செவ்வாய், 30 ஏப்ரல், 2013

காமிக்ஸ் நினைவலையில் ...

காமிக்ஸ்  நண்பர்களுக்கு ..,
      மீண்டும் ஒரு முன் முன் எச்சரிக்கை .மீண்டும்  இது ஒரு சுய புராண படலம் .விழி பிதுங்கபவர்கள் தெரித்து ஓடி விடுங்கள் .கோவையில் அனைத்து காமிக்ஸ் பறி கொடுத்து விட்டு பரிதாபத்துடன் நின்ற நான் இரண்டே மாதத்தில் மீண்டும் ஒரு காமிக்ஸ் அட்டை பெட்டி உடன் சேலம் வந்தது தங்களுக்கு நினைவிருக்கலாம் .(ஆம்மாம் ....பெரிய லார்கோ பிளாஸ் பேக் ..மண்டையில் மறந்து போகாமல் இருக்க என்று முனகினால் நான் பொறுப்பல்ல )இரண்டே மாதத்தில் மீண்டும் பல அரிய லயன் ,முத்து சேர்த்த கதையை சொல்லாமல் சேலம் வந்து என்ன பயன் ..?
         ஏற்கனவே சொன்னபடி ,அனைத்து காமிக்ஸ் புத்தங்களை இழந்ததாலும் ,பள்ளி ஆண்டு விடுமுறை விட்டபடியாலும் புத்தங்களை சேகரிக்க மூளை மீண்டும் வேலை செய்தது .கைவசமுள்ள சிற்சில காமிக்ஸ் புத்தங்களையும் ,பாதி விலைக்கு வாங்கிய சில நாவல்களையும் ,(அப்போதிய வயதில் நாவல் படிக்க ஆரம்பித்த காலம் (பயந்து கொண்டே ),அனைத்து புத்தங்களையும் அம்மா ,அப்பாவிற்கு தெரியாமல் ஒளித்து வைப்பது தனி கலை )நண்பி வசந்தி இடம் உள்ள புத்தங்களையும் சேகரித்து ரேஸ் கோர்ஸ்  குடியிருப்பு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஒரு புத்தக ஸ்டாலை திறந்தோம் .கடைக்கு மூல தனம் கையில் வைத்திருந்த சில புத்தங்களும் ,ஒரு முழு நீள கயிறும் (முழு நீள கையறு என்றதும் கற்பனையை தட்டாதீர்கள் ).மைதானத்தின் ஓரத்தில் உள்ள இரண்டு மரங்களுக்கும் இடையே அந்த கையரை கட்டி எங்கள் கைவசமுள்ள புத்தங்களை தொங்க விட்டோம் .புக் ஸ்டால் ரெடி .கோட்டர்சில் 200 கும் மேல் உள்ள குடி இருப்பாலும் ,அங்கே உள்ள ஒரே ஒரு புத்தகக்கடை இது மட்டுமே என்பதாலும் ,அப்போது எல்லாம் பொழுது போக்கு பொதிகையின் வெள்ளி இரவு ஒளியும் ஒலியும் ,ஒரே ஒரு திரை படம் என்பதாலும் நாங்களே எதிர் பார்க்காத வரவேற்பு .
          புத்தகம் அனைத்தும் பாதி விலைக்கு (நாங்கள் வாங்கியதும் பாதி விலைக்கு தான் ),இரண்டு புத்தகங்கள் கொடுத்தால் ஒரு புத்தகம் ,லயன் &முத்து காமிக்ஸ்ஒன்று  கொடுத்தால்  இரண்டு நாவல்கள் என்ற அதிரடி தள்ளுபடி எங்கள் புக் ஸ்டாலை தூள் படுத்தியது .அப்பொழுது தான் பல பெண் மணிகளும் நமது காமிக்ஸ் அடிமைகள் என்பதை கண்டு கொண்டோம் .பல பெண்கள் தங்களிடம் உள்ள காமிக்ஸ்களை கொடுத்து விட்டு நாவல்களை வாங்கி விட்டு சென்றார்கள் .(எங்களிடம் காமிக்ஸ் கேட்டால் மறைத்து விடுவோம் ).எங்கள் கடையின் வரவேற்பு பல நண்பர்களை பிஸ்னெஸ் பார்ட்னர் ஆக கெஞ்சியதும் ,ஒரு சிலரை போட்டி கடை வைக்க தூண்டியதும் தனி கதை .அந்த இரண்டு மாத "தொழில் அதிபர் "முடிவில் கிடைத்தது தான் மீண்டும் பல அரிய லயன் ,முத்து ,ராணி ,திகில் போன்ற காமிக்ஸ்களும் ,100,150 ரூபாய் சில்லறை காசுகளும் .(அப்பொழுது அந்த பணத்தின் மதிப்பு விலை மதிக்க முடியாதது ).புத்தங்களையும் ,பணத்தையும் இருவரும் ஆளுக்கு பாதியாக பகிர்ந்து கொண்ட சில நாள்களில் தான் அவர் வேறு  இடத்திற்கு குடி மாறியதும் ,நான் சேலம் வர நேர்ந்ததும் .
                 சேலம்  நான் குடி வந்ததும்  தேட ஆரம்பித்த முதல் இடம் பழைய புத்தக கடைகள் தான் .அப்படி தார மங்கலம் பகுதியில் இருந்தது தான் "திலகா பாட்டு புத்தக நிலையம் " .அங்கேயும்  பல காமிக்ஸ் புத்தகங்கள் கிடைக்க  ஆரம்பித்தன .(அதர்காக இப்பொழுது தார மங்கலம் ஓடி வர வேண்டாம் நண்பர்களே .நான் சொல்லுவது 10 ,12 வருடத்திற்கு முன் .இப்போது அங்கே இருப்பது  இண்டியன் ஓவர் சீஸ் பேங்க் ) அங்கே பாதி  காமிக்ஸ் புத்தகங்களும் ,சேலம் வள்ளுவர் சிலை அருகே உள்ள பழைய புத்தக மார்கெட் லும் புத்தகங்களை சேகரித்தேன் .ஆனால் அப்பொழுதும் கை காசு பற்றா குறை தான் .10 புத்தகம் இருந்தால் 3,4 புத்தகம் மட்டுமே வாங்க வேண்டிய  நிலை .அதுவும் அட்டை படத்தில் மாயாவி ,ஸ்பைடர் இருந்தால் அதை  மட்டுமே வாங்கி விட்டு மற்றதை விட்டு விடுவேன் .சேலம் பழைய பஸ் நிலையத்தை சுற்றிலும் திரை அரங்கு அதிகம் .ஒவ்வொரு திரை அரங்கிற்கும் வாசல் அருகே தள்ளு வண்டியில் புத்தக கடை இருக்கும் அப்பொழுது .அனைத்திலும் காமிக்ஸ் பாதி விலைக்கு கிடைத்தது .ஆனால் கோயம்புத்தூர் பாச்சா  (சுடுவது )இங்கே  பலிக்க வில்லை .காசு இருந்தால் மட்டுமே காமிக்ஸ் வாங்க முடியும் என்ற சூழ்நிலை .
         
