ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

ஆசிரியருக்கு கண்டனம் ....நண்பர்களே ....வணக்கம் ...

நலம் ....நலமா .....

இந்த மாதம் வெளி வந்த நமது " காமிக்ஸ் புத்தங்களை " அனைவரும் படித்து முடித்து அடுத்த " டைகர் " சாகஸ  கதையை  காண ஆவலுடன் காத்து கொண்டு இருப்பிர்கள் .நானும் ....அதற்காக காத்து கொண்டு இருக்கிறேன் .இப்பொழுது எல்லாம் அந்த மாதத்து புத்தகங்கள் வந்தவுடன் உடனே அந்த மாதம் முடிந்து அடுத்த மாதம் வராதா என்ற ஏக்கம் வந்து விடுகிறது .இரண்டு வருடத்திற்கு முன் அவ்வாறு  இல்லை ...காரணம் அப்பொழுது எல்லாம் மாதம் தவறாமல் புத்தகம் வருவது இல்லையே ....இப்பொழுது அதற்க்கு பாராட்டி சொல்வதற்கு இந்த பதிவு இல்லை .இரண்டு வருடமாக அதை பாராட்டி கொண்டு தானே இருக்கிறோம் .இந்த பதிவு ஆசிரியரை வன்மையாக ....கண்டித்து....எழுத .... முதன் முறையாக களம் இறங்குகிறது இந்த வலை பதிவில் .எனவே ஒத்த கருத்துடைய .....வேறு  பட்ட கருத்துடைய அனைத்து நண்பர்களும் அவர்களுடைய கருத்தை இங்கே கூட அல்ல ...ஆசிரியரின் வலை பக்கத்தில் கூட தெரிவிக்கலாம் .புதிர் மேல் புதிர் போடுகிறான் என நினைக்க வேண்டாம் .பழைய செய்தி தான் .காலம் குறைவால் இப்பொழுதே ஆசிரியருக்கு தெரிவிக்கவும் .....கண்டனத்தை அதிகரித்து அவர் மனதை மாற்ற செய்யவும் தான் இந்த கண்டன பதிவு .

       நான் மட்டுமல்ல பல வாசக நண்பர்கள் ....கேட்டும் .....பல விதத்தில் ...பல முறை போராடியும் இன்னமும் ஆசிரியர் அவர்கள் " சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பை  வெளி இட சம்மதிக்க வில்லை .அதற்கான அவர் கூறும் காரணம் இரண்டு மட்டும் .அவற்றிற்கான காரணத்தின் நிஜம் உண்மையாக இருப்பினும் நண்பர்களின் பதிலில் அவர் மாற்றம் கொண்டு "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பிற்கு எந்த அளவு நண்பர்கள் தீவிரமாக அதை விரும்புகிறார்கள்  என்பதை   ஆசிரியருக்கு உணர்த்தவும் ......நண்பர்கள் ஏன் " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்புக்காக போராடி கொண்டு இருக்கிறாகள் என்பதை தீவிரமாகவும் அவருக்கு உணர்த்தவும்  " 30 வது ஆண்டு மலர் சமயத்தில் தொகுப்பு வருகிறதோ இல்லையோ ....உறுதி மொழி ஆவது வாங்குவதை காண தான் இந்த கண்டன பதிவு வெளி இட படுகிறது .நண்பர்கள் இதை  பற்றி ஆசிரியரிடம் வினவும் பொழுது அவர் ( தப்பிக்க ) வெளி இடும் இரண்டு காரணங்கள் கீழே பார்க்கலாம் .

      ஒன்று  : " தொடர் " இன்னும் முடிவடையாத பொழுது " தொகுப்பு " இப்பொழுது தேவை இல்லை என்பது ஒன்று .

    இரண்டு : நான் என்ன சாதித்து விட்டேன் ...தொகுப்பை வெளி இட என்ற தன்னடக்கத்தின் விடை இரண்டு.

