்கள் "அனைவரும் மீண்டு (ம் )வர வேண்டும் என்பதே எனது அவா .

      அவர்கள் அனைவரும் மீண்டும் வரா விட்டால்...நானே  இனி மாதா ,மாதம் இந்த "ப்ளாக் "இல்.... இனி வரும் நமது காமிக்ஸ்களின் விமர்சனம் தொடர்ந்து இங்கு எழுதி இம்சை கொடுப்பேன் என்பதை அறிவிக்க கடமை பட்டு உள்ளேன் .சில ..,பல ..காரணத்தினால் நமது பதிவில் "புகைப்படம் "இணைக்க படாது . (அதுக்கு தான் நம்ம ஓவிய ரசனையாளர் "ராஜ் குமார் "உள்ளார் அல்லவா ).முதல் புத்தகத்தின் விமர்சனம் எது என்று அனைவரும் நன்கு அறிவீர்கள் .நமது காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் ,கௌ -பாய் உலகின் சக்கரவர்த்தி நமது "டெக்ஸ் வில்லர் "அவர்களின் "தீபாவளி மலரில் "வெளி வரும் அந்த இரு சாகச கதைகளின் விமர்சனம் தான் நமது பதிவு .காத்திருங்கள் .

   ஆமாம் .....இது பதிவா என வினவும் நண்பர்களுக்கு .....ஹி ..ஹி ...கண்டிப்பாக இல்லை ...இது .....

                              "விளம்பரம் "....

 

திங்கள், 30 செப்டம்பர், 2013

எடிட்டர் சார் ..,ஒரு நிமிஷம் ....!ப்ளீஸ் ..

