நண்பர்களே ...வணக்கம் ...
நலம் ...நலமா ....?
ஒரு வழியாக இந்த மாதத்துடன் இந்த வருட "காமிக்ஸ் கொண்டாட்டம் "முடிவடைகிறது .இரண்டு வருடங்களுக்கு முன் காமிக்ஸ் பசி கொண்ட மிக ,மிக குறுகிய நண்பர்களுக்கு இருந்த ஒரே உணவகம் சிவகாசி "பிரகாஷ் பப்ளிஷர்ஸ் ".அந்த உணவகமும் அடிக்கடி கடையை அடைத்து வந்ததுடன் ..,எப்பொழுது உணவு பரிமாறுவார்கள் என்பதே கேள்வி குறியாக இருந்த பொழுது நண்பர்கள் பசியால் துடித்து கொண்டு இருந்தார்கள் .பொறுத்து ..,பொறுத்து பார்த்த உணவகத்தினர் "சப்ளையர் "வைத்து நண்பர்களுக்கு உணவு பரிமாறினால் அவர்கள் பசியை நம்மால் தீர்க்க முடியாது .இனி நாமே களத்தில் இறங்க வேண்டியது தான் என்ற முடிவுடன் 2012 முதல் புத்தம் புது பொலிவுடன் பழைய உணவகத்தை மாற்றி "மசாலா கபே "வாக அவர்களே நண்பர்களுக்கு வேண்டிய உணவை பரிமாற நண்பர்களுக்கு மாபெரும் கொண்டாட்டம் .எப்பொழுது உணவகம் திறந்து "காமிக்ஸ் பசியை "தீர்ப்பார்கள் என்ற காலம் போய் எப்பொழுதும் திறந்து வைத்ததுடன் ஒவ்வொருவருக்கும் என்ன ,என்ன சுவை பிடிக்குமோ அந்த சுவை கொண்ட உணவை தேடி பிடித்து நண்பர்களுக்கு பரிமாறினார்கள் .பழைய இட்லி ..,தோசையா ...புது பீட்ஸா வா உங்களுக்கு என்ன தேவை ..?அனைத்தும் பரிமாறினார்கள் .அனைத்துமே புது வகை சுவையுடன் .இப்படி 2012 உணவகத்தை திறம் பட நடத்தியவர்கள் 2013 இலும் நடத்த வேண்டுமே என்ற நண்பர்கள் கனவை நனவாக்குவது போல 2012 இல் எட்டு அடி தான் பாய்ந்து வந்தோம் .இப்பொழுது பாருங்கள் என்று 2013 இல் 16 அடி பாய்ந்து பல வகை உணவு வகைகளை வயறு நிரம்ப உண்ண வைத்தார்கள் .ஒரு சிலருக்கு ஒரு சில உணவு வகைகள் பிடிக்காமல் இருக்கலாம் .ஆனால் பரிமாறிய விதத்தில் ..,அதற்காக அவர்கள் பட்ட சிரமத்தை கணக்கில் கொண்டால் அந்த உணவும் ஒரு "சுவையாக " மனதில் கொண்டார்கள் நண்பர்கள் .அதே சமயம் ஒரு சில உணவில் உப்பு ..,காரம் குறைந்தோ ..,அதிகரித்தோ காணப்படும் பொழுது அதை உணவகத்தினர் காதில் சொன்னதும் உண்டு .அதற்கு காரணம் "உணவகத்தை "குறை சொல்ல வேண்டும் என்பதற்கு அல்ல .புதிதாய் வருபவர்கள் உணவகத்தை "குறை "சொல்ல கூடாது என்பதற்காக .அதை உணவகத்தினர் உணர்ந்தே உள்ளனர் என்பதும் கண் கூடு .எனவே தான் சிற்சில சமயம் நண்பர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சிரமப்பட்டு செய்த சமையலை கூட நிறுத்தி நண்பர்களுக்கு ஏற்ற வகையில் ....மாற்றி கூட உணவை பரிமாறி "பசி " அடைத்தார்கள் . .மொத்தத்தில் இந்த 2013 இல் "மசாலா கபே "ஆக இருந்த உணவகத்தை 2014 இல் பல படி பாய்ந்து "ஸ்டார் " ஹோட்டல் ஆக மாற்ற "காமிக்ஸ் நண்பர்களின் "வாழ்த்து எப்பொழுதும் அந்த உணவகத்திற்கு உண்டு என்பதோடு புது வாடிக்கையாளர்... நிறைய நண்பர்கள் என இந்த உணவகம் பல படி ஏற எங்கள் வாழ்த்துகள்.
அதே சமயம் 2013 இல் நமக்கு பிடித்த ..,பிடிக்காத உணவை சொன்னால் தானே 2014 இல் நமக்கு ஏற்ற படி அவர்கள் உணவை பரிமாறுவார்கள் .எனவே எனக்கு பிடித்த ..பிடிக்காத "சுவை " கீழே ....மறவாமல் உங்கள் "சுவையும் "சொல்லி விடுங்கள் நண்பர்களே ...எனக்காக அல்ல ..உங்களுக்காக ....
