ஞாயிறு, 9 மார்ச், 2014

காமெடி களபரம் ....


நண்பர்களே ....வணக்கம் ...

நலம் ...நலமா ....?

இந்த வருடத்தின் இந்த மூன்றாவது மாதத்தில் வெளி வந்த இரண்டு புத்தங்கள் பல விதத்தில் நண்பர்களை திருப்தி படுத்தியது என்றால் அது மிகை அல்ல .முதல் காரணம் இந்த வருடத்தில் வந்த முதல் 120 பக்க இதழ் " டைகர் " சாகசத்தின் மூலம் இந்த மாதம் வந்தது தான் .இந்த வருட ஆரம்பம் முதலே மூன்று இதழ்கள் ..,நான்கு இதழ்கள் என ஒரு சேர வந்தாலும் குட்டி ..,குட்டியாய் வந்து ஒரு முழுமையான " காமிக்ஸ் மன திருப்தியை " அளிக்க வில்லை என்பதே உண்மை .இந்த  மாதம்  இரண்டு இதழ்கள் தாம் எனினும் ஒரு இதழ் "போன வருட 120 பக்க இதழ் போல வந்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சந்தோசத்தை அளித்தது .இந்த அளவில் புத்தகம் வரும் பொழுது ஒரு புத்தகம் 60 ரூபாய் அளவில் இணைத்து வருவதும் நன்று .எனவே ஆசிரியர் மாதம் ஒரு 120 ரூபாய் புத்தகமும் 60 ரூபாய் புத்தகமும் இணைத்து வெளி இட்டால் அனைவருக்கும் " திருப்தி " ஆக இருக்கும் .இந்த மாதம் வெளி வந்த இரண்டு புத்தங்கள் டைகரின் " அட்லாண்டாவில் ஆக்ரோஷம் "மற்றும் ப்ளூ கோட் பட்டாளத்தின் " கப்பலுக்குள் களபரம் ".இந்த இரண்டு இதழ்களை  பற்றிய எனது எண்ணவோட்டம் தான் இந்த " காமெடி களபரம் ".

அட்லாண்டாவில் ஆக்ரோஷம் :

உண்மையில் மிக அழகான அட்டைப்படம் இந்த "அட்லாண்டாவில் ஆக்ரோஷம் "இதழ் .டைகரும் ..,அவர் தோழரும் வண்ண மயமாக ..,எடுப்பாக முன் நிற்க பின்னணி மங்கலான வண்ணத்தில் கண்ணை கவரும் விதத்தில் அட்டகாசமாக உள்ளது .கதையின் சித்திர தரமும் ..,வண்ணமும் இந்த முறையும் வருட ஆரம்பம் முதலே போல் இம்முறையும் நன்று .அதே  போல அடுத்து வரும் இதழ்களின் விளம்பரம் ....சூப்பர் 6 அறிவிப்பு என களை கட்டியது .முக்கியமாய் இரண்டு இதழ்களும் " முத்து காமிக்ஸ் " பிராண்டில் வருவதால் எங்கே "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பை நிறுத்தி வைப்பாரோ என்ற பயத்தில் இருந்த பொழுது நல்ல வேளையாக மறவாமல் கட்டுரையை வெளி வர செய்து இருந்தார் .கதையை பற்றி விமர்சனம் அளிக்கலாம் தான் .ஆனால் ஆசிரியர் வலை தளத்தில் கடந்த மூன்று ..,நான்கு பதிவாக டெக்ஸ் &டைகர் மோதல் கலவரமாக நடந்து " டெக்ஸ் " இதழை ஆசிரியர் தள்ளி வைக்கும் அளவிற்கு போக ( அந்த கலவர கும்பலில் நானும் ஒருவன் ).....ஒற்றுமையை வேண்டி அனைவரும் இப்பொழுது வெள்ளை கொடி பிடித்து கொண்டு இருக்கும் பொழுது என் மனதில் உள்ளதை சொன்னால் மீண்டும் " கலவரம் " என்ற மேகம் சூழலாம் .
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் " டைகரின் " கதை எப்படி இருக்க வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம் என்றால் ஒரு " தங்க கல்லறை " போல    "தோட்டா தலை நகரம் ""ரத்த கோட்டை " போல அமைய வேண்டும் என்றே எதிர் பார்க்கிறோம் .ஒவ்வொரு கதையும் அவ்வாறு அமைய வேண்டும் என்பதில்லை .டெக்ஸ் கதைகளிலும் சோடை போன கதைகள் உண்டு .ஆனால் ஒரு " காமிக்ஸ் கதையை " பிடித்த திருப்தி தர வேண்டுமென்றால் இரண்டு ..,மூன்று பாகங்களில் முடிவுரை வர வேண்டும் .அதுவும் தொடர்ந்து வர வேண்டும் .அப்படி இல்லாமல் இப்பொழுது எல்லாம் எந்த டைகர் கதையை எடுத்தாலும் பல இடங்களில் பார்க்க : முன் பாகத்தில் ....இனி பார்க்க ...அடுத்த பாகத்தில் என வருவது தான் அயர்ச்சிக்கு காரணம் .கமர்சியல் கதை களம் என்றாலும்  கூட ஒத்து கொள்ளலாம் ஒரு ராணுவ கதை களத்தில் தொடர்ச்சியாய் ஒரே கதை நீண்டு கொண்டே செல்வது சலிப்பை தான் ஏற்படுத்துகிறது .பள்ளி சமயத்தில் " வரலாறு " புத்தகத்தை படித்த அனுபவம் தருகிறது இப்போதைய "டைகரின் " சாகசம் .இங்கே நண்பர்களில் சிலர்  பள்ளி சமயத்தில்  விருப்ப பாடம் " வரலாறு " என்றால் உங்கள் மனம் கவர்ந்த கதை " இந்த அட்லாண்டாவில் ஆக்ரோஷம் " ஆனால் பள்ளியில் அப்பொழுதே " வரலாறு " என்றால் " தகராறு " என்ற சூழ்நிலையில் என்னை போல தாங்கள் இருந்தால் மீண்டும் எடுத்து படியுங்கள் தங்க கல்லறை மற்றும் தோட்டா தலை நகரம் .