            இப்படி கொஞ்ச ,கொஞ்சமாக காமிக்ஸ் புத்தகத்தை சேர்த்து வந்த சமயத்தில் தான் தா .மங்கலத்தில் உள்ள புத்தக கடையில் சில காமிக்ஸ் நண்பர்களையும் ,முக்கிய காமிக்ஸ் எதிரியையும் சந்தித்தேன் .ஒரு நாள் அந்த கடையில் என்னிடம் உள்ள நாவல்களை கொடுத்து விட்டு காமிக்ஸ் வாங்கி கொண்டு இருக்கும் போது தான் ஒரு 50 வயது மதிக்க தக்க ஒரு பெண்மணி அறிமுகமானார் .நான் நாவலை கடையில்  கொடுப்பதை பார்த்த அவர் என்னிடம் ,கண்ணு ,எங்கிட்ட காமிக்ஸ் நிறைய உள்ளது .உன்னிடம் உள்ள நாவலை கொடுத்தால் நான் என்னிடம் உள்ள காமிக்ஸை தருகிறேன் என்றதும் என் மனசு வானத்தில் பறக்க ஆரம்பித்தது .அங்கே அருகே உள்ள அவர் இல்லத்திற்கு கூட்டி செல்ல அங்கே அவர் வீட்டில் நாவல்களும் ,காமிக்ஸ்களும் கொட்டி கிடந்தது .பிறகு அப்படி அடிக்கடி  காமிக்ஸ் வாங்கி வரும் பொழுது தான் இன்னொரு நண்பரிடமும் அதே போலே கூறி என்னிடமும் அறிமுகபடுத்தினார் .அந்த நண்பரும் அடிக்கடி  இல்லத்திற்கு வந்து படிக்க புத்தகம் வாங்கி போவார் .அப்படி ஒரு முறை நான் இல்லாத போது  வந்த அந்த காமிக்ஸ் வெறியர் மொத்தமாக பெட்டி உடன் அனைத்து புத்தகத்தையும் சுருட்டி விட்டு சென்றார் .(முற் பகல் செய்யின் பிற்பகல் விளையும் பழமொழி இப்படி தான் புரிய வேண்டுமா ..)
        அன்று நான் அழுத அழுகை பிறகு எதற்கும் அப்படி அழுததில்லை என்பது இன்று வரை கண்கூடு .இப்படி இரண்டு நாள் சோகத்தில் இருந்த நான் பழைய புத்தக கடைக்கு செல்ல அந்த பெண்மணியும் கடைக்கு வந்தார் .நான் அவரிடம் வினவு வதற்கு முன் அவசரமாக அவர் என்னிடம் ,  "கண்ணு ..உங்கூட ஒரு பையன்  வந்து புக்கு வாங்கிட்டு போவானே .அவன் அட்ரெஸ் உனக்கு தெரியுமா "என்று வினவ  ..,என்னடா நாம கேக்க வேண்டிய கேள்வியை இவங்க கேக்குறாங்க என்று முழித்து "ஏங்க்கா " ன்னு  நான் கேட்டா ...உன்கூட வந்து காமிக்ஸ் வாங்கிட்டு போற பையன்  நான் ரெண்டு நாளா ஊர்ல இல்லாததை தெரிந்து பூட்டை உடைத்து என்கிட்ட இருந்த எல்லா காமிக்ஸ்  புத்தகத்தையும் தூக்கிட்டு போய்ட்டான்பா .பாத்தா சொல்லுப்பா ..,ன்னு சொல்ல எனக்கு தலை சுற்றியது .(அப்பவும்  மனசுக்குள் ஒரு ஆறுதல் .அப்பா ..நம்ப வீட்டு பூட்டு தப்பியது .நான் கதவை  தொறந்து தானே வைத்திருந்தன் .)நானும் என்னோட சோக கதையை சொல்லிட்டு ..நீங்க பாத்தா எங்கிட்ட சொல்லுக்கா ..நானும் சொல்லிட்டு வந்தேன்  .
           இப்படி மீண்டும் எல்லா புத்தகத்தையும் பறி கொடுத்து விட்டு தவித்து கொண்டு நின்றேன் .இந்த சமயத்தில் பள்ளி படிப்பு முடித்து விட்டு பெட்ரோல் பங்கில் கேசியர் பணிக்கு செல்ல கையில் பண புழக்கம்  அதிகமாய்ற்று .அந்த சமயம் தாரமங்கல புத்தக கடை இல்லாமல் போக சேலம் வாரம் ஒருமுறை சென்று வாங்க ஆரம்பித்தேன் .இந்த சமயம் பார்த்து சேலத்து கடை காரர்களுக்கு என்ன வந்ததோ தெரிய வில்லை .இரண்டு ரூபாய் புத்தகத்தை 40 ரூபாய் ,50 ரூபாய் என்று விலை வைக்க அதிகம் புத்தகம் வாங்க முடிய வில்லை .(அது இப்போது 300,400 ஆனது அதை விட கொடுமை ).
             இந்த சமயத்தில் தான் எனது தாய் வழி உறவினர் நீ இந்த வயசுல வேலைக்கு போறது போதும் ,படிக்கிற வழிய பாரு னு "சிதம்பரம் "கூட்டி சென்றார் .இரண்டு வருட சிதம்பர ஜாகை யில் எனது காமிக்ஸ் பயணமோ வேறு வழியில் சென்றது .
                                             (சேலம் படலம் முற்றும் )


