ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

ஆசிரியருக்கு கண்டனம் ....



நண்பர்களே ....வணக்கம் ...

நலம் ....நலமா .....

இந்த மாதம் வெளி வந்த நமது " காமிக்ஸ் புத்தங்களை " அனைவரும் படித்து முடித்து அடுத்த " டைகர் " சாகஸ  கதையை  காண ஆவலுடன் காத்து கொண்டு இருப்பிர்கள் .நானும் ....அதற்காக காத்து கொண்டு இருக்கிறேன் .இப்பொழுது எல்லாம் அந்த மாதத்து புத்தகங்கள் வந்தவுடன் உடனே அந்த மாதம் முடிந்து அடுத்த மாதம் வராதா என்ற ஏக்கம் வந்து விடுகிறது .இரண்டு வருடத்திற்கு முன் அவ்வாறு  இல்லை ...காரணம் அப்பொழுது எல்லாம் மாதம் தவறாமல் புத்தகம் வருவது இல்லையே ....இப்பொழுது அதற்க்கு பாராட்டி சொல்வதற்கு இந்த பதிவு இல்லை .இரண்டு வருடமாக அதை பாராட்டி கொண்டு தானே இருக்கிறோம் .இந்த பதிவு ஆசிரியரை வன்மையாக ....கண்டித்து....எழுத .... முதன் முறையாக களம் இறங்குகிறது இந்த வலை பதிவில் .எனவே ஒத்த கருத்துடைய .....வேறு  பட்ட கருத்துடைய அனைத்து நண்பர்களும் அவர்களுடைய கருத்தை இங்கே கூட அல்ல ...ஆசிரியரின் வலை பக்கத்தில் கூட தெரிவிக்கலாம் .புதிர் மேல் புதிர் போடுகிறான் என நினைக்க வேண்டாம் .பழைய செய்தி தான் .காலம் குறைவால் இப்பொழுதே ஆசிரியருக்கு தெரிவிக்கவும் .....கண்டனத்தை அதிகரித்து அவர் மனதை மாற்ற செய்யவும் தான் இந்த கண்டன பதிவு .

       நான் மட்டுமல்ல பல வாசக நண்பர்கள் ....கேட்டும் .....பல விதத்தில் ...பல முறை போராடியும் இன்னமும் ஆசிரியர் அவர்கள் " சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பை  வெளி இட சம்மதிக்க வில்லை .அதற்கான அவர் கூறும் காரணம் இரண்டு மட்டும் .அவற்றிற்கான காரணத்தின் நிஜம் உண்மையாக இருப்பினும் நண்பர்களின் பதிலில் அவர் மாற்றம் கொண்டு "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பிற்கு எந்த அளவு நண்பர்கள் தீவிரமாக அதை விரும்புகிறார்கள்  என்பதை   ஆசிரியருக்கு உணர்த்தவும் ......நண்பர்கள் ஏன் " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்புக்காக போராடி கொண்டு இருக்கிறாகள் என்பதை தீவிரமாகவும் அவருக்கு உணர்த்தவும்  " 30 வது ஆண்டு மலர் சமயத்தில் தொகுப்பு வருகிறதோ இல்லையோ ....உறுதி மொழி ஆவது வாங்குவதை காண தான் இந்த கண்டன பதிவு வெளி இட படுகிறது .நண்பர்கள் இதை  பற்றி ஆசிரியரிடம் வினவும் பொழுது அவர் ( தப்பிக்க ) வெளி இடும் இரண்டு காரணங்கள் கீழே பார்க்கலாம் .

      ஒன்று  : " தொடர் " இன்னும் முடிவடையாத பொழுது " தொகுப்பு " இப்பொழுது தேவை இல்லை என்பது ஒன்று .

    இரண்டு : நான் என்ன சாதித்து விட்டேன் ...தொகுப்பை வெளி இட என்ற தன்னடக்கத்தின் விடை இரண்டு.

