ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

ஆசிரியருக்கு கண்டனம் ....



நண்பர்களே ....வணக்கம் ...

நலம் ....நலமா .....

இந்த மாதம் வெளி வந்த நமது " காமிக்ஸ் புத்தங்களை " அனைவரும் படித்து முடித்து அடுத்த " டைகர் " சாகஸ  கதையை  காண ஆவலுடன் காத்து கொண்டு இருப்பிர்கள் .நானும் ....அதற்காக காத்து கொண்டு இருக்கிறேன் .இப்பொழுது எல்லாம் அந்த மாதத்து புத்தகங்கள் வந்தவுடன் உடனே அந்த மாதம் முடிந்து அடுத்த மாதம் வராதா என்ற ஏக்கம் வந்து விடுகிறது .இரண்டு வருடத்திற்கு முன் அவ்வாறு  இல்லை ...காரணம் அப்பொழுது எல்லாம் மாதம் தவறாமல் புத்தகம் வருவது இல்லையே ....இப்பொழுது அதற்க்கு பாராட்டி சொல்வதற்கு இந்த பதிவு இல்லை .இரண்டு வருடமாக அதை பாராட்டி கொண்டு தானே இருக்கிறோம் .இந்த பதிவு ஆசிரியரை வன்மையாக ....கண்டித்து....எழுத .... முதன் முறையாக களம் இறங்குகிறது இந்த வலை பதிவில் .எனவே ஒத்த கருத்துடைய .....வேறு  பட்ட கருத்துடைய அனைத்து நண்பர்களும் அவர்களுடைய கருத்தை இங்கே கூட அல்ல ...ஆசிரியரின் வலை பக்கத்தில் கூட தெரிவிக்கலாம் .புதிர் மேல் புதிர் போடுகிறான் என நினைக்க வேண்டாம் .பழைய செய்தி தான் .காலம் குறைவால் இப்பொழுதே ஆசிரியருக்கு தெரிவிக்கவும் .....கண்டனத்தை அதிகரித்து அவர் மனதை மாற்ற செய்யவும் தான் இந்த கண்டன பதிவு .

       நான் மட்டுமல்ல பல வாசக நண்பர்கள் ....கேட்டும் .....பல விதத்தில் ...பல முறை போராடியும் இன்னமும் ஆசிரியர் அவர்கள் " சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பை  வெளி இட சம்மதிக்க வில்லை .அதற்கான அவர் கூறும் காரணம் இரண்டு மட்டும் .அவற்றிற்கான காரணத்தின் நிஜம் உண்மையாக இருப்பினும் நண்பர்களின் பதிலில் அவர் மாற்றம் கொண்டு "சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பிற்கு எந்த அளவு நண்பர்கள் தீவிரமாக அதை விரும்புகிறார்கள்  என்பதை   ஆசிரியருக்கு உணர்த்தவும் ......நண்பர்கள் ஏன் " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்புக்காக போராடி கொண்டு இருக்கிறாகள் என்பதை தீவிரமாகவும் அவருக்கு உணர்த்தவும்  " 30 வது ஆண்டு மலர் சமயத்தில் தொகுப்பு வருகிறதோ இல்லையோ ....உறுதி மொழி ஆவது வாங்குவதை காண தான் இந்த கண்டன பதிவு வெளி இட படுகிறது .நண்பர்கள் இதை  பற்றி ஆசிரியரிடம் வினவும் பொழுது அவர் ( தப்பிக்க ) வெளி இடும் இரண்டு காரணங்கள் கீழே பார்க்கலாம் .

      ஒன்று  : " தொடர் " இன்னும் முடிவடையாத பொழுது " தொகுப்பு " இப்பொழுது தேவை இல்லை என்பது ஒன்று .

    இரண்டு : நான் என்ன சாதித்து விட்டேன் ...தொகுப்பை வெளி இட என்ற தன்னடக்கத்தின் விடை இரண்டு.

இந்த இரண்டு செய்திகளை கொண்டு அவர் "தொகுப்பை " வெளி இட மறுத்து கொண்டு இருக்கிறார் .அவரின் இந்த கருத்துகளில் நண்பர்களின் பதில் மௌனமாக இருப்பதால் ஆசிரியர் அந்த கருத்துகளில் இருந்து மாறாமல் இருக்கிறார் .அவரிடம் " மௌனத்தை " பதிலாக அளித்திருந்தாலும் ....ஏக்கத்தை நண்பர்களால் மறைக்க முடிய வில்லை .இப்பொழுது அவரின் கருத்துகளுக்கு நண்பர்களின் பதிலை இங்கே காணலாம் .ஆசிரியரின் முதல் காரணத்தில் உண்மை இருப்பினும் அதை " முக்கியமான " ஒன்றாக கருதி தொகுப்பை நிறுத்தி வைப்பது சரி இல்லை .காரணம்  தொடர் முடிந்ததும் தொகுப்பாக வெளி இடும் சமயம் எப்பொழுதும் இல்லை .இனி லயன் ...முத்து என்ற சிங்கத்தின் பயணம் முடிவடையாத பயணம் .முடிவில்லா பயணத்திற்கு " முடிவுரை " ஏது ?எனவே முப்பது ..முப்பது பகுதிகளாக அத்தியாயம் நிறைவடையும் பொழுது தொகுப்பு ஒன்று ...தொகுப்பு இரண்டு என வெளி இடுவதில் தவறு இல்லை .ஆசிரியருக்கும் " செலவு " குறைவாக இருக்கும் .எனவே மீண்டும் இந்த காரணத்தை ஆசிரியர் தெரிவித்தால் நண்பர்கள் பலத்த கண்டனத்தை தெரிவிப்பார்கள் என்பதை கண்டனத்துடனும் ...,பணிவுடனும் கூறி கொள்கிறேன்.

     இரண்டாவது காரணம் " நான் என்ன சாதித்து விட்டேன்  " என்பது .இது முழுக்க ..,முழுக்க நிஜம் அல்ல தோழர்களே .இதற்கான எனது பதில்... ஆசிரியர் என்ன " சாதிக்க வில்லை " இந்த காமிக்ஸ் உலகில் ....? பிரபல பத்திரிக்கை குழுமங்கள் தான் " மாலை மதி காமிக்ஸ் ".., மேகலா காமிக்ஸ் "..., ராணி காமிக்ஸ் " ....போன்ற காமிக்ஸ் இதழ்களை வெளி இட்டன .அவை எல்லாம் இன்று காண கிடைக்காத பொழுது இன்றும் காமிக்ஸ் நண்பர்களுக்காக தொடர்ந்து வெளி இட்டு தமிழ் காமிக்ஸ் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டு இருக்கிறார் எனில் அது சாதனை அல்லவா .....தமிழின் பிரபல மூன்று பதிப்பகங்களும் அனைத்து  துறைகளுக்கும் ஒவ்வொன்றாக புத்தங்களை வெளி இடும் பொழுது அவைகள் " காமிக்ஸ் " என்ற உலகில் நுழையாதது ஏன் ? சிந்திக்க வேண்டும் நண்பர்களே ....அவர்களுக்கு பலமான விளம்பர துணை இருப்பினும் இன்னும் நுழையாமல் இருப்பதும் .....நுழைந்ததும் காணாமல் போன காரணம் தான் என்ன ? இதில் சாதகத்தை விட பாதகம் அதிகம் என்பதால் தானே ? அப்படி பட்ட துறையில் 40 வருடமாக போராடி வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கும் அவர் " சாதிக்க வில்லையா " இல்லையா என்பதை நண்பர்கள் தாம் முடிவெடுக்க வேண்டும் .எனவே ஆசிரியர் மீண்டும் இந்த பதிலை தெரிவித்தால் நண்பர்களின் கண்டனம் பலமாக இருக்கும் என்பதை ஆசிரியருக்கு கண்டனதுடனும் ...,பணிவுடனும் கூறி கொள்கிறேன் .

இனி " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு வேண்டி நண்பர்களின் போராட்டம் ஏன் என்பதை பார்க்கலாம் .

1...... பழைய நமது காமிக்ஸ் இதழ்களை கண்டாலே மனம் மகிழ்ச்சியில் துள்ளும் பொழுது அந்த இதழின் வரலாறை படிக்கும் பொழுது அந்த காமிக்ஸ் இதழ்கள் கிடைக்காத சந்தோசத்தை இந்த தொடர் வாசகர்களுக்கு தருகிறது .தொடராக வரும் பொழுதே அப்படி என்றால் " தொகுப்பாக " வந்தால் .....

