நண்பர்களே .....வணக்கம் .....
நீண்ட இடைவெளிக்கு பிறகு இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி .அனைத்து காமிக்ஸ் நண்பர்களும் ஆவலுடன் எதிர் பார்த்த "காமிக்ஸ் தீபாவளி "ஒரு வழியாக நேற்று முன் தினம் நிறைவேறியதில் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து கொண்டு இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது உறுதி .வெளி நாடு வாழ் வாசகர் மட்டும் கொஞ்சம் ஏக்கத்துடன் காத்து கொண்டு இருப்பது வருத்தமே ...இந்த லயன் 30 வது ஆண்டு மலரை " தி லயன் மேக்னம் ஸ்பெஷல் " என்ற அறிவிப்போடு 900 பக்கங்கள் ...9 கதைகள் ....200 +டெக்ஸ் வண்ண சாகசம் என பல அதகள அறிவிப்பு ஆசிரியர் மூலம் வெளி வந்தவுடனே காமிக்ஸ் ரசிகர்கள் பலரும் அந்த புத்தகத்தை காண கனவுலகில் மிதந்திருந்தனர் எனில் அது மிகை அல்ல .இப்படி ஆழ்ந்த எதிர் பார்ப்பே சில சமயங்களில் ஏமாற்றத்தை அளித்து விடும் .அது திரைப்படமாக இருக்கட்டும் .....அல்லது புத்தகமாக இருக்கட்டும் ......எதுவெனினும் "ஓவர் பில்-டப் உடம்புக்கு ஆகாது " என பல நிகழ்வுகள் நிரூபித்துள்ளன .அப்படி பட்ட நமது இதயத்தை பன்மடங்கு துடிக்க வைத்த இந்த காமிக்ஸ் புதையல் நண்பர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி அடைய வைத்துள்ளதா ....அல்லது ஓகே ...ஏமாற்ற வில்லை என்ற திருப்தியை அடைய வைத்ததா .....அல்லது எதிர் பார்ப்புக்கு மேலே நண்பர்களை சந்தோஷ படுத்தி உள்ளதா ...எனில் புத்தகத்தை பார்த்த மறுகணமே முடிவு செய்யலாம் .
நண்பர்கள் பலர் அடைந்த ஒரு சந்தோசத்தை நான் இழந்து விட்டது உண்மை .தபால் மூலம் புத்தகத்தை வாங்கிய அந்த நண்பர்கள் அதன் கவரை பிரித்து முதன் முறையாக புத்தகத்தை வெளி வாங்கும் அந்த சமயத்தில்
ஏற்பட்ட அந்த "இனிய அதிர்ச்சியை " சொல்ல வார்த்தை இருக்காது என்பது தாம் உண்மை .ஈரோட்டில் ஆசிரியரிடம் புத்தக கண்காட்சியில் வாங்கி கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்து விட்டதால் அந்த சந்தோசத்தை என்னால் அனுபவிக்க முடியாமல் போய் விட்டது .ஆனால் அந்த சந்தோசத்தை அனுபவித்து இருந்தால் அழகான காமிக்ஸ் திரு நாளான "ஈரோடு புத்தக காட்சியில் " ஆசிரியருடனும் ....காமிக்ஸ் நண்பர்களுடனும் அனுபவித்த அந்த இனிய தருணத்தை இழந்து விட்டு இருப்பேன் .என்ன செய்வது ......"ஒன்றை இழந்தால் தான் ஒன்றை பெற முடியும் என்பது எவ்வளவு உண்மை .ஈரோட்டில் புத்தகத்தை கண் நோக்கிய அந்த கணமே மனம் மகிழ்ச்சியில் துள்ளி விளையாடுவதை முகத்தில் மறைக்க எடுத்த முயற்சியும் உண்டு தாம் .தடிமன் ஆன அந்த அட்டைப்படத்தில் "டெக்ஸ் " அவர்களின் கம்பீரமும் ....மின்னும் எழுத்துகளும் ......எழுத்துருக்களில் காணப்பட்ட அந்த கழுகின் வரை படமும் மயக்காதவரையும் ....மயக்கும் என்பது உறுதி .அதே போல தான் இரண்டாம் புத்தகத்தின் மயக்கும் "வில்லியம் வான்ஸ் " அவர்களின் டைகரின் அட்டைப்படமும் .இந்த முறை அட்டைப்படத்தில் கூட 2+2 = 4 அட்டைப்படத்திலும் குறை கூற முடியாத அசத்தல் தரம் .ஸ்பெஷல் இதழ்கள் எனில் இனி இது போல அட்டைப்படத்தை அமைக்க வேண்டும் என்பதும் இல்லை எனில் நண்பர்களிடம் ஆசிரியர் மிக பெரிய கண்டனத்தை சந்திப்பார் என்பது உண்மையிலும் உண்மை .