தமிழ் காமிக்ஸ் வாழ , வளர வைத்து கொண்டு இருக்கும் ஆசிரியர் திரு .விஜயன் அவர்களுக்கு முதலில் எனது நன்றியை கூறி கொண்டு ..,ஜூனியர் எடிட்டர் ஆக இப்பொழுது பொறுப்பு கொண்டுள்ள திரு .விக்ரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் கூறி கொண்டு "வாழையடி வாழையாக "தங்களால் "தமிழ் காமிக்ஸ் "வளரவும் அதனால் காமிக்ஸ் ரசிகர்கள் ஆகிய நாங்கள் எப்பொழுதும் இன்புறுவும் எங்கள் வாழ்த்துகளை முதலில் கூறி கொள்கிறோம் . 2012 முதல் புது பொலிவுடன் கலக்கி கொண்டு இருக்கும் நமது லயன் ,முத்து 2014 முதல் இன்னும் ,இன்னும் கலக்க போகும் இந்த சமயத்தில் காமிக்ஸ் ரசனை மிக்க சில ரசிகர்களின் எதிர் பார்ப்பை ..,எனது சில தனி பட்ட எதிர் பார்ப்பை ஒரு காமிக்ஸ் ரசிகனாக (மட்டும் )தங்களிடம் கூற நினைக்கிறன் .அதன் சாதக ,பாதக அம்சங்கள் தங்களுக்கு மட்டும் அறிய படும் என்றாலும் இதனை நினைவில் கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் . அடுத்த மாதத்தில் ..,அடுத்த வருட "சந்தா " அறிவிக்க போகும் நாள் என்பதால் முதலில் அதனை பற்றிய எனது கருத்தை சொல்ல நினைக்கிறேன் . முதலில் சந்தா தொகையை தயவு செய்து மொத்தமாக அறிவித்து விடுங்கள் .லயன் ,முத்து ,சன்ஷைன் காமிக்ஸ் தனியாக ,ஆண்டு மலர் .,தீபாவளி மலர் ,புத்தக கண்காட்சி ஸ்பெஷல் மலர் என்று தனியாக இப்பொழுதே திட்டமிட்டு மொத்தமாக அறிவித்து விடுங்கள் .அதே சமயம் சில நண்பர்களின் வசதிக்கு ஏற்ற படி தொகை அதிகமாக இருப்பின் இரு முறை தவணை யாக அதனை அனுப்பவும் வசதி செய்து தரவும் . அதே சமயம் 500 ரூபாய் ,1000 ரூபாய் என்ற ஸ்பெஷல் புத்தகத்திற்கு தனியாக சில மாதம் முன்னரே அறிவித்து விடுங்கள் . அடுத்து "மறு பதிப்பு "பற்றி எனது எண்ணங்களை கூற நினைக்கிறன் .(சிலருக்கு இது பற்றிய கருத்து வேறாக இருக்கலாம் .பட் எனது உறுதியான கருத்து இது ).மறு பதிப்பு புத்தகங்கள் என்பது ஆரம்பம் முதல் படித்து வரும் நண்பர்களுக்கும் ..,புதிதாய் இடையில் வந்த நண்பர்களுக்கும் என இருவருக்குமே பயன் அடையும் படி புத்தகம் வர வேண்டுமே ஒழிய... இந்த கதை சூப்பர் .,இந்த கதை ஓவியம் சூப்பர் என்பதால் சில வருடம் முன்னரே வந்த கதையை...90%அனைவரிடம் உள்ள கதையை ... "மறு பதிப்பு "செய்வதை விட புதிதாய் வந்த நண்பர்கள் பார்க்காத புத்தகமாக ..,பழைய நண்பர்களிடம் அதிகம் காண கிடைக்காத புத்தகமாக "மறு பதிப்பு "புத்தகம் வந்தால் அனைவரும் கொண்டாடுவார்கள் .உதாரணமாக லயன் 1 முதல் 100 வரை உள்ள வரிசையில் ..,முத்து 1முதல் 200 வரை உள்ள வரிசையில் ...மினி லயன் ,திகில் அனைத்தும் பல வருடம் முன்னரே நிறுத்த பட்டதால் அதில் உள்ள சிறந்த கதைகளை (அனைத்தும் அருமை என்ற நிலையில் தான் மினி லயன் ,திகில் உள்ளது ) என வெளி இடலாம் . கலரில் மட்டும் வரும் கதைகளை தான் நண்பர்கள் விரும்புவார்கள் என்ற எண்ணத்தை தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள் .ஸ்பைடர் ,மாயாவி கதை யை கூட 75% வந்ததால் விட்டு விடுங்கள் .ஆனால் தாங்கள் அறிவித்த "டிடக்டீவ் ஸ்பெஷல் "..".மினி லயன் முதல் நான்கு கதை " ஸ்பெஷல் நிறுத்தியதில் எத்தனை நண்பர்களுக்கு வருத்தம் என்பதை தாங்கள் அறிவீர்களா ?