2.....பழைய நமது காமிக்ஸ் இதழ்கள் கைக்கு கிடைக்கும் பொழுது முன்னர் அதை படித்து இருந்தால் .அந்த இதழ்கள் ...அந்த கால கட்டத்திற்கு நம்மை அழைத்து செல்லும் பொழுது ....ஆசிரியர் அவர்களும் நம் கால பயணத்தில் அழைத்து செல்லும் மன நிலையை இந்த தொடர் வாசகர்களுக்கு தருகிறது .தொடராக வரும் பொழுதே அப்படி என்றால்  " தொகுப்பாக " வந்தால் ....

3.....நமது பால்ய கால தோழன் நம்மிடம் திடிரென தோன்றி அந்த சிறு வயது நினைவுகளை கிளறினால் அந்த நினைவுகளில் நாம் எப்படி மகிழ்ச்சி  உடன் திளைக்கிறோம் .அந்த கிளர்ச்சியை இந்த தொடர் நண்பர்களுக்கு தரும் பொழுது " தொகுப்பாக " வந்தால் ....

4....இந்த தொடரை படிக்கும் பொழுது நமது சிங்கத்தின் கரங்களை சந்தோஷமாக பிடித்து நடந்து செல்லும் அந்த பயணம் சில நிமிடங்களில் முடிவடையும் அந்த ஏக்கம் " தொகுப்பாக " வந்தால்  ..........

இப்படி இன்னும் பல முடிவடையாத சந்தோசங்களை நண்பர்களுக்கு தந்து கொண்டு இருக்கும் இந்த தொடர்  " தொகுப்பாக " வந்தால் .....ஆசிரியர் சிந்திக்க வேண்டும் .எனவே தயவு செய்து  ஆசிரியர் " சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பை வெளி இட ஆவண செய்ய வேண்டும் .சந்தோஷ குளத்தில் குதிக்கும் நண்பர்களை சந்தோஷ கடலில் தள்ளி மகிழ்ச்சி அடைய வைப்பது ஆசிரியரின் கடமை .கடமை தவறினால் " கண்டனம்  " தெரிவிப்பது எங்கள் கடமை .விரைவில் நல்ல பதிலை ஆசிரியரிடம் எதிர் பார்த்து கொண்டு இருப்பது ..................

     " அனைத்துலக தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் நற்பணி மன்றத்தினர் " .


வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

காமிக்ஸ்களை துரத்துவோம் ....


நண்பர்களே ....வணக்கம் ....

நலம் ....நலமா .....

காமிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் காமிக்ஸ் புத்தங்களை துரத்தி ..,துரத்தி ...சென்ற காலம் போய் இப்பொழுது காமிக்ஸ் புத்தங்கள் நம்மை துரத்தி ...துரத்தி வருவது உண்மையில் கொண்டாட்டமான நிகழ்வுதான் இல்லையா தோழர்களே ....இந்த மாதம் இரண்டே ..,இரண்டே புத்தங்கள் தான் ....அதுவும் குறுகிய பக்கங்கள் என்ற பொழுது புத்தகம் வரும் நாள்களில் ஏற்படும் ஒருவித மகிழ்ச்சி ஒரு மாற்று குறைந்தே காணப்பட்டது .ஆனால் திடிரென ஆசிரியர் ஒரு நாள் தாமத்தை ஏற்று கொண்டால் மூன்று புத்தங்கள் என்று அறிவித்த பொழுது மகிழ்ச்சி பல மடங்கு ஏறியது நண்பர்கள் அனைவருமே உணருவார்கள் .அதிலும் இனி மாதம் தோறும் குறைந்த பக்கங்கள் என்றால் மூன்று இதழ்கள் கண்டிப்பாக அறிவித்து இருப்பது காமிக்ஸ் நண்பர்களுக்கு எவ்வளவு பெரிய கொண்டாட்டம் என்பது புரிந்து இருக்கும் .இப்படி திடீர் ..,திடீர் என ஆசிரயர் தனது கால்கட்டை விரலை முகத்திற்கு அருகே கொண்டு செல்வது நமக்கு நடை பாதையில் பனி சறுக்கு மட்டையை கொண்டு பனியில் சறுக்கி செல்வது போன்ற சந்தோசத்தை ஏற்படுத்துகிறது .இதே போல அடிக்கடி " தீபாவளி மலர் " போல குண்டு புத்தங்களும் இடை இடைய புகுத்தினால் அட்டகாசமாக தான் இருக்கும் .அதற்கு அவரின் மேஜை கீழே 1987 போல பல கதைகள் கொட்டி கிடந்தது போல இப்பொழுதும் கொட்டி ..,கொட்டி கிடக்க வேண்டுவோம் .

இந்த மாதம் அழகான மூன்று இதழ்கள் களம் கண்டு உள்ளன .திகில் ஹீரோவான ரோஜர் பல வருட இடைவெளிக்கு மீண்டு ( ம் )  " காலத்தின் கால் சுவடுகளில் " என்ற சாகசத்தின் மூலம் நம்மை காண வருகிறார் .அடுத்த நாயகரும் திகில் நாயகரின் சாகசம் தான் .அவர் நமது ரிப்போர்ட்டர் "ஜானி " . "நினைவுகளை துரத்துவோம் " என்ற சாகசத்தின் மூலம் நம்மை சந்திக்க காத்து கொண்டு இருக்கிறார் .அடுத்து வருபவர் " ஜில் ஜோர்டன் " காவியில் ஒரு ஆவி மூலமாக சந்திக்க வருகிறார் .இந்த மூன்று இதழ்களுமே தனக்குள் போட்டி கொண்டால் கதை தரத்திலும் ..,சித்திர தரத்திலும் எவை ..எவை முன்னுக்கு வருகின்றன என "கதையை " சொல்லாமல் இங்கே பார்க்கலாம் நண்பர்களே .

மூன்று இதழ்களில் கதைகளில் முதல் இடம் பிடிப்பது நமது  ஜானி அவர்களின் " நினைவுகளை துரத்துவோம் " தான் .ஆசிரியர் ஹாட் -லைனில் ஜானி கதைகளில் டாப் 5 இல் இது என்று அறிவித்து இருந்தார் .என்னை பொறுத்தவரை நான் படித்த ஜானி கதைகளில் இது " முதல் இடத்தை " பிடிக்கிறது .எப்பொழுதும் குற்றத்தை கண்டு பிடிக்க வருபவர்  இம்முறை தானே சிக்கலில் மாட்டிக்கொண்டு அதில் இருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதையும் கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே ..அச்சு தரப்பிலும்  முழு நீள திருப்தி .அழகான வண்ண ஓவியங்கள் ..,சிறந்த அச்சு தரம் ..விறுவிறுப்பான கதை ஓட்டம் என்று நம்மை அழகாக மயக்கி விட்டார் ஜானி .அட்டை படமும் அழகு தான் என்றாலும் மூன்றில் முதல் இடம் அதற்கு இல்லை என்பதே   உண்மை .மற்ற படி மூன்று ஹீரோகளில் இம்முறை முதல் இடம் பிடிப்பது ஜானி அவர்களே .அந்த இதழின் அட்டை படம் கீழே ...


அடுத்து இரண்டாம் இடத்தை பிடிப்பவர் ரோஜர் .ஆனால் அட்டை படத்திலும் சரி ...உள்ளே சித்திர தரத்திலும் சரி ஓவியர் வில்லியம் வான்ஸ் கதைகளுக்கே சவால் விடும் அளவு அட்டகாசமான ஓவியங்கள் .கதையை  படிக்கும் நண்பர்கள் தயவு செய்து ஆர அமர ஓவியத்தை ரசித்து பார்த்து படித்தால் நீங்களே அந்த கானகத்தில் பயணம் செய்யும் அனுபவம் கிடைக்கலாம் .பல இடங்கள் அது ஓவியமா ....புகைப்படமா என்ற சந்தேகத்தை  நமக்கு ஏற்படுத்துவது ஓவியருக்கு உள்ள திறமையை காட்டுகிறது .கதை களம் குறைவு என்றாலும் ஓவிய திறமையாலும் ...,அதை குறைக்காமல் அழகான அச்சு தரத்தாலும் " ரோஜர் " அவர்கள் நம்மை இதழில் கட்டி வைக்கிறார்கள் .அதே சமயம் ஆசிரியர் " முத்து காமிக்ஸ் " என்றாலே ஹாட் -லைன் பகுதியில் குறைவாக வருவதை தவிர்த்து வந்தால் நன்றாக இருக்கும் .அதன் அழகான அட்டை படம் கீழே ....