பின்குறிப்பு 1 : "டேய் ..நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடகாரா ..என்னமோ பாக ,பாகமா போட்டுட்டு வர ..?மனசுல என்ன "சிங்கத்தின் சிறு வயது "ஆசிரியர் ன்னு நினைப்பா ..? அப்படின்னு திட்டாதீர் நண்பர்களே ..அவர் அளவுக்கு எல்லாம் நான்" வொர்த் "இல்லன்னு விண்வெளி ஜீவ ராசிகளுகே கூட தெரியும் .கண்டிப்பா அடுத்த பாகத்துல முடித்து விடுகிறேன் .

பின் குறிப்பு 2 :பதிவுல படமே இணைக்க வில்லைய  என்று வினவும் நண்பர்களுக்கு ..,இணைத்தால் விஸ்வா சார் போல டக்கரா போடணும் .இல்லேன்னா கம்முன்னு கிடக்கணும்  .,என்ற நினைப்பால் நோ படம் .

பின் குறிப்பு 3: இப்படி கஷ்டப்பட்டு .கஷ்டப்பட்டு புத்தகத்தை சேர்த்து மொத்தமா ஒவ்வொரு முறையும்  தூக்கி கொடுத்துட்டு வரும் என்னை பார்த்து ..,பரிதாப பட்டு 2,3 காப்பி வைத்திருக்கும் நண்பர்கள் எனக்கு புத்தகம் கொடுக்க மனது துடிக்கலாம் :-).அவர்கள் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளலாம் .கூச்ச பட வேண்டாம் .
                                 நன்றி ...

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

ஒரு காமிக்ஸ் பயணத்தில் ...