இன்னும் தங்கள் சந்தேகம் தொடர்ந்தால் அப்படிப்பட்ட புத்தங்களை "புத்தக கண் காட்சி "சமயத்தில் ஒரு முறை விட்டு பாருங்கள் .அப்பொழுது தாங்கள் உண்மையை உணருவீர்கள் . அதை விட்டு 90% காமிக்ஸ் ரசிகரிடம் இருக்கும் "கார்சனின் கடந்த காலம் "..."ரத்த படலம் "...."மின்னும் மரணம் "போன்ற கதைகளை தயவு செய்து தவிர்க பாருங்கள் .நான் சொன்ன இந்த மூன்று கதை களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .நானும் மறுக்க வில்லை .ஆனால் பலரிடம் இருக்கும் "கார்சனின் கடந்த காலத்தை " விட சிலரிடம் மட்டும் இருக்கும் "பவள சிலை மர்மம் ",பலி வாங்கும் புயல் " சைத்தான் சாம் ராஜ்யம் "போன்ற கதை களை வெளி இடலாமே .(நான் சொன்ன இந்த கதை கள் என்னிடம் உள்ளது என்பதையும் இங்கு கூறி கொள்கிறேன் ).அதே போலே டைகர் ரசிகர்களின் அபிமான" மின்னும் மரணம்" "ரத்த படலம் " தாங்கள் வெளி இடும் போது அது சமயம் அதன் விலை கண்டிப்பாக 700 ,800 என இருக்கும் .அத்துனை விலையில் வந்த... புத்தகத்தை விட புதிதாய் அதே விலையில் ,அத்துனை பக்கத்திலே ஒரு முழு நீள டைகர் கதை அல்லது ஒரு மலர் வெளி இட்டால் நமக்கு தானே லாபம் காமிக்ஸ் ரசிகர்களே ..இதை தயவு செய்து உணருங்கள் நண்பர்களே .. எனது தனி பட்ட சில வேண்டுகோள்கள் ....ஆசிரியருக்கு ..... *** ஒரு பக்க மௌன சிரிப்பான "மியாவியை "விட வசனத்துடன் வரும் "சிரிப்பின் நிறம் சிவப்பு "..",ரத்த வெறியன் ஹேகர் "போன்றவை சிறப்பான சிரிப்பு . *** வரும் காலத்தில் தாளின் விலை ஏற்றம் ,டாலரின் விலை ஏற்றம் என எவ்வளவு மாறினாலும் தயவு செய்து இனியும் பக்கத்தை குறைக்காதிர்கள் .ஏற்கனவே 200 பக்கத்தில் இருந்து பாதி படி இறங்கி விட்டோம் .இனியும் எறங்க வேண்டாம் சார் ..ப்ளீஸ் . *** அப்படி தவிர்க்க முடியாத சூழ் நிலை ஏற்படின் "மெகா ட்ரீம் ஸ்பெஷல் "இல் வந்த தரமான தாளில் லக்கி கதை வந்ததை போலே கூட வெளி இடுங்கள் .இன்னும் இளைத்தால் அது "என்னை " போல ஆகி விடும் . ***தாங்கள் அறிவித்த மாதம் ஒரு "லயன் ""முத்து " தவறாமல் கடை பிடிக்கவும் .முடிந்தால் கூட மாதம் ஒரு "சன் ஷைன் "இணைக்க பார்க்கவும் . *** "கிராபிக் நாவல் " என்னுடையை பார்வையாக அல்லாமல் ...தொடர்ந்து மூன்று மாதம் எல்லாம் "கிராபிக் நாவல் "வேண்டாம் என்ற நல்ல உள்ளங்களை கண்டிப்பாக தாங்கள் மறக்க வேண்டாம் . ***மாடஸ்தி கதையை சிலர் விரும்பா விடினும் அடுத்து மாடஸ்தி கதை தாங்கள் வெளி இட்டால் "மர்ம எதிரி "என்ற புத்தகத்தில் வந்த "மாடஸ்தி " வரலாற்று கதையை அதன் உடன் இணைத்தால் விரும்பாதவர் கூட மாடஸ்தி கதையை விரும்புவர் . ஆசிரியருக்கு ...இந்த கருத்துகளை ஒரு காமிக்ஸ் ரசிகனாக தான் தங்களுக்கு நினைவு படுத்துகிறேன் தவிர எல்லாம் அறிந்த "ஏகாம்பரம் "ஆக என்னை காட்டி கொள்ள அல்ல . காமிக்ஸ் ரசிகர்களுக்கு எனது இந்த கருத்தில் சிலர் உடன் படலாம் .பலர் மறுக்கலாம் .தங்கள் மாறு பட்ட கருத்தையும் இங்கே பதியலாம் . நன்றி .....வணக்கம் .....!

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

காமிக்ஸ் நினைவலையில் ...

