திங்கள், 30 செப்டம்பர், 2013

எடிட்டர் சார் ..,ஒரு நிமிஷம் ....!ப்ளீஸ் ..

தமிழ் காமிக்ஸ் வாழ , வளர வைத்து கொண்டு இருக்கும் ஆசிரியர் திரு .விஜயன் அவர்களுக்கு முதலில் எனது நன்றியை கூறி கொண்டு ..,ஜூனியர் எடிட்டர் ஆக இப்பொழுது பொறுப்பு கொண்டுள்ள திரு .விக்ரம் அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் கூறி கொண்டு "வாழையடி வாழையாக "தங்களால் "தமிழ் காமிக்ஸ் "வளரவும் அதனால் காமிக்ஸ் ரசிகர்கள் ஆகிய நாங்கள் எப்பொழுதும் இன்புறுவும் எங்கள் வாழ்த்துகளை முதலில் கூறி கொள்கிறோம் . 2012 முதல் புது பொலிவுடன் கலக்கி கொண்டு இருக்கும் நமது லயன் ,முத்து 2014 முதல் இன்னும் ,இன்னும் கலக்க போகும் இந்த சமயத்தில் காமிக்ஸ் ரசனை மிக்க சில ரசிகர்களின் எதிர் பார்ப்பை ..,எனது சில தனி பட்ட எதிர் பார்ப்பை ஒரு காமிக்ஸ் ரசிகனாக (மட்டும் )தங்களிடம் கூற நினைக்கிறன் .அதன் சாதக ,பாதக அம்சங்கள் தங்களுக்கு மட்டும் அறிய படும் என்றாலும் இதனை நினைவில் கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் . அடுத்த மாதத்தில் ..,அடுத்த வருட "சந்தா " அறிவிக்க போகும் நாள் என்பதால் முதலில் அதனை பற்றிய எனது கருத்தை சொல்ல நினைக்கிறேன் . முதலில் சந்தா தொகையை தயவு செய்து மொத்தமாக அறிவித்து விடுங்கள் .லயன் ,முத்து ,சன்ஷைன் காமிக்ஸ் தனியாக ,ஆண்டு மலர் .,தீபாவளி மலர் ,புத்தக கண்காட்சி ஸ்பெஷல் மலர் என்று தனியாக இப்பொழுதே திட்டமிட்டு மொத்தமாக அறிவித்து விடுங்கள் .அதே சமயம் சில நண்பர்களின் வசதிக்கு ஏற்ற படி தொகை அதிகமாக இருப்பின் இரு முறை தவணை யாக அதனை அனுப்பவும் வசதி செய்து தரவும் . அதே சமயம் 500 ரூபாய் ,1000 ரூபாய் என்ற ஸ்பெஷல் புத்தகத்திற்கு தனியாக சில மாதம் முன்னரே அறிவித்து விடுங்கள் . அடுத்து "மறு பதிப்பு "பற்றி எனது எண்ணங்களை கூற நினைக்கிறன் .(சிலருக்கு இது பற்றிய கருத்து வேறாக இருக்கலாம் .பட் எனது உறுதியான கருத்து இது ).மறு பதிப்பு புத்தகங்கள் என்பது ஆரம்பம் முதல் படித்து வரும் நண்பர்களுக்கும் ..,புதிதாய் இடையில் வந்த நண்பர்களுக்கும் என இருவருக்குமே பயன் அடையும் படி புத்தகம் வர வேண்டுமே ஒழிய... இந்த கதை சூப்பர் .,இந்த கதை ஓவியம் சூப்பர் என்பதால் சில வருடம் முன்னரே வந்த கதையை...90%அனைவரிடம் உள்ள கதையை ... "மறு பதிப்பு "செய்வதை விட புதிதாய் வந்த நண்பர்கள் பார்க்காத புத்தகமாக ..,பழைய நண்பர்களிடம் அதிகம் காண கிடைக்காத புத்தகமாக "மறு பதிப்பு "புத்தகம் வந்தால் அனைவரும் கொண்டாடுவார்கள் .உதாரணமாக லயன் 1 முதல் 100 வரை உள்ள வரிசையில் ..,முத்து 1முதல் 200 வரை உள்ள வரிசையில் ...மினி லயன் ,திகில் அனைத்தும் பல வருடம் முன்னரே நிறுத்த பட்டதால் அதில் உள்ள சிறந்த கதைகளை (அனைத்தும் அருமை என்ற நிலையில் தான் மினி லயன் ,திகில் உள்ளது ) என வெளி இடலாம் . கலரில் மட்டும் வரும் கதைகளை தான் நண்பர்கள் விரும்புவார்கள் என்ற எண்ணத்தை தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள் .ஸ்பைடர் ,மாயாவி கதை யை கூட 75% வந்ததால் விட்டு விடுங்கள் .