மூன்றாம் இடத்தை அதாவது கடைசி இடத்தை பிடிப்பது நானே எதிர் பார்க்காத ....ஆவலுடன் எதிர் பார்த்த " ஜில் ஜோர்டனின் " காவியில் ஒரு ஆவி .எப்படி மிகவும் முதல் சாகசத்தில் நம்மை " டயபாளிக் " அவர்கள் மயக்கி அடுத்த சாகசத்தில் தொங்கலில் விட்டாரோ அது  போல இவரும் தனது முதல் சாகசத்தில் நம்மை மனம் கவர்ந்தவர் இதில் அதை தவற விட்டார் என்பதே உண்மை .அதிலும் ஆசிரியர் நீங்கள் காண போவது " எழுத்து பிழை " அல்ல என்று அறிவித்து இருந்தாலும் அந்த தவறான வார்த்தை குழப்பங்கள் கதையில் நகை சுவையை அளிப்பதற்கு பதில் கதை ஓட்டத்தில் ஒரு செயற்கை தன்மையை தான் அளிக்கிறது .ஆனால்  புத்தகத்தை திறந்தவுடன் விரைவில் வருகிறது விளம்பரங்கள் நம்மை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது .அதுவும் 214 பக்க சாகசமான டெக்ஸ் அவர்களின் " நில் ...கவனி ....சுடு ..." தலைப்பு ......லக்கி சாகசத்தின் அறிவிப்பு என அந்த இதழ்கள் அடுத்த மாதமே வர கூடாதா என்ற ஏக்கத்தை வரவழைக்கிறது .

       அதே சமயம் சில பகுதிகளை புத்தகம் வருவதற்கு முன்னரே  இணையத்தில் வெளி இடுவதை தவிர்த்தால் புத்தகத்தில் காணும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் .உதாரணமாக 2013 கண்ணோட்டம் முதல் முறை புத்தகத்தில் கண்டு இருந்தால் படிபதற்க்கு இன்னும் சுவையாக காணப்பட்டு இருக்கும் . சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரை செல்ல ..செல்ல காமிக்ஸ் கதைகளை விட சுவராஸ்யமாக செல்வது எனக்கு மட்டும் தானா ? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் .மொத்தத்தில் "ஜில் ஜோர்டன் " கொஞ்சம் கீழே இறங்கி வந்தாலும் மற்ற இரண்டு இதழ்களால் இந்த மாதமும் அழகான "காமிக்ஸ் மாதம் " ஆக தான் அமைந்துள்ளது .மீண்டும் விரைவில் சந்திப்போம் தோழர்களே ......நன்றி .

வியாழன், 16 ஜனவரி, 2014

காமிக்ஸ் உண்டு ....எதிரி இல்லை ....


நண்பர்களே ...வணக்கம் ..

நலம் ..நலமா ..?

அனைத்து  காமிக்ஸ் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் ...இந்த புத்தாண்டில் வந்த இனிய நான்கு குட்டி புத்தங்களை அனைவரும் வாங்கி படித்து இருப்பிர்கள் .நானும் உங்களை போலவே படித்து முடித்து விட்டு அடுத்த மாதம் எப்பொழுது வரும் என்று காத்து கொண்டிருக்கிறேன் .மாத ஆரம்பத்தில் புத்தகம் வரும் பொழுது சந்தோசமும் ...அனைத்து புத்தகமும் படித்து முடிந்தவுடன் ஒரு வெறுமையும் சூழ்வது "காமிக்ஸ் " ரசிகர்களுக்கே மட்டுமே வரும் உணர்வுகள் .நாவல் ரசிகர்களோ ...சினிமா ரசிகர்களோ தாங்கள் விரும்பி பார்க்கும் படத்தை எதிர் பார்ப்பார்கள் .கதையுளும் மனமார ஒன்றி  இருப்பார்கள் .ஆனால் படித்து  / பார்த்த பின்னர் ஹய்யோ ....முடிந்து விட்டதே ...அடுத்து என்ன ..என்றல்லாம் எதிர் பார்க்க மாட்டார்கள் .ஆனால் "காமிக்ஸ் ரசிகர்களுக்கு " மட்டுமே படித்து முடிந்தவுடன் "அடுத்து " என்ற ஏக்கம் .சீக்கிரம்  முடிந்து விடுமே என்ற தயக்கம் . தயக்கத்தில் ஒரு நாள் ஆசிரியரின் பக்கங்கள் ..,அடுத்து வரும் விளம்பரங்கள் என பார்த்து விட்டு அடுத்த நாள் அனைத்து  கதைகளின் ஓவியங்களையும் பொறுமையாக ரசித்து விட்டு அடுத்த நாள் எப்பொழுது அமைதியான நேரம் கிடைக்கிறதோ அப்பொழுது படிப்பது...என்று  இப்பொழுது எல்லாம் பழகி விட்டது .நாம் காமிக்ஸ் உலகத்தில் இருக்கும் பொழுது எதிரிகள் அருகில் வந்தால் கூட கண்ணுக்கு புல படாத தன்மை இந்த மாய லோகத்தில் ஜணிதிருக்கும் பொழுது மட்டுமே என்றாலும் மிகை இல்லை .

         இந்த மாத வந்த நான்கு இதழ்களில் நான் முதலில் படித்தது "சன்ஷைன் கிராபிக் " நாவலில் வந்த தோர்களின் "பிரபஞ்சத்தின் புதல்வன் ".என்னடா கிராபிக் நாவல் மீது இப்பொழுது அவ்வளவு ஆர்வம் வந்து விட்டதா ?என்ற சந்தேகம் எல்லாம் வேண்டாம் .கையில் அதிகம் புத்தகம் இருக்கும் பொழுது எது எனக்கு அதிகம் "பிடிக்காத " கதையோ அதை தான் முதலில் படிக்கும் ரகத்தை சார்ந்தவன் என்பதால் முதல் கதையாக "தோர்களை "தேர்ந்து எடுத்தேன் .என்னதான் ஆசிரியர் முந்தைய கிராபிக் நாவல் போல இருக்காது என்று உறுதி தந்திருந்தாலும் ஏற்கனவே பட்ட "அனுபவம் "சந்தேகத்தை 100 % தீர்க்க வில்லை என்பதாலும் ...இணைத்து வந்து இருந்த மூன்று நாயகர்களும் எப்பொழுதும் ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கையாலும் "கிராபிக் நாவலை                                                                                                                                                                  
எடுத்து வைத்தேன் .அட்டை படமே "முந்திய அழுகாச்சி நாவல் "  போல இருக்காது என்ற நம்பிக்கையை பார்த்தவுடன் ஏற்படுத்தியது .ஆனாலும் ஒரு பயம் எட்டி பார்த்தது என்னவென்றால் வித்தியாசமான அட்டைப்பட ஓவியமும் ...உள்ளே முந்தைய நாள் ரசித்த வித்தியாச ஓவியங்களும்  கதையை "நம்பும் " விதத்தில் இருக்குமா ?இல்லை சுத்தமான குழந்தைகளுக்கான "பூத கதையாக " இருக்குமா ?என்பதே அது .ஆனால் படிக்க ..படிக்க அப்படி ஒன்றும் "பூ சுற்றும் " கதையாக தெரிய வில்லை .இதற்கு முழு பாராட்டுகளும் தமிழ் மொழி ஆக்கத்தில் ஈடுபட்டவர்க்கு தான் .இப்படி பட்ட கதைகளை படிக்க தெரிந்த குழந்தைகளுக்கும் (என்னை போல ) ஏற்கும் படி இருக்க வேண்டும் ..முதிர்ந்த ரசிகர்களும் ஏற்கும்படி "குழந்தைத்தனமாக "இல்லாமல் இருக்க வேண்டும் .அதில் மொழி பெயர்பாளர் வெற்றி பெற்று விட்டார் என்பது உண்மை .இரண்டு கதைகளும் படிக்கும் பொழுது "காதில் பூ சுற்றும் " எண்ணம் எல்லாம் வரவில்லை .அதிலும் இரண்டாவது கதையின் முடிவு எதிர் பார்க்காதது .

            எனது மகன் தானாக படிக்கும் பழக்கத்திற்கு வந்து விட்டால் அவன் "காமிக்ஸ் "ஆர்வத்தை வளர்க்க வைக்கும் புத்தகமாக இது முதலில் இருக்கும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை .குறைகளை சொல்லாவிட்டால் எப்படி ? மிக ..மிக பெரிய குறை ஆசிரியர் பக்கம் இல்லாதது .முதல் சன்ஷைன் கிராபிக் நாவலாக மலர்ந்த இதில் ஆசிரியர் கொஞ்சமாகவது எட்டி பார்த்து விட்டு வந்து இருக்கலாம் .அடுத்து குட்டியான புத்தகத்தில் இரண்டு கதைகளை வெளி இட்டதை விட ஒரு முழு நீள கதையாக இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் .ஒரு வேலை தோர்கள் கதை எல்லாம் இப்படி "குட்டியான "கதையாக தான் இருக்குமா என்பது "பெங்களூர் கார்த்திக் " போன்றவர்கள் மட்டுமே அறிவார்கள் .நாங்கள் எல்லாம் தமிழ் காமிக்ஸை தவிர வேறு ஒன்றை நோக்காதவர்கள் .அதே சமயம் "கதை "பிடிக்காத நண்பர்கள் இருக்கலாம் .ஆனால் அவர்கள் இந்த கதைகளின் "ஓவியத்தை " ரசிக்காமல் இருக்க முடியாது .அதுவும் "ராஜ் குமார் "போன்ற ஓவிய ரசிகர்களுக்கு இது  மறக்க முடியாத விருந்து .மொத்தத்தில் தைரியமாக "தோர்களுக்கு " பாஸ் மார்க் அளிக்கலாம் .அளிக்க விரும்பாதவர்கள் அவர்கள் குழந்தைகளுக்காக "பாஸ் " மார்க் அளித்தே தீர வேண்டும் .