நண்பர்களே ..,
           வணக்கம் .இந்த பதிவில் நான் காமிக்ஸ் படிக்க  ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை என் வாழ்க்கை பயணத்தில்  "காமிக்ஸ் " எவ்வாரல்லாம் பங்கு பெற்றுள்ளது என்று நினைத்து பார்க்கையில் எழுந்தது தான் .எனவே இதில் ஒரு காமிக்ஸ் புத்தகத்தின் பார்வையோ ..,அல்லது விமர்சனமோ என எதிர் பார்த்து வந்தீர்கள் என்றால் ஏமாந்து விடுவீர்கள் .இது  முழுக்க முழுக்க ஒரு சுய புராண காமிக்ஸ் கட்டுரை .ஆர்வமில்லாதவர்கள் இப்பொழுதே விடுங்கள் ஒரு "ஜூட் ".
            இப்பொழுது எனது ஜாகை சேலத்தில் இருந்தாலும் நான் பிறந்தது ,வளந்தது ,காமிக்ஸ் படிக்க ஆர்வமானது அனைத்தும் கோவையில் தான் .கோவை ரேஸ்  கோர்ஸ் தான் நான் குடி இருந்த கோவில் .நான் முதன் முதலில் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தது நமது லயன் காமிக்ஸோ ,முத்து காமிக்ஸோ ,ராணி காமிக்ஸோ அல்ல .கோவை அண்ணாசாலை மேம்பாலம் அருகே உள்ள பள்ளியில் நான் படித்து கொண்டு இருக்கும் போது  (4வது ,5வது ) எதிரே உள்ள மிட்டாய் கடையில் 20 பைசா ,30 பைசா விற்கு 10 பக்கத்தில் உள்ளூர் ஓவியத்தில் காமிக்ஸ் புத்தகம் கிடைக்கும் .(அதிலும் மெயின் ஹீரோ மாயாவி தான் ). மாதம் ஒரு பத்து தலைப்பில் புத்தகம் வந்து கொண்டே இருக்கும் .அனைத்தும் வாங்கி படிக்க ,அதில் ஒரு இனம் புரியா சந்தோஷம் .பிறகு நான் குடி இருந்த ரேஸ்  கோர்ஸ் கோட்டர்ஸில் பல அடுக்கு மாடி குடி இருப்பிற்கு ஒரே ஒரு மளிகை கடை .அங்கே வருவது செய்தி தாள் மற்றும் ராணி ,தேவி ,ராணி முத்து மற்றும் ராணி காமிக்ஸ் .தவறாமல் ராணி காமிக்ஸ் 1 ம் தேதி ,15 ம் தேதி கடைக்கு வந்து விடும் .1.50 விலையில் அட்டைப்படம் கலக்கலாக கடையில் தொங்கி கொண்டு இருக்கும் .வாங்க மனது துடித்தாலும் கையில் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது .தினம் பாக்கெட் மணியாக கிடைப்பது 10 பைசா . பள்ளி விடுமுறை என்றால் அதுவும் கிடைக்காது .கடையில் தொங்கி கொண்டு இருக்கும் புத்தகத்தை ஒவ்வொரு முறையும் ஆர்வமுடன் பார்த்து கொண்டு இருக்கும் பொழுது தான் அந்த துணையும் கிடைத்தது .