ஆனால் தாங்கள் அறிவித்த "டிடக்டீவ் ஸ்பெஷல் "..".மினி லயன் முதல் நான்கு கதை " ஸ்பெஷல் நிறுத்தியதில் எத்தனை நண்பர்களுக்கு வருத்தம் என்பதை தாங்கள் அறிவீர்களா ?இன்னும் தங்கள் சந்தேகம் தொடர்ந்தால் அப்படிப்பட்ட புத்தங்களை "புத்தக கண் காட்சி "சமயத்தில் ஒரு முறை விட்டு பாருங்கள் .அப்பொழுது தாங்கள் உண்மையை உணருவீர்கள் . அதை விட்டு 90% காமிக்ஸ் ரசிகரிடம் இருக்கும் "கார்சனின் கடந்த காலம் "..."ரத்த படலம் "...."மின்னும் மரணம் "போன்ற கதைகளை தயவு செய்து தவிர்க பாருங்கள் .நான் சொன்ன இந்த மூன்று கதை களும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .நானும் மறுக்க வில்லை .ஆனால் பலரிடம் இருக்கும் "கார்சனின் கடந்த காலத்தை " விட சிலரிடம் மட்டும் இருக்கும் "பவள சிலை மர்மம் ",பலி வாங்கும் புயல் " சைத்தான் சாம் ராஜ்யம் "போன்ற கதை களை வெளி இடலாமே .(நான் சொன்ன இந்த கதை கள் என்னிடம் உள்ளது என்பதையும் இங்கு கூறி கொள்கிறேன் ).அதே போலே டைகர் ரசிகர்களின் அபிமான" மின்னும் மரணம்" "ரத்த படலம் " தாங்கள் வெளி இடும் போது அது சமயம் அதன் விலை கண்டிப்பாக 700 ,800 என இருக்கும் .அத்துனை விலையில் வந்த... புத்தகத்தை விட புதிதாய் அதே விலையில் ,அத்துனை பக்கத்திலே ஒரு முழு நீள டைகர் கதை அல்லது ஒரு மலர் வெளி இட்டால் நமக்கு தானே லாபம் காமிக்ஸ் ரசிகர்களே ..இதை தயவு செய்து உணருங்கள் நண்பர்களே .. எனது தனி பட்ட சில வேண்டுகோள்கள் ....ஆசிரியருக்கு ..... *** ஒரு பக்க மௌன சிரிப்பான "மியாவியை "விட வசனத்துடன் வரும் "சிரிப்பின் நிறம் சிவப்பு "..",ரத்த வெறியன் ஹேகர் "போன்றவை சிறப்பான சிரிப்பு . *** வரும் காலத்தில் தாளின் விலை ஏற்றம் ,டாலரின் விலை ஏற்றம் என எவ்வளவு மாறினாலும் தயவு செய்து இனியும் பக்கத்தை குறைக்காதிர்கள் .ஏற்கனவே 200 பக்கத்தில் இருந்து பாதி படி இறங்கி விட்டோம் .இனியும் எறங்க வேண்டாம் சார் ..ப்ளீஸ் . *** அப்படி தவிர்க்க முடியாத சூழ் நிலை ஏற்படின் "மெகா ட்ரீம் ஸ்பெஷல் "இல் வந்த தரமான தாளில் லக்கி கதை வந்ததை போலே கூட வெளி இடுங்கள் .இன்னும் இளைத்தால் அது "என்னை " போல ஆகி விடும் . ***தாங்கள் அறிவித்த மாதம் ஒரு "லயன் ""முத்து " தவறாமல் கடை பிடிக்கவும் .முடிந்தால் கூட மாதம் ஒரு "சன் ஷைன் "இணைக்க பார்க்கவும் . *** "கிராபிக் நாவல் " என்னுடையை பார்வையாக அல்லாமல் ...தொடர்ந்து மூன்று மாதம் எல்லாம் "கிராபிக் நாவல் "வேண்டாம் என்ற நல்ல உள்ளங்களை கண்டிப்பாக தாங்கள் மறக்க வேண்டாம் . ***மாடஸ்தி கதையை சிலர் விரும்பா விடினும் அடுத்து மாடஸ்தி கதை தாங்கள் வெளி இட்டால் "மர்ம எதிரி "என்ற புத்தகத்தில் வந்த "மாடஸ்தி " வரலாற்று கதையை அதன் உடன் இணைத்தால் விரும்பாதவர் கூட மாடஸ்தி கதையை விரும்புவர் . ஆசிரியருக்கு ...இந்த கருத்துகளை ஒரு காமிக்ஸ் ரசிகனாக தான் தங்களுக்கு நினைவு படுத்துகிறேன் தவிர எல்லாம் அறிந்த "ஏகாம்பரம் "ஆக என்னை காட்டி கொள்ள அல்ல . காமிக்ஸ் ரசிகர்களுக்கு எனது இந்த கருத்தில் சிலர் உடன் படலாம் .பலர் மறுக்கலாம் .தங்கள் மாறு பட்ட கருத்தையும் இங்கே பதியலாம் . நன்றி .....வணக்கம் .....!