இந்த இரண்டு செய்திகளை கொண்டு அவர் "தொகுப்பை " வெளி இட மறுத்து கொண்டு இருக்கிறார் .அவரின் இந்த கருத்துகளில் நண்பர்களின் பதில் மௌனமாக இருப்பதால் ஆசிரியர் அந்த கருத்துகளில் இருந்து மாறாமல் இருக்கிறார் .அவரிடம் " மௌனத்தை " பதிலாக அளித்திருந்தாலும் ....ஏக்கத்தை நண்பர்களால் மறைக்க முடிய வில்லை .இப்பொழுது அவரின் கருத்துகளுக்கு நண்பர்களின் பதிலை இங்கே காணலாம் .ஆசிரியரின் முதல் காரணத்தில் உண்மை இருப்பினும் அதை " முக்கியமான " ஒன்றாக கருதி தொகுப்பை நிறுத்தி வைப்பது சரி இல்லை .காரணம்  தொடர் முடிந்ததும் தொகுப்பாக வெளி இடும் சமயம் எப்பொழுதும் இல்லை .இனி லயன் ...முத்து என்ற சிங்கத்தின் பயணம் முடிவடையாத பயணம் .முடிவில்லா பயணத்திற்கு " முடிவுரை " ஏது ?எனவே முப்பது ..முப்பது பகுதிகளாக அத்தியாயம் நிறைவடையும் பொழுது தொகுப்பு ஒன்று ...தொகுப்பு இரண்டு என வெளி இடுவதில் தவறு இல்லை .ஆசிரியருக்கும் " செலவு " குறைவாக இருக்கும் .எனவே மீண்டும் இந்த காரணத்தை ஆசிரியர் தெரிவித்தால் நண்பர்கள் பலத்த கண்டனத்தை தெரிவிப்பார்கள் என்பதை கண்டனத்துடனும் ...,பணிவுடனும் கூறி கொள்கிறேன்.

     இரண்டாவது காரணம் " நான் என்ன சாதித்து விட்டேன்  " என்பது .இது முழுக்க ..,முழுக்க நிஜம் அல்ல தோழர்களே .இதற்கான எனது பதில்... ஆசிரியர் என்ன " சாதிக்க வில்லை " இந்த காமிக்ஸ் உலகில் ....? பிரபல பத்திரிக்கை குழுமங்கள் தான் " மாலை மதி காமிக்ஸ் ".., மேகலா காமிக்ஸ் "..., ராணி காமிக்ஸ் " ....போன்ற காமிக்ஸ் இதழ்களை வெளி இட்டன .அவை எல்லாம் இன்று காண கிடைக்காத பொழுது இன்றும் காமிக்ஸ் நண்பர்களுக்காக தொடர்ந்து வெளி இட்டு தமிழ் காமிக்ஸ் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டு இருக்கிறார் எனில் அது சாதனை அல்லவா .....தமிழின் பிரபல மூன்று பதிப்பகங்களும் அனைத்து  துறைகளுக்கும் ஒவ்வொன்றாக புத்தங்களை வெளி இடும் பொழுது அவைகள் " காமிக்ஸ் " என்ற உலகில் நுழையாதது ஏன் ? சிந்திக்க வேண்டும் நண்பர்களே ....அவர்களுக்கு பலமான விளம்பர துணை இருப்பினும் இன்னும் நுழையாமல் இருப்பதும் .....நுழைந்ததும் காணாமல் போன காரணம் தான் என்ன ? இதில் சாதகத்தை விட பாதகம் அதிகம் என்பதால் தானே ? அப்படி பட்ட துறையில் 40 வருடமாக போராடி வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கும் அவர் " சாதிக்க வில்லையா " இல்லையா என்பதை நண்பர்கள் தாம் முடிவெடுக்க வேண்டும் .எனவே ஆசிரியர் மீண்டும் இந்த பதிலை தெரிவித்தால் நண்பர்களின் கண்டனம் பலமாக இருக்கும் என்பதை ஆசிரியருக்கு கண்டனதுடனும் ...,பணிவுடனும் கூறி கொள்கிறேன் .

இனி " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வேண்டி நண்பர்களின் போராட்டம் ஏன் என்பதை பார்க்கலாம் .

1...... பழைய நமது காமிக்ஸ் இதழ்களை கண்டாலே மனம் மகிழ்ச்சியில் துள்ளும் பொழுது அந்த இதழின் வரலாறை படிக்கும் பொழுது அந்த காமிக்ஸ் இதழ்கள் கிடைக்காத சந்தோசத்தை இந்த தொடர் வாசகர்களுக்கு தருகிறது .தொடராக வரும் பொழுதே அப்படி என்றால் " தொகுப்பாக " வந்தால் .....

2.....பழைய நமது காமிக்ஸ் இதழ்கள் கைக்கு கிடைக்கும் பொழுது முன்னர் அதை படித்து இருந்தால் .அந்த இதழ்கள் ...அந்த கால கட்டத்திற்கு நம்மை அழைத்து செல்லும் பொழுது ....ஆசிரியர் அவர்களும் நம் கால பயணத்தில் அழைத்து செல்லும் மன நிலையை இந்த தொடர் வாசகர்களுக்கு தருகிறது .தொடராக வரும் பொழுதே அப்படி என்றால்  " தொகுப்பாக " வந்தால் ....

3.....நமது பால்ய கால தோழன் நம்மிடம் திடிரென தோன்றி அந்த சிறு வயது நினைவுகளை கிளறினால் அந்த நினைவுகளில் நாம் எப்படி மகிழ்ச்சி  உடன் திளைக்கிறோம் .அந்த கிளர்ச்சியை இந்த தொடர் நண்பர்களுக்கு தரும் பொழுது " தொகுப்பாக " வந்தால் ....