இங்கே மேல் காணப்படும் அட்டைபடம் நான் மிகவும் ரசித்தது .இதை விட சிறந்த அட்டைப்படத்தை தான் நண்பர்கள் புத்தகத்தில் காண போவது .புத்தகத்தை பிரித்தவுடன் ஆசிரியரின் நீண்ட ஹாட் -லைன் .....சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரை ....அழகான காமிக்ஸ் நண்பர்களின் லயனுடன் கூடிய அவர்களின் அனுபவம் ...லயன் முழு வெளியீட்டு விபரங்கள் என ரசிக்க ஏராளம் ..ஏராளம் ....கதைகளை எடுத்து கொண்டால் அதன் நாயகர்களே புத்தகத்தின் வெற்றியை முன்னோட்டமாக கொடுக்கிறார்கள் .
டெக்ஸ் .....டைகர் ....லக்கி ......ரின் டின் ....டைலன் ....மார்ட்டின் ....ராபின் ....ஜூலியா ...அதிரடி கிராபிக் ....என சகலரையும் திருப்தி படுத்தும் ஒரு கதம்பம் இந்த 30 வது ஆண்டு மலர் .இதில் சிலர் அறிமுகம் தான் எனினும் ஆசிரியரின் முன்னாள் முன்னோட்டம் அறிமுக நாயகர்களின் கதை களம் அதீத ஆர்வத்தை நண்பர்கள் இடையே கிளப்பி உள்ளது .புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி பார்க்கும் பொழுது .....டெக்ஸ் அவர்களின் வண்ண சாகசமும் .....டைலன் அவர்களின் வண்ண சாகசமும் கண்ணை பறிக்கிறது .அதே போல தான் டைகர் ....லக்கி ...ரின்டின் அவர்களின் வண்ண சாகசமும் .....இதன் காரணமாக தான் என்னவோ "ராபின் " அவர்களின் மங்கலான வண்ண தரம் கண்ணை கவர வில்லை .ராபினை கருப்பு வெள்ளையில் வருவதும் தவறு இல்லை என்ற எண்ண வைக்கும் வண்ண கலவை .அதே போல பாராட்டும் படியான மற்ற ஒன்று கருப்பு வெள்ளை கதைகளின் காகித தரம் .நண்பர்கள் பலர் ..பல சமயம் வேண்டிய இந்த தரம் இந்த இதழுடன் துவங்கியதில் மகிழ்ச்சி அடைந்திருப்பர் .இனி கருப்பு வெள்ளை கதைகளின் காகித தரம் இதுபோல தான் இருக்க வேண்டும் என்பதே அனைத்து நண்பர்களின் எதிர் பார்ப்பும் .
ஒவ்வொரு கதைகளின் சித்திர தரமும் நம்மை மயக்க வைக்கிறது .ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையாக படிக்கும் பொழுது ஏற்படும் அனுபவங்கள் ஒவ்வொரு காமிக்ஸ் ரசிகருக்கும் ஏற்படும் இந்த இனிய அனுபவம் மறக்க முடியாத ஒன்று .நண்பர்களுக்கு கதையை சொல்லி எல்லாம் அவர்களின் ஆவலை குறைத்து விட கூடாது என்பதற்காகவும் ..இன்னும் அனைத்து கதைகளும் படித்து முடிக்க ஒரு வாரம் மேலாகும் என்பதாலும் கதையை பற்றி எல்லாம் நான் மூச்சு விட போவதில்லை .ஆனால் டெக்ஸ் அவர்களின் " சட்டம் அறிந்திரா சமவெளி "கதையை படித்த இரண்டு ..,மூன்று பக்கங்களிலேயே டெக்ஸ் அவர்கள் எதிரிகளின் கொட்டத்தை அடக்க எனக்கு முழு சுதந்திரம் வேண்டும் என்று கூறும் பொழுதே ட்ராகன் நகரம் ..,பழி வாங்கும் புயல் ....கழுகு வேட்டை ...என பழைய அதிரடி டெக்ஸ் அவர்களை காண போகிறோம் என்பதை நண்பர்கள் உணர அதிகம் மெனக்கிட தேவை இல்லை .