இந்த இரண்டு செய்திகளை கொண்டு அவர் "தொகுப்பை " வெளி இட மறுத்து கொண்டு இருக்கிறார் .அவரின் இந்த கருத்துகளில் நண்பர்களின் பதில் மௌனமாக இருப்பதால் ஆசிரியர் அந்த கருத்துகளில் இருந்து மாறாமல் இருக்கிறார் .அவரிடம் " மௌனத்தை " பதிலாக அளித்திருந்தாலும் ....ஏக்கத்தை நண்பர்களால் மறைக்க முடிய வில்லை .இப்பொழுது அவரின் கருத்துகளுக்கு நண்பர்களின் பதிலை இங்கே காணலாம் .ஆசிரியரின் முதல் காரணத்தில் உண்மை இருப்பினும் அதை " முக்கியமான " ஒன்றாக கருதி தொகுப்பை நிறுத்தி வைப்பது சரி இல்லை .காரணம்  தொடர் முடிந்ததும் தொகுப்பாக வெளி இடும் சமயம் எப்பொழுதும் இல்லை .இனி லயன் ...முத்து என்ற சிங்கத்தின் பயணம் முடிவடையாத பயணம் .முடிவில்லா பயணத்திற்கு " முடிவுரை " ஏது ?எனவே முப்பது ..முப்பது பகுதிகளாக அத்தியாயம் நிறைவடையும் பொழுது தொகுப்பு ஒன்று ...தொகுப்பு இரண்டு என வெளி இடுவதில் தவறு இல்லை .ஆசிரியருக்கும் " செலவு " குறைவாக இருக்கும் .எனவே மீண்டும் இந்த காரணத்தை ஆசிரியர் தெரிவித்தால் நண்பர்கள் பலத்த கண்டனத்தை தெரிவிப்பார்கள் என்பதை கண்டனத்துடனும் ...,பணிவுடனும் கூறி கொள்கிறேன்.

     இரண்டாவது காரணம் " நான் என்ன சாதித்து விட்டேன்  " என்பது .இது முழுக்க ..,முழுக்க நிஜம் அல்ல தோழர்களே .இதற்கான எனது பதில்... ஆசிரியர் என்ன " சாதிக்க வில்லை " இந்த காமிக்ஸ் உலகில் ....? பிரபல பத்திரிக்கை குழுமங்கள் தான் " மாலை மதி காமிக்ஸ் ".., மேகலா காமிக்ஸ் "..., ராணி காமிக்ஸ் " ....போன்ற காமிக்ஸ் இதழ்களை வெளி இட்டன .அவை எல்லாம் இன்று காண கிடைக்காத பொழுது இன்றும் காமிக்ஸ் நண்பர்களுக்காக தொடர்ந்து வெளி இட்டு தமிழ் காமிக்ஸ் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டு இருக்கிறார் எனில் அது சாதனை அல்லவா .....தமிழின் பிரபல மூன்று பதிப்பகங்களும் அனைத்து  துறைகளுக்கும் ஒவ்வொன்றாக புத்தங்களை வெளி இடும் பொழுது அவைகள் " காமிக்ஸ் " என்ற உலகில் நுழையாதது ஏன் ? சிந்திக்க வேண்டும் நண்பர்களே ....அவர்களுக்கு பலமான விளம்பர துணை இருப்பினும் இன்னும் நுழையாமல் இருப்பதும் .....நுழைந்ததும் காணாமல் போன காரணம் தான் என்ன ? இதில் சாதகத்தை விட பாதகம் அதிகம் என்பதால் தானே ? அப்படி பட்ட துறையில் 40 வருடமாக போராடி வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கும் அவர் " சாதிக்க வில்லையா " இல்லையா என்பதை நண்பர்கள் தாம் முடிவெடுக்க வேண்டும் .எனவே ஆசிரியர் மீண்டும் இந்த பதிலை தெரிவித்தால் நண்பர்களின் கண்டனம் பலமாக இருக்கும் என்பதை ஆசிரியருக்கு கண்டனதுடனும் ...,பணிவுடனும் கூறி கொள்கிறேன் .