       பக்கத்து வீட்டில் குடி இருந்த எனது ஒத்த வயதுடைய வசந்தி என்ற பெண் தான் அந்த துணை .என்னை போலவே அவரும் காமிக்ஸ் வாங்க முடியாமல் தவிக்க ,இருவரும் அவர் ,அவரிடம் இருக்கும் புத்தகத்தை பரிமாறி கொள்ள நட்பு இறுகியது .எப்படியும் ராணி காமிக்ஸை இருவரும் சேர்ந்து வாங்க முடிவெடுத்தோம் .ஆளுக்கு பாதி காசு போட்டு புத்தகம் வாங்க வேண்டும் .ஒரு புத்தகம் எனக்கு ..,அடுத்த புத்தகம் அவர்க்கு என ஒப்பந்தம் செய்தோம் . ஆனால் ரூபாய்  1.50 சேர்க்க ஒரு மாதம் ஆக புத்தகம் வாங்க முடிய வில்லை .அப்பொழுது தான் இருவரும் சேர்ந்து மூளையை கசக்கி ஒரு ஐடியாவை கண்டு பிடித்தோம் .ஒவ்வொரு முறையும் புத்தகம் வரும் பொழுது பழைய புத்தகம் 4,5 மீதம் கடையில் இருக்கும் .இருவரும் கடைக்கு சென்று  "அண்ணாச்சி ..எங்களுக்கு புது புத்தகம் வேண்டாம் .பழைய புக்கை பாதி விலைக்கு கொடுக்க முடியிம்மா என கெஞ்ச ..,கடைக்கார அண்ணாச்சியும் ஒத்து கொண்டார் .எங்களுக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி .இனி 0.75 பைசா சேர்த்தல் போதுமே .பிறகு 15 ம் தேதி  வந்தால் 1ம் தேதி புத்தகத்தையும் ..,1ம் தேதி வந்தால் போன மாத 15ம் தேதி புத்தகத்தையும் வாங்கி சேமிக்க ஆரம்பித்தோம் . (நண்பியே ...இப்பொழுது எங்கே உள்ளாயோ ..இன்னமும் காமிக்ஸ் படிகிறாயோ அறியேன் ..ஆனால் எங்கிருப்பினும் நலமுடனும் ,காமிக்ஸ் உடனும் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன் ).
          பிறகு எனது பள்ளியின் ஜாகை  மரக்கடைக்கு மாற ...,ரேஸ் கோர்ஸ்  பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்ல  KG திரை அரங்கு ,அண்ணாசாலை ,மேம் பாலம் என 5,6 கிலோ மீட்டர் நடந்தே செல்வோம் .வழியில் புத்தக கடை வந்தால் மட்டும் காமிக்ஸ் ஏதாவது கிடைக்குமா என அலசி ,அலசி பள்ளிக்கு செல்லும் போது  தான் அண்ணாசாலை மேம் பாலம்  அருகில் உள்ள ஒரு புத்தக நிலையத்தில் இன்றும் நினைத்தால் போதை வரும் நமது லயன் ,முத்து ,திகில் என காமிக்ஸ் கட்டு ,கட்டாக அங்கே இருக்க கண்டேன் ..கால்களோ பள்ளிக்கு இழுக்க ..,மனதோ கடையில் மட்டுமே .பாக்கெட் சைஸ்..,வித்தியாசமான காது  நீண்ட ஒரு மன்மதன் (spider )..,இரும்பு கை மனிதன் என அட்டைப்படமும் ,அதில் இருந்த சிங்க லோகோவும் மனதிலே ஆணி போல பதிய  மாலை வீடு சென்றதும் நான் சென்றது நண்பி வசந்தி இடம் தான் .பெற்றோர் இடம் போனால் ..,காமிக்ஸ் வாங்க காசு வேண்டும்  என்றால் .கிடைப்பது அப்பாவின் லத்தி அடி தான் என்பது எனக்கு தெரியாதா என்ன ..? KG காம்ப்ளக்ஸ் அருகே வீடு இருந்தும் ,தினம் அதன் வழியாக நடை பயின்றாலும் பிறந்ததில் இருந்து அங்கே இருந்தது  வரை ஒரு திரை அரங்கிற்கு கூட செல்லாத அளவு கட்டு பாடு என்றால் காமிக்ஸ் வாங்க காசு கிடைக்குமா என்ன ..?