2013 இன் டாப் 3 : 1) துரத்தும் தலைவிதி ( படித்து முடித்து கை தட்டிய ஒரே புத்தகம் )
2) குற்ற திருவிழா
3)ஆகாயத்தில் அட்டகாசம்
2013 இன் டாப் சொதப்பல் : "கிராபிக் நாவல் " என்ற முத்திரையில் வந்த அழுகாச்சி காவியங்கள் ...( இது எனது கருத்து மட்டுமே )
2013 இன் பெஸ்ட் அட்டைபடம் : ஒன்றல்ல ..மூன்று ...
1) ஜானியின் "ஓநாய் மனிதன் "அட்டைபடம்
2)தங்க கல்லறை
3) ரத்த படலம்
2013 இன் சொதப்பல் அட்டைபடம் : வேங்கையின் சீற்றம்
பெஸ்ட் நாயகர் : 1) லார்கோ 2) ஷெல்டன்
வேண்டவே வேண்டாம் என்பது : ஹி ..ஹி ....
ப்ளாக் &வொய்ட் புத்தகம் : கண்டிப்பாக தொடர வேண்டும் .
2014 இல் எதிர் பார்ப்பு : 1) டெக்ஸ் அவர்களுக்கு கூடுதல் சான்ஸ் ..
2)பக்கம் குறைவான அந்த 60 ரூபாய் புத்தகத்திற்கு ஒரு மாற்று வழி ...
3)மறுபதிப்பில் ஆவது " வேதாளர் " மற்றும் பேட் மேன் "
முயற்சிக்கலாம் .
4) டயபாளிக் அவர்களுக்கு மீண்டும் கூடுதல் சான்ஸ்
5) இம்முறையும் ஒரு "தீபாவளி மலர் "
டெக்ஸ் வில்லர் ஓவர் டோசா : கண்டிப்பாக இல்லை
ரத்த படலம் ........ ? : ஓகே ..பட் பல வருட நீட்டிப்பு சொதப்பல் ...அனைத்து பாகமும் வந்தவுடன் மொத்தமாக வெளி இடலாம் .
காமெடி ..கவ்பாய் ..ஆக்சன் அடுத்து : அது மட்டும்
2013 இல் நமது காமிக்ஸ் : " என்னவென்று சொல்வதுமா
வஞ்சி அவள் பேர் அழகை ....
சொல்ல ஒன்றும் வார்த்தை இல்லை "
2013 எனது கண்ணோட்டம் அவ்வளவு தான் நண்பர்களே .....உங்களுக்கு இதில் மாறு பட்ட கருத்து கண்டிப்பாக இருக்கலாம் .2014 பல ஒன்று பட்ட நண்பர்களின் கருத்துகள் சுருக்கமாக ஆசிரியருக்கு .......
1) இந்த வருடம் 2013 தாண்டி பல சிகரங்கள் 14 இல் படைக்கும் என்ற கருத்துக்கு ஏமாற்றம் அளிக்கும் படி பக்கம் குறைவான 60 ரூபாய் புத்தகமே அதிகம் ...அதுவும் "வேங்கையின் சீற்றம் "அளவை பார்த்தால் ..அதுவும் இந்த அளவு தான் என்றால் நண்பர்களுக்கு பசி அடங்காது .தயவு செய்து மாற்று வழி கண்டு பிடிங்கள் .
2) டெக்ஸ் மறுபதிப்பு நான் விரும்ப வில்லை .அதே சமயம் நண்பர்கள் கருப்பு வெள்ளையில் விரும்ப வில்லை .கலர் இல்லை எனில் "டெக்ஸ் ஸ்பெஷல் "ஆக பவள சிலை மர்மம் ..,சைத்தான் சாம்ராஜ்யம் (திகில் )...பழிக்கு பழி என என பல வருடம் முன்னர் வந்த கதைகளை வெளி இடலாம் .
3) தயவு செய்து இந்த மாதம் "சிங்கத்தின் சிறு வயதில் "தொடரை காணாமல் செய்வது போல இனி தடை போடாதீர்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .
4) இது என்னுடைய ஆசை மட்டுமல்ல ..அகில உலக தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் ஆசை .இந்த 30 வது ஆண்டு மலரில் "சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பை இது வரை வந்ததை மட்டும் தயவு செய்து வெளி இடுங்கள் .இது உங்கள் வரலாறாக நினைத்து நீங்கள் தயங்கலாம் .ஆனால் இது நமது "காமிக்ஸ் வரலாறு " .ப்ளீஸ் சார் ..ஏமாற்றி விடாதீர்கள் . (நீங்கள் ஓட்டடுப்பு கூட நடத்துங்கள் )
5) கண்டிப்பாக இந்த முறையும் + 6 அல்லது +12 வரிசை எதிர் பார்க்கிறோம் .
நன்றி நண்பர்களே ......... மீண்டும் சந்திப்போம் .ஆசிரியரை சிந்திக்க வைக்க ....
வணக்கம் .