         அடுத்து எடுத்து படித்தது "யுத்தம் உண்டு ..எதிரி இல்லை ".ஏற்கனவே வந்த முதல் "கமாஞ்சே " கதை ( சரியாக சொன்னால் இரண்டாவது ) என்னை ஏமாற்ற வில்லை என்பதால் எந்த தயக்கமும் இல்லை .அழகான ஓவியங்களும் ...தெளிவான கதை ஓட்டமும் "கௌ -பாய் "உலகத்தில் நம்மை உலவ செய்கிறது .செவ்விந்தியர் ..,வெள்ளையர் என இருபக்க பார்வையிலும் உள்ள தர்மங்களை சரியாக வாசகர்க்கு கொண்டு  சென்று எவர் பக்கமும் "வெறுப்பை " சாய்க்காத வண்ணம் முடிவை கொண்டு வந்ததில் ஆசிரியரின் திறமையை காட்டுகிறது .கௌ பாய் ரசிர்களை  முழுமையாக திருப்தி படுத்தும் இதழ்  . அதே சமயம் ,.சில இடங்களில் வந்த எழுத்து பிழைகளை தவிர்த்து இருக்கலாம் .மற்ற படி இந்த இதழும் மன நிறைவை தந்த இதழ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .

                அடுத்து வந்த இரு இதழ்கள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் வந்த "ப்ருனோ ".சாகசமான "சாக மறந்த சுறா " மற்றும் பிரின்ஸ் அவர்களின் மறுபதிப்பு சாகசமான "பயங்கர புயல் "..இந்த இரண்டு அட்டை படங்களும் மற்ற அட்டை படங்களுக்கு குறை வைக்க வில்லை .அதிலும் "பயங்கர புயல் " அட்டைபடம் இலங்கை வாசகர் "பிரதிப் " அவர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பான முறையில் வந்துள்ளது .ப்ருனோ சாகசத்தை குழுவினரோடு எதிர் பார்தால் "தனி ஆவரணத்தில் " வந்து கலக்கியது மகிழ்ச்சியை தந்ததா இல்லை வருத்தத்தை தந்ததா என சொல்ல முடிய வில்லை .பிரின்ஸ் வழக்கம் போல கலக்கி விட்டார் .

           மொத்தத்தில் இந்த மாதம்  அதிகம் "குறை " ஏதும் இல்லாமல் சிறந்த முறையில் ஒன்றுக்கு நான்காக புத்தகத்தை அளித்து ..,அனைத்து இதழ்களின் சித்திர தரம் ..,அச்சு தரம் ..,அழகான மொழி ஆக்கம் .., அட்டகாசமான அட்டைப்படங்கள் என காமிக்ஸ் ரசிகர்களுக்கு அழகான புத்தாண்டையும் ..,அருமையான பொங்கலையும் அளித்த ஆசிரியர் அவர்களுக்கு மிக்க நன்றி .

        மீண்டும் சந்திப்போம் நண்பர்களே .....நன்றி ..

சனி, 11 ஜனவரி, 2014

காமிக்ஸ் புத்தாண்டு.....

நண்பர்களே ...வணக்கம் .

நலம் ..,நலமா ..?

இந்த வருட ஆரம்பம் இரு முறையில் என்னை சந்தோஷ படுத்தியது .ஒன்று பிரபல இரட்டை எழுத்தாளர்களும் ..,திரை பட வசனகர்த்தர்களும் ..,தற்போது இயக்குனர் ஷங்கர் அவர்களின் " ஐ " திரைப்பட வசனகர்த்தர் ஆன "சுபா "அவர்களின் புத்தாண்டு வாழ்த்து அட்டை கிடைக்க பெற்றேன் .நான்கு ,ஐந்து வருடங்களுக்கு முன் தவறாமல் நான் வாழ்த்து அட்டை ..,கடிதம் அனுப்பும் பொழுது அவரது பதிலும் ..,வாழ்த்தும் தவறாமல் எனக்கு வந்தடையும் .ஆனால் மங்கி போன "நாவல் " விற்பனைகளால் கடிதம் எழுதுவதையும் ..,அலைபேசி வசதிகளால் "வாழ்த்து அட்டைகளும் " இப்பொழுது கிடைக்க பெறா சூழ்நிலையில் பல வருடங்களாக அவரிடம் தொடர்ப்பு இல்லா நிலையில் ..இப்பொழுது திரைப்பட துறையில் மிக பிஸியாக பணியாற்றும் நிலையில் அவரின் "புத்தாண்டு வாழ்த்து "அட்டை கிடைக்க பெற்றேன் .எப்பொழுதும் "காமிக்ஸ் " தவிர வேறு எதுவும் இங்கே எழுத எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் இங்கே நான் இதை கூற காரணம் அவரின் வாழ்த்து அட்டையில் காண பட்ட பொன் மொழி .ஒவ்வொரு முறை அவரின் வாழ்த்து அட்டையில் பொன்மொழி காணப்பட்டு அதன் படி நடக்க முயற்சிப்பேன் .இம்முறை அவரின் பொன்மொழியில் எனக்கு வேறு பாடு காணப்பட்டதால் இங்கே இறக்கி வைக்கிறேன் .

                   "   பொய்யாக இருந்து மகிழ்விப்பவராய் இருப்பதை விட
                       உண்மையாய் இருந்து வெறுக்க படுவது மேல் "


என்பதே அந்த பொன் மொழி .நடைமுறையில் இது சாத்தியமா என மனதுக்குள் ஒரு குழப்பம் .இப்பொழுது உள்ள வாழ் முறையில் பல சமயம் "பொய் " ஆக தான் நடிக்க வேண்டி உள்ளது .அப்படி இருந்தும் பலரால் நாம் வெறுக்க படுகிறோம் ...,வருத்தம் அடைய வைக்கிறோம் .அனைத்து காலமும் நாம் "உண்மையாக " இங்கே இருந்தால் அனைவருக்கும் "எதிரி "ஆக தான் நாம் பார்க்க படுவோம் என்று பயப்படாமல் இருக்க முடிய வில்லை .நாம் சரியாக இருந்தால் கூட பிறரை "வருத்த பட "வைப்பதை தவிர்க்க முடியாது .எடுத்து காட்டாக நமது "காமிக்ஸ் ஆசிரியர் " அவர்களை எடுத்து கொள்ளுங்கள் .பலவற்றையும் யோசித்து ..,அதன் சாதக .,பாதகம் அனைத்தும் அலசி தான் ஒவ்வொரு இதழ்களையும் வெளி இடுகிறார் .ஆனால் "ஒல்லி புத்தகமாக " வந்தால் சிலருக்கு அவர் மீது வருத்தம் . "குண்டு புத்தகம் "ஆக வந்தால் விலை அதிகம் என சிலருக்கு  வருத்தம் . "கிராபிக் நாவல் "என அழுகாச்சி கதைகளை வெளி இட்டால் சிலருக்கு கோபம் .."அதிரடி கதைகள் "தொடர்ந்து வந்தாலும் சிலருக்கு வருத்தம் இப்படி யாராவது ஒருத்தருக்கு ஒரு முறையாவது அவரின் மீது  சலிப்பு வருவது இயற்கை .அதற்கு அவரால் தான் என்ன செய்ய முடியும் .அதை கூட விடுங்கள் .நாட்டிற்கே சுதிந்திரம் வாங்கி கொடுத்து "மகாத்மா "என்று புகழ படும் "காந்தியை " கூட ஒருவர் அவர்  "கெட்டவர் " என்ற  நினைப்பில் தானே சுட்டு கொல்லபட்டார் .எனவே வாழ்வில் சில சமயம் நாம் "பொய்யாக " இருப்பதில் தவறில்லை என்பது என் கருத்து .