மொத்தத்தில் இந்த மாதம் காமிக்ஸ் நண்பர்களுக்கு ஒரு மறக்க முடியாத விருந்தை ஆசிரியர் பரிமாறி உள்ளார் .காமிக்ஸ் நண்பர்களின் வேண்டுகோள்
எல்லாம் இனி இந்த விருந்தை "வருடம் தவறாமல் தர வேண்டும் "என்பதே ...விருந்தை சுவையாக பரிமாறியதும் அல்லாமல் நேரம் தவறாமல் பரிமாறிய ஆசிரியருக்கும் ..,அவர் தம் பணியாளர்களுக்கும் ....காமிக்ஸ் ரசிகர்களின் சார்பாக ஒரு மாபெரும் " பூங்கொத்தை "மனதார அளிக்கிறோம் சார் ..
நன்றி நண்பர்களே ........மீண்டும் சந்திப்போம் ...
ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெற முடியும் என்று அதற்காக மேலே நீங்கள் கூறிய =feeling
பதிலளிநீக்குகோவையில் இருந்து உடன் இங்கு வந்தமைக்கு நன்றி நண்பரே ........ :-)
நீக்குSupeR
பதிலளிநீக்குநன்றி சார் ..... :-)
நீக்குபரணி சார்,
பதிலளிநீக்குஇறந்த காலம் இறப்பதில்லை படித்தாச்சா?
இன்னும் இல்லை சார் ...ஒரு நாளில் ஒரு கதை தான் என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன் .ஒரு நாள் புத்தகத்தை ரசிக்க என்றே ஒதுக்கி விட்டதால்.நேற்று "டெக்ஸ் " ரசித்து விட்டேன் .இன்று டைலன்..வரிசைக்கிரகமாக வந்து கொண்டு இருக்கிறேன் .ஒரே நாளில் அனைத்து கதைகளையும் படித்து விட்டு மீண்டும் அடுத்த மாதத்திற்காக என்னால் காத்து கொண்டு இருக்க முடியாது சார் ..
நீக்குஎனவே .........விரைவில் ........
//இனி இந்த விருந்தை "வருடம் தவறாமல் தர வேண்டும் "என்பதே ...விருந்தை சுவையாக பரிமாறியதும் அல்லாமல் நேரம் தவறாமல் பரிமாறிய ஆசிரியருக்கும் ..,அவர் தம் பணியாளர்களுக்கும் ....காமிக்ஸ் ரசிகர்களின் சார்பாக ஒரு மாபெரும் " பூங்கொத்தை "மனதார அளிக்கிறோம் சார் ..//
பதிலளிநீக்குஅதே..அதே...
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குvarugaikku nandri nanbaray :-)
பதிலளிநீக்குஅவ்வளவு தூரம் வந்தும் உங்களை பார்க்க முடியாதது வருத்தம் தான். அடுத்த நாள் ஏன் வரவில்லை. டெக்ஸ் கலக்குறாரு எதனை தடவை படிக்க போரீங்களோ தெரியவில்லை. :D
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பரே ......டெக்ஸ் உண்மையில் அதிரடி கலக்கல் தான் .
நீக்குஎன்னால் முதல் நாள் மட்டுமே கலந்து கொள்ள முடிந்தது நண்பரே ...
டியர் பரணி சார், சி.சி.வயதில் 2,3 பாகங்களாக பிரித்தேனும் வெளியிட ஆசிரியரிடம் சொல்லுங்கள்.
பதிலளிநீக்குநண்பரே .....
நீக்கு" சிங்கத்தின் சிறு வயதில் " தொகுப்பு கண்டிப்பாக உண்டு ....என்ன....கொஞ்சம் தொடர் முடிவடையும் வரை காத்திருக்க வேண்டும் .... :-(
காத்திருப்போம் ..... :-)