காமிக்ஸ்  நண்பர்களுக்கு ..,
      மீண்டும் ஒரு முன் முன் எச்சரிக்கை .மீண்டும்  இது ஒரு சுய புராண படலம் .விழி பிதுங்கபவர்கள் தெரித்து ஓடி விடுங்கள் .கோவையில் அனைத்து காமிக்ஸ் பறி கொடுத்து விட்டு பரிதாபத்துடன் நின்ற நான் இரண்டே மாதத்தில் மீண்டும் ஒரு காமிக்ஸ் அட்டை பெட்டி உடன் சேலம் வந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம் .(ஆம்மாம் ....பெரிய லார்கோ பிளாஸ் பேக் ..மண்டையில் மறந்து போகாமல் இருக்க என்று முனகினால் நான் பொறுப்பல்ல )இரண்டே மாதத்தில் மீண்டும் பல அரிய லயன் ,முத்து சேர்த்த கதையை சொல்லாமல் சேலம் வந்து என்ன பயன் ..?
         ஏற்கனவே சொன்னபடி ,அனைத்து காமிக்ஸ் புத்தங்களை இழந்ததாலும் ,பள்ளி ஆண்டு விடுமுறை விட்டபடியாலும் புத்தங்களை சேகரிக்க மூளை மீண்டும் வேலை செய்தது .கைவசமுள்ள சிற்சில காமிக்ஸ் புத்தங்களையும் ,பாதி விலைக்கு வாங்கிய சில நாவல்களையும் ,(அப்போதிய வயதில் நாவல் படிக்க ஆரம்பித்த காலம் (பயந்து கொண்டே ),அனைத்து புத்தங்களையும் அம்மா ,அப்பாவிற்கு தெரியாமல் ஒளித்து வைப்பது தனி கலை )நண்பி வசந்தி இடம் உள்ள புத்தங்களையும் சேகரித்து ரேஸ் கோர்ஸ்  குடியிருப்பு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஒரு புத்தக ஸ்டாலை திறந்தோம் .கடைக்கு மூல தனம் கையில் வைத்திருந்த சில புத்தங்களும் ,ஒரு முழு நீள கயிறும் (முழு நீள கையறு என்றதும் கற்பனையை தட்டாதீர்கள் ).மைதானத்தின் ஓரத்தில் உள்ள இரண்டு மரங்களுக்கும் இடையே அந்த கையரை கட்டி எங்கள் கைவசமுள்ள புத்தங்களை தொங்க விட்டோம் .புக் ஸ்டால் ரெடி .கோட்டர்சில் 200 கும் மேல் உள்ள குடி இருப்பாலும் ,அங்கே உள்ள ஒரே ஒரு புத்தகக்கடை இது மட்டுமே என்பதாலும் ,அப்போது எல்லாம் பொழுது போக்கு பொதிகையின் வெள்ளி இரவு ஒளியும் ஒலியும் ,ஒரே ஒரு திரை படம் என்பதாலும் நாங்களே எதிர் பார்க்காத வரவேற்பு .
          புத்தகம் அனைத்தும் பாதி விலைக்கு (நாங்கள் வாங்கியதும் பாதி விலைக்கு தான் ),இரண்டு புத்தகங்கள் கொடுத்தால் ஒரு புத்தகம் ,லயன் &முத்து காமிக்ஸ்ஒன்று  கொடுத்தால்  இரண்டு நாவல்கள் என்ற அதிரடி தள்ளுபடி எங்கள் புக் ஸ்டாலை தூள் படுத்தியது .அப்பொழுது தான் பல பெண் மணிகளும் நமது காமிக்ஸ் அடிமைகள் என்பதை கண்டு கொண்டோம் .பல பெண்கள் தங்களிடம் உள்ள காமிக்ஸ்களை கொடுத்து விட்டு நாவல்களை வாங்கி விட்டு சென்றார்கள் .(எங்களிடம் காமிக்ஸ் கேட்டால் மறைத்து விடுவோம் ).எங்கள் கடையின் வரவேற்பு பல நண்பர்களை பிஸ்னெஸ் பார்ட்னர் ஆக கெஞ்சியதும் ,ஒரு சிலரை போட்டி கடை வைக்க தூண்டியதும் தனி கதை .அந்த இரண்டு மாத "தொழில் அதிபர் "முடிவில் கிடைத்தது தான் மீண்டும் பல அரிய லயன் ,முத்து ,ராணி ,திகில் போன்ற காமிக்ஸ்களும் ,100,150 ரூபாய் சில்லறை காசுகளும் .(அப்பொழுது அந்த பணத்தின் மதிப்பு விலை மதிக்க முடியாதது ).புத்தங்களையும் ,பணத்தையும் இருவரும் ஆளுக்கு பாதியாக பகிர்ந்து கொண்ட சில நாள்களில் தான் அவர் வேறு  இடத்திற்கு குடி மாறியதும் ,நான் சேலம் வர நேர்ந்ததும் .
                 சேலம்  நான் குடி வந்ததும்  தேட ஆரம்பித்த முதல் இடம் பழைய புத்தக கடைகள் தான் .அப்படி தார மங்கலம் பகுதியில் இருந்தது தான் "திலகா பாட்டு புத்தக நிலையம் " .அங்கேயும்  பல காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்க  ஆரம்பித்தன .(அதர்காக இப்பொழுது தார மங்கலம் ஓடி வர வேண்டாம் நண்பர்களே .நான் சொல்லுவது 10 ,12 வருடத்திற்கு முன் .இப்போது அங்கே இருப்பது  இண்டியன் ஓவர் சீஸ் பேங்க் ) அங்கே பாதி  காமிக்ஸ் புத்தகங்களும் ,சேலம் வள்ளுவர் சிலை அருகே உள்ள பழைய புத்தக மார்கெட் லும் புத்தகங்களை சேகரித்தேன் .ஆனால் அப்பொழுதும் கை காசு பற்றா குறை தான் .10 புத்தகம் இருந்தால் 3,4 புத்தகம் மட்டுமே வாங்க வேண்டிய  நிலை .அதுவும் அட்டை படத்தில் மாயாவி ,ஸ்பைடர் இருந்தால் அதை  மட்டுமே வாங்கி விட்டு மற்றதை விட்டு விடுவேன் .சேலம் பழைய பஸ் நிலையத்தை சுற்றிலும் திரை அரங்கு அதிகம் .ஒவ்வொரு திரை அரங்கிற்கும் வாசல் அருகே தள்ளு வண்டியில் புத்தக கடை இருக்கும் அப்பொழுது .அனைத்திலும் காமிக்ஸ் பாதி விலைக்கு கிடைத்தது .ஆனால் கோயம்புத்தூர் பாச்சா  (சுடுவது )இங்கே  பலிக்க வில்லை .காசு இருந்தால் மட்டுமே காமிக்ஸ் வாங்க முடியும் என்ற சூழ்நிலை .
         