       சாரி நண்பர்களே ...நிகழ்வுக்கு வருவோம் ..இந்த ஆண்டின் அடுத்த கொண்டாட்டம் மீண்டும் ஒரே சமயத்தில் "நான்கு புத்தங்கள் " அளித்து இந்த புத்தாண்டை "காமிக்ஸ் புத்தாண்டு "ஆக மாற்றிய ஆசிரியருக்கு நன்றி .இரண்டை நான்காக மாற்றி வந்திருந்தாலும் "இளைத்து " காணப்பட்ட வருத்தம் இருந்தாலும் ஒன்று பட கையில் நான்கு இதழ்கள் இருக்கும் பொழுது வந்த சந்தோஷம் தனி தான் .இம்முறை வந்த நான்கு இதழ்களின் அட்டைப்படமும் அசத்தல் ரகம் தான் .அச்சு தரத்திலும் இந்த முறை எந்த குறையும் இல்லை .இதே தரத்தில் இனி வந்தாலும் இனி மேலும் பக்கத்தை குறைக்காமல் இருந்தால் தான்  காமிக்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி குறையாமல் இருக்கும் .இதை சொல்ல காரணம் 48 பக்ககளில் வந்த இம்முறை இதழ்களில் அடுத்த வெளியீட்டு விளம்பரத்தில் 42 பக்கங்கள் என வருவது என்னை போன்ற "குண்டு "புத்தக விருப்பம் உடையவர்களின் ஆர்வத்தை இழக்க செய்யும் காரியம் மட்டுமல்ல ...ஒல்லி புத்தக ரசிகர்களின் விருப்பத்திற்கும் " குண்டு " வைக்கும் செயல் .
இந்த வருட முதல் மாதத்தில் லயன் ..,முத்து ..,சன்ஷைன் ..,கிராபிக் என நான்கு இதழ்கள் வந்தது போல "ஒல்லி "புத்தகம் வரும் காலம் எல்லாம் நான்கு இதழ்கள் வந்தால் அனைவரும் விரும்புவார்கள் .120 ரூபாய் புத்தகம் வரும் சமயத்தில் மட்டும் புத்தகத்தின் எண்ணிக்கை குறைத்தல் நன்று .அதே போல நான்கு இதழ்களுக்கு ஆசிரியரின் நான்கு "ஹாட் -லைன் " இல் வந்து உரையாடுவார் என நினைத்து சந்தோஷ பட்டால் இரண்டரை இதழ்களுக்கு மட்டும் வந்து உரையாடி விட்டு சென்று கடுப்படித்து விட்டார் ஆசிரியர் .அதிலும் புது புத்தகத்தில் ..,முதல் புத்தகத்தில் "ஆசிரியர் பக்கம் "எதுவும் இல்லை என்பது மிக வருத்தமான ஒன்று ..ஆசிரியர் தயவு செய்து இனி இதை தவிர்க்க வேண்டும் .அதே  போல பில்லர் பக்கத்தில் "லக்கியின் " குறுகிய கதையை படிக்கும் திருப்தியை விட "மதி இல்லா மந்திரி "போன்ற கதைகள் வருவது முழு நீள கதையை படித்த திருப்தி வருகிறது .முத்து காமிக்ஸ் ஹாட் லைனில் அடுத்த வெளியீடு பற்றி அறிவிப்பதை போல அணைத்து இதழ்களிலும் அதனை கடை பிடித்தல் நன்றாக இருக்கும் .

                                                                                                                                                                     

முத்து காமிக்ஸின் "சாக மறந்த சுறா " அட்டைபடம் உண்மையில் பழைய லயன் ..,முத்து அட்டை படத்தை பார்த்த திருப்தியை தந்தது .நீண்ட நாட்களுக்கு பிறகு ப்ருனோ வருவதில் பழைய ரசிகர்களுக்கு மட்டுமல்ல ..,புது ரசிகர்களுக்கும் ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருக்கும் என்பது உண்மை .அதன் அழகான சித்திர தரம் ...அதிலும் வண்ணத்தில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஒரு அழகான பயணத்தை அளிக்கும் என்பது உறுதி .

லயன் காமிக்ஸின் "கமாஞ்சே " சாகசமான "யுத்தம் உண்டு ..எதிரி இல்லை " அழகான கை ஓவிய அட்டைபடத்தில் ..,அட்டகாசமான சித்திர தரத்துடன் ..அருமையான கதை ஓட்டத்தில் "டைகர் " கதைகளுக்கு மாற்றாக உள்ளார் .இவரை தொடர்ந்து ஆசிரியர் கொண்டு வருவதுடன் லயன் 30 வது ஆண்டு மலரிலும் இவரை கொண்டு வருவது "கௌ -பாய் "ரசிகர்களுக்கு போனஸ் ஆக இருக்கும் என்பது மிக பெரும் உண்மை .அதே போல "சன் ஷைனில் "வந்த "பயங்கர புயல் "ஏற்கனவே கருப்பு வெள்ளையில் படித்தவர்களுக்கும் சரி ..கலரில் புதிதாக படிக்கும் பலருக்கும் சரி ....கடலில் மிதக்கும் அனுபவம் கண்டிப்பாக உண்டு .நான்காவது இதழை பற்றி "அட்டை படமே "சொல்லி விடும் வித்தியாசமான கதை ஓட்டத்தை ....புத்தகத்தை புரட்டினால் ஓவிய களமே சொல்லி விடும் மாறு பட்ட களத்தை .மொத்தத்தில் "கிராபிக் " நாவல் களத்தில் வந்த இதழ்களில் முதன் முறையாக என் மனதை கொள்ளை கொண்ட இதழ் இது என்பதால் இது எப்பொழுதும் மறக்க முடியாத இதழ் என்றும் கூறி கொள்கிறேன் .என்ன ஒன்று குறுகிய பக்கத்தில் குறுகிய இரண்டு கதைகளால் ஒரு முழு நீள கதையை படித்த அனுபவம் இல்லை எனினும் திருப்தி அளித்த புத்தகம் என்று தயங்காமல் சொல்லலாம் .

    மொத்தத்தில் இந்த புத்தாண்டில் காமிக்ஸ் ரசிகர்களுக்கு கொஞ்சம் ..,கொஞ்சமாக ...பரிமாறினாலும் திருப்தி உடன் பசி தீர்த்து ..,அதுவும் எந்த குறையும் இல்லாமல் பரிமாறிய இந்த மாதத்தை போல எந்த மாதமும் வந்தால் காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்த வருடம் போல எப்பொழுதும் "புத்தாண்டு "தான் என்பது மீண்டும் மறக்க முடியாத உண்மை .

               மீண்டும் "கதை விமர்சனத்தில் " விரிவாக சந்திக்கலாம் நண்பர்களே ..நன்றி ...



 

சனி, 21 டிசம்பர், 2013

COMICS 2013.......& 2014..?

நண்பர்களே ...வணக்கம் ...

நலம் ...நலமா ....?