இனி " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வேண்டி நண்பர்களின் போராட்டம் ஏன் என்பதை பார்க்கலாம் .

1...... பழைய நமது காமிக்ஸ் இதழ்களை கண்டாலே மனம் மகிழ்ச்சியில் துள்ளும் பொழுது அந்த இதழின் வரலாறை படிக்கும் பொழுது அந்த காமிக்ஸ் இதழ்கள் கிடைக்காத சந்தோசத்தை இந்த தொடர் வாசகர்களுக்கு தருகிறது .தொடராக வரும் பொழுதே அப்படி என்றால் " தொகுப்பாக " வந்தால் .....

2.....பழைய நமது காமிக்ஸ் இதழ்கள் கைக்கு கிடைக்கும் பொழுது முன்னர் அதை படித்து இருந்தால் .அந்த இதழ்கள் ...அந்த கால கட்டத்திற்கு நம்மை அழைத்து செல்லும் பொழுது ....ஆசிரியர் அவர்களும் நம் கால பயணத்தில் அழைத்து செல்லும் மன நிலையை இந்த தொடர் வாசகர்களுக்கு தருகிறது .தொடராக வரும் பொழுதே அப்படி என்றால்  " தொகுப்பாக " வந்தால் ....

3.....நமது பால்ய கால தோழன் நம்மிடம் திடிரென தோன்றி அந்த சிறு வயது நினைவுகளை கிளறினால் அந்த நினைவுகளில் நாம் எப்படி மகிழ்ச்சி  உடன் திளைக்கிறோம் .அந்த கிளர்ச்சியை இந்த தொடர் நண்பர்களுக்கு தரும் பொழுது " தொகுப்பாக " வந்தால் ....

4....இந்த தொடரை படிக்கும் பொழுது நமது சிங்கத்தின் கரங்களை சந்தோஷமாக பிடித்து நடந்து செல்லும் அந்த பயணம் சில நிமிடங்களில் முடிவடையும் அந்த ஏக்கம் " தொகுப்பாக " வந்தால்  ..........

இப்படி இன்னும் பல முடிவடையாத சந்தோசங்களை நண்பர்களுக்கு தந்து கொண்டு இருக்கும் இந்த தொடர்  " தொகுப்பாக " வந்தால் .....ஆசிரியர் சிந்திக்க வேண்டும் .எனவே தயவு செய்து  ஆசிரியர் " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பை வெளி இட ஆவண செய்ய வேண்டும் .சந்தோஷ குளத்தில் குதிக்கும் நண்பர்களை சந்தோஷ கடலில் தள்ளி மகிழ்ச்சி அடைய வைப்பது ஆசிரியரின் கடமை .கடமை தவறினால் " கண்டனம்  " தெரிவிப்பது எங்கள் கடமை .விரைவில் நல்ல பதிலை ஆசிரியரிடம் எதிர் பார்த்து கொண்டு இருப்பது ..................

     " அனைத்துலக தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் நற்பணி மன்றத்தினர் " .


வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

காமிக்ஸ்களை துரத்துவோம் ....


நண்பர்களே ....வணக்கம் ....

நலம் ....நலமா .....

காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் காமிக்ஸ் புத்தங்களை துரத்தி ..,துரத்தி ...சென்ற காலம் போய் இப்பொழுது காமிக்ஸ் புத்தங்கள் நம்மை துரத்தி ...துரத்தி வருவது உண்மையில் கொண்டாட்டமான நிகழ்வுதான் இல்லையா தோழர்களே ....இந்த மாதம் இரண்டே ..,இரண்டே புத்தங்கள் தான் ....அதுவும் குறுகிய பக்கங்கள் என்ற பொழுது புத்தகம் வரும் நாள்களில் ஏற்படும் ஒருவித மகிழ்ச்சி ஒரு மாற்று குறைந்தே காணப்பட்டது .ஆனால் திடிரென ஆசிரியர் ஒரு நாள் தாமத்தை ஏற்று கொண்டால் மூன்று புத்தங்கள் என்று அறிவித்த பொழுது மகிழ்ச்சி பல மடங்கு ஏறியது நண்பர்கள் அனைவருமே உணருவார்கள் .அதிலும் இனி மாதம் தோறும் குறைந்த பக்கங்கள் என்றால் மூன்று இதழ்கள் கண்டிப்பாக அறிவித்து இருப்பது காமிக்ஸ் நண்பர்களுக்கு எவ்வளவு பெரிய கொண்டாட்டம் என்பது புரிந்து இருக்கும் .இப்படி திடீர் ..,திடீர் என ஆசிரயர் தனது கால்கட்டை விரலை முகத்திற்கு அருகே கொண்டு செல்வது நமக்கு நடை பாதையில் பனி சறுக்கு மட்டையை கொண்டு பனியில் சறுக்கி செல்வது போன்ற சந்தோசத்தை ஏற்படுத்துகிறது .இதே போல அடிக்கடி " தீபாவளி மலர் " போல குண்டு புத்தங்களும் இடை இடைய புகுத்தினால் அட்டகாசமாக தான் இருக்கும் .அதற்கு அவரின் மேஜை கீழே 1987 போல பல கதைகள் கொட்டி கிடந்தது போல இப்பொழுதும் கொட்டி ..,கொட்டி கிடக்க வேண்டுவோம் .

இந்த மாதம் அழகான மூன்று இதழ்கள் களம் கண்டு உள்ளன .திகில் ஹீரோவான ரோஜர் பல வருட இடைவெளிக்கு மீண்டு ( ம் )  " காலத்தின் கால் சுவடுகளில் " என்ற சாகசத்தின் மூலம் நம்மை காண வருகிறார் .அடுத்த நாயகரும் திகில் நாயகரின் சாகசம் தான் .அவர் நமது ரிப்போர்ட்டர் "ஜானி " . "நினைவுகளை துரத்துவோம் " என்ற சாகசத்தின் மூலம் நம்மை சந்திக்க காத்து கொண்டு இருக்கிறார் .அடுத்து வருபவர் " ஜில் ஜோர்டன் " காவியில் ஒரு ஆவி மூலமாக சந்திக்க வருகிறார் .இந்த மூன்று இதழ்களுமே தனக்குள் போட்டி கொண்டால் கதை தரத்திலும் ..,சித்திர தரத்திலும் எவை ..எவை முன்னுக்கு வருகின்றன என "கதையை " சொல்லாமல் இங்கே பார்க்கலாம் நண்பர்களே .

மூன்று இதழ்களில் கதைகளில் முதல் இடம் பிடிப்பது நமது  ஜானி அவர்களின் " நினைவுகளை துரத்துவோம் " தான் .ஆசிரியர் ஹாட் -லைனில் ஜானி கதைகளில் டாப் 5 இல் இது என்று அறிவித்து இருந்தார் .என்னை பொறுத்தவரை நான் படித்த ஜானி கதைகளில் இது " முதல் இடத்தை " பிடிக்கிறது .எப்பொழுதும் குற்றத்தை கண்டு பிடிக்க வருபவர்  இம்முறை தானே சிக்கலில் மாட்டிக்கொண்டு அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதையும் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே ..அச்சு தரப்பிலும்  முழு நீள திருப்தி .அழகான வண்ண ஓவியங்கள் ..,சிறந்த அச்சு தரம் ..விறுவிறுப்பான கதை ஓட்டம் என்று நம்மை அழகாக மயக்கி விட்டார் ஜானி .அட்டை படமும் அழகு தான் என்றாலும் மூன்றில் முதல் இடம் அதற்கு இல்லை என்பதே   உண்மை .மற்ற படி மூன்று ஹீரோகளில் இம்முறை முதல் இடம் பிடிப்பது ஜானி அவர்களே .அந்த இதழின் அட்டை படம் கீழே ...