            இப்படி கொஞ்ச ,கொஞ்சமாக காமிக்ஸ் புத்தகத்தை சேர்த்து வந்த சமயத்தில் தான் தா .மங்கலத்தில் உள்ள புத்தக கடையில் சில காமிக்ஸ் நண்பர்களையும் ,முக்கிய காமிக்ஸ் எதிரியையும் சந்தித்தேன் .ஒரு நாள் அந்த கடையில் என்னிடம் உள்ள நாவல்களை கொடுத்து விட்டு காமிக்ஸ் வாங்கி கொண்டு இருக்கும் போது தான் ஒரு 50 வயது மதிக்க தக்க ஒரு பெண்மணி அறிமுகமானார் .நான் நாவலை கடையில்  கொடுப்பதை பார்த்த அவர் என்னிடம் ,கண்ணு ,எங்கிட்ட காமிக்ஸ் நிறைய உள்ளது .உன்னிடம் உள்ள நாவலை கொடுத்தால் நான் என்னிடம் உள்ள காமிக்ஸை தருகிறேன் என்றதும் என் மனசு வானத்தில் பறக்க ஆரம்பித்தது .அங்கே அருகே உள்ள அவர் இல்லத்திற்கு கூட்டி செல்ல அங்கே அவர் வீட்டில் நாவல்களும் ,காமிக்ஸ்களும் கொட்டி கிடந்தது .பிறகு அப்படி அடிக்கடி  காமிக்ஸ் வாங்கி வரும் பொழுது தான் இன்னொரு நண்பரிடமும் அதே போலே கூறி என்னிடமும் அறிமுகபடுத்தினார் .அந்த நண்பரும் அடிக்கடி  இல்லத்திற்கு வந்து படிக்க புத்தகம் வாங்கி போவார் .அப்படி ஒரு முறை நான் இல்லாத போது  வந்த அந்த காமிக்ஸ் வெறியர் மொத்தமாக பெட்டி உடன் அனைத்து புத்தகத்தையும் சுருட்டி விட்டு சென்றார் .(முற் பகல் செய்யின் பிற்பகல் விளையும் பழமொழி இப்படி தான் புரிய வேண்டுமா ..)
        அன்று நான் அழுத அழுகை பிறகு எதற்கும் அப்படி அழுததில்லை என்பது இன்று வரை கண்கூடு .இப்படி இரண்டு நாள் சோகத்தில் இருந்த நான் பழைய புத்தக கடைக்கு செல்ல அந்த பெண்மணியும் கடைக்கு வந்தார் .நான் அவரிடம் வினவு வதற்கு முன் அவசரமாக அவர் என்னிடம் ,  "கண்ணு ..உங்கூட ஒரு பையன்  வந்து புக்கு வாங்கிட்டு போவானே .அவன் அட்ரெஸ் உனக்கு தெரியுமா "என்று வினவ  ..,என்னடா நாம கேக்க வேண்டிய கேள்வியை இவங்க கேக்குறாங்க என்று முழித்து "ஏங்க்கா " ன்னு  நான் கேட்டா ...உன்கூட வந்து காமிக்ஸ் வாங்கிட்டு போற பையன்  நான் ரெண்டு நாளா ஊர்ல இல்லாததை தெரிந்து பூட்டை உடைத்து என்கிட்ட இருந்த எல்லா காமிக்ஸ்  புத்தகத்தையும் தூக்கிட்டு போய்ட்டான்பா .பாத்தா சொல்லுப்பா ..,ன்னு சொல்ல எனக்கு தலை சுற்றியது .(அப்பவும்  மனசுக்குள் ஒரு ஆறுதல் .அப்பா ..நம்ப வீட்டு பூட்டு தப்பியது .நான் கதவை  தொறந்து தானே வைத்திருந்தன் .)நானும் என்னோட சோக கதையை சொல்லிட்டு ..நீங்க பாத்தா எங்கிட்ட சொல்லுக்கா ..நானும் சொல்லிட்டு வந்தேன்  .
           இப்படி மீண்டும் எல்லா புத்தகத்தையும் பறி கொடுத்து விட்டு தவித்து கொண்டு நின்றேன் .இந்த சமயத்தில் பள்ளி படிப்பு முடித்து விட்டு பெட்ரோல் பங்கில் கேசியர் பணிக்கு செல்ல கையில் பண புழக்கம்  அதிகமாய்ற்று .அந்த சமயம் தாரமங்கல புத்தக கடை இல்லாமல் போக சேலம் வாரம் ஒருமுறை சென்று வாங்க ஆரம்பித்தேன் .இந்த சமயம் பார்த்து சேலத்து கடை காரர்களுக்கு என்ன வந்ததோ தெரிய வில்லை .இரண்டு ரூபாய் புத்தகத்தை 40 ரூபாய் ,50 ரூபாய் என்று விலை வைக்க அதிகம் புத்தகம் வாங்க முடிய வில்லை .(அது இப்போது 300,400 ஆனது அதை விட கொடுமை ).
             இந்த சமயத்தில் தான் எனது தாய் வழி உறவினர் நீ இந்த வயசுல வேலைக்கு போறது போதும் ,படிக்கிற வழிய பாரு னு "சிதம்பரம் "கூட்டி சென்றார் .இரண்டு வருட சிதம்பர ஜாகை யில் எனது காமிக்ஸ் பயணமோ வேறு வழியில் சென்றது .
                                             (சேலம் படலம் முற்றும் )


பின்குறிப்பு 1 : "டேய் ..நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடகாரா ..என்னமோ பாக ,பாகமா போட்டுட்டு வர ..?மனசுல என்ன "சிங்கத்தின் சிறு வயது "ஆசிரியர் ன்னு நினைப்பா ..? அப்படின்னு திட்டாதீர் நண்பர்களே ..அவர் அளவுக்கு எல்லாம் நான்" வொர்த் "இல்லன்னு விண்வெளி ஜீவ ராசிகளுகே கூட தெரியும் .கண்டிப்பா அடுத்த பாகத்துல முடித்து விடுகிறேன் .