        அடுத்த நாள் வசந்தி இடமும் ,என்னிடமும் இருந்த சில்லறையை சேர்த்தி கடைக்கு சென்றால்... விலையை கேட்ட வுடன் மயக்கம் வராத குறை .விலை இரண்டு ரூபாய் ,மூன்று ரூபாய் .0.75 பைசா சம்பாதிக்க இருவரும் திண்டாட 2 ரூபாய்க்கு எங்கே போவது .அப்போது தான் பள்ளியிலும் நண்பர்கள் அறிமுகமானார்கள் .காமிக்ஸ் படிக்கும் நண்பர்கள் மட்டுமே அப்போது  ஒரு கூட்டாக சுற்றுவோம் .பள்ளிக்கு பாட புத்தகம் கொண்டு வருகிறமோ ..,இல்லையோ கண்டிப்பாக காமிக்ஸ் புத்தகம் கொண்டு செல்வோம் .அனைவரும் கதை புத்தகத்தை மாற்றி கொண்டு வகுப்பு அறையிலைய படித்து முடிக்க போட்டி போடுவோம் .அப்பொழுது நான் ராணி காமிக்ஸை கொண்டு செல்ல நண்பன் ஒருவன் தினம் லயன் ,முத்து காமிக்ஸ் கொண்டு வர அவன்  நெருங்கிய நண்பன் ஆகினான்  .லயன் ,முத்து காமிக்ஸை படிக்க ,படிக்க தான் அதுவரை 007 ,டைகர் &ஹென்றி ,இன்ஸ்பெக்டர் ஆசாத் ,மன்னர் பீமா இவர்களை விட உசத்தியான ஹீரோ கள் உள்ளனர் என்பதை அறிந்தேன் .இரும்பு கை மாயாவி கனவில் வர ஆரம்பித்தார் .ஸ்பைடர் மனிதில் குடி இருக்க ஆரம்பித்தார் .காமிக்ஸ் என்றால் ராணி .பொன்னி இதுதான் என்று நினைத்து இருக்க லயன் ,முத்தை படிக்க ஆரம்பித்த வுடன் இதை தவிர வேறு காமிக்ஸ் இல்லை என மனம் அலை பாய்ந்தது .அனைத்து  லயன் புத்தகத்தையும் வாங்கி சேர்க்க முடிவெடுத்து , செயல்  பட  முனைந்தேன் .
       அப்பொழுது தான் பள்ளி நண்பன் ஒருவன் அந்த இனிப்பான செய்தியை சொன்னான் .தள்ளு வண்டியில் விற்கும் பழைய புத்தக கடையில் காமிக்ஸ் அனைத்தும் பாதி விலையில் கிடைப்பதாக ,அதுவும் லயன் ,முத்து  அங்கே குவிந்து கிடைபதாக சொல்ல பிறகு தான் எனது பார்வை பழைய புத்தக கடைக்கு சென்றது .(இன்று வரை அது தொடர்வது தனி கதை ).அப்பொழுது KG  மருத்துவ மனை அருகே தள்ளு வண்டி புத்தக கடை அதிகம் காணப்படும் .வாரம் ஒரு முறை பாக்கெட் மணியை  சேர்த்து புத்தகத்தை வாங்க ஆரம்பித்தேன் .அப்படியும் போத வில்லை .ஆளில்லா கடையில் பணம் இருந்தால் கூட எடுக்க தயங்கும் மனது காமிக்ஸை தெரியாமல் எடுக்க தயங்க வில்லை .இரண்டு புத்தகம் வாங்கினால் மூன்று புத்தகம் பாக்கெட்டில் வந்துவிடும் .அதுவும் லயன் ,முத்து  காமிக்ஸ் மட்டுமே .காரணம் அதை  தான் பாக்கெட்டில் டக் கென்று போட்டு கொள்ள முடியும் ."முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் "என்பது அப்போது தெரிய வில்லை .ஒரு முறை கையும் களவுமாக பிடிபட  இனி கடை பக்கமே வர கூடாது என மிரட்டி அனுப்ப பட புத்தகம் சேருவது குறைய ஆரம்பித்தது .(அந்த கடையில் தான் அதிகம் காமிக்ஸ் கிடைக்கும் .சுலபமாக சுடவும் முடியும் ).