ஒரு வழியாக இந்த மாதத்துடன் இந்த வருட "காமிக்ஸ் கொண்டாட்டம் "முடிவடைகிறது .இரண்டு வருடங்களுக்கு முன்  காமிக்ஸ் பசி கொண்ட மிக ,மிக குறுகிய  நண்பர்களுக்கு இருந்த ஒரே உணவகம் சிவகாசி "பிரகாஷ் பப்ளிஷர்ஸ் ".அந்த உணவகமும் அடிக்கடி கடையை அடைத்து வந்ததுடன் ..,எப்பொழுது உணவு பரிமாறுவார்கள்  என்பதே கேள்வி குறியாக இருந்த பொழுது நண்பர்கள் பசியால் துடித்து கொண்டு இருந்தார்கள் .பொறுத்து ..,பொறுத்து பார்த்த உணவகத்தினர் "சப்ளையர் "வைத்து நண்பர்களுக்கு உணவு பரிமாறினால் அவர்கள் பசியை நம்மால் தீர்க்க முடியாது .இனி நாமே களத்தில் இறங்க வேண்டியது தான் என்ற முடிவுடன் 2012 முதல் புத்தம் புது பொலிவுடன் பழைய உணவகத்தை மாற்றி "மசாலா கபே "வாக அவர்களே நண்பர்களுக்கு வேண்டிய உணவை பரிமாற நண்பர்களுக்கு மாபெரும் கொண்டாட்டம் .எப்பொழுது உணவகம் திறந்து "காமிக்ஸ் பசியை "தீர்ப்பார்கள் என்ற காலம் போய் எப்பொழுதும் திறந்து வைத்ததுடன் ஒவ்வொருவருக்கும் என்ன ,என்ன சுவை பிடிக்குமோ அந்த சுவை கொண்ட உணவை தேடி பிடித்து நண்பர்களுக்கு பரிமாறினார்கள் .பழைய இட்லி ..,தோசையா ...புது பீட்ஸா வா உங்களுக்கு என்ன தேவை ..?அனைத்தும் பரிமாறினார்கள் .அனைத்துமே புது வகை சுவையுடன் .இப்படி 2012 உணவகத்தை திறம் பட நடத்தியவர்கள் 2013 இலும் நடத்த வேண்டுமே என்ற நண்பர்கள் கனவை  நனவாக்குவது  போல  2012 இல் எட்டு அடி தான் பாய்ந்து வந்தோம் .இப்பொழுது பாருங்கள் என்று 2013 இல் 16 அடி பாய்ந்து பல வகை உணவு வகைகளை வயறு நிரம்ப உண்ண வைத்தார்கள் .ஒரு சிலருக்கு ஒரு சில உணவு வகைகள் பிடிக்காமல் இருக்கலாம் .ஆனால் பரிமாறிய விதத்தில் ..,அதற்காக அவர்கள் பட்ட சிரமத்தை கணக்கில் கொண்டால் அந்த உணவும் ஒரு "சுவையாக " மனதில் கொண்டார்கள் நண்பர்கள் .அதே சமயம்  ஒரு சில உணவில் உப்பு ..,காரம் குறைந்தோ ..,அதிகரித்தோ காணப்படும் பொழுது அதை உணவகத்தினர் காதில் சொன்னதும் உண்டு .அதற்கு காரணம் "உணவகத்தை "குறை சொல்ல வேண்டும் என்பதற்கு அல்ல .புதிதாய் வருபவர்கள் உணவகத்தை "குறை "சொல்ல கூடாது என்பதற்காக .அதை உணவகத்தினர் உணர்ந்தே உள்ளனர் என்பதும் கண் கூடு .எனவே தான் சிற்சில சமயம் நண்பர்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சிரமப்பட்டு செய்த சமையலை கூட நிறுத்தி நண்பர்களுக்கு ஏற்ற வகையில் ....மாற்றி கூட உணவை பரிமாறி "பசி " அடைத்தார்கள் . .மொத்தத்தில் இந்த 2013 இல் "மசாலா கபே "ஆக இருந்த  உணவகத்தை 2014 இல் பல படி பாய்ந்து "ஸ்டார் " ஹோட்டல் ஆக மாற்ற "காமிக்ஸ் நண்பர்களின் "வாழ்த்து எப்பொழுதும் அந்த உணவகத்திற்கு உண்டு என்பதோடு புது வாடிக்கையாளர்... நிறைய நண்பர்கள் என இந்த உணவகம் பல படி ஏற எங்கள் வாழ்த்துகள்.

     அதே  சமயம் 2013 இல் நமக்கு பிடித்த ..,பிடிக்காத உணவை சொன்னால் தானே 2014 இல் நமக்கு ஏற்ற படி அவர்கள் உணவை பரிமாறுவார்கள் .எனவே எனக்கு பிடித்த ..பிடிக்காத "சுவை " கீழே ....மறவாமல் உங்கள் "சுவையும் "சொல்லி விடுங்கள் நண்பர்களே ...எனக்காக அல்ல ..உங்களுக்காக ....

2013 இன் டாப் 3   :  1) துரத்தும் தலைவிதி  ( படித்து முடித்து கை தட்டிய ஒரே புத்தகம் )
                                     2) குற்ற திருவிழா

                                     3)ஆகாயத்தில் அட்டகாசம்

2013 இன் டாப் சொதப்பல்  :  "கிராபிக் நாவல் " என்ற முத்திரையில் வந்த அழுகாச்சி காவியங்கள் ...( இது எனது கருத்து மட்டுமே )

2013 இன் பெஸ்ட் அட்டைபடம் :   ஒன்றல்ல ..மூன்று ...
                                                                    1) ஜானியின் "ஓநாய் மனிதன் "அட்டைபடம்
                                                                     2)தங்க கல்லறை
                                                                    3) ரத்த படலம்

2013 இன் சொதப்பல் அட்டைபடம் :  வேங்கையின் சீற்றம்

பெஸ்ட் நாயகர்   :    1) லார்கோ    2) ஷெல்டன்

வேண்டவே வேண்டாம் என்பது  :    ஹி ..ஹி ....

ப்ளாக் &வொய்ட் புத்தகம் :     கண்டிப்பாக தொடர வேண்டும் .

2014 இல் எதிர் பார்ப்பு  : 1) டெக்ஸ் அவர்களுக்கு கூடுதல் சான்ஸ் ..
                                                2)பக்கம் குறைவான அந்த 60 ரூபாய் புத்தகத்திற்கு ஒரு மாற்று வழி ...
                                                3)மறுபதிப்பில் ஆவது " வேதாளர் "  மற்றும் பேட் மேன் "
முயற்சிக்கலாம் .
                                                4) டயபாளிக் அவர்களுக்கு மீண்டும்  கூடுதல் சான்ஸ்
                                               
                                                5) இம்முறையும் ஒரு "தீபாவளி மலர் "

டெக்ஸ் வில்லர் ஓவர் டோசா  :  கண்டிப்பாக இல்லை

ரத்த  படலம்     ........ ?   :    ஓகே ..பட் பல வருட நீட்டிப்பு சொதப்பல் ...அனைத்து பாகமும் வந்தவுடன் மொத்தமாக வெளி இடலாம் .

காமெடி ..கவ்பாய் ..ஆக்சன்  அடுத்து :     அது  மட்டும்

2013 இல் நமது காமிக்ஸ் :   " என்னவென்று சொல்வதுமா
                                                         வஞ்சி அவள் பேர் அழகை ....
                                                        சொல்ல ஒன்றும் வார்த்தை இல்லை "




2013 எனது கண்ணோட்டம் அவ்வளவு தான் நண்பர்களே .....உங்களுக்கு இதில் மாறு பட்ட கருத்து கண்டிப்பாக இருக்கலாம் .2014 பல ஒன்று பட்ட நண்பர்களின் கருத்துகள் சுருக்கமாக ஆசிரியருக்கு .......

1)  இந்த வருடம் 2013 தாண்டி பல சிகரங்கள் 14 இல் படைக்கும் என்ற கருத்துக்கு ஏமாற்றம் அளிக்கும் படி பக்கம் குறைவான 60 ரூபாய் புத்தகமே அதிகம் ...அதுவும் "வேங்கையின் சீற்றம் "அளவை பார்த்தால் ..அதுவும் இந்த அளவு தான் என்றால் நண்பர்களுக்கு பசி அடங்காது .தயவு செய்து மாற்று வழி கண்டு பிடிங்கள் .

2) டெக்ஸ் மறுபதிப்பு நான் விரும்ப வில்லை .அதே சமயம் நண்பர்கள் கருப்பு வெள்ளையில் விரும்ப வில்லை .கலர் இல்லை எனில் "டெக்ஸ் ஸ்பெஷல் "ஆக பவள சிலை மர்மம் ..,சைத்தான் சாம்ராஜ்யம் (திகில் )...பழிக்கு பழி என என பல வருடம் முன்னர் வந்த கதைகளை வெளி இடலாம் .

3) தயவு செய்து இந்த மாதம் "சிங்கத்தின் சிறு வயதில் "தொடரை காணாமல் செய்வது போல இனி தடை போடாதீர்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .

4) இது என்னுடைய ஆசை மட்டுமல்ல ..அகில உலக தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் ஆசை .இந்த 30 வது ஆண்டு மலரில் "சிங்கத்தின் சிறு வயதில் "தொகுப்பை இது வரை வந்ததை மட்டும் தயவு செய்து வெளி இடுங்கள் .இது உங்கள் வரலாறாக நினைத்து நீங்கள் தயங்கலாம் .ஆனால் இது நமது "காமிக்ஸ் வரலாறு " .ப்ளீஸ் சார் ..ஏமாற்றி விடாதீர்கள் . (நீங்கள் ஓட்டடுப்பு கூட நடத்துங்கள் )

5)  கண்டிப்பாக இந்த முறையும் + 6 அல்லது +12 வரிசை எதிர் பார்க்கிறோம் .  

நன்றி நண்பர்களே ......... மீண்டும் சந்திப்போம் .ஆசிரியரை சிந்திக்க வைக்க ....

         வணக்கம் .

                                                

செவ்வாய், 17 டிசம்பர், 2013

காமிக்ஸ் கச்சேரி ..

நண்பர்களே ..,வணக்கம் ....

நலம் ..,நலமா ....