பின் குறிப்பு 2 :பதிவுல படமே இணைக்க வில்லைய  என்று வினவும் நண்பர்களுக்கு ..,இணைத்தால் விஸ்வா சார் போல டக்கரா போடணும் .இல்லேன்னா கம்முன்னு கிடக்கணும்  .,என்ற நினைப்பால் நோ படம் .

பின் குறிப்பு 3: இப்படி கஷ்டப்பட்டு .கஷ்டப்பட்டு புத்தகத்தை சேர்த்து மொத்தமா ஒவ்வொரு முறையும்  தூக்கி கொடுத்துட்டு வரும் என்னை பார்த்து ..,பரிதாப பட்டு 2,3 காப்பி வைத்திருக்கும் நண்பர்கள் எனக்கு புத்தகம் கொடுக்க மனது துடிக்கலாம் :-).அவர்கள் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளலாம் .கூச்ச பட வேண்டாம் .
                                 நன்றி ...

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

ஒரு காமிக்ஸ் பயணத்தில் ...

நண்பர்களே ..,
           வணக்கம் .இந்த பதிவில் நான் காமிக்ஸ் படிக்க  ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை என் வாழ்க்கை பயணத்தில்  "காமிக்ஸ் " எவ்வாரல்லாம் பங்கு பெற்றுள்ளது என்று நினைத்து பார்க்கையில் எழுந்தது தான் .எனவே இதில் ஒரு காமிக்ஸ் புத்தகத்தின் பார்வையோ ..,அல்லது விமர்சனமோ என எதிர் பார்த்து வந்தீர்கள் என்றால் ஏமாந்து விடுவீர்கள் .இது  முழுக்க முழுக்க ஒரு சுய புராண காமிக்ஸ் கட்டுரை .ஆர்வமில்லாதவர்கள் இப்பொழுதே விடுங்கள் ஒரு "ஜூட் ".
            இப்பொழுது எனது ஜாகை சேலத்தில் இருந்தாலும் நான் பிறந்தது ,வளந்தது ,காமிக்ஸ் படிக்க ஆர்வமானது அனைத்தும் கோவையில் தான் .கோவை ரேஸ்  கோர்ஸ் தான் நான் குடி இருந்த கோவில் .நான் முதன் முதலில் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தது நமது லயன் காமிக்ஸோ ,முத்து காமிக்ஸோ ,ராணி காமிக்ஸோ அல்ல .கோவை அண்ணாசாலை மேம்பாலம் அருகே உள்ள பள்ளியில் நான் படித்து கொண்டு இருக்கும் போது  (4வது ,5வது ) எதிரே உள்ள மிட்டாய் கடையில் 20 பைசா ,30 பைசா விற்கு 10 பக்கத்தில் உள்ளூர் ஓவியத்தில் காமிக்ஸ் புத்தகம் கிடைக்கும் .(அதிலும் மெயின் ஹீரோ மாயாவி தான் ). மாதம் ஒரு பத்து தலைப்பில் புத்தகம் வந்து கொண்டே இருக்கும் .அனைத்தும் வாங்கி படிக்க ,அதில் ஒரு இனம் புரியா சந்தோஷம் .பிறகு நான் குடி இருந்த ரேஸ்  கோர்ஸ் கோட்டர்ஸில் பல அடுக்கு மாடி குடி இருப்பிற்கு ஒரே ஒரு மளிகை கடை .அங்கே வருவது செய்தி தாள் மற்றும் ராணி ,தேவி ,ராணி முத்து மற்றும் ராணி காமிக்ஸ் .தவறாமல் ராணி காமிக்ஸ் 1 ம் தேதி ,15 ம் தேதி கடைக்கு வந்து விடும் .1.50 விலையில் அட்டைப்படம் கலக்கலாக கடையில் தொங்கி கொண்டு இருக்கும் .வாங்க மனது துடித்தாலும் கையில் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது .தினம் பாக்கெட் மணியாக கிடைப்பது 10 பைசா . பள்ளி விடுமுறை என்றால் அதுவும் கிடைக்காது .கடையில் தொங்கி கொண்டு இருக்கும் புத்தகத்தை ஒவ்வொரு முறையும் ஆர்வமுடன் பார்த்து கொண்டு இருக்கும் பொழுது தான் அந்த துணையும் கிடைத்தது .
       பக்கத்து வீட்டில் குடி இருந்த எனது ஒத்த வயதுடைய வசந்தி என்ற பெண் தான் அந்த துணை .என்னை போலவே அவரும் காமிக்ஸ் வாங்க முடியாமல் தவிக்க ,இருவரும் அவர் ,அவரிடம் இருக்கும் புத்தகத்தை பரிமாறி கொள்ள நட்பு இறுகியது .எப்படியும் ராணி காமிக்ஸை இருவரும் சேர்ந்து வாங்க முடிவெடுத்தோம் .ஆளுக்கு பாதி காசு போட்டு புத்தகம் வாங்க வேண்டும் .ஒரு புத்தகம் எனக்கு ..,அடுத்த புத்தகம் அவர்க்கு என ஒப்பந்தம் செய்தோம் . ஆனால் ரூபாய்  1.50 சேர்க்க ஒரு மாதம் ஆக புத்தகம் வாங்க முடிய வில்லை .அப்பொழுது தான் இருவரும் சேர்ந்து மூளையை கசக்கி ஒரு ஐடியாவை கண்டு பிடித்தோம் .ஒவ்வொரு முறையும் புத்தகம் வரும் பொழுது பழைய புத்தகம் 4,5 மீதம் கடையில் இருக்கும் .இருவரும் கடைக்கு சென்று  "அண்ணாச்சி ..எங்களுக்கு புது புத்தகம் வேண்டாம் .பழைய புக்கை பாதி விலைக்கு கொடுக்க முடியிம்மா என கெஞ்ச ..,கடைக்கார அண்ணாச்சியும் ஒத்து கொண்டார் .எங்களுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி .இனி 0.75 பைசா சேர்த்தல் போதுமே .பிறகு 15 ம் தேதி  வந்தால் 1ம் தேதி புத்தகத்தையும் ..,1ம் தேதி வந்தால் போன மாத 15ம் தேதி புத்தகத்தையும் வாங்கி சேமிக்க ஆரம்பித்தோம் . (நண்பியே ...இப்பொழுது எங்கே உள்ளாயோ ..இன்னமும் காமிக்ஸ் படிகிறாயோ அறியேன் ..ஆனால் எங்கிருப்பினும் நலமுடனும் ,காமிக்ஸ் உடனும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் ).
          பிறகு எனது பள்ளியின் ஜாகை  மரக்கடைக்கு மாற ...,ரேஸ் கோர்ஸ்  பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்ல  KG திரை அரங்கு ,அண்ணாசாலை ,மேம் பாலம் என 5,6 கிலோ மீட்டர் நடந்தே செல்வோம் .வழியில் புத்தக கடை வந்தால் மட்டும் காமிக்ஸ் ஏதாவது கிடைக்குமா என அலசி ,அலசி பள்ளிக்கு செல்லும் போது  தான் அண்ணாசாலை மேம் பாலம்  அருகில் உள்ள ஒரு புத்தக நிலையத்தில் இன்றும் நினைத்தால் போதை வரும் நமது லயன் ,முத்து ,திகில் என காமிக்ஸ் கட்டு ,கட்டாக அங்கே இருக்க கண்டேன் ..கால்களோ பள்ளிக்கு இழுக்க ..,மனதோ கடையில் மட்டுமே .பாக்கெட் சைஸ்..,வித்தியாசமான காது  நீண்ட ஒரு மன்மதன் (spider )..,இரும்பு கை மனிதன் என அட்டைப்படமும் ,அதில் இருந்த சிங்க லோகோவும் மனதிலே ஆணி போல பதிய  மாலை வீடு சென்றதும் நான் சென்றது நண்பி வசந்தி இடம் தான் .பெற்றோர் இடம் போனால் ..,காமிக்ஸ் வாங்க காசு வேண்டும்  என்றால் .கிடைப்பது அப்பாவின் லத்தி அடி தான் என்பது எனக்கு தெரியாதா என்ன ..? KG காம்ப்ளக்ஸ் அருகே வீடு இருந்தும் ,தினம் அதன் வழியாக நடை பயின்றாலும் பிறந்ததில் இருந்து அங்கே இருந்தது  வரை ஒரு திரை அரங்கிற்கு கூட செல்லாத அளவு கட்டு பாடு என்றால் காமிக்ஸ் வாங்க காசு கிடைக்குமா என்ன ..?