4....இந்த தொடரை படிக்கும் பொழுது நமது சிங்கத்தின் கரங்களை சந்தோஷமாக பிடித்து நடந்து செல்லும் அந்த பயணம் சில நிமிடங்களில் முடிவடையும் அந்த ஏக்கம் " தொகுப்பாக " வந்தால்  ..........

இப்படி இன்னும் பல முடிவடையாத சந்தோசங்களை நண்பர்களுக்கு தந்து கொண்டு இருக்கும் இந்த தொடர்  " தொகுப்பாக " வந்தால் .....ஆசிரியர் சிந்திக்க வேண்டும் .எனவே தயவு செய்து  ஆசிரியர் " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பை வெளி இட ஆவண செய்ய வேண்டும் .சந்தோஷ குளத்தில் குதிக்கும் நண்பர்களை சந்தோஷ கடலில் தள்ளி மகிழ்ச்சி அடைய வைப்பது ஆசிரியரின் கடமை .கடமை தவறினால் " கண்டனம்  " தெரிவிப்பது எங்கள் கடமை .விரைவில் நல்ல பதிலை ஆசிரியரிடம் எதிர் பார்த்து கொண்டு இருப்பது ..................

     " அனைத்துலக தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் நற்பணி மன்றத்தினர் " .


8 கருத்துகள்:

  1. அட்ரா சக்கை, அட்ரா சக்கை! ( நன்றி : ரவிகிருஷ்ணா)

    வீறுகொண்டு எழுந்திருக்கிறீர்கள் தலைவரே! புலி பதுங்குவதும் பாய்வதற்கே என்று நிரூபித்திருக்கிறீர்கள்!

    உங்கள் கருத்துக்கள் அனைத்தும் ஏற்புடையவையே. எடிட்டரின் 'சப்பைக்கட்டு' இனியும் செல்லுபடியாகாது. 'முடிவில்லா ஒரு பயணத்துக்கு முடிவுரை ஏது?' என்று கேட்டீர்களே ஒரு கேள்வி! 30வது வருடமான இதுவே இதுவரை வந்த தொகுப்புகளை வெளியிட ஏற்ற தருணம். எடிட்டர் இதை உணரவேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பலகாலம் படித்து வந்ததை ஒரு முழுமையான (இரத்தப்படலம் போல) தொகுப்பாகப் படிக்கும்போது அந்த அனுபவமே அலாதியானதுதான்!

    நண்பர்கள் அனைவரும் ஆதரவுக் குரல் கொடுக்க வேண்டுமென்று நானும் கேட்டுக்கொள்கிறேன்.

    வெற்றி வாசகர்களுக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செயலாளர் அவர்களே ......போராட்ட குழு முழு மூச்சுடன் போராடும் வேலை நெருங்கி விட்டது .

      நீக்கு
  2. பரணி பொங்கி விட்டீர்கள் ! கேட்டீங்களே ஒரு கேள்வி (விஜய்) ! சரியான கருத்துகள் ! நிச்சயம் வெளிவிடலாம் முப்பதாவது ஆண்டு மலருடன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதன் முறையாக இங்கே வருகை புரிந்த கோவை நண்பருக்கு நன்றிகள் பல ....

      நீக்கு
  3. புத்தகத்திருவிழாவில் பல பிரபலங்களும் உங்கள் வெளிநாட்டுப்பயண அனுபவஙகளை(சி.சி.வயதில்) ஆவலுடன் படிப்பேன் என்பதை வெளிப்படுத்தியும் வெளியிட மறுக்க சி.சி.வயதில் என்ன அழுகாச்சி காவியமா?
    இல்லவே இல்லை.

    சி.சி.வயதில் என்பது என்னை பொறுத்தவரை தமிழ் காமிக்ஸின் வரலாறு.
    அட்டகாசம் பரணி சார். உங்கள் (நம்) உணர்வுகள் நியாயமான ஒன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் உணர்வுகளையும் அழகாக வெளிப்படுத்தி உள்ளீர் அமர் சார் .ஆசிரியர் வலை பதிவிலும் இதை கண்டிப்பாக சொல்லி விடுங்கள் .

      நீக்கு
  4. எனக்கு என்னவோ பெரும்பாலான ரசிகர்களை தனியாக புத்தகமாக வெளியிட்டால் சென்றடையாது என்பது ஆசிரியரின் எண்ணமாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்காக தான் நண்பரே....லயன் 30 வது ஆண்டு மலருடன் இணைத்து அளிக்கும் படி போராடி கொண்டு இருக்கிறோம் .

      நீக்கு