          மீண்டும் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது .வீட்டை விட்டு புத்தக கடைக்கு செல்லும் போது  மூஞ்சிக்கு பவுடர் அதிகம் அப்பி கொண்டு அம்மாவின் மை டப்பியை பாக்கெட்டில் போட்டு கொண்டு கடைக்கு அருகே சென்றவுடன் ஒரு நெற்றி போட்டு வைத்து கொண்டு (வீட்டிலைய பொட்டு வைத்தால் யார் உதை வாங்குவது )மாறு வேடத்தில் சென்று புத்தகம் வாங்க முனைந்தேன் .(எத்துனை MGR படம் பார்த்திருப்போம் ).ஆமாம் ..திரை அரங்கே செல்லாத நீ எப்படி படம் பார்த்தாய் என சந்தேகம் சிலருக்கு வரலாம் .(நாங்கள் குடி இருந்த ரேஸ் கோர்ஸ் பகுதியில் வாரம் ஒரு முறை திரை கட்டி படம் போடுவார்கள் .)எனது மாறு வேட திறமையா ..,கடை காரர்  மறந்து போனாரோ தெரியாது .எனக்கு வெற்றி .அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு சேர்த்த புத்தகம் பேராசையால் தொலைந்தது .காமிக்ஸ் நண்பன் ஒருவன் தன்னிடம் உள்ள அனைத்து  காமிக்ஸையும் காட்ட ஒரு நாள் அவன் இல்லத்திற்கு கூட்டி சென்றான்  .
        அங்கே போனால் மயக்கம் வராத குறை .இரண்டு ட்ரன்க் பெட்டி நிறைய காமிக்ஸ் புத்தகங்கள் .அடுத்த நொடியே மீண்டும் பாழாய் போன மூளை வேலை செய்ய அவனிடம் .."நண்பா ..நாம் இருவரும் பார்ட்னர் ஆகலாம் .என்னிடம் உள்ள புத்தகத்தை எல்லாம் உன்னிடம் தருகிறேன் .நான் கேர்க்கும் போது  உன்னிடம் உள்ள புத்தகத்தை படிக்க தா "என்றேன் .அவனும் சந்தோசமாக ஓகே சொல்ல அடுத்த நாளே என்னிடம் உள்ள புத்தகத்தை எல்லாம் அட்டை பெட்டியில் போட்டு கொண்டு அவனிடம் கொண்டு போய்  சேர்த்தேன் .அந்த சமயம் முழு ஆண்டு தேர்வு .பத்தே நாளில் விடுமுறை விட (8ம் வகுப்பு )புத்தகம் அனைத்தும் போயே போச் .வீடும் மறந்து போக ,இரவில் யாருக்கும் தெரியாமல் அழுதது இன்றும் நினைவு .அதை மறந்து கொஞ்சம் ,கொஞ்சமாக6 மாதத்தில்  மீண்டும் சேர்த்த பொழுது எனது தாய் ,தந்தை இறக்க தந்தையின் சொந்த ஊரான சேலம் வரும் சூழ்நிலை .நெருங்கிய உறவினரோடு காமிக்ஸை எல்லாம் பத்திரமாக பெட்டியில் போட்டு கொண்டு ,தேவை இல்லாத அந்த பாட புத்தகங்களை ஒதுக்கி  வைத்து விட்டு இது வரை பிறந்து வளர்ந்த அந்த கோவை மண்ணை விட்டு சேலம் நோக்கி காமிக்ஸை கட்டி பிடித்து கொண்டு வருகிறேன் .
   
         (கோவை படலம் முற்றும் .)


ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

வாழ்த்துகள்

காமிக்ஸ் நண்பர்கள் ,

    அனைவருக்கும்  இனிய 

     

        தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

இந்த இனிய நாளில் வரும் வருடம் முழுவதும் காமிக்ஸ் ஆண்டாக இருக்க .....

ஆண்டவனை வழி படுகிறேன் .

விரைவில் முழு நீள பதிவை எதிர் பாருங்கள் .