        அடுத்த நாள் வசந்தி இடமும் ,என்னிடமும் இருந்த சில்லறையை சேர்த்தி கடைக்கு சென்றால்... விலையை கேட்ட வுடன் மயக்கம் வராத குறை .விலை இரண்டு ரூபாய் ,மூன்று ரூபாய் .0.75 பைசா சம்பாதிக்க இருவரும் திண்டாட 2 ரூபாய்க்கு எங்கே போவது .அப்போது தான் பள்ளியிலும் நண்பர்கள் அறிமுகமானார்கள் .காமிக்ஸ் படிக்கும் நண்பர்கள் மட்டுமே அப்போது  ஒரு கூட்டாக சுற்றுவோம் .பள்ளிக்கு பாட புத்தகம் கொண்டு வருகிறமோ ..,இல்லையோ கண்டிப்பாக காமிக்ஸ் புத்தகம் கொண்டு செல்வோம் .அனைவரும் கதை புத்தகத்தை மாற்றி கொண்டு வகுப்பு அறையிலைய படித்து முடிக்க போட்டி போடுவோம் .அப்பொழுது நான் ராணி காமிக்ஸை கொண்டு செல்ல நண்பன் ஒருவன் தினம் லயன் ,முத்து காமிக்ஸ் கொண்டு வர அவன்  நெருங்கிய நண்பன் ஆகினான்  .லயன் ,முத்து காமிக்ஸை படிக்க ,படிக்க தான் அதுவரை 007 ,டைகர் &ஹென்றி ,இன்ஸ்பெக்டர் ஆசாத் ,மன்னர் பீமா இவர்களை விட உசத்தியான ஹீரோ கள் உள்ளனர் என்பதை அறிந்தேன் .இரும்பு கை மாயாவி கனவில் வர ஆரம்பித்தார் .ஸ்பைடர் மனிதில் குடி இருக்க ஆரம்பித்தார் .காமிக்ஸ் என்றால் ராணி .பொன்னி இதுதான் என்று நினைத்து இருக்க லயன் ,முத்தை படிக்க ஆரம்பித்த வுடன் இதை தவிர வேறு காமிக்ஸ் இல்லை என மனம் அலை பாய்ந்தது .அனைத்து  லயன் புத்தகத்தையும் வாங்கி சேர்க்க முடிவெடுத்து , செயல்  பட  முனைந்தேன் .
       அப்பொழுது தான் பள்ளி நண்பன் ஒருவன் அந்த இனிப்பான செய்தியை சொன்னான் .தள்ளு வண்டியில் விற்கும் பழைய புத்தக கடையில் காமிக்ஸ் அனைத்தும் பாதி விலையில் கிடைப்பதாக ,அதுவும் லயன் ,முத்து  அங்கே குவிந்து கிடைபதாக சொல்ல பிறகு தான் எனது பார்வை பழைய புத்தக கடைக்கு சென்றது .(இன்று வரை அது தொடர்வது தனி கதை ).அப்பொழுது KG  மருத்துவ மனை அருகே தள்ளு வண்டி புத்தக கடை அதிகம் காணப்படும் .வாரம் ஒரு முறை பாக்கெட் மணியை  சேர்த்து புத்தகத்தை வாங்க ஆரம்பித்தேன் .அப்படியும் போத வில்லை .ஆளில்லா கடையில் பணம் இருந்தால் கூட எடுக்க தயங்கும் மனது காமிக்ஸை தெரியாமல் எடுக்க தயங்க வில்லை .இரண்டு புத்தகம் வாங்கினால் மூன்று புத்தகம் பாக்கெட்டில் வந்துவிடும் .அதுவும் லயன் ,முத்து  காமிக்ஸ் மட்டுமே .காரணம் அதை  தான் பாக்கெட்டில் டக் கென்று போட்டு கொள்ள முடியும் ."முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் "என்பது அப்போது தெரிய வில்லை .ஒரு முறை கையும் களவுமாக பிடிபட  இனி கடை பக்கமே வர கூடாது என மிரட்டி அனுப்ப பட புத்தகம் சேருவது குறைய ஆரம்பித்தது .(அந்த கடையில் தான் அதிகம் காமிக்ஸ் கிடைக்கும் .சுலபமாக சுடவும் முடியும் ).
          மீண்டும் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது .வீட்டை விட்டு புத்தக கடைக்கு செல்லும் போது  மூஞ்சிக்கு பவுடர் அதிகம் அப்பி கொண்டு அம்மாவின் மை டப்பியை பாக்கெட்டில் போட்டு கொண்டு கடைக்கு அருகே சென்றவுடன் ஒரு நெற்றி போட்டு வைத்து கொண்டு (வீட்டிலைய பொட்டு வைத்தால் யார் உதை வாங்குவது )மாறு வேடத்தில் சென்று புத்தகம் வாங்க முனைந்தேன் .(எத்துனை MGR படம் பார்த்திருப்போம் ).ஆமாம் ..திரை அரங்கே செல்லாத நீ எப்படி படம் பார்த்தாய் என சந்தேகம் சிலருக்கு வரலாம் .(நாங்கள் குடி இருந்த ரேஸ் கோர்ஸ் பகுதியில் வாரம் ஒரு முறை திரை கட்டி படம் போடுவார்கள் .)எனது மாறு வேட திறமையா ..,கடை காரர்  மறந்து போனாரோ தெரியாது .எனக்கு வெற்றி .அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு சேர்த்த புத்தகம் பேராசையால் தொலைந்தது .காமிக்ஸ் நண்பன் ஒருவன் தன்னிடம் உள்ள அனைத்து  காமிக்ஸையும் காட்ட ஒரு நாள் அவன் இல்லத்திற்கு கூட்டி சென்றான்  .
        அங்கே போனால் மயக்கம் வராத குறை .இரண்டு ட்ரன்க் பெட்டி நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் .அடுத்த நொடியே மீண்டும் பாழாய் போன மூளை வேலை செய்ய அவனிடம் .."நண்பா ..நாம் இருவரும் பார்ட்னர் ஆகலாம் .என்னிடம் உள்ள புத்தகத்தை எல்லாம் உன்னிடம் தருகிறேன் .நான் கேர்க்கும் போது  உன்னிடம் உள்ள புத்தகத்தை படிக்க தா "என்றேன் .அவனும் சந்தோசமாக ஓகே சொல்ல அடுத்த நாளே என்னிடம் உள்ள புத்தகத்தை எல்லாம் அட்டை பெட்டியில் போட்டு கொண்டு அவனிடம் கொண்டு போய்  சேர்த்தேன் .அந்த சமயம் முழு ஆண்டு தேர்வு .பத்தே நாளில் விடுமுறை விட (8ம் வகுப்பு )புத்தகம் அனைத்தும் போயே போச் .வீடும் மறந்து போக ,இரவில் யாருக்கும் தெரியாமல் அழுதது இன்றும் நினைவு .அதை மறந்து கொஞ்சம் ,கொஞ்சமாக6 மாதத்தில்  மீண்டும் சேர்த்த பொழுது எனது தாய் ,தந்தை இறக்க தந்தையின் சொந்த ஊரான சேலம் வரும் சூழ்நிலை .நெருங்கிய உறவினரோடு காமிக்ஸை எல்லாம் பத்திரமாக பெட்டியில் போட்டு கொண்டு ,தேவை இல்லாத அந்த பாட புத்தகங்களை ஒதுக்கி  வைத்து விட்டு இது வரை பிறந்து வளர்ந்த அந்த கோவை மண்ணை விட்டு சேலம் நோக்கி காமிக்ஸை கட்டி பிடித்து கொண்டு வருகிறேன் .
   
