இந்த "பதிவில் " நாம் காண போவது காமிக்ஸ் இதழ்களை பற்றிய பார்வையோ ....விமர்சனமோ கிடையாது . பதிலாக நமது "லயன் காமிக்ஸ் " ஆரம்பகால வாசகர்கள் பழைய இதழ்களில் வந்த ஒரு குறிப்பிட்ட பகுதியை இன்னமும் மறந்து இருக்க மாட்டார்கள் .அது தான் " புக் மார்க்கெட் " பகுதி .இதன் மூலம் பல வாசகர்கள் தன்னிடம் இல்லாத காமிக்ஸ் புத்தங்களை பெற முடிந்தது .கூடுதல் பிரதி இதழ்கள் வைத்திருந்தவர்கள் அதனை மாற்றி கொள்ளவும் முடிந்தது .ஆனாலும் அந்த பகுதி விரைவிலேயே காணாமல் போயிற்று .காரணம் அந்த கால கட்டங்களில் அதிகம் ....அதிகம் என்ன ...சுத்தமாக "அலைபேசி "என்னும் வசதிகளோ ....இ -மெயில் போன்ற வசதிகளோ இல்லாத காரணத்தால் நண்பர்கள் இடையே "கடிதம் " என்னும் தொடர்பு மூலமே இணைய முடிந்தது .இதன் காரணமாக பலர் புத்தகம் கிடைக்காமல் கடிதம் மூலம் மீண்டும் தொடர்ப்பு கொண்டால் கிடைக்கும் பதில் "நான் அனுப்பி விட்டேன் சார் ..தபாலில் தவறி இருக்கலாம் .. ( இதில் எனது அனுபவமும் உண்டு ) பல அரிய இதழ்கள் சில இப்படி தவற விட்டவை தான் .அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் .....ட்ராகன் நகரம் ....ஸ்பைடர் தோன்றும் பாட்டில் பூதம் ......கொலை படை ....மினி லயனின் விண்வெளியில் ஒரு எலி .....இன்னும...) இப்படி பட்ட புகார்கள் நமது ஆசிரியர் கவனத்திற்கு வந்த பொழுது " அந்த பகுதி " உடனடியாக தடை விதிக்க பட்டது .
ஆனால் இந்த கால கட்டத்தில் தபால் ...கொரியர் ...ஈமெயில் என பல தொடர்பு எல்லைகளால் "இதழ் தொலைந்து போகும் " அனுபவங்கள் கிடையாது என்பதோடு கூடுதல் பிரதி வைத்திருப்போர் மற்றவர்களுக்கு தன்னிடம் இல்லாத புத்தகத்தை வாங்கி கொண்டு அந்த கூடுதல் பிரதியை கொடுக்க நினைக்கலாம் .ஆனால் நண்பர்களிடம் கூடுதல் இதழ்கள் இருப்பது எல்லாம் நாம் அறிய முடியாது .எனவே என்னிடம் உள்ள "டபுள் பிரதிகள் " கொண்ட இதழ்களை இங்கே கொடுத்துள்ளேன் நண்பர்களே(.ஆ னால் நிரம்ப பழைய இதழ்களை எதிர் பார்த்தால் ஏமாந்து விடுவீர்கள் )எனவே இதில் கீழ்க்கண்ட இதழ்கள் தங்களுக்கு தேவை படுமாயின் தங்களிடம் உள்ள கூடுதல் பிரதிக்கு இதனை மாற்றி கொள்ளலாம் நண்பர்களே ...அதே சமயம் புத்தங்களை ..விலைக்கு விற்கவும் ...வாங்கவும் .... நான் விரும்ப வில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் .தங்களுக்கு இதில் உள்ள பிரதிகள் தேவை படுமாயின் இங்கேயோ ...அல்லது
kparanitharan76@gmail.com
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் நண்பர்களே .....நன்றி ...