அடுத்து இரண்டாம் இடத்தை பிடிப்பவர் ரோஜர் .ஆனால் அட்டை படத்திலும் சரி ...உள்ளே சித்திர தரத்திலும் சரி ஓவியர் வில்லியம் வான்ஸ் கதைகளுக்கே சவால் விடும் அளவு அட்டகாசமான ஓவியங்கள் .கதையை  படிக்கும் நண்பர்கள் தயவு செய்து ஆர அமர ஓவியத்தை ரசித்து பார்த்து படித்தால் நீங்களே அந்த கானகத்தில் பயணம் செய்யும் அனுபவம் கிடைக்கலாம் .பல இடங்கள் அது ஓவியமா ....புகைப்படமா என்ற சந்தேகத்தை  நமக்கு ஏற்படுத்துவது ஓவியருக்கு உள்ள திறமையை காட்டுகிறது .கதை களம் குறைவு என்றாலும் ஓவிய திறமையாலும் ...,அதை குறைக்காமல் அழகான அச்சு தரத்தாலும் " ரோஜர் " அவர்கள் நம்மை இதழில் கட்டி வைக்கிறார்கள் .அதே சமயம் ஆசிரியர் " முத்து காமிக்ஸ் " என்றாலே ஹாட் -லைன் பகுதியில் குறைவாக வருவதை தவிர்த்து வந்தால் நன்றாக இருக்கும் .அதன் அழகான அட்டை படம் கீழே ....
மூன்றாம் இடத்தை அதாவது கடைசி இடத்தை பிடிப்பது நானே எதிர் பார்க்காத ....ஆவலுடன் எதிர் பார்த்த " ஜில் ஜோர்டனின் " காவியில் ஒரு ஆவி .எப்படி மிகவும் முதல் சாகசத்தில் நம்மை " டயபாளிக் " அவர்கள் மயக்கி அடுத்த சாகசத்தில் தொங்கலில் விட்டாரோ அது  போல இவரும் தனது முதல் சாகசத்தில் நம்மை மனம் கவர்ந்தவர் இதில் அதை தவற விட்டார் என்பதே உண்மை .அதிலும் ஆசிரியர் நீங்கள் காண போவது " எழுத்து பிழை " அல்ல என்று அறிவித்து இருந்தாலும் அந்த தவறான வார்த்தை குழப்பங்கள் கதையில் நகை சுவையை அளிப்பதற்கு பதில் கதை ஓட்டத்தில் ஒரு செயற்கை தன்மையை தான் அளிக்கிறது .ஆனால்  புத்தகத்தை திறந்தவுடன் விரைவில் வருகிறது விளம்பரங்கள் நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது .அதுவும் 214 பக்க சாகசமான டெக்ஸ் அவர்களின் " நில் ...கவனி ....சுடு ..." தலைப்பு ......லக்கி சாகசத்தின் அறிவிப்பு என அந்த இதழ்கள் அடுத்த மாதமே வர கூடாதா என்ற ஏக்கத்தை வரவழைக்கிறது .

       அதே சமயம் சில பகுதிகளை புத்தகம் வருவதற்கு முன்னரே  இணையத்தில் வெளி இடுவதை தவிர்த்தால் புத்தகத்தில் காணும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் .உதாரணமாக 2013 கண்ணோட்டம் முதல் முறை புத்தகத்தில் கண்டு இருந்தால் படிபதற்க்கு இன்னும் சுவையாக காணப்பட்டு இருக்கும் . சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரை செல்ல ..செல்ல காமிக்ஸ் கதைகளை விட சுவராஸ்யமாக செல்வது எனக்கு மட்டும் தானா ? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் .மொத்தத்தில் "ஜில் ஜோர்டன் " கொஞ்சம் கீழே இறங்கி வந்தாலும் மற்ற இரண்டு இதழ்களால் இந்த மாதமும் அழகான "காமிக்ஸ் மாதம் " ஆக தான் அமைந்துள்ளது .மீண்டும் விரைவில் சந்திப்போம் தோழர்களே ......நன்றி .