         (கோவை படலம் முற்றும் .)


ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

வாழ்த்துகள்

காமிக்ஸ் நண்பர்கள் ,

    அனைவருக்கும்  இனிய 

     

        தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

இந்த இனிய நாளில் வரும் வருடம் முழுவதும் காமிக்ஸ் ஆண்டாக இருக்க .....

ஆண்டவனை வழி படுகிறேன் .

விரைவில் முழு நீள பதிவை எதிர் பாருங்கள் .

திங்கள், 18 பிப்ரவரி, 2013

சூப்பர் ஸ்டார் டெக்ஸ் காந்த்

காமிக்ஸ் நண்பர்களுக்கு ,வணக்கம் .நானும் ஒரு காமிக்ஸ் ப்ளாக் தொடங்கி உள்ளேன் என்பதும் ,அதில் தப்பும் ,தவறுமாக இரண்டு பதிவை இட்டு உள்ளேன் என்பதும் இன்று தான் நினைவு வந்தது .எனவே இங்கு நோட்ட இடலாம் என்று வந்த போது நானே பார்க்காத இந்த ப்ளாக் இலும் சிலர் எட்டி பார்த்து சென்றுள்ளது தெரிய வந்தது .வந்த நண்பர்கள் சிலர் பதிவு எதுவும் இல்லையே என்று :) வருத்த பட்டவர்களுக்கு ஒரு கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலும் ,நல்ல வேலை எதுவும் பதிவு இல்லை:( என்று சந்தோஷ பட்டவர் களுக்கு ஒரு கூல்ட்ரிங்க்ஸ் பெட்டியே பரிசாக அனுப்ப உத்தேசம் .பரிசுக்கு தொடர்பு கொள்ளவும் .( விதி முறைகள் நிபந்தனைக்கு உட்பட்டது ).                                                             திரை உலகில் என்றும் சூப்பர் ஸ்டார் நம்ப ரஜினி காந்த் என்பது அனைவரும் அறிந்தது தான் .அது போல நம்ம காமிக்ஸ் ஸ்டார்களில் எவர் சூப்பர் ஸ்டார் என பல மணி நேர யோசனை தான் இந்த பதிவிற்கு காரணம் .எனது காமிக்ஸ் வாழ்க்கை பல ஸ்டார்களோடு இணைந்து இருந்தாலும் அன்று முதல் இன்று வரை சலிக்காத ஹீரோ யார் எனவும் யோசித்தேன் .காமிக்ஸ் உலகில் SPIDER ,மாயாவி கூட சூப்பர் ஸ்டார் ஆக இருந்த காலம் உண்டு .(சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் படிக்கும் வரை கூட எனலாம் )ஆனால் அன்று முதல் இன்று வரை எனும் போது .....?                                                                       என்று டெக்ஸ் வில்லர் இன் "பழி வாங்கும் பாவை "படித்தேனோ அன்று முதல் டெக்ஸ் என் மன வானில் சூப்பர் ஸ்டார் ஆக தான் தோன்றுகிறார் .அது முதல் டெக்ஸ் கதை படிக்கும் போதல்லாம் எனக்கு ரஜினி நினைவு வருவது தவிர்க்க முடியவில்லை .அதுவும் பழி வாங்கும் பாவை கதையில் கர்னல் அர் லிங்க்டன் முதல் முறை சந்திக்கும் போது  தெனாவெட்டாக வத்தி குச்சி இருக்குமா ?என வினவுவதும் ,நீ மட்டும் UNIFORM  இல் இல்லாமல் இருந்தால் முகரை பெயர்த்து இருப்பேன் என்பதும் ,அது போலவே இரவில் அதை நடைமுறை இல் செயல் படுத்து வதும் அக்மார்க் ரஜினி ஸ்டைல் .அதன் பிறகு வந்த ட்ராகன் நகரம் ,கழுகு வேட்டை ,பழிக்கு பழி ,ரத்த நகரம் ,ரத்த வெறியர்கள் என வந்த அனைத்து கதைகளும் ஒரு ரஜினி படத்தை பார்த்த அனுபவத்தை கொண்டு வந்தது என்றால் அது மிகை அல்ல .லேட்டஸ்ட் ஆக வந்த 10 ரூபாய் டெக்ஸ் கதைகள் சில சோடை போனாலும் ,(ரஜினி இன் பாபா போல இருந்தாலும் மீண்டும் ரஜினி படத்தை எதிர் பார்ப்பது போல )காமிக்ஸ் ரசிகர்கள் டெக்ஸ் இன் கதையை எதிர் பார்த்து கொண்டே தான் இருகிறார்கள் என்பது நிதர்சனம் .                                                                           சினிமா உலகில் சில இளைய தலைமுறை நடிகர்கள் நுழைந்து நான்  தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என கூவிநாலும் அன்றும் ,இன்றும் ,என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் .அது போல நமது காமிக்ஸ் உலகிலும் சில அதிரடி நாயகர்கள் அறிமுக மானார் கள் .அதில் நமது சூப்பர் ஸ்டார் டெக்ஸ் க்கு போட்டி யாக வருபவர்களை இருவரை மட்டும் குறிப்பிடலாம் .அவர்கள் TIGER ,மற்றும் லார்கோ .முதலில் tiger கதைய எடுத்தால் ,அவரின் தங்க கல்லறை ,ரத்த கோட்டை ,மின்னும் மரணம் ஆகியவை அவரை சூப்பர் ஸ்டார் நாற்காழிகு அருகே கொண்டு வந்தது .ஆனால் அடுத்து வந்த சில கதை களும் ,அதன் முடிவுறா நிலையும் அவரை பின்னுக்கு தள்ளி விட்டது .அடுத்து வரும் லார்கோ என் பெயர் லார்கோ வில் அதிரடி யாக நுழைந்து அவர் தான் இனி சூப்பர் ஸ்டார் என பலரை ஏன் என்னையும் கூற வைத்தது .ஆனால் அடுத்து வந்த NBS இல் (என்னை பொறுத்த வரை )A க்ளாஸ் ரசிகர்களை ரசிக்க வைத்தாலும் ,வேயின் ஷெல்டன் இடமே தோற்று விட்டதால் டெக்ஸ் முன் லார்கோ எம்மாத்திரம் .எனவே காமிக்ஸ் சூப்பர் ஸ்டார் டெக்ஸ் தான் .                            பல வருடங்களுக்கு பிறகு ரஜினி படம் வந்தாலும் அனைவரும் வழி விட்டு ஒதுங்க" தனி காட்டு ராஜா "வாக ரஜினி படம் வருவது போல நமது சூப்பர் ஸ்டார் "ரஜினி வில்லர் " சாரி டெக்ஸ் காந்த் ஐயோ சாரி "டெக்ஸ் வில்லர் "தான் என்பதை நமது இளைய ஹீரோ க்களும்  வழி விட்டு ஒதுங்க ,நமது காமிக்ஸ் அரசர் S .விஜயன் அவர்களும் இதனை உணர்ந்து உடனடியாக "டெக்ஸ் காமிக்ஸ் " கொண்டு வர ஆவன செய்வது தான் இந்த பதிவின் நோக்கம் நண்பர்களே .நன்றி .கடைசியாக                                                                                        "அதிகமா காமிக்ஸ் வெளி இடாத ஆசிரியரும் ,                                                                   அதிகமா காமிக்ஸ் படிக்காத வாசர்களும் "                                                                            நல்லா சந்தோஷமா இருந்ததா சரித்தரமே இல்லை "என கூறி கொண்டு மீண்டும் வெகு விரைவில் (சில வருடங்களுக்குள் )சந்திக்கிறேன் தோழர்களே ...மீண்டும் நன்றி ........(நான் ஒரு பதிவை போட்டா .........)