இந்த டிசம்பர் மாதம் சங்கீத கச்சேரி போல காமிக்ஸ் ரசிகர்களுக்கு இந்த மாதம்  "காமிக்ஸ் கச்சேரி ".முழுதாக நான்கு புத்தங்கள் ஒரே சமயத்தில் வெளி இட்டு மிக பெரிய சந்தோசத்தை காமிக்ஸ் ரசிகர்களுக்கு தந்த "பிரகாஷ் பப்ளிஷர்ஸ் "அவர்களுக்கு மிக பெரிய நன்றி .இந்த மாதம் வந்த நான்கு புத்தங்கள் டயபாளிக் சாகசமான " ஆப்ரஷன் சூறாவளி "டைகரின் "வேங்கையின் சீற்றம் " மற்றும் லக்கி மற்றும் சிக் பில் தோன்றும் இரு மறுபதிப்பு கதைகள் ஆன  "புரட்சி தீ "மற்றும் "விற்பனைக்கு ஒரு ஷெரிப் "ஜானியின் "ஓநாய் மனிதன் " மற்றும் ஊடு சூனியம் .இந்த புத்தங்களின் பார்வையை சுருக்கமாக மற்றும் ...நான்கில் முதல் இடம் பெற்றது ...நான்கில் சிறந்த அட்டைபடம் என இந்த மாத காமிக்ஸ் பார்வையை ஓட்டி பார்க்கலாமா நண்பர்களே .....

முதலில் "ஆப் ரேஷன் சுறாவளி " 

அட்டை படத்தை பொறுத்த வரை முன் அட்டை சுமார் ரகமே ...அதற்கு பதிலாக வாசக நண்பரின் பின் பக்க அட்டைப்படத்தை முன் பக்கமாக வந்திருந்தால் கலக்கலாக இருந்திருக்கும் என்பது எனது எண்ணம் .அட்டை படம் அப்படி இருந்தாலும் கதை எப்படி என பார்த்தால் அதனை சூப்பர் ரகத்தில் இணைப்பதா அல்லது மொக்கை ரகத்தில் இணைப்பதா என பெரும் குழப்பம் .கதையின் பல பக்கங்கள் கழித்தே "டயபாளிக் "வருவது மட்டுமல்லாமல் பாதி பக்க கதையை பார்த்தால் இது டயபாளிக் கதையா அல்லது காதல் கதையா என குழப்பம் வருவதும் டயபாளிக் கதைக்கு வந்த சோதனை .மேலும் டயபாளிக் முந்தைய சாகசமான "குற்ற திருவிழா "ஒரு அதகள படுத்திய சாகசம் என்பதால் அதே அளவிற்கு அல்லது அதற்கு மேல் சாகசத்தை எதிர் பார்ப்பது நிஜமான ஒன்று .அந்த எதிர் பார்ப்பு குறைந்ததால் ஏற்பட்ட பாதிப்பு இதனை சுமார் ரகத்தில் இணைத்து விட்டது .கண்டிப்பாக மோசம் கிடையாது என்பதும் உண்மை .ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம் என்பது போல ஒரு
முறை படிக்கலாம் .அடுத்த முறை டயபாளிக் ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையில் அடுத்த டயபாளிக் கதைக்கு காத்திருப்போம் நண்பர்களே ...

அடுத்த புத்தகமான "வேங்கையின் சீற்றம் "எப்படி ?

முதலில் அட்டை படம் .சொல்ல தேவை இல்லை .இந்த வருட டாப் சொதப்பல் அட்டைபடம் இது தான் .அதிலும் இந்த அட்டைபடம் NBS இதழுக்கான தயாரான அட்டைபடம் இது என ஆசிரியர் அறிவித்து இருந்தார் .நல்ல வேலையாக இதனை வெளி இட வில்லை .இல்லை என்றால் மாபெரும் வெற்றி பெற்ற அந்த 400 ரூபாய் புத்தகம்... அட்டைபடம் காரணமாகவே ஆசிரியர் பல கனைகளை எதிர் கொண்டு இருப்பார் .

நான் எப்பொழுதும் இரண்டு ,மூன்று பாகம் கதை வரும் பொழுது எல்லாம் மீண்டும் பழைய பாகத்தை படித்து பின் புது பாகத்தை தொடர்வது வழக்கம் .எனவே டைகரின் இந்த சாகசத்தை படிக்க மீண்டும் "இருளில் ஒரு இரும்பு குதிரை "படிக்க நேர்ந்தது .மொத்தமாக இரு பாகத்தையும் படித்த பொழுது இம்முறை "டைகர் "ஏமாற்ற வில்லை .அச்சு தரமும் குறை இல்லாமல் நன்றாக இருந்தது .அதே சமயம் இந்த 50 ரூபாய் குறைவான பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை பார்க்கும் போது ஒரு "நோயாளியை "பார்க்கும் எண்ணம் தான் வந்தது .அதுவும் இனி வரும் இதழ்கள் இப்படி தான் என நினைக்கும் போது .....................ஆசிரியர் தயவு செய்து வேறு யோசனை செய்தால் நன்று .
50 அல்லது 60 ருபாய் புத்தகம் அட்லீஸ்ட் முன்னர் வந்த லக்கி லூக் சாகசமான "வில்லனுக்கு ஒரு வேலி "போல அமைந்தால் ஆவது திருப்தி ஆக இருக்கும் .இப்படி வந்தால் ஆசிரியர்   சொன்ன படி புது இளைய வசதி குறைந்த நண்பர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்ற எண்ணம் உண்மையாக இருப்பினும் (அவர்கள் எத்துனை பேரோ ) ஆனால் இப்பொழுது வரை வாசகராக இருக்கும் காமிக்ஸ் ரசிகர்களுக்கு இது மிக பெரிய குறை யாக தான் தோன்றும் .60 ரூபாய் புத்தகத்தை பொறுத்த வரை அதனை கருப்பு ,வெள்ளை புத்தகமாக அதிக பக்கங்களில் இடலாம் .மொத்தத்தில் கதையை பொறுத்த வரை திருப்தி தான் என்றாலும் அதன் அடக்கம் ஒரு குறையே .மேலும் இந்த முறையும் டைகர் கடைசியில் அவன் மட்டும் அங்கே சிக்கட்டும் என சூளுரைத்த படி எதிரியை நோக்கி குதிரையை கிளப்பும் போதும் தான் மீண்டும் ...எத்துனை முறை "NBS " புத்தகத்தை தூக்க வேண்டுமா என்ற பயம் வருவது இயற்கை தான் .

அடுத்து வருவது இரண்டு மறுபதிப்பு புத்தங்கள் என்றாலும் நான்கு அட்டகாசமான கதைகள் .ஜானியின் இரண்டு கதைகள் ஆன "ஓநாய் மனிதன் "மற்றும் ஊடு சூனியம் .முதலில் மிக பெரிய பாராட்டு இதன் அட்டை படத்திற்கு தான் .அருமை .அதுவும் இது ஒரு வாசக நண்பரின் படைப்பு என்பதில் மாபெரும் மகிழ்ச்சி .இந்த வருட சிறந்த அட்டைப்படங்களில் இதுவும் ஒன்று என்பது மறக்க முடியாத உண்மை .வாழ்த்துகள் ரமேஷ் சார் .....கதைகளை பற்றி சொல்ல தேவை இல்லை .முதலில் படிக்கும் நண்பர்களுக்கும சரி மீண்டும் வண்ணத்தில் படிக்கும் நண்பர்களுக்கும் சரி அருமையான அனுபவம் காத்து கொண்டு உள்ளது .ஆனால் இந்த இதழில் மட்டும் குறை இல்லாமல் இருந்தால் எப்படி ?முதல் 10 பக்கங்கள் அச்சு தரம் ஏமாற்றி விட்டது .

அடுத்து வரும் மறு பதிப்பு இதழான "புரட்சி தீ "மற்றும் விற்பனைக்கு ஒரு ஷெரிப் பற்றி சொல்ல தேவை இல்லை .மிக பெரிய பாராட்டை பெற்ற இந்த இரு கதை களும் இது வரை படிக்காதவர்களுக்கு மட்டுமல்ல முன்னர் படித்த நண்பர்களுக்கும் சிறந்த ஒன்றை தரி சத்த (வாசிப்ப அனுபவம் )கிடைக்க போகிறது .மொத்தத்தில் புது இதழ்களை விட இம்முறை மறு பதிப்பு புத்தங்கள் பந்தயத்தில் முன் நோக்கி செல்கிறது என்பது மட்டும் உண்மை .

அடுத்து இவ்விரு இதழ்களிலும் இடம் பெற்ற லக்கி அவர்களின் சாகசமான இரு சிறு கதைகளுக்கு நமது வாசக நண்பர்கள் ஈரோடு விஜய் மற்றும் பெங்களூர் கார்த்கிக் அவர்களின் மொழி ஆக்கத்தில் வந்துள்ளது .இரண்டு மொழி ஆக்கமமும் அருமை .உண்மையில் மொழி ஆக்க விஷயத்தில் நண்பர்களுக்கு ஆசிரியர் போட்டி வைத்த போது "மொழி ஆக்க விஷயத்தில் தயவு செய்து விளையாடாதிர் "என்று கடிதம் எழுதியவன் நான் .ஆனால் இம்முறை நம் நண்பர்களின்  ஆக்கம் நான் அப்பொழுது அந்த "கடிதம் "எழுதியதிற்கு இப்பொழுது வருத்த பட வைத்து விட்டார்கள் .சூப்பர் .