கப்பலுக்குள் களபரம் :

குட்டியான இதழ் தான் .ஆனால் அழகான வண்ணமயமான அட்டைப்படம் ...எடுப்பான சித்திர தரங்கள் .....அதை விட விரிவான ....சூப்பர் ஆன சூப்பர் 6 விளம்பரங்கள் என அத கள படுத்தியது "ப்ளூ கோட் பட்டாளம் ".கதை களத்திற்கு செல்லும் பொழுது மிக பெரிய எதிர் பார்ப்பு என்னுள் இல்லை .காரணம் அப்பொழுது தாம் " வரலாறு " புத்தகத்தை  :-) படித்த அசதி .அதை விட மற்ற ஒன்று அறிமுக நாயகரில் முதல் சாகசத்தில் அசத்திய நாயர்கள் இரண்டாவது முறை களம் இறங்கும் பொழுது அந்த அளவிற்கு கவர வில்லை .அதற்காக "மோசம் " என்ற அர்த்தம் இல்லை .முதல் சாகசத்தில் அசத்திய அந்த எதிர் பார்ப்பு அடுத்து  வரும் சாகசத்தில்  இன்னும் கூடுதல்  எதிர் பார்ப்பு ஆக அமைந்து விடுவதால் கொஞ்சம் அசங்கினாலும் அந்த ஹீரோக்கள் நண்பர்களின் எதிர்பார்ப்பை குறைத்து விடுகிறார்கள் .அந்த காரணத்தோடு போர் கள  சூழ்நிலையில் இந்த "பட்டாளம் " என்ன காமெடி களபரம் பண்ணி விடுவார்கள் ...ஏதோ முதல் சாகசம் ஓகே பண்ணி விட்டார்கள் .இனி அவ்வளவு தான் என்ற நினைப்பில் தான் படிக்க  ஆரம்பித்தேன் .
ஆனால் படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் நம்மை அவர்களோடு கட்டி போட்டு விடுகிறாகள் .அதுவும் கயிற்றால்  அல்ல ....காமெடியால் கட்டி போட்டு விடுகிறார்கள் .நீண்ட நாட்களுக்கு பிறகு பக்கத்திற்கு பக்கம் வாய் விட்டு சிரிக்க வைக்கிறார்கள் இந்த " ப்ளூ கோட் பட்டாளம் .." தைரியமாய் சொல்கிறேன் .....ஏதாவது சமயத்தில் உங்கள் மனம் சோக மயமாய் இருகிறதா ? ஏதோ இழந்த மன குழப்பமா ? கவலை வேண்டாம் ...மருந்தாய் வந்துள்ளது "காமெடி களபரம் " என்ற " கப்பலுக்குள் களபரம் ".சிடு மூஞ்சிகளையும் சிரிக்க வைத்து அழகு பார்க்கிறது இந்த களபரம் .ஆசிரியர் லயன் 30 வது ஆண்டு மலரில் இவர்களை ஒதுக்கி வைப்பது நமது துரதிர்ஷ்டம் .இவர்களை லயனிலும் உழல செய்ய ஆசிரியர் முயற்சி எடுத்தால் நன்று .

இதை விட இன்னும் சந்தோசமான காமிக்ஸ் அனுபவங்கள் அடுத்த மாதம் காத்துள்ளது .ஆம் ....நமது புரட்சி தளபதி " ஷெல்டன் " அவர்கள் அடுத்த மாதம் 120 ரூபாய் விலையில் காத்து கொண்டு இருக்கிறார் .அவரோடு இணைந்து வருகிறார் "காமெடி சூப்பர் ஸ்டார் " லக்கி அவர்கள் .அது மட்டுமல்லாமல் 30 வது ஆண்டு மலரின் விளம்பரங்கள் ......சூப்பர் 6 பற்றிய அழகான விளம்பரங்கள் ...சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரை ....என ஏப்ரல் நமக்கு அள்ளி கொடுக்க போகும் சந்தோசங்கள் ஏராளம் ..இந்த விளம்பரங்களோடு "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பை பற்றி ஆசிரியர் அறிவித்தால் குஷ்பு விற்கு கோவில் கட்டிய அந்த சிற்பிகளை கொண்டு ஆசிரியர் அவர்களுக்கும் ஒரு கோவில் கட்ட வைக்கலாம் .காத்திருப்போம் நண்பர்களே ...

          மீண்டும் விரைவில் சந்திப்போம் ....