முத்து காமிக்ஸ் :
1.துருக்கியில் ஜானி நீரோ
2.மலை கோட்டை மர்மம் (ஜானி நீரோ )
3.திகில் ஸ்பெஷல் (திகில் சிறுகதைகள் )
4.தவளை மனிதர்கள் ( மறுபதிப்பு )(மாயாவி )
5.அமான்ஷ்ய அலை வரிசை ( மார்ட்டின் )
6.சரித்தரத்தை சாகடிப்போம் (மார்ட்டின் )
7.மாண்டவன் மீண்டான் (காரிகன் )
8.மரண மாளிகை (ரிப்போர்டர் ஜானி )
9.திசை திரும்பிய தோட்டா (டைகரின் "மின்னும் மரணம் "இடை பட்ட சாகசம் )
10 .நொறுங்கிய நாணல் மர்மம்
லயன் காமிக்ஸ் :
1. கம்ப்யூட்டர் கொலைகள் (ரிப் கெர்பி )
2.தேடி வந்த தங்க சுரங்கம் (சிக் பில் )
3.பரலோகத்திற்கு ஒரு பாலம் (லக்கி )
4.புரட்சி தலைவன் பிரின்ஸ்
5.ஜேன் இருக்க பயமேன் (லக்கி )
6.மரணத்தின் முன்னோடி (டெக்ஸ் பாகம் 1 மட்டும் )
7.மாடஸ்தி இன் இஸ்தான் புல்
காமிக்ஸ் கிளாசிக் :
1.நடு நசி கள்வன் + கொலை படை
ராணி காமிக்ஸ் :
1. பெட்ரோல் அதிபர் (ஜேம்ஸ் பாண்ட் )
2.தலை மட்டும் (ஜேம்ஸ் பாண்ட் )
3.ஷெரிப் ஆவி (கௌ-பாய் )
4.அதிரடி அழகி (ஜேம்ஸ் பாண்ட் )
5.எரிமலை மிருகங்கள் (ப்ளாஷ் கார்டன் )
அதிகம் இல்லை நண்பர்களே ..இவ்வளவு தான் .....மீண்டும் இரு பிரதி இருக்குமாறு எனக்கு புத்தகம் கிடைத்தால் இங்கே இணைக்க படும் .
நன்றி .........வணக்கம் ......
அன்பு பரணி
பதிலளிநீக்குஎன்னிடம் உள்ள இரட்டை பிரதிகளை பார்க்கும் முன்னால் ...எப்படி
புத்தகங்களை பெற்றுக்கொள்ள ,தர என்ற வழிமுறைகளை சொல்லவும்
மாடஸ்டி IN இஸ்தான்புல், திகில் ஸ்பெஷல் (திகில் சிறுகதைகள் )
பதிலளிநீக்குஎனக்கு தர முடியுமா?
தங்களை நானே இன்று "அலைபேசியில் " தொடர்ப்பு கொள்கிறேன் நண்பரே ....
நீக்குநல்ல விசயம்தான் தலீவரே! ஒரே தலைப்பில் இரண்டு புத்தகங்களை வச்சு அழகு பார்ப்பதைவிட இப்படி எக்சேஞ்சு பண்ணிக்கிறதும் நல்ல ஐடியா தான்! நீங்க கலக்குங்க தலீவரே!
பதிலளிநீக்குஏதாவது பழைய டெக்சு புக்கு வச்சிருந்தீங்கன்னா நானும் ஒரு அப்ளிகேசன் போட்டிருப்பேன். ஹம்...
நன்றி செயலாளர் அவர்களே ....
நீக்குஉண்மையாய் சொல்ல போனால் "டெக்ஸ் " சாகசம் எனக்கே தேவை படுகிறது .குறிப்பாக திகிலில் வந்த "சைத்தான் சாம்ராஜ்யம் " :-)
என்னிடமும் மரணத்தின் முன்னோடி 2 இருக்கு. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே ... :-)
நீக்குநண்பர்களே ....
பதிலளிநீக்குஇங்கே நான் அட்டவணையில் தெரிவித்த இதழ்கள் அதிகம் யாரும் விரும்ப மாட்டார்கள் ...அனைவரிடமும் இருக்கும் புத்தகம் தாம் என நினைதிருந்தேன் .ஆனால் ...பலர் மெயில் மூலமும் ..அலை பேசி வாயிலாகவும் தொடர்ப்பு கொண்டுள்ளனர் .அவர்களுக்கு நன்றி .தங்களுக்கு வேண்டிய புத்தங்களை தெரிவித்த நண்பர்கள் அவர்களிடம் உள்ள "இரட்டை பிரதிகளை "தெரிவிக்க வில்லை .தெரிவித்தால் எனக்கு தேவையானவை சொல்ல வசதியாக இருக்கும் .அதே போல "விலைக்கு " வினவிய நண்பர்களும் அதிகம் . விலைக்கு விற்கும் அளவிற்கு நமக்கு "வொர்த் " இல்லை நண்பர்களே :-) தவறாக நினைக்க வேண்டாம் ..ப்ளீஸ் ...
test
பதிலளிநீக்குஜேன் இருக்க பயமேன் (லக்கி ) காமிக்ஸை எனக்கு அனுப்புவீர்களா? jaayis87@gmail.com
பதிலளிநீக்கு