       மொத்தத்தில் சிற்சில குறைகள் இருந்தாலும் இந்த டிசம்பர் மாதத்தை ..,சொன்ன படி நான்கு புத்தங்கள் கொண்டு வந்து சேர்த்து காமிக்ஸ் ரசிகர்களுக்கு விருந்து அளித்த ஆசிரியர் அவர்களுக்கும் ..,.அவர் பணியாளர்களுக்கும் மாபெரும் நன்றியை காமிக்ஸ் ரசிகர்கள் சார்பாக தெரிவித்து கொள்கிறேன் .விரைவில் அடுத்த பதிவில் 2013 காமிக்ஸ் பற்றிய பதிவையும் ,2014 காமிக்ஸ்...... ரசிகர்கள் எதிர் பார்ப்பையும் பார்க்கலாம் நண்பர்களே .....
                                      நன்றி ...வணக்கம் ...

பின் குறிப்பு :பதிவில்  இனி வரும் புத்தங்களின் விமர்சனம், இப்படி என் பார்வையில் எப்படி என்பதை மட்டும் தெரிவிக்கும் வாசகர் கடிதம் ஆக இருக்குமே தவிர முழு கதை ..,பாதி கதை என கூறும் "கதை சொல்லியாக "இருக்காது நண்பர்களே ...நன்றி ..



                                                                                                                                                      

சனி, 23 நவம்பர், 2013

ஒரு சிப்பாயின் தடத்தில் ...

நண்பர்களே  ...வணக்கம் ...

நலம் ..,நலமா ..?

போன வாரமே வந்து இருக்க வேண்டிய இந்த பதிவு சில காரணங்களால் தள்ளி விட்டது .தீபாவளிக்கு வந்த நமது காமிக்ஸ் மலர்கள் இரண்டில் கிராபிக் நாவல் ஆன " ஒரு சிப்பாயின் சுவடுகளில்   " ஒன்று .அந்த இதழை பற்றிய எனது பக்க பார்வை (மட்டும் ) இங்கே காணலாம் . முதலில் இந்த புத்தகத்தை படிக்காமல் முழுவதுமாக புரட்டி பார்த்தவுடன் மிகுந்த சந்தோசம் தான் ஏற்பட்டது .காரணம் ஆசிரியரின் அந்த நீ......ண்ட ஹாட் -லைன் .இணையத்தில் வரும் பலருக்கு அதில் பாதி ஏற்கனவே அறிந்த செய்தி தான் என்றாலும் புத்தகத்தில் படிக்கும் போது ஒரு மகிழ்ச்சி தான் .நமக்கே இப்படி என்றால் இணையம் வராத பலருக்கு எப்படி இருக்கும் .?அதுவும் 2014 விளம்பரத்துடன் வந்த அந்த இதழை பாராட்டாமல் இருக்க முடி யுமா என்ன ?

     அதே சமயம் டெக்ஸ் வில்லர் புத்தகத்தில் வந்த அதே அட்டைப்பட மங்கள் இதிலும் வந்தது வருத்தமே .இணையத்தில் வந்த அட்டைபடம் பாராட்டை பெற்ற போதும் புத்தகத்தில்...... நின்று கொண்டு இருக்கும் சிப்பாயின் ஓவியம் மங்கலாக வந்ததில் புத்தகத்துக்கு ஒரு மாற்று குறைவே ..!இதன் அட்டைபடம் கீழே காணலாம் .
அட்டைப்படம்  
இணையத்தில் வந்த இந்த அட்டைப்படம் புத்தகத்திலும் இதே போல வந்திருந்தால் இன்னும் மெருகு கூடி இருக்கும் என்பது உண்மை .

       அடுத்து கதைக்கு செல்லலாம் .முழுவதுமாக சொல்லலாம் தாம் .ஆனால் படிக்காதவர்களும் படிக்கலாம் என்றாலும் படிக்காதவர்கள் பத்தி ,பத்தி யாக தாண்டி செல்லும் நிலை இருப்பதால் அதன் கரு மட்டும் .:-). முழுவதும் கதையை படிக்க விரும்பும் நண்பர்கள் உடனடியாக நண்பர் பெங்களூர் கார்த்திக் அவர்களின் "blade beedia .blogs pot .com ."என்ற இணைய தள முகவரிக்கு சென்றால் காணலாம் .

           வீட்டிலும் ,பணியிலும் ,பொருளாதாரத்திலும் பின் தங்கி விட்ட ஒரு தொலை காட்சி நிருபர் இழந்த புகழை மீட்டெடுக்க... என்ன ஆனார் என்றே தெரியாத ஒரு படை வீரனை தேடி செல்கிறார் .அதற்காக அவர் படும் இன்னல்கள் ,பொருளாதார இழப்பு மற்றும் அந்த படை வீரனின் கதி என்ன ஆயிற்று ,கடைசியில் அந்த நிருபரின் கதி என்ன ஆயிற்று என்பது புத்தகம் வாங்கி படித்தால் தாங்கள் அறிந்து கொள்ளலாம் .உண்மையில் இந்த கதையை நான் முதலில் ஆர்வமாக தான் படிக்க ஆரம்பித்தேன் .காரணம் ஆசிரியரின் "இது அழுகாச்சி காவியம் அல்ல " என்ற முன்னுரை தான் .ஆனால் அந்த படை வீரனுக்கு ஏற்பட்ட நிலை ,நிருபனுக்கு ஏற்படும் நிலை என கதை ஒரு மாத்ரி "சோகத்தை "நோக்கி படை எடுக்க நான் மூலையை நோக்கி படை எடுக்க தொடங்கினேன் .என்ன தான் "மாறுபட்ட படைப்பு "என்றாலும் கிராபிக் நாவல் என்றால் "அழுகாச்சி காவியம் "தான் என்ற என் மன நிலை 100 சதவீதம் உண்மை தான் என்பதை நிருபத்திதது .

         ஆனால் இப்பொழுது ஆசிரியர் அறிவித்த "கிராபிக் நாவல் "வரிசைக்கான கதைகளின் விளம்பர அறிவிப்பு எனது எண்ணத்தை மாற்றி விடும் நிலைமையில் இருப்பதால் அடுத்த கிராபிக் நாவலுக்கான கதைகளை ஆவலுடன் தான் எதிர் பார்த்து கொண்டு இருக்கிறேன் என்ற உண்மையையும் இங்கே சொல்லி விடுகிறேன் .எனது எதிர் பார்ப்பு உண்மையாகுமா  அல்லது கனவாகுமா என்பது அடுத்த கிராபிக் நாவலில் வரும் கதையை பொறுத்து தான் அமையும் .

        அதே சமயம் கிராபிக் நாவலின் ஆதரவாளர்கள் எனது நிலை பாட்டை ஆசிரியர் வசம் கூறும் பொழுது என் மேல் வருத்தம் கொள்வது அறிய முடிகிறது .சோக கதை என்றால் அது உனக்கு நடந்ததா என்ன ? படித்து விட்டு விட்டு விடுவது தானே எனவும் என்னலாம் .என்னை பொறுத்த வரை பகலில் எவ்வளவு கஷ்ட பட்டாலும் இரவில் அமைதி யான மன நிலையில் உறங்க நினைக்கிறன் .நான் பெரும்பாலும் உறங்குவதற்கு முன்னர் தான் படிக்க ஆரம்பிக்கிறேன் .அப்பொழுது நாம் ஒரு சிறந்த கமர்சியல் கதையோ ,அல்லது ஒரு காமெடி கதையோ படிக்கும் பொழுது உறங்கும் முன்னரோ ,உறங்கிய பின்னரோ ஒரு வித ஆனதத்தில் உறங்க முடிகிறது .அதே சமயம் "ஒரு அழுகாச்சி காவியத்தை " இரவில் நீங்கள் படிக்கும் பொழுது அந்த கதையின் அழுகாச்சி மட்டுமல்ல உங்கள் வாழ்க்கை பயணத்தில் முன்னர் ஏற்பட்ட சோகங்கள் ,தடங்கல்கள் அனைத்தும் மனதில் உழன்று உங்கள் உறக்கத்தை  தொலைத்து விடும் அபாயம் அதிகம் உண்டு .எனவே தான் எனது எதிர்ப்பை உடனடியாக கூறி விடுகிறேன் .நமது மனதில் பாரத்தை ஏற்ற எத்துனை வகை புத்தகங்கள் உள்ளன .அதை விட்டு சந்தோசத்தை மட்டும் விதைத்து விட்டு செல்லும் நமது காமிக்ஸ் "புத்தகங்களிலும் இந்த நிலை வேண்டுமா என்பதே எனது வினா ?

                     மீண்டும் சந்திப்போம் நண்பர்களே ......