சனி, 5 ஏப்ரல், 2014

இது காமிக்ஸ் மனது ....

நண்பர்களே ....வணக்கம் ...

நலம் ..நலமா .....

நீங்கள் தொலைகாட்சியில்  ஒரு விறு ,விறுப்பான  திரைப்படத்தை  பார்த்து  கொண்டு இருக்கும் பொழுதோ ..,அல்லது ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருக்கும் பொழுதோ திடீரென இடையில் விளம்பரம் வரும் பொழுது நமக்கு எவ்வளவு எரிச்சல் வருகிறது .அதை விடுங்கள் ஏதாவது பத்திரிக்கையை வாங்கி படித்து கொண்டு இருக்கும் பொழுது அதில் வரும் "விளம்பரகளை " கவனிக்காமல் வேகமாக புரட்டி செல்லுபவர்களே  அதிகம் .அதுவும் சில சமயம் "விளம்பரங்கள் " அதிகமாக இருப்பதாக பட்டால்  விளம்பரத்தை போட்டே  பக்கத்தை  நிரப்பிட்டாணுக ...என்று மனதிற்குள் திட்டவும் செய்கிறோம் .ஆனால் .........

காமிக்ஸ் ரசிகர்கள்  ஆன நமது " காமிக்ஸ் மனது " விளம்பரத்தை எதிர் பார்த்தே ஒரு புத்தகத்தை ஆவலுடன்  எதிர் பார்க்க வைக்கிறது என்றால் இந்த "காமிக்ஸ் புத்தகம் " செய்யும் மாயம் தான் என்ன ..?கதைகளை கூட பின்னுக்கு தள்ளி விட்டு விளம்பரத்தை பற்றியே  பேச வைக்கிறது என்றால் அதன் "மாயம் " தான் என்ன ..?இதோ  ஆசிரியர் அறிவித்து விட்டார் ..காமிக்ஸ் ரசிகர் அனைவரும் கொண்டாட வைக்கும் லயன் 30 வது ஆண்டு மலர் 900 பக்கத்தில் வெறும் 500 ரூபாயில் 9 கதைகளோடு அதுவும் 500 + பக்கம் வண்ணத்தில் என்பது வேறு மொழியில் சாத்தியமா என்றால் அது வெறும் கனவாக தான் இருக்கும் நண்பர்களே ..கொண்டாடுவோம் ...ஆசிரியரை மனதார பாராட்டுவோம் ..நமக்கு சிற்சில ஏமாற்றங்கள் அந்த அறிவிப்பில் காண பட்ட போதும் அதற்கான காரணத்தை அவர்  "லயனும் நாமும் " என்ற பதிவில் தெரிவித்து விட்டதால் நாம் வருத்த பட ஏதும் இல்லை .மொத்தத்தில் மனம் இப்போதே "ஆகஸ்ட் "மாதத்தை எதிர் பார்த்து கொண்டு கனவுலகில் பல நண்பர்கள் மிதப்பது உண்மை ...

இந்த மாதம் வெளி வந்த இரண்டு காமிக்ஸ் புத்தங்கள் அதிரடி ஹீரோ "ஷெல்டன் " அவர்களின் "எஞ்சி நின்றவனின் கதை " மற்றும் காமெடி சூப்பர்  ஸ்டார் "லக்கி " அவர்களின் "எதிர் வீட்டு எதிரிகள் ".போன மாதம் போலவே ஒரு சின்ன புக் ....மற்றும் ஒரு "சின்ன குண்டு புக் "என்பதில் நண்பர்களுக்கும் ..,எனக்கும் மகிழ்ச்சியே ....ஒவ்வொரு முறையும் இதே நிலையில் வரும் என இருந்தால் நண்பர்களுக்கு இன்னும் மகிழ்ச்சியே ...இப்பொழுது இந்த இரு இதழ்களின் கருத்தை பற்றி எனது குறுகிய பார்வை ...

" எஞ்சி நின்றவனின் கதை " :

அனைத்து ரசிகர்களுமே "ஷெல்டன் " அவர்களை எதிர் பார்த்து வழி மேல் விழி பார்த்து நின்றார்கள் என்றால் கண்டிப்பாக மிகை அல்ல .அந்த எதிர் பார்ப்பை அவர் நிவர்த்தி செய்தாரா  என்றால் கண்டிப்பாக என்னை பொறுத்த வரை 100% திருப்தி தந்தார் என்றே  சொல்லுவேன் .முதலில் அட்டை படத்தை பற்றி சொல்லலாம் என்றால் குறை ஏதும் இல்லை எனினும் முன் ..,பின் ..அட்டையை மாற்றி வெளி இட்டு இருந்தால் இன்னும் கலக்கலாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம் .ஹாட் -லைன் தவிர இந்த இதழில் கதை மட்டுமே என்பதால் ஏதும் சொல்வதற்கு இல்லை ..ஆனால் கதையில் வரும் சித்திரங்கள் அனைத்தும்  அட்டகாச ரகம் .ஒவ்வொன்றும் ஒரு புகை படமா என்று நினைக்கும் அளவில் ..அச்சு  தரமும் மிக தெளிவாக உள்ளதால் 
ஒரு "திரை படத்தை "பார்த்த அனுபவத்தை அனுபவத்தை கொடுக்கிறார் .அதே மொழி ஆக்கமும் பல இடங்களில் நம் மனதில் சில வசனங்கள் "நச் "என்று ஒட்டி கொண்டு வருகிறது .எதற்கும் கலங்காத ஷெல்டன் கூட கலங்குவது இந்த கதையில் ஒரு திருப்பமே ....மொத்தத்தில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு  ஒரு விறு .,விறுப்பான  மசாலா படம் பார்த்த திருப்தி இந்த இதழில் கிடைக்கும் என்பது எனது எண்ணம் .

"எதிர் வீட்டில் எதிரிகள் " :

இந்த காமெடி ஸ்டார் கதையை "விளம்பரத்திற்கு " என்றே  எதிர் பார்த்தவர்கள் அதிகம் .அதை பற்றி ஏற்கனவே சொல்லி விட்டதால் மேலே செல்லலாம் .அட்டைபடம் "சூப்பர் " என்று சொல்ல வைக்க வில்லை எனினும்  "மோசம் "என்றும் சொல்ல வைக்க வில்லை .கதை உண்மையில் பழைய லக்கி சாகசத்தை பார்த்த ..படித்த அனுபவத்தை கொடுக்கிறது .மொழி ஆக்கத்தை பற்றி கண்டிப்பாக சொல்லி தான் ஆக வேண்டும் .காரணம் இம்முறை மொழி ஆக்கம் நமது ஆசிரியரின் புதல்வர் "விக்ரம் " அவர்கள் .கண்டிப்பாக ஏதாவது வித்தியாசம் இருக்கும் ...நமது பழக்கமான மொழி நடைக்கு அவர் ஈடு கொடுப்பாரா என்ற எண்ணத்தில் தான் படிக்கவே ஆரம்பித்தேன் .காரணம்என்னை  பொறுத்த வரை நமது லயன் ..,முத்து காமிக்ஸ் புத்தகத்திற்கு உயிர் கொடுப்பது "மொழி ஆக்கம் "தான் என்பது எனது எண்ணம் .அதனாலேயே "மொழி ஆக்கத்தில் " ஆசிரியர் போட்டி வைத்தால் நண்பர்கள் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்று எனது எதிர்ப்பை பதிவு செய்து விடுகிறேன் .ஆனால்  நமது ஆசிரயர் விஜயன் அவர்களின் புதல்வர் விக்ரம் ஏமாற்றவில்லை என்றே அடித்து சொல்லுவேன் .வித்தியாசம் ஏதும் கிடையாது என்பதோடு சிறந்த நடையிலும் "மொழி ஆக்கம் " இருக்கிறது .பாராட்டுகள் விக்ரம் சார் . மொத்தத்தில் நமது காமிக்ஸ் மனதை இந்த மாதம் "கட்டி போட்டு " வைக்கிறது .

மீண்டும்  "லயன் 30 வது ஆண்டு மலர் " க்கு பிறகு சந்திப்போம் நண்பர்களே ..நன்றி ..வணக்கம் .